இடுகைகள்

நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா

நேர்காணல்- குருதேவ்தாஸ் குப்தா மோடியின் விரைவான சீர்திருத்தங்களினால் தொழிலாளர்களின் நலன்கள் சீர்குலைந்துபோகும். -     பர்வேஸ் ஹபீஸ் தமிழில்: தியோ வான்யா மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான குருதேவ்தாஸ் குப்தா பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களுக்கான திருத்தம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தலை வணங்குவது போன்றதாகும் என்பவர் இந்த திருத்தங்கள் முறைகேடான வணிகம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சுரண்டலை சட்டபூர்வமாக்கும் வழிமுறை என்று உறுதிபடக்கூறுகிறார். பிரதமர் மோடி இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் முடிவு பெற்றதாக அறிவித்திருக்கிறார். அதன் தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பிரதமரின் அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் முதலிலேயே இங்கு இன்ஸ்பெக்டர் ராஜ் திட்டம் இல்லை. அத்திட்டம் என்றோ முடிவுக்கு வந்துவிட்டது. மேற்பார்வையிடுதல் என்பதை குறைந்த அளவிலும், தொழிலாளர் துறையில் செயல்படுத்தப்படுவது இல்லை. தொழிலாளர் வைப்பு நிதி உயர்வு பற்றி பிரச்சனைகளில் பெரும் தொழில் நிறுவனங்கள் போதுமா

விபத்துகளைத்தடுக்க ஒருங்கிணைந்த அரசு துறைகளின் முயற்சி தேவை

விபத்துகளைத்தடுக்க ஒருங்கிணைந்த அரசு துறைகளின் முயற்சி தேவை           -சம்ஹதி மொஹபத்ரா               தமிழில்: ஹன்சா       ப்யூஷ் திவாரி சேவ்லைப் எனும் அமைப்பு மூலமாக சாலைகளில் நடைபெறும் விபத்துகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும் முயற்சித்து வருகிறார்.       தன் தம்பி வாகனம் மோதி துரதிர்ஷ்டவசமாக எந்த முதலுதவியும் கிடைக்காமல் இறந்துபோன செய்திதான் ப்யூஷ்திவாரியை தட்டி எழுப்பியது. மாநிலத்தில் பெரும் போதாமையாக, பற்றாக்குறையாக இருந்த முதலுதவி சிகிச்சை முறைகள் தான் திவாரிக்கு தான் செயல்படவேண்டிய திசை, நோக்கம் குறித்து புரியவைக்க உதவியது.       ‘’என் தம்பிக்கு பதினாறு வயதுதான் இருக்கும். ரத்தம் சொட்ட கீழே கிடந்தவனுக்கு முதலுதவி செய்யக்கூட யாரும் பக்கத்தில் வரவில்லை. அவனைக் காப்பாற்றும் உதவி வேண்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை வற்புறுத்தி அழைக்கவேண்டி இருந்தது.’’ என்று கூறும் திவாரி அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தபின் 2008 ல்

உள்ளிருக்கும் பேரொளி

உள்ளிருக்கும் பேரொளி                         -சேதனா திவ்யா வாசுதேவ்                         தமிழில்: ஏஆர்ஏ                    பெங்களூரைச் சேர்ந்த அமைப்பு ஒன்று அடித்தட்டு மக்களின் குழந்தைகளை பள்ளியிலிருந்து கல்லூரி வரை படிக்கவைக்க கட்டணம் செலுத்தி உதவிவருகிறது.                         அடித்தட்டு வாழ்நிலை கொண்ட குழந்தைகளின் உள்ளே இருக்கும் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவு தரும்  பெங்களூரில் உள்ள ‘பரிக்ரமா’ மனிதநேய அமைப்பிற்கு இது பதிமூன்றாவது ஆண்டாகும். தொடர்ந்து நம்பிக்கையோடு செயல்பட்டு வரும் இவ்வமைப்பு ஓவியங்கள் தொடர்பான (அனைத்தும் இவ்வமைப்பின் பள்ளிக்குழந்தைகள் வரைந்தது) கண்காட்சி ஒன்றினை சில நாட்களுக்கு முன் நடத்தியது. அமைப்பின் செயல்பாட்டிற்கு கிடைத்த நல்ல முன்னேற்ற நிலையாக இதனைக்கொள்ளலாம் என்கிறார் அமைப்பின் நிறுவனர் சுக்லா போஸ்.                         பெங்களூரில் நான்கு பள்ளிகள் எளிமையாக தொடங்கப்பட்டு அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள், அனாதை இல்லங்கள், குற்றவாளிகளின் குழந்தைகள் ஆகியோர் கல்வி கற்று வருகின்றனர். ‘’ முதலில்

புள்ளி விவரங்கள் ஏன் நாட்டிற்குத் தேவை?

புள்ளி விவரங்கள் ஏன்  நாட்டிற்குத் தேவை?                 ராமமூர்த்தி அய்யாவு                         தொகுப்பு: விளாதிமீர் வான்யா ·         புள்ளிவிவரம் திட்டமிடல் ·         புள்ளிவிவரத்தன்மை ·         புள்ளிவிவர சேகரிப்பு சிக்கல் நாட்டின் எந்தப்பகுதிக்கு எந்த மக்களுக்கு தேவை என்பது சரியான புள்ளி விவரங்களின் மூலம் மட்டும் தெரிய வரும். பொருளாதாரத்திலே மூன்று அடிப்படை பிரச்சனைகள் உண்டு அதாவது, என்ன உற்பத்தி செய்வது, யாருக்கு உற்பத்தி செய்வது, எப்படி உற்பத்தி செய்வது என்பதைப்போல பொருளாதாரத்திட்டமிடலுக்கும் சரி அரசின் எந்த புதிய திட்டங்களுக்கும் சரி புள்ளி விவரங்கள்தான் அடிப்படை ஆதாரம்.      அப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் உண்மையானதாக இருக்கும்போதுதான் நாட்டின் வருமான பகிர்ந்தளிப்பு என்பது நல்ல விளைவை ஏற்படுத்தும். குறைந்த பட்சம் புள்ளி விவரங்கள் உண்மைக்கு அருகிலாவது இருக்கவேண்டும். No data is better than wrong data என்று சொல்லுவார்கள். தவறான தகவலை கொடுப்பதற்கு, கொடுக்காமலே இருக்கலாம். தவறான தகவல்களான புள்ளிவிவரம் என்பது நாட்டுக்கு செய்வது துரோகம் மட்டுமே. புள்

.பசுமை இயக்க முன்னோடிகள்-தெரு விளக்கு

பசுமை இயக்க முன்னோடிகள் இந்தியாவின் நான்கு திசைகளிலிருந்தும் இயற்கையைப் பாதுகாக்க திரண்டெழுந்த அர்ப்பணிப்பு கரங்களைக் கொண்ட தெரு விளக்கு போன்ற மனிதர்களில் சிலரை அறிமுகம் செய்து வைப்பது நமது கடமை. பிலிண்டா ரைட்     கானுயிர்களைக் காப்பதில் எப்போதும் முன்னிற்பவர். புலிகளை வேட்டையாடி, அதன் பல் ,தோல், நகம், எலும்புகள் என அனைத்தையும் கள்ள வணிகம் செய்யும் கொடியவர்களை எதிர்த்த இவரது போராட்டம் தீரமானது.  இந்திய கானுயிர் சங்கத்தை உருவாக்கி அரும்சேவை செய்தவரும் இவர்தான். 1994 ல் புலியின் உறுப்புகளை கள்ள வணிகம் செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் சங்கம் தொடங்கப்பட்டது. அரசு அதிகாரிகள், வனத்துறை ஆகியோருடன் தொடர்ந்து உரையாடி புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க சட்டங்கள் கொண்டு வர சங்கத்தின் மூலம் பாடுபட்டார். பிட்டு ஷகல்     சுற்றுச்சூழல் செய்திகளை மக்கள் படித்தறியும் வகையில் சான்ட்சுரி என்ற மாத இதழையும், கிளப் இதழையும் 1980 ல் தொடங்கியவர். The Ecologist Asia  மனிதவுரிமைக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவுமான இதழ் அவரது பங்களிப்பே. இயற்கை பாதுகாப்பு குறித்த முப்பது விவரணப் படங்களை எடுத்து தூர்தர்ஷனில் வ

அணுமின்சக்தி ஆபத்தானது – பசுமை மின்உற்பத்தியே சிறந்த தீர்வு

அணுமின்சக்தி ஆபத்தானது – பசுமை மின்உற்பத்தியே சிறந்த தீர்வு     2006 போர்ப்ஸ் புள்ளிவிவரப்படி உலகப் பணக்காரர் பட்டியலில் ஆசியாவிலேயே அதிகம் கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு இந்தியா எனும் புகழைப் பெற்றுள்ளது. முப்பத்தாறு கோடீஸ்வரர்கள், நூற்று தொண்ணூற்று ஒன்று பில்லியன் டாலர் சொத்துடையவர்கள் ஜப்பான் இருபத்துநான்கு கோடீஸ்வரர்களுடன் அறுபத்து நான்கு பில்லியன் டாலர் சொத்துடன் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.     2008 ல் உலகின் பத்து பெரும் பணக்காரர்களில் நான்கு பேர் இந்தியர் ‘’2020 ல் அறுபது விழுக்காடு உலக உற்பத்தி, இந்தியா, சீனாவிலிருந்து தான் கிடைக்கும்’’ எனப் பெருமையுடன் கூறுகிறார்  நமது நிதியமைச்சர். இதன் மறுபக்கம் முற்றிலும் வேறுமாதிரி உள்ளது. இந்திய ஒருங்கிணைக்கப்படாதோர் பற்றிய தேசியக் குழு முப்பத்திரெண்டு கோடிப்பேர் இருபது ரூபாய்க்கும் கீழான வருமானம் பெறுகிறார்கள். ஒரு லட்சத்து அறுபத்தாறு ஆயிரத்து முந்நூற்று நான்கு விவசாயிகள் 1997 முதல் பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.     இந்தியா ஒன்பது அல்லது பத்த

இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள் இயற்கைச் சூழல் ஞானம்

இயற்கையைக் காக்கும் பத்து கட்டளைகள் இயற்கைச் சூழல் ஞானம்     நாம் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. நாம் இயற்கையின் பிரிக்கமுடியாத பகுதியே என்பதை உணர்வோம். நாம் வாழும் பூமியின் இயற்கைச் சமன்நிலையைக் காப்பதும், இயற்கைச் சூழலுள் வாழ்வதும், நம்மிடமுள்ள இயற்கை வளங்களுக்குள் வாழ்வைக் கற்போம். நாம் தாக்குப்பிடிக்கும் சமூகத்தை, தனது மூலவளங்களை நாம் மட்டுமின்றி, எதிர்கால வாரிசுகளும் குறைவின்றி பெற்றுப்பயன் பெறும் வகையில் அளவுடனும், கவனத்துடனும் பயன்படுத்தும் சமுதாயத்தை விட்டுச் செல்வோம். இதற்கு ஏற்ற மண்ணைச் சாரமிழக்கச் செய்யாத வேளாண்மையை, ஆற்றல் ஊதாரித்தனமற்ற, சிக்கனமான பொருளாதாரத்தை இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் மதிப்பு கூடிவாழும் சமுதாயத்தை அமைப்போம். அடிமட்ட ஜனநாயகம்     தன் வாழ்வைப் பாதிக்கும் எதைப்பற்றியும், தனது கருத்தைத் தயக்கமின்றிக் கூறும் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதனும் பெறத்தகுதி பெற்றவனாவான். யாருடைய கருத்தையும் எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. மக்கள் பங்கேற்பு, பங்களிப்பை அரசின் அனைத்து நிலைகளிலும் வளர்க்க முயல்வோம். மக்கள் பிரதிநிதிகளாகத்  தேர்ந்தெடுக்கப்படுவோர், தேர்ந்தெட

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம் எஸ்.பி உதயகுமார் தமிழில்: ஜீவா ‘’அரசியல்வாதியையும் மாதவிலக்கு பட்டையையும் அவ்வப்போது விலக்கிவைக்க வேண்டும்’’ என்று ஒரு ஆட்டோ வாசகம் அறிவித்துச் செல்கிறது. மாற்றவில்லை என்றால் அவற்றால் நோய் வரக்கூடும். நடக்கவும் முடியாத தாத்தாக்கள் அதிகாரமையமாக நகர்கிறார்கள். ஊழல் நாயகர்கள் புரட்சி வீரர்களாக முழங்குகிறார்கள். அசிங்கமான அகவாழ்வு, மேடையில் கண்ணகி வேஷம் போடுகிறது. இந்தியா மாற்றம் வேண்டி எதிர்பார்த்து நிற்கிறது. அவர்களை மாற்றலாம்; ஆனால் அவர்களுக்கு மாற்றாக யார் உள்ளார்கள்? புதிய தூய அரசியல்வாதிகளை உடனே மந்திரத்தினால் உருவாக்கிவிட முடியுமா? மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அலங்காரமாக அன்றி ஆத்மார்த்தமாகச் சொல்லும் அரசியல்வாதி யார்? அவர்களின் தகுதி, பண்பு, அர்ப்பணிப்பு, உழைப்பு எப்படி இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட தலைவர்களை உருவாக்குவது, பயிற்றுவிப்பது, அரசியல் தத்துவம் சொல்லிக்கொடுப்பது, நாடுபற்றி, மக்கள் பற்றி, உலகம் பற்றிச் சிந்திக்கச் செய்வது எப்படி? நாம் நாட்டின் நிலை என்ன? கிழக்கிந்தியக் கம்பெனிக் கொள்ளையர்களிடம் சிக்கிய நாட்டைப் போராடி விடுவித்த