இடுகைகள்

நம்பிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுமுடக்கத்தில் மனதிற்கு நம்பிக்கையூட்டும் சில நூல்கள்... உங்களுக்காக....

படம்
                  பொதுமுடக்கத்தில் படிப்பதற்கான சில நூல்கள் தி ஹேப்பியஸ்ட் மேன் ஆப் தி எர்த் எடி ஜாகு எப்படி யூத இனத்தில் பிறந்து வதை முகாம்களிடையே தப்பித்து ஏழு ஆண்டு கள் வாழ்ந்தார் , இந்த நரகமான காலத்தில் வாழும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கச் செய்தது எது , எப்படி தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார் என்பதை புன்னகையுடன் நீங்கள் படித்து ஆறுதல் பெறலாம் . டீம் கைண்ட்னெஸ் - எ ரிவல்யூஷனரில் கைட் பார் தி வே பார் வீ திங்க் , டாக் அண்ட் ஆக்ட் இன் கைண்ட்னெஸ் உலகம் பல்வேறு சுயநலனுக்காக அரசியலுக்காக பிளவுபட்டு வருகிறது . இந்த இடைவெளியை எப்படி கருணை கொண்டு நிரப்புவது என ஆராய்கிறது இந்த நூல் . கருணையை தினசரி நாம் செய்யும் செயல்கள் மூலம் எப்படி நடைமுறைப்படுத்துவது , அன்பை பிறருக்கு வழங்குவது எப்படி என நூல் வழிகாட்டுகிறது . தி பாய் தி மோல் , தி பாக்ஸ் அண்ட் தி பாக்ஸ் நான்கு நண்பர்களின் வாழ்க்கை வழியாக நம்பிக்கையையும் , நட்பையும் பரப்பும் நூல் இது . 2019 இல் வெளியான நூல் இதுவரை பத்து லட்சம் பிரதிகள் விற்றுள்ளது . நூல் எளிமையாக படிக்கும்படியும் , இதிலுள்ள வசனங்

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம

முதல் மனிதர்களை சந்திப்போம்!

படம்
இந்தியாவில் அனைத்து விஷயங்களும் சாதி, மதம், நிறம், மொழி சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. காரணம், நிலப்பிரபுத்துவ மனநிலை, பாரம்பரியம். இதையெல்லாம் தாண்டி சமத்துவம், சகோதரத்துவம், சாதனைகளை நிறைய இந்தியர்கள் இந்தியாவிலும் , இந்தியா கடந்தும் செய்கிறார்கள். அப்படி முதன்முதலாக சாதித்த மனிதர்களை சந்திப்போம் வாருங்கள். கரிமா அரோரா -33 மிச்சலின் ஸ்டார் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியப்பெண். இந்தியாவில் மருத்துவர், பொறியாளர் ஆக காட்டும் ஆர்வத்தை பிற துறைகளில் காட்டுவதில்லை. அதிலும் சமையலை அவர்கள் அவமானகரமான ஒன்றாக கருதுகிறார்கள். நான் இத்துறையில் சாதித்துள்ளேன். ஆனால் இத்துறையில் நானே முதலாகவும் கடைசியாகவும் இருக்கமாட்டேன் என்பது உறுதி என தெம்பாக பேசுகிறார் கரிமா. பாங்காங்கில் கா எனும் இந்திய உணவகத்தைத் தொடங்கினார். தொடங்கி பதினெட்டு மாதங்களில் மிச்சலின் ஸ்டார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.  தற்போது வணிகநோக்கமின்றி, பழங்குடிகளின் உணவு வகைகளை சமைத்து மக்களுக்கு பரிமாற உள்ளார். இந்திய உணவுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதே இவரின் இலக்கு. அருணிமா சின்கா -30 எவரெஸ்ட் ஏறிய மாற்றுத்

தம்பதிகள் ஒருவரையொருவர் ஏமாற்றுவது எதற்காக?

படம்
டாக்டர். எக்ஸ் pixabay வருகிற பஸ்ஸில் ஏறி குறிப்பிட்ட இடத்தில் இறங்கிக்கொள்வதுதானே நமது வாடிக்கை. திருமணம் கூட அப்படித்தான். குடும்ப அழுத்தம் காரணமாக பெண்ணை அல்லது ஆணை ஒருவர் திருமணம் செய்துகொண்டாலும், மனதிற்கு பிடித்தவர்கள் வெளியில் இருப்பார்கள். அவர்களை ஒருவர் தவிர்க்கவும் முடியாது. உங்களுக்கு ஒருவரோடு டீ, காபி குடிக்க பிடித்திருக்கிறது என்றால் அதில் தவறு என்ன? ஆனால் இதைப்பயன்படுத்தி பயன்களை அனுபவிப்பதில் ஆண்களே முன்நிற்கின்றனர். இதில் பொருளாதாரம் முன்னிலையில் உள்ளது. கிராமப்புறத்தில் கூலி வேலைக்கு பெண்கள் சென்று சம்பாதித்தாலும், பொருளாதாரக் கடிவாளம் ஆண்களில் கையில் இருக்கும். இம்முறையில் ஐந்து சதவீத பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றி, சல்லாபமாக இருக்கும் பெண்கள் எண்ணிக்கை 5 சதவீதம்தான். இதில் பொருளாதார சுதந்திரம் கொண்ட ஆண்கள் பச்சைக்கிளி போன்ற பெண்களுக்கு முத்துச்சரம் வாங்கிக்கொடுக்கும் அளவு 15 சதவீதத்திற்கும் அதிகம். பொருளாதாரத்திற்கு பெண்களை சார்ந்திருக்கும் ஆண்கள் ஒப்பீட்டளவில் குறைவு. அப்படியிருக்கும் பெண்கள் பெருமளவில் மற்றொரு ஆண்துணையை நட்பு தாண்டி அணுகுவதில்லை. ஆனா

நிறுவனங்களில் பெண்கள் தோற்பது ஏன்?

படம்
தெரிஞ்சுக்கோ! பொதுவாகவே பெண்களிடம் ஒரு நிறுவனத்தைக் கொடுத்தால் அதனை தங்களது குழந்தை போலவே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு நட்புறவாக நடந்துகொள்கிறார்களா என்று பார்த்தால் கஷ்டம். அதுவே ஆண்கள் இருந்தால் சகஜ மனநிலையை எளிதில் உருவாக்கிவிட முடிகிறது. இதற்கு அர்த்தம் இருபாலினத்தவரிடமும் சில பலம், பலவீனம் இருக்கிறது என்பதுதான். பெண்களை நம்பி நிறுவனத்தை ஒப்படைப்பது மிஷினரி, கோவில் என்று மட்டுமே நடக்கிறது. இதனை ஆங்கிலத்தில் கிளாஸ் கிளிஃப் என்கிறார்கள். அதற்கான டேட்டாவைப் பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி சிறப்பாக நடந்து வருகிறது என்றால், ஆண், பெண் இரு பாலினத்தவரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆண்களைத்தான் இயக்குநர் பதவிக்கு பலரும் தேர்ந்தெடுத்தனர். 62 சதவீதம் பேர் ஆண்களே தகுதியானவர்கள் என்று நினைத்தனர். கம்பெனி இன்னைக்கோ நாளைக்கோ என கோமாவில் கிடக்கிறது. இப்போது ஆண், பெண் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் உடனே பெண் என கைதூக்கினார்கள். இம்முறை 69 சதவீதம் பேர் பெண்களுக்கு ஓட்டு குத்தினார்கள். யாஹூவின் கரோல் பர்ட்ஸ் வேலையை விட்டு நீங்கியபோது,

ஃபோர்ப்ஸ் 30 / 30

படம்
ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெறுவது என்பது பலரின் கனவு.  இதில் ஆசியாவைச்சேர்ந்த முப்பது முன்னோடி தொழில்முனைவோர் இடம்பெற்றுள்ளனர். 23 நாடுகளிலிருந்து வந்த 2000 விண்ணப்பங்களிலிருந்து 300 பேர்களைத்தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் சிலரைப் பார்ப்போம். லியு லியுவான்(29), லியாவோ வென்லாங் (29)(கவாரோபாட், சீனா) தானியங்கி தொழில்நுட்பம்தான் லியு, லியாவோவின் ஐக்யூ சொத்து. 2015 ஆம் ஆண்டு கார்களை தானியங்கி முறையில் உருவாக்க முயற்சித்தவர்களுக்கு கைகூடியது சூட்கேஸ்தான். ஆம் சூட்கேஸை நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இழுத்து வருகிறீர்கள் அல்லவா? இனி அது தேவையில்லை. அதுவே உங்களை ஃபாலோ செய்யும். தொந்தி அங்கிள் இடிக்கிறா, மயிலாப்பூர் மாமி தடுக்கிறாரா அத்தனையையும் ரோவர் சூட்கேஸ் சமாளித்து உங்களை பின்பற்றும். சீனாவில் 800 டாலர்களுக்கு விற்கும் இந்த சூட்கேஸ் வெளிநாடுகளில் 66 டாலர்கள் அதிகமாக சேல்ஸ் ஆகிறது. 12 ஆயிரம் சூட்கேஸ்களை விற்று சாதனை செய்தவர்கள் அதோடு நிற்கவில்லை. அடுத்து ட்ரக்குகளை தானியங்கி முறையில் செயல்படுத்தி விற்கத் தொடங்கிவிட்டனர். 50 ட்ரக்குகளை விற்றவர்கள், தானியங்கி பயணிகள் கா

தூக்க நம்பிக்கைகள் இதோ!

படம்
lamaisonbisoux.wordpress.com தூக்கப் பழக்கங்கள் வளையாத சீனா சீனாவில் தூங்குவதற்கு உறுதியான படுக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். இதுவே முதுகெலும்புகளை சரியானமுறையில் பராமரிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை. இம்முறையில் ஆழமான தூக்கம் கிடைப்பதாக ஆசிய இனக்குழுவினர் சிலரும் கூறியுள்ளனர். உடனே தூங்கு! பலியில் சிலர் எவ்வளவு அலுப்பான சூழலிலும் உடனடியாகத் தூங்குவதற்கான பயிற்சி எடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் மன அழுத்தம் ஏற்படாமல் உடனே தூங்க முடிகிறதாம். பெட்பிராணிகளோடு தூக்கம் அமெரிக்கர்களில் 71 சதவீதம் பேர், தங்கள் செல்லப்பிராணிகளைக் கட்டிப்பிடித்துத்தான் தூங்குகிறார்கள். வைக்கோல் படுக்கை ஜப்பானில் டட்டாமி பெட் எனும் வைக்கோல் மற்றும் குறிப்பிட்ட இழைகளால் ஆன மெல்லிய படுக்கையைத் தூங்கப் பயன்படுத்துகின்றனர். இதுவே உடலை தூக்கத்தில் நெகிழ்த்த உதவுவதாக கூறுகிறார்கள் ஜப்பான்வாசிகள். சாப்பிட்டவுடன் தூக்கம் விவசாய வேலைகள் செய்பவர்கள் சாப்பிட்டவுடன் இருபது நிமிடம் கண்ணசருவார்களே அதேதான். அப்படியே இன்றுவரை ஸ்பெயினில் தொடருகிறது. ஆனால் ஆபீசில் இப்படி தூங்க முடியு