இடுகைகள்

புதிய புத்தகம் பேசுது! - தேசியவாதம் நல்லது!

படம்
தி கேஸ் ஃபார்  நேஷனலிசம் ரிச் லோரி உலகெங்கும் தேசியவாதம் வளர்ந்து வருகிறது. இதை வைத்து பல்வேறு வலதுசாரி வாத கட்சிகள் தேர்தலில் வென்று வருகின்றன. அதற்கு காரணம் என்ற என்று ஆசிரியர் லோரி ஆராய்ந்திருக்கிறார். ஏறத்தாழ ட்ரம்பிசம் முதற்கொண்டு அனைத்து தேசியவாதங்களும் நல்லதுதான் என முடிவு செய்து எழுதியுள்ளார் ரிச் லோரி. ஃபீமேல்ஸ் ஆண்ட்ரூ லாங் சூ அதிகம் விரும்பப்படுவதும், வெறுக்கப்படுவதும் பெண்கள்தான். அந்த பெண்களைப் பற்றியதுதான் இந்த புத்தகம். அனைவரும் பெண்கள்தான் என ஆசிரியர் சொல்லுகிறார். எதை வைத்து என்பதை புத்தகம் படித்து புரிந்துகொள்ளுங்கள். ஆபாச படங்களுக்கு எதிரான பெண்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு துறை சார்ந்த பெண்களைப் பற்றியும் ஆசிரியர் கவலைப்பட்டு எழுதியிருக்கிறார். இன் டிஃபன்ஸ் ஆஃப் எலைட்டிசம் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பாப்புலிச சிந்தனைகளைச் சொல்லி அடித்தட்டு அமெரிக்கர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதன்பிறகு பேசியே மக்களின் மனதில் நின்றார். அடுத்த தேர்தலிலும் அவர் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. எப்படி தன்னை தற்காத்துகொள்கிறது மேல்தட்டு வர்க்கம் என ஜோயல் ஸ்டெய்ன் விளக்

வேலை வாய்ப்புச் சந்தை மாறி வருகிறது - நீங்களும் மாறுங்கள்!

படம்
வேலைவாய்ப்புச்சந்தைகள் இப்போது மாறிவருகின்றன. முதலில் லிங்க்டு இன்னில் புரபைல் பதிந்து வேலை தேடியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.இன்று நொடியில் வேலைக்கு தகுதியானவர்களா இல்லையா என அறிய டிண்டர் ஆப்பை போலவே புதிய ஆப்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி பல ஆப்கள் உள்ளன. இனிமேலும் நீங்கள் நாக்ரி.காமில் பதிந்து வைத்தேனே அதெல்லாம் வீணா என்றால் வாழ்க்கை மொத்தமும் வீணாகிவிடும். ஆட்டோமேஷன் உலகில் கிடைக்கும் வேலை எவ்வளவு முக்கியம் தெரியுமா?   ஜாப்பர், பிளாங்க். ஸ்விட்ச், வேவ், ஷேப்பர் எனும் ஆப்களை இன்று மனிதவளத்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் இனி சிபாரிசுகளை விட உங்களுக்கு தகுதிதான் முக்கியமாகப் போகிறது. டிண்டர் என்பது ஜாலியான டேட்டிங் ஆப். அதற்கும் வேலைக்கும் வித்தியாசம் இல்லையா என சிலர் கேட்கலாம். உண்மைதான் டெக் ஆட்கள் புரிந்துகொண்டது அதன் இடைமுக எளிமைத்தன்மையை மட்டுமே. எளிமையாக சில கம்பெனிகளைப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை ஸ்வைப் செய்து அந்த நிறுவன ஹெச் ஆர் ஆட்களிடம் ஆப் லைனில் பேசலாம். அவர்கள் தேடிய ஆட்களில் நீங்களும் ஒருவர் என நம்பிக்கை தோன்ற

சிறைவாதிகளுக்கு பயிற்சி தரும் பின்லாந்து அரசு!

படம்
giphy.com சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வெளி

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!

படம்
giphy.com மாற்றம் தரும் பசுமை வீடுகள் !   இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன. தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவா

ஆளுமையை மாற்றும் தூங்கும் நிலைகள்!

படம்
giphy.com மிஸ்டர் ரோனி தூங்கும் பொசிஷன்கள், நமது ஆளுமையை மாற்றுமா? தூங்குவது, சாப்பிடுவது தவிர்த்து நாம் என்ன செய்கிறோமோ அதை வைத்துதான் இவர் இப்படி, அவர் இப்படி என அனுமானம் செய்கிறார்கள். வரையறுக்கிறார்கள். இந்த விஷயத்தை 2012ஆம் ஆண்டு வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதனால் ஆளுமைக்கும் தூங்குவதற்கும் பெரிய தொடர்பில்லை என நினைக்கலாம். ஆனால் 2014ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பேரா.ரிச்சர்ட் வைஸ்மன் தூங்கும் நிலைகளுக்கும் ஒருவரின் ஆளுமைக்கும் தொடர்புண்டு என சொல்லியிருக்கிறார். இடதுபக்கம் சாய்ந்து படுப்பவர்கள் கிரியேட்டிவிட்டி பொங்கும் ஆட்கள் எனவும், அருகில் உள்ள மனைவிக்கு நெருக்கமாக படுத்து தூங்கும் ஆட்கள் ஜோவியலான ஆட்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டு உள்ளார். குப்புறப்படுத்து தூங்கும் என்னைப்போன்றவர்களை சுயநம்பிக்கை இல்லாதவர்கள் என்று வேறு கூறியிருக்கிறார். உண்மையா இல்லையா என நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். நன்றி - பிபிசி

கேஷ்பேக் ஆஃபர் கொடுக்கும் வக்கீலின் போராட்டம் - தெனாலி ராமகிருஷ்ணா

படம்
தெனாலி ராமகிருஷ்ணா இயக்கம் - நாகேஸ்வர ரெட்டி ஒளிப்பதிவு - சாய் ஸ்ரீராம் இசை - சாய் கார்த்திக் வக்கீலின் கதை. சந்தீப் கிஷனின் தந்தை புரோக்கர். இதனால், அவரது குடும்பத்தை அந்த ஊரே தரகர் என்று அழைத்து அவமானம் செய்கிறது. இதனால் கடன்பட்டு தன் மகனை வக்கீல் படிப்பு படிக்க வைக்கிறார். சந்தீப் கஷ்டப்பட்டு படிக்கிறார். ஆனால் கேஸ்கள்தான் கிடைக்காமல் காம்ரமைஸ் செய்து காசு சம்பாதிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாத அவரின் தந்தை, நீ கோர்ட்டில் வாதம் செய்து சம்பாதித்தால்தான் உன்னை என் மகனாகவே ஏற்பேன் என்கிறார். இதற்காக அவர் ஏற்கும் உள்ளூர் அரசியல்வாதி வழக்கு அவரை மேலும் பிரச்னைகளுக்குள் தள்ளுகிறது. என்னென்ன பிரச்னைகள் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஆஹா சந்தீப் கிஷன், அவரின் தந்தை, முரளி சர்மா, சாய் கார்த்திக்கின் இசை, சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, குடும்ப சென்டிமெண்ட், சப்தகிரி காமெடி. ஐய்யய்யோ மற்ற எல்லாமும்தான். குறிப்பாக வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம். அமைதியாக இருந்து பின்னால் விஸ்வரூபம் எடுக்கும் கதாபாத்திரத்தை இறுதியாக கோமாளி ஆக்குகிறார்கள். முதல்பாதியில்

கொலைகார தேசம் - அமெரிக்கா

படம்
ஜெஃப்ரி டாமர் அசுரகுலம் கொலை விழும் நாடு! அமெரிக்காவில் இன்றுவரை இரண்டு லட்சத்து இருபதாயிரம் கொலை வழக்குகளை என்ன செய்வது எப்படி முடிப்பது என தெரியாமல் போலீஸ் திணறி வருகிறது. இக்கணக்கு தொடங்குவது 1980ஆம் ஆண்டிலிருந்து. போலீஸ்தான் சீரியல் கொலைகார ர்களை பிடித்து மின்சார நாற்காலி, அல்லது விஷ ஊசி போட்டுக்கொல்கிறது. ஆனாலும கொலைகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை. 1900 இல் அமெரிக்க காவல்துறை சீரியல் கொலைகார ர்களை வகைப்படுத்தி வைத்திருந்த து. இம்முறையில் 3 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கியாகவே இருந்தது என்கிறார். மருத்துவர் மைக்கேல் ஆமோட். இக்கொலைகார ர்களின் 52 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 40 சதவீதத்தினர் கருப்பர்கள். பிற இனத்தவர்கள் மீதி. 1970 முதல் 2005 வரை 93 மூன்று பேர்களை கொலை செய்த சாமுவேல் லிட்டியல் என்ற கொலைகாரப் பெண் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளார். என்ன காரணம்? தனிமைதான். சீரியல் கொலைகார ர்களில் இளம் வயது பெரும்பாலும் தாயிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவே இருக்கிறது. இது அவர்களின் மூளை வளர்ச்சியில் பெரும் மாறுதல்கள