இடுகைகள்

அழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லட்சத்தீவை சுற்றுலாதலமாக மாற்றுவது சூழலை அழிக்கும் முயற்சி! - ரோகன் ஆர்தர், கடல் சூழலியலாளர்

படம்
                L-R(5th person rogan)     மாலத்தீவு வளர்ச்சி மாடல் லட்சத்தீவுகளை அழித்துவிடும் ரோகன் ஆர்தர் கடல் உயிரியலாளர் பருவச்சூழல் பாதுகாப்பு என வரும்போது லட்சத்தீவுகள் பற்றி ஏன் அதிகம் பேசுகிறார்கள் ? அப்படியென்றால் நான் உங்களுக்கு பவளப்பாறை எப்படி உருவாகிறது என விளக்கவேண்டும் . கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள காடுகள்தான் பல்வேறு புயல்களையும் , அலைகளையும் மட்டுப்படுத்துகின்றன . இங்குள்ள கடல்பகுதியில் பவளப்பாறைகள் தானே வளருகின்றன . இவை வட்டவடிவில் இங்கு உருவாகி வளருகின்றன . இங்கு தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளால் பவளப்பாறைகளின் வளர்ச்சி தடைபட்டு , தானே பாதிப்பை சரி செய்யும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது . இந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி ஆழமாகி வருகிறது . ஆய்வுகள் மூலம் அங்கு ஏற்படும் பாதிப்புகளை அடையாளம் கண்டு வருகிறோம் . லட்சத்தீவுகளை சுற்றுலாவிற்கு ஏற்றபடி மாற்றினால் இயற்கைச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் நடைபெறும் . இங்குள்ள கலாசாரம் , சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான தொடர்பு எப்படியிருக்கிறது ? இங்குள்ள மக்கள் சிறப்பான கல்வி கற்றவர்

சதுப்புநிலங்களை மீட்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

படம்
  குப்பைகளால் அழியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! செய்தி: தமிழகத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 8.4 ஜிகா டன்கள் மீத்தேன் வாயு உருவாகி சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை உலக சதுப்புநில நாள் அரசு வனத்துறையால் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான சந்திப்பில் இயற்கை ஆர்வலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் பங்குபெற்று, பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடமாக மாறிய சதுப்புநிலங்களை மீட்பது குறித்து ஆலோசித்துள்ளனர். பள்ளிக்கரணையில் பல்வேறு இடங்களில் கருவிகளைப் பொருத்தி கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.  மீத்தேன் அதிகரிப்பு நன்னீர் சதுப்பு நிலப்பகுதியான பள்ளிக்கரணையில்  கொட்டப்படும் நகரின் ஒட்டுமொத்தக் கழிவுகளால்  8.4  ஜிகா டன்கள் மீத்தேன் உருவாகி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சூழல் ஆராய்ச்சிக் கழக இயக்குநரான ஏ.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.  கடந்த 50 ஆண்டுகளாக பள்ளிக்கரணையிலுள்ள சதுப்புநிலத்தில் கொட்டப்படும்

வீட்டுப்பூனைகளால் காட்டுயிர்கள் அழிந்து வரும் அவலம்!- மேற்கு நாடுகளில் மக்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் வலுக்கும் மோதல்!

படம்
              காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்போல இரு

காடுகளை வகைப்படுத்துகிறது இந்திய அரசு! - காடுகள் வளருமா?

படம்
pixabay இந்திய அரசு காடுகளை மக்களை உள்ளே அனுமதிக்கும் (Go), அனுமதிக்காத (Non go)  என வகைப்படுத்தி கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்படி காடுகளில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் உள்ள பகுதிகளுக்கு குறைவான அனுமதியே அளிக்கப்படவிருக்கிறது. பிற பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செய்துகொள்ளலாம். இதனை ஹை, மீடியம், லோ என மூன்று பிரிவுகளாக அரசு பிரித்துள்ளது. இதன்படி ஹை எனும் பிரிவில் உள்ள காடுகளில் எந்த வித வளர்ச்சிப்பணிகளையும் அரசு மேற்கொள்ளாது. பிற நிறுவனங்களும் அப்பகுதியில் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது. மீடியம், லோ ஆகிய பகுதிகளில் வளர்ச்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம். 2019ஆம் ஆண்டு தகவல்படி இந்தியாவில் உள்ள காடுகளில் சதவீதம் 21.9 ஆகும். இதுவரை 7,12, 249 சதுர கி.மீ. தொலைவுக்கு காடுகள் பரவியுள்ளன. 1980ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1.52 மில்லியன் ஏக்கர்கள் அளவுக்கு காடுகள் வளர்ச்சிப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய காடுகள் மற்றும் ஆராய்ச்சிக்கழகம் மத்திய அரசுக்கான கொள்கைகளை பரிந்துரைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இது தொடர்பான அறிக்கைகளை அரசு வழங்கலாம்.