இடுகைகள்

பெற்றோர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டரீதியான பிரச்னைகள்!

படம்
          சட்டவிரோத தத்தெடுப்பும் , பிரச்னைகளும் பொதுவாக இந்திய சமூகத்தில் திருமணம் என்பது முக்கியமானது . அதுதான் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரத்தை தருகிறது . மகன் , மகள் பிறக்கும்போது அவர்களின் வாழ்க்கை முழுமை பெறுகிறது . மரணத்தில் கூட ஒருவருக்கான சடங்குகளை அவரின் ரத்த வழிகளைச் சேர்ந்தவர்தான் செய்யவேண்டும் என்பதுதான் இந்து மத நம்பிக்கை . திருமணமான பெண்கள் , கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மெல்ல சித்திரவதைகள் தொடங்கும் . மலடி என்று அழைப்பதோடு , அந்த பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்ளவேண்டுமென கூறுவதும் தொடங்கும் . இதற்கும் மேலாக இப்படி குழந்தை பெறாத பெண்களை சமூக புறக்கணிப்பு செய்து விழாக்களில் தவிர்ப்பதும் இயல்பாக நடக்கிறது . இதனை பெரும்பாலும் பெண்களே வன்மத்துடன் செய்கிறார்கள் . சட்டரீதியான தத்தெடுப்பு என்பதை பெற்றோர் பலரும் ஏற்காமல் அவசரப்படுகிறார்கள் . இதனால் தரகர்கள் உள்ளே புகுந்து சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுக்க உதவுகின்றனர் . முதலில் இதற்கென தனியாக தொகையை வாங்குபவர்கள் பின்னர் , பெற்றோரின் சென்டிமெண்ட்டை பயன்படுத்தி அவர்களை மிரட்டி தொக

தனது தொழிற்சாலை சகாக்களுக்கு காபியில் விஷம் கலந்த சைக்கோ கொலைகாரர் - கிரகாம் யங்

படம்
                கோடரிக் கொலைகள் ! பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அமெரிக்கர்கள் , பண்ணை வீட்டில் வசித்தனர் . அவர்கள் அங்கு கத்தி , கோடரி , கடப்பாரை என பல்வேறு கருவிகளை வைத்துக்கொண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தனர் . இதனால் அங்கு நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களிலும் கோடரி , கத்தி ஆகியவை முக்கியமான கொலை பொருட்களாக இருந்தன . இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ? இப்போதும் கூட கோபம் வரும்போது கையில் கிடைப்பதை எடுத்து பிறரை அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே ? 1836 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ராபின்சன் என்ற செல்வச் செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர் , கொலையாளியாக மாறினார் . அப்போது நியூயார்க்கில் புகழ்பெற்றிருந்த விலைமாது ஹெலன் என்பவரை கோடரி மூலம் மண்டையை பிளந்து கொன்றார் . இதனால்தான் ரிச்சர்ட் அந்த நகரில் பிரபலமானார் . முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெல்லா குன்னஸ் என்ற பெண்மணி , ஒரு டஜன்பேர்களுக்கு மேல் கோடரியால் வெட்டி கொன்றார் . அப்படிதான் இந்த கொலைகள் வெளியானபோது ஊடகங்கள் பேசிக்கொண்டன . 1940 களில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக் பேர்ட் என்பவர் , கோடரியால் ஏராளமான வெள்

பழக்கங்களின் நதிமூலம், ரிஷி மூலம்! - நல்ல பழக்கங்களை எப்படி தொடர்வது?

படம்
          பழக்கங்கள் எப்படி உருவாகின்றன ? குழந்தைகளாக இருக்கும் யாரும் பழக்கத்தை தானாக வே பழகுவதில்லை . கர்லான் மெத்தையில் குழந்தையை படுக்க வைத்திருக்கு்ம்போது கூட அதற்கு அதன் தேவை என்னவென்று முதலில் தெரியாது . ஆனால் தினசரி அதில் படுத்து தூங்குபவர்களுக்கு அதன் பயன்பாடு என்னவென்று தெரிந்துவிடும் . பல்வேறு பழக்கங்களை குழந்தைகள் வீட்டில்தான் கற்கிறார்கள் இவற்றைக்கூட பெற்றோரைப் பார்த்துதான் கற்கிறார்கள் . அதிலும் குழ்ந்தைப்பருவத்தில் கற்கும் பல்வேறு பழக்கங்களை அவர்கள் வயது முதிரும்போது கைவிடுகிறார்கள் . அப்படியும் நல்ல பழக்கங்கள் நீடித்திருந்தால் , பின்னாளில் அவை வாழ்க்கைக்கு உதவலாம் . இப்போதும் கூட சிலர் குழந்தையாக இருக்கும்போது கற்ற கைவிரல்களை சூப்புவது , காது மடல்களை இழுத்துக்கொண்டே நடப்பது ஆகிய பழக்கங்களை சிலர் எப்போதும் செய்வார்கள் . அனைத்து நல்ல பழக்கங்களுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும்தான் . இதனை புரிந்துகொண்டு அதற்கேற்ப மனவலிமையோடு பழக்கங்களை தொடர்ந்தால் மட்டுமே அதற்கான விளைவுகளைப் பெறமுடியும் . நல்ல பழக்கங்களை தொடர்வதற்கு அதற்

பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை எப்படியிருந்தது?

படம்
                கொரோனா காலத்தில் உறவுகளின் நிலை ! கொரோனா காலம் ஒராண்டை பறித்துக்கொண்டுவிட்டது . பிற நாடுகளில் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு நோயைக்கூட விழாவாக கொண்டாடும் மனநிலையில் உள்ளது . இந்த காலத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலையிழப்பு , சம்பள வெட்டு , பணி அழுத்தம் , வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் வெறுமை் என நிறைய சிக்கல்களை ஒருவர் சமாளிக்கவேண்டும் . கூடுதலாக மணமானவர்கள் அதிகநேரம் வீட்டிலேயே செலவழிக்க வேண்டியுள்ளது . இதன் காரணமாக அவர்களுக்குள் இன்ஸ்டன்ட் சண்டைகள் அதிகரித்துள்ளன . குழந்தைப் பிறப்புகள் குறைந்துள்ளன என்று ஆய்வுகள் கூறினாலும் அதேயளவு குடும்ப வன்முறைகளும் கூடி உள்ளன . நாம் இதில் பெண்களின் நிலை பற்றி பார்ப்போம் . வீட்டில் பெண்களுக்கு தங்களது ஆபீஸ் வேலைகள் தவிர வீட்டு வேலைகளும் இந்த காலகட்டத்தில் குறையவில்லை . அவர்களுக்கும் மன அழுத்தம் , நிதிசார்ந்த சிக்கல் , பெற்றோராக கடமைகள் என அனைத்தும் குவிகின்றன . பல்வேறு நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது . ரேஷ்குர்ரம் படத்தில் விரக்தியான போலீஸ்காரராக காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடித்திருப்பார் . அந்த

பெற்றோரை மீட்டு கொண்டு வர மந்திர நாற்காலியுடன் போராடும் சிறுவர்கள்! - தி மேஜிக் ட்ரீ 2009

படம்
      மேஜிக் ட்ரீ மந்திரசக்தி கொண்ட மரத்தை வெட்டி பல்வேறு பொருட்களை செய்கிறார்கள். அவற்றில் ஒரு துளி சக்தி மிஞ்சுகிறது. இதனால் சில பொருட்கள் தன்னிச்சையாக இயங்குகின்றன. ஆனால் அது எதனால என்று தெரியாமல் மனிதர்கள் அதனை வீடியோக்களாக எடுத்து பகிர்கிறார்கள். அப்போது முழு மந்திரசக்தியும் ஒரு நாற்காலிக்கு கிடைக்கிறது. அந்த நாற்காலி மூன்று சிறுவர்களைக்கொண்டு குடும்பத்திற்கு எதேச்சையாக கிடைக்கிறது. அவர்களுக்கு பெரிய பேராசை ஏதும் கிடையாது. பெற்றோர் தம்மிடம் பாசமாக இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கவேண்டும். அவ்வளவுதான். இதனை தான் அவர்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறார்கள். இந்த விஷயம் நிறைவேறும்போது ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகள்தான் படம். குழந்தைகள் படம் என்பதால், அவர்களின் மனதில் உள்ள விஷயங்களை மீறிப்போகாமல் படம் எடுப்பது கடினம். இந்த படம் அந்தவகையில் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. கொடுமைக்கார அத்தையை திட்டும்போது கூட அவள் சின்ன பெண்ணாக மாறிவிடவேண்டும் என்றுதான் வேண்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்தையும் கூட அப்படியே இருப்பது நல்லது என நின

அமெரிக்கா போனாலும் அப்பா அம்மா முக்கியம்! - பிரஷர் குக்கர் படம் எப்படி?

படம்
பிரஷர் குக்கர் - தெலுங்கு இயக்கம் சுஜோய் - சுஷில் கரம்பூரி இசை சுனில் காஷ்யப், ராகுல் சிப்ளிகன்ச், ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர், எஸ்மரன் எப்படியாவது மகனை அமெரிக்காவுக்கு அனுப்பிட தந்தை துடிக்கிறார். மகனுக்கு அதில் பெரிய ஆர்வமில்லை. இதற்கிடையில் அல்லாடும் வாழ்க்கைதான் கதை. ஆஹா! இதில் நாயகனின் கதையைவி கணேஷ் தம்பதியின் கதை நன்றாக இருக்கிறது. அமெரிக்கா சென்றுவிட்ட பையன்கள் அப்பாவின் இறப்புக்கு கூட வராத சோகத்தை சொல்லும் கதை நன்று. நாயகன் முடிந்தவரை நடிக்க முயன்று தோற்கிறார். இதில் அவருக்கு பெரிய வாய்ப்பில்லை. ப்ரீத்தி அஸ்ரானி சின்ன கண் அசைவிலும் அழகு காட்டுகிறார். மற்றபடி அம்மணிக்கு சென்டிமெண்ட் சீன்களிலும் பெரிய ஸ்கோப் இல்லை. மொட்டை மாடியில் நாயகனுக்கு முத்தம் கொடுத்து நம்மை ஆசுவாசப்படுத்தி விடுகிறார். அதுமட்டுமே போதுமா? ஐயையோ! பிரதி ரோஜூ பண்டக படத்தின் கதையை ஒட்டி இருப்பதால், என்ஆர்ஐ தெலுங்கு ஆட்களுக்கு எடுத்த படமோ என்று தோன்றுகிறது. டிவி சீரியலுக்கு ஏற்றபடி நீட்டுகிறார்களோ என்று கூட படுகிறது. பாடல்கள் படத்தின் வேகத்திற்கு எந்தளவு உதவுகிறது என்றே தெரியவில்லை. நாயகனின் நோ