இடுகைகள்

நூல் வெளி

திசைகாட்டி எஸ்.வைதீஸ்வரன் நிவேதிதா பதிப்பகம்                                                                                                                                     அந்துவன்      அம்ருதா இதழில் நினைவோடை பகுதியில் எழுதிவரும் வைதீஸ்வரன் பக்கம் அவரது இளமைக்கால நினைவுகளை கூறும் பகுதியாக வசீகரிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட நூல்தான் இது.      இதில் பெரும்பாலும் கவிதை குறித்த பகுதிகள் அதிகம் என்றாலும், அதனினூடே கட்டுரை தன்   இளமைக்காலம், தன்பிறப்பு, பார்த்த படங்கள், கவிதைகள் குறித்த குறிப்புகள் கொண்ட புத்தகம் இது எனலாம்.      தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் குணவியல்பை கூறுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், தான் படிக்கச்செல்லும் இடம் பற்றியும், அர்த்தமற்ற வார்த்தை என்ற கட்டுரையில் விடுதலை ஆகப்போகும் வயது முதிர்ந்த ஒருவனின் மனநிலையையும் நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார்.      பார்வையற்ற ஒருவர் குறித்த கட்டுரை அற்புதமாக உள்ளது. பார்வையற்ற மனிதரின் கவிதைதான் இந்த கட்டுரைத்தொகுப்பின் தலைப்பும் கூட.                            41 அவந்திகாவ

நூல் வெளி

37 சரித்திரத்தில் படிந்த நிழல்கள் தமிழவன் அடையாளம் பிரஸ்                                                                                      சகலன் இது பின்காலனிய நாவல். தமிழகத்தில்   பல நிகழ்வுகளை கடும் பகடியாக நிகழ்ச்சியாக மாற்றுகிறது. பாக்கியத்தாய் ராணி, பச்சைராஜன் ராஜா, ஆளும் நாடு தொகிமொலா என புனைவாக பலதும் நல்ல திட்டமாக உருவாக்கப்பட்டு, பல அரசியல் நிகழ்வுகள், இத்தளத்தில் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.   இவர்களுக்கு இருமகன்கள் சொல்லின் பொருள், மலைமீது ஒளி என இருவரின் செயல்பாடுகள், பச்சைராஜனின் இரண்டாம் ராணி சங்கல்ப ராணி என பலரின் செயல்பாடுகளை புனைவுலகின் மற்றொரு புனைவுச்செயல்பாடாக வர்ணிக்கப்பட்டு சுவாரசியமாக பயணிக்கிறது கதை. அடுத்தது என்று எதிர்பார்க்க வைக்கும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. கதையினை உண்மை என்று நம்ப வைக்க பல அறிஞர்களின் பெயர்கள், நூல்களின் பெயர்கள் அடிக்குறிப்பாக காட்டப்படுவதால் நம்பி பயணிப்பதைத்தவிர வேறு வழியேதுமில்லை.   இதனிடையே பழைய வடுவூராரின் நூல்களைப்போல இடையே வரும் ஆசிரியரின் குரல் வாசகரை திசை திருப்பும் பல பதில்களைக்கொண்டுள்ளது

நூல் வெளி

35 இந்தியப்பிரிவினை சினிமா யமுனா ராஜேந்திரன் உயிர்மை பதிப்பகம்                                                      பக்சி இந்நூலில் பிரிவினையைப்பற்றிய பிரச்சனைகளைப்பேசும் 7 படங்கள் அவற்றின் கதை, அது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய முழுமையான விளக்கம் என நம்முன் வைக்கிறது. இதில் நான் முழுமையாக பார்த்திருப்பது தீபா மேத்தா இயக்கிய எர்த் படம் ஒன்றைத்தான். 1999 ல் வந்த இப்படம் பாப்ஸி லபித்வா எனும் பாகிஸ்தான் எழுத்தாளர் எழுதிய Cracking India   எனும் நாவலை மூலமாக கொண்டது. இதில் வரும் காட்சிகள், பிரிவினை கலவரங்களை சூழல்களை ஓரளவு உணர்த்தும்படியான காட்சிகளைக்கொண்டுள்ளன என்று கூறலாம். கதையைக்கூறும் லெனி தன் உறவினரான சிறுவனோடு எதிரில் உள்ள சிறுவனோடு நிகழ்த்தும்   காட்சி எனக்கு பிடித்தமானது என்பேன்.   லெனியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பில் துக்கம், மகிழ்ச்சி, வலி என   அத்தனையையும் அந்த முகம் வெளிப்படுத்துகிறது. அமீர்கான் முஸ்லீம் மக்கள் இந்துமக்களை கொன்று குவிப்பதை சிரிப்புடன் ரசிக்கும் காட்சியில் பதறும் நந்திதாதாஸின் முகபாவம் ஒன்றேபோதும்; அவரது நடிப்பிற்கு சான்றுகூற. இது