இடுகைகள்

கவர்மென்ட் பிராமணன்- நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

படம்
                                                          கவர்மென்ட் பிராமணன்                                                         அரவிந்த் மாளகத்தி                                                         தமிழில் : பாவண்ணன்   இந்த நூல் கன்னட எழுத்தாளர் அரவிந்த் மாளகத்தியின் சுயசரிதையாகும். கவர்மென்ட் பிராமணன் என்று கூறப்படுவது ஏன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகளின் மீதான கேலி எனலாம். முழுக்க அவரின் ஒவ்வொரு வாழ்வின் நிகழ்வுகளும் இதில் கூறப்படுவதில்லை என்றாலும் குறிப்பான பலவையும் அவர் தேர்ந்தெடுத்து இதில் தொகுத்திருக்கிறார். தொடர்ச்சியாக பல நூல்களும் இவர் எழுதி வருகிறார்.          ஏறத்தாழ தாழ்த்தப்பட்ட பலரும் அனுபவித்த கொடுமைதான் முதல் சில அத்தியாயங்களில் குறிப்பிடப்படுவது. பள்ளி ஆசிரியர் அரவிந்த் மாளகத்தியை கடுமையாக அடித்து நொறுக்குவது. தினசரி வகுப்பறையைக் கூட்டுவது என்று அதனை செய்யவில்லை என்றால் அவர்களை சாதிப்பெயர் கூறி கடுமையாக தண்டிப்பது. ஏறத்தாழ எனக்கும் எனது ஆசிரியர் பாலுச்சாமி நாயக்கர் நினைவுக்கு வருகிறார். அவர் ஒவ்வொருநாளும் பள்ளிக்கு வரக்கூடாது எ

குலாத்தி: தந்தையற்றவன் நூல்வெளி2

படம்
                                                      குலாத்தி                                                 கிஷோர் சாந்தாபாய் காலே                       ஆங்கிலம் வழி தமிழில் : வெ. கோவிந்தசாமி                                                     விடியல் பதிப்பகம்           இந்த நூல் தமாஷா எனும் நடனம் ஆடும் தாயின் மகனாகப் பிறந்து சமூகத்தின் பல தடைகளைத் தாண்டி , சாதிக்கொடுமைகளை அனுபவித்து தளராத மனவுறுதியினால் மருத்துவரான ஒருவரின் கதை இது. தன் வரலாற்று நூலில் இந்த நூல் வேறுபடுவது இதனுடைய இலக்கை குறிவைத்து தளராது முன்னேறினால் நிச்சயம் நினைத்ததை அடையமுடியும் என்று கூறும்   தன்மையினால்தான் என்பதை இங்கு குறிப்பிடலாம் . குலாத்தி என்பது தமாஷா எனும் நடனமாடும் ஒரு ஜாதிக்காரர்களைக் குறிப்பிட பயன்படுகிறது . இந்த ஜாதியில் பிறந்த ஆண்கள் யாரும் வேலைக்குச் செல்வதெல்லாம் கிடையவே கிடையாது . அவர்கள் தம் தங்களை , அல்லது அக்கா , அல்லது மகள் என்று யாரையேனும் நடனமாடச் சொல்லி அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்வதுதான் அவர்களது வழக்கமாக இருக்கிறது

வறட்சிவாதிகளிளோடான போராட்டம்

படம்
                                            வறட்சிவாதிகளிளோடான போராட்டம்                     திரைப்படம் இயக்குவது குறித்து பல கனவுகள் வைத்துக்கொண்டு இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக மற்றவர்களை மட்டம் தட்டி கீழே மிதித்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்துவது இருக்கிறதே அதை நான் இவர்களிடம் பெரிதும் கண்டிருக்கிறேன். இது எதுவரை சென்றது அந்த உறவு உடைந்து போகும் அளவு என்று சொல்லலாம்.                      கனவுகளை நான் மதிக்கிறேன். அதை நோக்கி பயணம் செய்வது உத்தமமானதுதான். ஆனால் அதை அடையும் வழியாக அவர்கள் தேடி அடைய முயலுவது எப்படியாகிலும் என்பதுதான் சிறிதும் அறமே இல்லாததாக இருக்கிறது.  முன்பு நான் பணிபுரிந்த பத்திரிக்கை அலுவலகம் அருகில் ஆவணப்படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றிருந்தது. அதனை நடத்திவந்த பி. எஸ். பெருமாள் நாதன் பேச்சில் மக்கள் நலம், போராட்டம், புரட்சி, மக்களுக்காக கலை என்று தொண்டைத்தண்ணீர் வற்றும் வரை பேசுவார். ஆனால் இறுதியில் சார் சாப்பட்றக்கு ஏதாவது பணம் இருக்குமா வின்சென்ட் என்பார். எனக்கு புரியாதது என்னவென்றால், கனவு பலிக்கும் வரை அதற்கான உழைப்பு எதிலும் ஈடுபடாமல் இவர்

இரானின் கதை:நூல்வெளி-2

                                           நூல்வெளி-2                                                               ப்ராட்லி ஜேம்ஸ்                                                                            இரானின் கதை                                                        மர்ஜானே சத்ரபி                                                    தமிழில்: எஸ். பாலச்சந்திரன்                                                    விடியல் பதிப்பகம், கோவை இந்த நூலை நான் இருவரிடம் கொடுத்து வாசிக்க கூறியும் இருவரும் கடுமையாக முதலிலேயே மறுத்துவிட்டார்கள். காரணம் நூல் கிராபிக் படங்களின் வடிவில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும் என்று உணர்கிறேன். போராடி கையில் திணித்தும் இறுதியில் ஒருவர் எனக்கு இந்தப் புத்தகம் வேண்டாம் என்று கூறி திருப்பித்தந்துவிட்டார். இன்னொருவர் டைம்பாஸ் இதழ் அளவுக்கு திருப்பிப் பார்த்துவிட்டு, உடனே சூப்பருங்க என்று என் கையில் நூலை ஒப்படைத்துவிட்டார். எனக்கு முதலில் இந்த நூலை புத்தகத்திருவிழாவில் பார்த்தும் எப்படி இருக்குமோ என்று வாங்கவில்லை. தாமதம்தான் என்றாலும் மிகத்தாமத

மின்னூல் வெளியீடு :மனதேசப் பாடல் – கட்டுரைகள்

படம்
மனதேசப் பாடல் – கட்டுரைகள் ஜேம்ஸ் பாம்பிரே, லாய்டர் லூன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License ஆக்கம்:   ஜேம்ஸ் பாம்பிரே ,  லாய்டர் லூன் தொகுப்பு:   அரசுகார்த்திக் ,  கிறிஸ் டோல்ட் வகை:   குறுங்கட்டுரைகள் ஆக்கத்தலைமை:   ராஜா சம்மார், கார்த்திக் வால்மீகி, ரஞ்சன் மஹர் பதிப்பாளர் :   தி ஆரா  பிரஸ் , இந்தியா. தட்டச்சுப்பணி:   அச்சுதை, ரோஸலின் ஸ்ரைக் புகைப்படம் உதவி:   பின்ட்ரெஸ்ட் இணையதளம். அட்டைவடிவமைப்பு:   தி இன்னோவேஷன் பொட்டிக், இந்தியா. ஒருங்கிணைப்பு:   ஹெரிடேஜ் தமிழன்,கித்தான் முத்து,ஸ்பீடு செந்தில். வலைப்பூ அனுசரணை:   Komalimedai.blogspot.in மின்னஞ்சல்:   sjarasukarthick@rediffmail.com மின்னூலாக்கம் – சிவமுருகன் பெருமாள் –  sivamurugan.perumal@gmail.com கிரியேட்டிவ் காமன்ஸ் 4.0 2014 உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம். இவ்வெழுத்துக்களை பயன்படுத்தும் போது வலைப்பூ முகவரி, மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும். உர

'ம்' ஷோபா சக்தி: நூல்வெளி2

படம்
                                  நூல்வெளி -2                                                                          ப்ராட்லி ஜேம்ஸ்                                                                           ம்                                            ஷோபா சக்தி                  இந்த நூலின் வேறுபாடு என்னவென்றால் நூல் அட்டையிலேயே அது அச்சான இடம், வடிவமைத்தவர் ஆகிய விவரங்களை அச்சிட்டு களேபர கவனத்தை ஈர்க்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த நாவல் இலங்கையில் பாதிரியாருக்கு படிக்கும் ஏர்னஸ்ட் நேசகுமாரன் என்பவரின் இயக்கம், அதில் ஈடுபட்டதால் சிதைவடையும் அவரது மொத்த வாழ்வு என உண்மைச்சம்பவங்களோடு இணைந்து பயணப்படுகிறது கதை இது. தொடக்கம் ஒரு அதிர்ச்சியான விஷயத்தோடு தொடங்குகிறது. பிறேமினியின் மகள் நிறமி அரசு மருத்துவமனையில் தன் கர்ப்பத்தை கலைக்க அமர்ந்திருக்கிறாள். அது யாரால் உண்டானது என்பதை அவள் தெரிவிக்க மறுக்கிறாள். அது யாரால் உண்டானது என பலரும் யோசிக்க, அவளது தந்தை ஏர்னஸ்ட் நேசகுமாரனும் யோசிக்கிறார் என்று அதன்வழியே அவரது வாழ்க்கை நம்முன் விரிகிறது. இதில் நிறமி பிறப்பது

200 வது கட்டுரையை எட்டியது கோமாளிமேடை வலைப்பூ

படம்
200 எப்படியோ அடித்து பிடித்து என்னன்னமோ எழுதியாவது 200 வது கட்டுரைகள் வந்துவிட்டது. வேறென்ன அடுத்த கொண்டாட்டம்தான்அதுதான். வெற்றிகரமான 200 கட்டுரையை முன்னிட்டு  ஒரு படத்தை வெளியிடுகிறோம். 200 வது கட்டுரை