இடுகைகள்

உரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டைக் காப்பாற்ற போரத் செய்யும் காமெடி களேபரங்கள்! போரத் 2

படம்
            போரத் கஜக்ஸ்தான் நாட்டில் தண்டனை வழங்கப்பட்டு குவாரியில் வேலை செய்யும் போரத் இம்முறை சர்வாதிகார அரசின் அனுமதி பெற்று , அமெரிக்காவிற்கு அனுப்ப ப்படுகிறார் . அங்கு அவர் அதிபருக்கு பரிசு ஒன்றை வழங்கி நாட்டின் மீதான தடைகளை நீ்க்கவேண்டும் . எப்போதும் போல போரத் தனது கோமாளித்தனங்களோடு அமெரிக்கா செல்கிறார் . புத்திசாலித்தனம் கொண்ட குரங்கை பரிசாக கொடுக்க நினைக்கிறார் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த கூண்டில் அவரது மகள்தான் இருக்கிறாள் . ஆம் குரங்கை கொன்று தின்றுவிட்டு அவள்தான் அமெரிக்கா வந்திருக்கிறாள் . அதுவும் தனது மரப்பெட்டியில் . இதனால் அரசின் மரணதண்டனையிலிருந்து தப்பிக்க தனது மகளை பரிசாக கொடுத்துவிடலாம் என நினைக்கிறார் . மகளை கூண்டில் அடைத்து அழைத்துச்செல்கிறார் . உண்மையில் அவர் செய்யும் விஷயம் பற்றி அவருக்குத் தெரிந்ததா ? உண்மையில் பரிசை டிரம்புக்கு தர முடிந்த்தா அல்லது குறைந்தபட்சம் அவரது நெருங்கிய வட்டத்தினருக்கு அளிக்க முடிந்ததா ? என்பதுதான் இறுதிப்பகுதி .. அமெரிக்கா மற்றும் முஸ்லீம் நாடுகளை மையப்படுத்திய காமெடிதான் . ஆனால் நடப்பு நிகழ்வுகள் , ஆணா

பெண் கல்வியாளர்களுக்காக பதிப்பகம்! - பார்பரா ஸ்மித்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் பார்பரா ஸ்மித் அறிமுகம் தனது 72 ஆண்டு கால வாழ்க்கையில் கறுப்பினத்தவர்களுக்கான உரிமைகளைப் பேசுபவராக இருந்தார் பார்பரா.  காம்பாகி ஆற்றுப் பாதுகாப்பு மையத்தையும் உருவாக்கி, கறுப்பினத்தவரின் உரிமைகளைப் பேசினார். நான் என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்ய முயற்சித்துள்ளேன் என்கிறார் பார்பரா. போராட்டம்தான் வாழ்க்கை!  1970 ஆம் ஆண்டு தொடங்கி, பார்பரா ஸ்மித் கறுப்பின மக்களுக்காக உழைத்து வருகிறார். மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமை, செயற்பாட்டாளர், பதிப்பாளர் என பல்வேறு விஷயங்களிலும் ஈடுபட்டு முத்திரை பதித்த பெண்மணி இவர்.  1946 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தார். 1960 ஆம் ஆண்டிலிருந்து பள்ளியில் போராட்டம் என்றால் முன்னாடி நிற்பார். புறக்கணிப்பு, மறியல் என அனைத்து வகை போராட்டத்திலும் பங்கேற்பது பார்பராவின் முக்கியப் பணி. இவரது அம்மாவுக்கு கல்வியின் முக்கியத்துவம் புரிந்தது. குடும்பத்தில் பார்பரா படிக்கும்போது அவர்தான் முதல் பட்டதாரியாவார் என ஹில்டா நம்பினார். ஒன்பதுவயதில் அவர் மறைந்து விட, பார்பராவின் பாட்டி மற்றும் அத்தை படிப்பு ப

மக்கள் தேர்ந்தெடுத்த மகத்தான அரசியல்வாதி! - டாமி பேல்ட்வின்

படம்
விக்கிப்பீடியா மாற்றுப்பாலின சாதனையாளர்கள் டாமி பேல்ட்வின் 1962 ஆம் ஆண்டு பிறந்த டாமி பேல்ட்வின், விஸ்கான்சின் மாநில உறுப்பினராக உள்ளார். 1998 ஆம்ஆண்டு  தன்னை ஓரினச்சேர்க்கையாளராக அறிவித்தார். இவரின் சிறப்பான செயல்பாடுகள் அடிப்படையில் மக்கள் இவரை தம் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு டாமி பேல்ட்வின் முதல் மாற்றுப்பாலினத்தவர் உறுப்பினராக தேர்வானார். தற்போது மாற்றுப்பாலினத்தவருக்கான மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளார். இம்மசோதா சபையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் இந்த முயற்சி முக்கியமானது. மாற்றுப்பாலினத்தவரை தீண்டாமைக்கு உள்ளாக்குவதைத் தடுக்கும் அரசு மசோதா இது. தற்போது ஜனநாயக கட்சி உறுப்பினரான பேல்ட்வின், விஸ்கான்சின் மாநிலத்தில் மேடிசன் நகரில் பிறந்தார். 2017 ஆம் ஆண்டு இவரது தாய் காலமானார். சிறுவயது முழுவதும் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தார். காரணம், தாய்க்கு இருந்த மனநலப்பிரச்னையும், போதை அடிமைத்தனமும்தான். இவரது தாத்தா யூதர், பாட்டி ஆங்கிலேயர். 1980 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பையும், 1984-89 இல் கல்லூரி படிப்பு முடித்து பட்டதாரியானார

ஓரினச்சேர்க்கை அரசியல்வாதி! - துயரமான படுகொலை!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஹார்வி மில்க் அமெரிக்காவின் வுட்மேர் நகரில் யூதப் பெற்றோருக்கு மகனாகப்பிறந்தார் ஹார்வி. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவிக்கப்பட்டு அரசியலில் வென்றவர் இவர். கலிஃபோர்னியா மாநிலத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அன்று இவர்தான் ஒரே ஒரு ஓரினச்சேர்க்கை அரசியல்வாதி. சிறுவயதில் காதுகள், கால்கள் பெரிதாக இருந்த தால் வகுப்பறையில் கடுமையாக கேலி செய்யப்பட்டார். வகுப்பில் கோமாளி என்றால் ஹார்வியைக் கூறுகிறார்கள் என்று பொருள். அப்போதே தன் உடலில் பாலின மாற்றங்களை உணர்ந்தார் ஹார்வி. அன்று என்னால் பெற்றோரிடம் அதைப்பற்றி கூற முடியவில்லை. காரணம் எனக்கு பயமாக இருந்தது என்று பின்னால் கூறினார். கேலிகளைச் சமாளித்து கணித பட்டதாரியானார். அப்போது கொரியப்போர் வர, அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றினார். இப்பணி முடித்து வெளியே வரும்போது ஆண் நண்பர் இவருக்கு கிடைத்தார். அவருடன் வசிக்கத் தொடங்கினார். அப்போது நியூயார்க்கில் அவருக்கு வேலை கிடைத்தது. பின்னர் மெல்ல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவை அரசியலில் அவர் முகம் மக்களுக்கு தெரிய உதவின. இதன்விளைவாக தேர்

ஓடுக்கப்பட்டோருக்கான உரிமைக்குரல்! - லாங்டன் ஹியூஸ்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் கவிஞர் லாங்டன் ஹியூஸ் அமெரிக்காவில் மிசோரியில் 1902 ஆம் ஆண்டு பிறந்தார் ஹியூஸ். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கைத தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், நாளிதழ் பத்திகள் எழுதியுள்ளார். இவர் பிறந்ததும் கணவரை விட்டு தாய் பிரிந்து கிளீவ்லாந்து வந்தார். அங்கு அவரின் பாட்டியுடன் சேர்ந்து வசிக்கத்தொடங்கினார். ஆற்றைப் பற்றி பேசும் நீக்ரோ என்ற கவிதையை பள்ளிப்பருவத்தில் எழுதினார். அது பிரசுரமாகவே எழுத்து பற்றிய நம்பிக்கையைப் பெற்றார். 1921 ஆம் ஆண்டு தி கிரிசிஸ் என்ற பத்திரிகையில் அக்கவிதை பிரசுரமானது. பின்னர், கவிதைகளை தொடர்ந்து  எழுதிக்கொண்டிருந்தவருக்கு 1925 ஆம் ஆண்டு ஆப்பர்சூனிட்டி இதழின் பரிசும் கிடைத்தது. அதோடு இரு நண்பர்களான அர்னா, வெச்டன் ஆகியோரின் நட்பும் கிடைத்தது. இவர்களின் நட்பு வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்தது. பல்கலைக்கழக படிப்புக்காக வந்தவருக்கு ஹார்லேம் நகருடன் நீடித்த தொடர்பு ஏற்பட்டது. இருள் நகரம் என்று அதனை எப்போதும் குறிப்பிடுவது ஹியூஸின் பாணி. 1926,27 ஆண்டுகளில் தி நேஷன் உள்ளிட்ட பத்திரிகைகளில் சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞராக பாராட்டு பெ

ஆண், பெண் சம்பள உரிமைக்காக குரல் கொடுத்த ஆட்சியாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜோகன்னா சிகுர்டர்டோடிர் ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர். அரசு சேவைகளில் பெரிய மாற்றத்தை இவர் உருவாக்கவில்லை. ஆனால் மாற்றுப்பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை உருவாக்கினார்.  அதன் மூலம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சட்டத்தை முதன்முதலில் உருவாக்கியது இவர் தலைமையிலான அரசுதான். 1942 ஆம் ஆண்டு பிறந்த ஜோகன்னா, ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி ஆட்சி நடத்தினார். 1962-71 ஆம் ஆண்டு விமானநிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். தொழிலாளர் சங்கத்தின் தீவிரமாக இயங்கியவர் இவர். 1978 ஆம் ஆண்டு சமூக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஐஸ்லாந்தின் பிரதமரானார். ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் என்ற உரிமையை முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் 2010 ஜூலை 27 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். ஐஸ்லாந்தில் 1978 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த ஒரே அரசியல்வாதி இவர்தான். இவரைக்

மாற்றுப்பாலினத்தவரின் அம்மா இவர் - பிரெண்டா ஹோவர்டு

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! பிரெண்டா ஹோவார்டு அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலுள்ள பிரான்க்ஸ் பகுதியில் பிறந்தார். 1946 ஆம் ஆண்டு யூதக்குடும்பத்தில் பிறந்தார். இவரை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், நவீன மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்ததில் பிரெண்டா முக்கியமானவர். பல்வேறு பேரணிகளை அம்மக்களின் உரிமைகளுக்கான நடத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டு காலமானார். சியோஸெட் பள்ளியிலும் மன்ஹாட்டன் கம்யூனிட்டி கல்லூரியிலும் படித்தார். நர்சிங் படிப்பில் பட்டம் பெற்றார். அப்போது வியட்நாம் போர் நடைபெற்றது. அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தவர், பெண்ணிய இயக்கங்களிலும் பங்கு பெற்றார். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளிலும், சங்கத்திலும் இடம்பிடித்தார். 1970 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவருக்கான முதல் பேரணியை நடத்தி அவர்களுக்கு அமெரிக்க அம்மா வானார். ஆம் மதர் ஆஃப் பிரைடு என்று இவரை அன்றும் இன்றும் நாளையும் உலகம் அழைக்கும். மேடமின் அர்ப்பணிப்பான உழைப்பு அப்படி. பாலின உறவுகள் பற்றி மிக வெளிப்படையாக பேசி இயங்கியவர் புற்றுநோயால் காலமானார். மாற்றுப்பாலினத்தவருக்கான சட்டங்க

மக்களின் கவனத்தை சர்ச்சைகளால் ஈர்த்த போராட்டக்காரி! - சில்வியா ரிவேரா

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 2 உரிமைக்காக குரல் கொடுத்த சர்ச்சைப் போராளி! சில்வியா ரிவேரா அமெரிக்காவில் பிறந்த லத்தீன் நாட்டுக்காரர். அங்கு வாழும் மாற்றுப்பாலினத்தவருக்கான அமைப்பை உருவாக்க முயற்சித்தவர். 1951 ஆம் ஆண்டு பிறந்தவர், 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் வீடற்ற மக்களுக்காக கோரிய காப்பக வசதி கோரிக்கை முக்கியமானது. நியூயார்க் நகரில் இதற்காக பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார். வெனிசுலா நாட்டு உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவரின் சிறுவயது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவரின் தந்தை இவரின் மூன்று வயதிலேயே சில்வியா ரிவேராவைக் கைவிட்டுச்சென்றுவிட்டார். இவரது தாய் தற்கொலை செய்துகொண்டுவிட, காப்பாற்றி வளர்த்தது வெனிசுலாவில் வாழ்ந்த பாட்டிதான். ஆனால் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாக உணர்ந்தவர், லிப்ஸ்டிக்கை எடுத்து பூசி பவுடர் போட்டு அழகு பார்த்தார். ஆனால் அது மரபு வழியில் வளர்ந்த பாட்டிக்கு பிடிக்கவில்லை. கேட்டுப்பார்த்தும் சில்வியாவுக்கு பாட்டி வழியில் வளரமுடியவில்லை. எனவே பாட்டி வீட்டை விட்டு துரத்த, பதினொரு வயதில் தெருவில் வாழ்க்கை தொடங்கியது. ஆணோ, பெண்ணோ வயிறு ஒன்றுதானே?

சவுதி அரேபியாவில் 37 பேருக்கு தூக்கு!

சவுதி அரேபியாவில் 37 பேர்களுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஷியா பிரிவு முஸ்லீம்கள். இவர்களில் கணிசமானவர்கள் ஆண்கள். இதோடு வலைப்பூ எழுதியவர்களும் இதில் உண்டு. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பதினான்கு பேர் கைது செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் ஆம்னஸ்டி அமைப்பு இணைந்து தகவல் தெரிவிக்கின்றன. இதில் போராட்டக்காரர்களை சித்திரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்திருக்கிறது காவல்துறை.  ஷியா சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கான கருவியான மரண தண்டனையைக் கருதுகிறது. அண்மையில் சவுதியைச் சேர்ந்த வலைப்பூ எழுத்தாளர்கள், வாஷிங்டன் போஸ்ட் எழுத்தாளர் கஷோகி கொல்லப்பட்டதைப் பற்றி எழுதியதற்காக கைது செய்யப்பட்டனர். டிச. 2018 தகவல்படி, பதினாறு பத்திரிகையாளர்கள் சவுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே குடிமக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பது நாம் அறியவேண்டிய விஷயம். - குளோபல் வாய்சஸ்