இடுகைகள்

முத்தாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மன்னருக்கு போலி!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 3 மன்னருக்கு போலி! ரா . வேங்கடசாமி பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு  எவ்வித கொள்கையும் கோட்பாடும் இல்லை. தாங்கள் பிழைக்க வேண்டும் ; சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சிய தாகம் கொண்டவர்களான இவர்களுக்கு , மேல்தட்டு மனிதர்களை ஏமாற்றுவதில் இவர்களுக்கு அன்லிமிடெட் திருப்தி. அப்படிப்பட்ட அசகாய எத்தர்களில் ஒருவர் ஹாரிடோமிலா . மறைந்த மன்னர் கெய்சரின் பேரன் என்று சொல்லி உலா வந்தவர் . ஜெர்மனியில் கெய்சரின் பேரன் வில்ஹெம் வான் ஓகன் ஜோலரின் இருக்கும்போதே அப்படி சொல்லி ஏமாற்ற முயற்சித்தது ஹாரிடோமிலாவின் சமர்த்து .   ஹாரிடோமிலா , 1904-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார் . நடுத்தரக்குடும்பம் . இவரது தந்தை ஹாரி , சிறு குழந்தையாக இருக்கும்போது இறந்துவிட்டார். 1915- ஆம் ஆண்டு ஜெர்மனியில் லேட்வியாவை ஆக்கிரமித்தபோது ஹாரிக்கு 11 வயது. சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார் ஹாரிடோமிலா . 1918- ஆம் ஆண்டு சில ஜெர்மனி புரட்சியாளர்கள் , முன்னர் அந்நாட்டிற்குச் சொந்தமாக இருந்த புரூசியின் நிலங்களை மீண்டும் ஜெர்மனியோடு இணைக்கவேண்டும் என்று வெட்டியாக போராட்டம்

ஆள்மாறாட்ட கோல்மால்!

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 2 ஆள்மாறாட்ட கோல்மால்!   ரா . வேங்கடசாமி தனது தாயிடமிருந்து ஆண்டிற்கு ஆயிரம் பவுன்கள் பயணப்படியாக பெற்ற கேஸ்ட்ரோ இங்கிலாந்துக்குத் திரும்பி , தனது டிச் போர்னே எஸ்டேட்டுக்கு இயல்பாக உரிமை கொண்டாடினார் . ரோஜரின் குடும்ப விவகாரங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டவர் , அறிமுகமான எல்லோரையும் நுணுக்கமாக ஏமாற்றியது மட்டுமின்றி , தான்தான் ரோஜர் என்று பகிரங்கமாகவே சொல்லத் தொடங்கினார் . அதற்கு ஸ்டோரி வேண்டுமே ? உயிர் தப்பியதை லாஜிக் நழுவாத கதையாக மாற்றி எல்லோரிடமும் சொன்னார் காஸ்ட்ரோ. கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருக்கும்போது , ஆஸ்திரேலியா கப்பல் தன்னைக் காப்பாற்றியது ; கவனக்குறைவால் தான் பிழைத்ததை வீட்டாருக்கு சொல்லவில்லை என கூசாமல் பொய் சொன்னார். இங்கிலாந்து போகும்போதுதான் காதலியோடு நெருங்கியதால் அவள் கர்ப்பிணியாகி விட்டதாகவும் கதை கட்டினார் . இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது . எஸ்டேட் நிலங்களை பகுதியாகப் பிரித்து 100 பவுன்கள் வீதம் விற்றதால் காஸ்ட்ரோ ஏராளமாக் கரன்ஸி பார்த்துவிட்டார் . போலியான ஒ

வரலாற்று சுவாரசியங்கள் 1- ரா.வேங்கடசாமி

படம்
வரலாற்று சுவாரசியங்கள் 1 பணத்துக்காக மாறுவேடம் ! ரா . வேங்கடசாமி தெ ற்கு இங்கிலாந்து பகுதியில் , ஹாம்ஷைபரில் எஸ்டேட் அதிபர் டிச்போர்னே பிரபு. அவரது தலைமுறையில் பத்தாவது வாரிசு . அவருக்கு ஜேம்ஸ் என்றொரு சகோதரன். இவரின் மூத்த மகனின் பெயர் , ரோஜர் டிச் போர்னே. ரோஜர் பிறந்தது 1829-ஆம் ஆண்டு ; யார்க்‌ஷையரில். கத்தோலிக்கர்கள் படிப்பதற்கான போர்டிங் ஸ்கூல் ‘ ஸ்டோனி ஹர்ஸ்ட் ’ டில் ரோஜர் படித்தார். தனது இருபதாவது வயதில் ‘ சிக்த் டிராகூன் கார்ட்ஸ் ’ கமிஷனில் தேறியவர் வெற்றிக்களிப்போடு வெளியே வந்தார் . பத்தாவது பட்டம் வகித்த பிரபு வாரிசு இன்றி காலமாகிவிடவே அவரது ஒன்றுவிட்ட சகோதரன் எட்வர்டு டப்டி வாரிசானார். ஆனால் இவருக்கும் வாரிசு இல்லை. எனவே அவரது சகோதரி மகன் ரோஜர் பட்டத்திற்கு உரியவன் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் 1852-ஆம் ஆண்டு , ரோஜர் சர்எட்வர்டின் மகள் காதரினைக் காதலித்தார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு கத்தோலிக்க சர்ச் ஒப்புதல் தரவில்லை . என்ன பிரச்னை ? ஒன்றுவிட்ட சகோதர , சகோதரிகள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதிதான் காரணம் . காதலை அனுமதித்த சர் எட்வர்டு ஒரு ப

இதோ இதோ அறிவியல் !

படம்
நிஜமா ? பொய்யா ? யானைகள் எதையும் மறப்பதில்லை . பொய்யல்ல ; உண்மை . விலங்குகளில் பெரிய மூளை கொண்டதோடு அதை சீரியஸாக பயன்படுத்தும் விலங்கும் யானைதான் . யானை தன் குட்டியை பிரிந்து 23 ஆண்டுகள் பிறகும் அடையாளம் கண்டுகொள்ளும் புத்திசாலித்தனம் யானைக்குண்டு . உணவுக்கு செல்லும் பாதையையும் காம்பேக்டாக அமைத்து கூட்டமாக வாழும் பேருயிர் யானை மட்டுமே . லெமிங்க்ஸ் தற்கொலை செய்துகொள்ளுமா ? நிச்சயம் இல்லை . 1530 களில் ஆய்வாளர் புயலில் வானிலிருந்து லெமிங்க்ஸ் ( ஆர்க்டிக் பகுதி உயிரி ) விழுகின்றன என வதந்தி பரப்பினார் . இடம்பெயர்வின்போது லெமிங்க்ஸ் நீரில் குதித்து வேறிடம் செல்லும் பயணத்தில் அவை சில இறக்கின்றன . 1958 ஆம் ஆண்டு ரிலீசான டாகுமெண்டரியில் இடம்பெற்ற தவறான செய்தி இது . கோழிகளுக்கு பற்களுண்டா ? கிடையாது . கற்காலத்தில் வாழ்ந்த பாட்டன் பூட்டன் கோழிகளின் முன்னோர்களுக்கு பற்கள் இருந்திருக்க சான்ஸ் உண்டு . இன்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ள கோழிகளுக்கு பற்கள் கிடையாது . அப்படி பற்கள் இருந்தால் அவை அசைபோட்டு சாவகாசமாக சாப்பிட முடியுமே !  2 மோடி விமானம் ரெடி !

நேர்காணல்:"வரலாற்றிலிருந்து எதையும் கற்க நாம் விரும்பவில்லை"

படம்
முத்தாரம் நேர்காணல் " வரலாற்றிலிருந்து எதையும் கற்க நாம் விரும்பவில்லை " நேர்காணல் : மாதவ் கோட்போலே , முன்னாள் உள்துறை செயலாளர் . தமிழில் : ச . அன்பரசு பாபர் மசூதி இடிப்பின்போது மத்திய அரசின் உள்துறை செயலராக பணியாற்றியவர் மாதவ் கோட்போலே . பாபர் மசூதி இடிப்பின்போது நடந்த கலவரத்தினால் மனம் வருந்தி பதவியை ராஜினாமா செய்து வெளியேறியவர் மாதவ் . பாபர் மசூதி இடிப்பிற்கும் , அதன் பின்னர் நடந்த கலவரத்திற்குமான காரணங்களாக எதை குறிப்பிடுவீர்கள் ? குறிப்பிட்ட மதத்தை தாக்கி பேரழிவு ஏற்படுத்தி தாக்குதல் சம்பவம் அது . மாநில அரசு நினைத்திருந்தால் மத்திய அரசின் ராணுவத்தை கோரி கலவரத்தை அடக்கியிருக்கலாம் . ஆனால் மாநில அரசு , காவல்துறையின்மேல் அதீத நம்பிக்கைக்கு நாம் பெரிய விலையை தரவேண்டி இருந்தது . இதில் கரசேவகர்களின் பங்கு அதிகம் என்றாலும் அதற்கான கான்க்ரீட் ஆதாரம் கிடைக்கவில்லை . மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயன்றும் அத்திட்டம் நிறைவேறாமல் போனது துரதிர்ஷ்டம் . அரசின் சக்தியையும் மீறி கலவரம் சென்றுவிட்டதாக நி னைக்கிறீர்களா

அறிவியல் பிட்ஸ்!

படம்
நிறக்குருட்டுக்கு உதவும் சாம்சங் ! உலகில் நிறக்குருடு பிரச்னை ஆண்களுக்கு பனிரெண்டில் ஒருவருக்கும் , பெண்களில் இருநூறில் ஒருவருக்கும் ஏற்படுகிறது . இவர்களுக்கு பார்வையின் தெளிவில் எந்த பிரச்னையும் இருக்காது . பார்க்கும் பொருள் சிவப்பா , பச்சையா , நீலமா என்பது தெரியாது . இதில் 60% நிறக்குருடு இருப்பவர்கள் தினசரி வாழ்க்கை சிக்கலாக மாறும் . மரபுரீதியான பிரச்னை என்பதால் , சிகிச்சை கிடையாது . கலர் ஃபில்டர்கள் , கான்டாக்ட் லென்ஸ் ஆகியவற்றின் மூலம் சிரமம் குறைக்கலாம் .   ட்ராஃபிக் சிக்னல்கள் , டிவி என எதையும் தடுமாறுபவர்களுக்கு சாம்சங் உதவ முன்வந்துள்ளது . தற்போது நிறக்குருட்டு நோய்க்கு உதவும்படி SeeColors எனும் ஆப்பை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங்  உருவாக்கியுள்ளது . உலகம் முழுக்க நிறக்குருடால் (CVD) 300 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வில் கண்டறிந்துள்ள சாம்சங் , தனது QLED TV,SHUD TV க்களில் பாதிப்பிற்கேற்ப நிறத்தை செட் செய்து டிவி பார்க்கும் வசதிகளை வழங்குகிறது .  2 அதிரடி காமிக்ஸ் வில்லன்கள் ! Galactus(1966) ஃபென்டாஸ்டிக் ஃபோர் படத்தின் அசைக்க

ரோபோக்களுக்கு மனித கைகள்!

படம்
ரோபோக்களுக்கு மனித கைகள் ! வாஷிங்டன் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோக்களுக்கான மனிதர்களின் தோல் போன்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர் . புதிய கண்டுபிடிப்பு மூலம் மனிதர்கள் தோல் போன்ற தன்மையை ரோபோக்களின் கைகள் பெறும் . அதாவது , மனிதர்களின் கைகளின் தொடும் உணர்வு . சிலிகான் ரப்பரில் திரவ வடிவிலான உலோகத்தை உட்செலுத்தி செயற்கைத் தோல் உருவாக்கப்பட்டுள்ளது . " நாங்கள் உருவாக்கிய ரோபோ கைகளில் , மின்சாரம் பாயும்போது அவை ஏறத்தாழ மனிதர்களின் கைகளுக்கு ஒப்பானவை . இதிலுள்ள சென்சார்கள் மனிதர்களின் விரல்களைப் போல வெற்றிகரமாக செயல்படுகின்றன " என்கிறார் ஆராய்ச்சியாளரான ஜியான்சூ யின் . மனிதர்கள் வெடிகுண்டுகளை கண்டறியும் பணியில் உடலுறுப்புகளை இழப்பதால் , இந்த ரோபாக்களை வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்யும் பணியில் ஈடுபடுத்தும்  திட்டமிருக்கிறது . தற்போது அதிர்வுகளை உணரும் சோதனைகளில் ரோபோ கரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன .     2 ஸ்பேக்ஸ் எக்ஸின் புதிய உடை ! நாம் தீபாவளி , பொங்கல் என டைப் டைப்பாக உடையை மாற்றுகிறோம் . விண்வெளி ஆடைகள் மட்டும் அப்படியே இருந்தால் நன்றாக இர

முத்தாரம் செய்திகள்!

படம்
டாட்டூ டெஸ்ட் ! ஸ்டைலுக்கானது டாட்டூ என்பதைக் கடந்து மருத்துவத்திலும் ரத்தத்தை டெஸ்ட் செய்ய அவை உதவுகின்றன . எ . கா : ரத்தத்திலுள்ள ஆல்கஹாலை சோதனை செய்வது உள்ளிட்டவை . தோலை டச் ஸ்க்ரீன் போலாக்கி சோதனை செய்ய உதவும் இங்க்கை எம்ஐடி மற்றும் ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . இதில் டாட்டூவின் நிறம் மாறினால் குளுக்கோஸ் அளவு மாறுகிறது என்று அர்த்தம் . கையில் அணிந்துகொள்ளும் டைப்பிலுள்ள பயோமார்க்கர்களுக்கு பேட்டரிகள் தேவை . வயர்லெஸ் முறையில் அவை போனில் தகவல் சொல்லும் . இந்த பயோ இங்க்கில் இவை எதுவும் தேவையில்லை . "Dermal Abyss" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை இருவகை இங்க்குகள் சோதிக்கப்பட்டுள்ளன . ஒன்றில் குளுக்கோஸ் , மற்றொன்றில் சோடியம் சோதிக்கப்பட்டது . சாதாரண கண்களால் பார்த்தால் இங்க்கின் வேறுபாடு தெரியாது . இதற்கென தனி ஆப் மூலம் சோதித்து பார்த்தால் மட்டுமே பிரச்னையை அறியலாம் . 2 பூனையால் அழியும் பறவைகள் ! ஆஸ்திரேலியாவின் வறண்ட உட்பகுதியில் எலிகளின் பெருக்கம் அதிகம் . அதனைக் குறைக்க உதவிய காட்டுப்பூனைகள் தற்போது நாட்டுப்பறவைகள் அழிவுக