17. பத்திரிகையாளர்களை வழக்குகள்,ரெய்டு மூலம் மிரட்டிய அதானி - மோசடி மன்னன் அதானி!
அதானி என்டர்பிரைசஸ், அதானி க்ரீன், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி க்ரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது, பங்குத்தரகர்கள் பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதாக ஏதுமே இருக்காது. ‘’நாங்கள் அதானி குழுமத்தின் பங்குகளை, உண்மையான பணப்புழக்கம் இன்மை, வட்டி இன்மை, துறையிலேயே 16 மடங்கு அதிக மதிப்பு ஆகியவை காரணமாக கைவிட்டோம்’’ என பங்குத்தரகர் கூறினார். இவர் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகளைக் கைவிட்டதை அடுத்து கூறிய வாக்கியம்தான் இது. அதானி போர்ட் என்ற நிறுவனத்தைத் தவிர்த்து வேறு நிறுவனங்களின் பங்குகளை ஆராய எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை என்பதே உண்மை. இதற்கு குழுமத்தின் முதலீட்டு நிதி அளவே காரணம். Adani company Analyst covering per Bloomberg jan 23 Indian Company with similar market cap, Number of analysts covering Adani green energy 1 Bajaj finance: 33 analysis Adani enterprises 2 Larsen & Toubro: 44 analysis Adani Transmission 2 HCL technolog