இடுகைகள்

விலங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரூல்ஸ் பேசும் பையனும், விதிகளை காற்றில் பறக்கவிட்டு அன்பாக பழகும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தால்... எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர்

படம்
              எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர் 75 எபிசோடுகள் ரூல்ஸ் பார்த் தேதான் அனைத்தும் செய்யும் பொறியாளரும் , அன்பிற்கு எதற்கு ரூல்ஸ் என அனைவரிடமும் பிரியம் காட்டி வாழு்ம பெண்ணும் ஒரே வீட்டில் இருக்கும்படி இருந்தால்…… அதுதான் ப்ரோ கதை . டெமிர் எராண்டல் ஜப்பான் நாட்டிலிருந்து துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கு வருகிறார் . அவர் வருகைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது . ஜப்பானில் இருந்தபடியே இஸ்தான்புல்லில் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார் . அந்த வீடு அவரின் கடந்த காலத்தோடு தொடர்புடையது . அதனை மனதிற்கு நெருக்கமாக நினைக்கிறார் . அதேநேரம் இஸ்தான்புல்லில் உள்ள ஆர்டிம் என்ற கட்டுமான நிறுவனத்தில் பங்குகளை வாங்கி அதன் மேனேஜராக பதவியேற்கவிருக்கிறான் .    தான் வாழும் வீட்டைப் பார்க்க வருபவனுக்கு அதிர்ச்சி . அவனுக்கு முன்னாலேயே அங்கு யாரோ குடியிருக்கிறார்க்ள . அது யார் என்று பார்க்கும்போதுதான் அவனை இளம்பெண் ஒருத்தி கட்டையாலே தலையில் அடித்து மயங்க வைக்கிறாள் . கண்விழித்துப் பார்த்தால் டெமிரை கைது செய்ய போலீஸ் நிற்கிறது . ஏன் என்று விசாரிக்கும்போதுதான் தெ

அடுத்த பெருந்தொற்று எதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது? - ஆராய்ச்சி சொல்லும் உண்மை

படம்
                அடுத்த பெருந்தொற்றின் ஊடகம் ! அடுத்த பெருந்தொற்று எந்த பறவை அல்லது விலங்குகளிடமிருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர் . . கோவிட் -19 பெருந்தொற்று பரவிய வேகத்தில் மக்களை பலிகொண்டதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது . வைரஸ் , பாக்டீரியாக்கள் இல்லாத இடமே கிடையாது . ஒரு குண்டூசி முனையில் நூறு கோடி நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நோயியல் வல்லுநர்கள் . அடுத்த பெருந்தொற்று எந்த உயிரினம் மூலம் பரவும் என்பதைக் கண்காணிக்கும் பணியை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர் . இதன்மூலம் 2019/20 இல் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னமே கண்டறிந்து தடுக்க முடியும் . காடுகள் , மனிதர்களின் உடல்நலம் , சூழல் ஆகிய மூன்றுமே பின்னிப்பிணைந்தவை .. மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகளோடு மனிதர்கள் தொடர்புகொள்ள நேருகிறது . இதன்விளைவாக நோய்த்தொற்று எளிதாக பரவுகிறது . இதில் முழுக்க விலங்குகளை குற்றம்சாட்ட முடியாது . ஆனால் அவற்றின் தொடர்பு வழியாக நோய்த்தொற்று எளிதாக பரவும்

சிவப்பு இறைச்சி இதய நோய்களை அதிகரிக்கிறது! - பேராசிரியர் வால்டர் சி வில்லெட்

படம்
                  வால்டர் சி வில்லெட் நோயியல் துறை பேராசிரியர் இறைச்சி சாப்பிடுவது பற்றி ஈட் லான்செட் ஆய்வு வெளியாகியுள்ளது . அது எந்த வகையில் உலகிற்கு ஆபத்தானது ? 2050 இல் உலக மக்கள் தொகை பத்து பில்லியனாக உயரவிருக்கிறது . நாம் தற்போது சாப்பிடும் அளவுக்கு இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டால் , காடுகள் நிறைய அழிக்கப்படும் விலங்குகளுக்கான உணவுக்காக நிறைய தொழில்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படும் ஆபத்து உள்ளது . பசுமை இல்ல வாயுக்களும் அதிகரிப்பதால் பருவச்சூழல் மாறுபாடுகளும் ஏற்படும் . நாம் இறைச்சியை விட்டு தானியங்கள் , பருப்புகள் , காய்கறிகளை சாப்பிடுவது இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அணுகுமுறை . மக்கள் தங்கள் உடல்நலனுக்கு பொருத்தமான உணவுமுறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது அவசியம் . இதற்கு நாங்கள் காய்கறி சார்ந்த உணவுமுறையை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம் .    காய்கறிகள் சார்ந்த உணவு எப்படி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் போதுமானவையாகும் ? நீங்கள் உங்கள் உணவுகளை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு பின்னர் அவற்றை உணவாக கொள்வதை விட பயனளிக்க கூடியதுதா

இயற்கைக்கு நெருக்கமாக வாழும் விலங்கு கொயேட்(சிறியவகை ஓநாய்)!

படம்
        coyote       மொபி விலங்குநல ஆர்வலர் ! நீங்கள் விலங்கு நல ஆர்வலராக உள்ளீர்கள் . வீகன் உணவுப்பழக்கத்தையும் பிரசாரம் செய்கிறீர்கள் ஏன் ? எனக்கு ஒன்பது வயதாகும்போது விலங்குகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன் . அவற்றின் வாழிடம் , வாழ்க்கை ஆகியவற்றை நாம் மதிக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , எனது உணவுப்பழக்கத்தை நான் மாற்றிக்கொண்டு வீகனாக மாறினேன் . இயற்கையோடு ஒருவர் எப்படி இணைந்து வாழவேண்டுமென நினைக்கிறேன் ? இன்று காட்டிலிருந்து பல்வேறு வைரஸ்கள் பரவி வருவதாக செய்திகளில் கூறப்படுகின்றன . மனிதர்கள் சுயமாக காடுகளிலுள்ள விலங்குகளை பாதுகாக்க உறுதி எடுத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது . இனியும் இதில் நாம் கவனமின்றி இருந்தால் , ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் . இதன் பொருள் நாம் காட்டு விலங்குகளோடு நெருங்கி வாழ்ந்தால் பயன்கள் கிடைக்கும் என்பதல்ல . அவைகளுக்கான இடத்தை நாம் பறிக்க கூடாது என்பதுதான் . கொயோட் ( சிறியவகைஓநாய்கள் ) உங்களுக்கு பிடித்துப்போனதான் காரணம் என்ன ? சிறிய வகை ஓநாய்களை லாஸ் ஏஞ்சல்ஸில் நீங்கள் பார்க்கமுடியும் . அவற்றின்

காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதவை`!

படம்
          காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது படம் எடுக்கும் விலங்கிடமிருந்து பாதுகாப்பான தொலைவில் தள்ளியிருக்கவேண்டும் . அமைதியாக இருக்கவேண்டும் . காட்டுக்கான விதிகளை கடைபிடியுங்கள் . நேர்மையான முறையில் படம்பிடியுங்கள் . படம்பிடிக்கும் விலங்கு பற்றி முதலில் ஆராய்ச்சி செய்து படியுங்கள் . பின்னர் அதனை அதுதொடர்பான ஆராய்ச்சியாளர்களிடம் பேசி அதன் பழக்கவழக்கங்களை கவனியுங்கள் . பத்திரிகையாளர் போல நிஜத்தை மட்டுமே புகைப்படமாக பதிவு செய்யவேண்டும் . உங்கள் வருகை விலங்கை எரிச்சல் ஊட்டினால் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான தொலைவுக்கு சென்றுவிடுங்கள் . புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்வதற்கு அவசரப்படாதீர்கள் . புகைப்படங்களை முழுமையான தகவல்களுடன் சேகரித்து பிறருக்கு பகிருங்கள் . செய்யக்கூடாதவை . விலங்குகளுக்கு ஆபத்தான உணவுகளை வழங்க கூடாது . உணவிட்டு அதன் தன்மையை மாற்றி படம் பிடிப்பது தவறானது . விலங்குகளிடம் நெருங்க கூடாது . கூட்டமாக உள்ள விலங்குகளின் அருகில் செல்லக்கூடாது . விலங்குகளை காயப்படுத்தக்கூடாது

பாலியல் சந்தோஷம் மனிதர்களுக்கு மட்டும்தானா?

படம்
giphy மிஸ்டர் ரோனி செக்ஸை மனிதர்கள் சந்தோஷத்திற்காக நாடுவது உண்டு. பிற விலங்கினங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது உண்டா? ஆடியோ பார்னோகிராபி வந்துவிட்ட காலத்தில் இப்படி ஒரு சந்தேகமான கேள்வி. அப்படி விலங்குகளும் உலகில் உண்டு. இறைவன் கொடுத்த உறுப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டுமே? இல்லையெனில் சாமிக்குத்தம் ஆகிவிட்டால் என்ன செய்வது? போனபோஸ் எனும் சிம்பன்சி இனத்தில் இதுபோன்ற சில்மிஷ சந்தோஷ அனுபவங்கள் உண்டு. இவை சந்தோஷத்திற்காக நிகழ்கிறதா என்று இன்னும் ஆராய்ச்சிகள் முழுமையாக நமக்கு விளக்கவில்லை. இந்த குரங்குகள் கர்ப்பம் தரித்தபோதும், பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போதும் செக்ஸ் உறவு கொண்டு மகிழ்கின்றன. எதற்கு என ஆராய்வது வேண்டாம். சந்தோஷம் தானே முக்கியம்? இதைப்போலவே டால்பின்களும், ஜப்பானிய மக்காவ் வகை குரங்குகளும் செக்ஸ் அனுபவத்தை விமரிசையாக அனுபவிக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் சொன்ன தகவல். நன்றி - பிபிசி