இடுகைகள்

ஏஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேராசையைத் தூண்டி குற்றம் செய்யவைக்கும் ஏஐ ஆப்!

படம்
  கோட் – ஜப்பான் பிரீஸ் ஆஃப் விஷஸ் (code –japan price of wishes) J drama Rakutan viki   மினாடோ, காவல்துறையில் வேலை செய்கிறான். தான் நம்பும் விஷயத்தை வன்முறையான வழியில் நிரூபிக்க முயலும் பாத்திரம். இவனை அவனது குழு தலைவர் தாமி, நண்பன் மோமோடோ, காதலி யுகா ஆகியோர்தான் பாதுகாத்து வருகிறார்கள். யுகா, தான் கர்ப்பிணி என்ற தகவலைக் கூறும்போது மினாடோ ஆனந்தமாகி அவளை மணந்துகொள்ள முடிவெடுக்கிறான். அவர்கள் காதலித்து ஐந்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் நாளின் இரவில் திடீரென யுகாவிற்கு தடய அறிவியல் துறையில் இருந்து   அழைப்பு வருகிறது.   இரவு என்பதால்,, அவளை தனியாக அனுப்பாமல் மினாடோ தானும் கூடவே சென்று அலுவலகத்தில் விட்டுவிட்டு காத்திருக்கிறான். ஆனால் யுகா, பிணமாக திரும்ப வருகிறாள். லிஃப்ட் விபத்தில் இறந்துபோகிறவளின் வழக்கை விபத்து என காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் மினாடோ அதை நம்பவில்லை. கொலைவழக்காக நினைத்து ஆராயத் தொடங்குகிறான். இதற்கிடையில் அவனது பள்ளி நண்பன் கோட் எனும் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்துகிறான். அதில்   ஒருவர் நிறைவேற நினைக்கும் ஆசைகளை டைப் செய்து நிறைவேற்றிக்கொள்ள முடியும். பதிலுக்

ஏஐ மூலம் பாப் ஸ்டாரை உருவாக்கி வருகிறேன்! - கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்)

படம்
  இசைக்கலைஞர் கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்) இசைக்கலைஞர் கிரைமெஸ்   (கிளெர் பௌச்சர்) தொழில்நுட்பம் சார்ந்த இசைக்கலைஞர். இவர், எலன் மஸ்கை மணந்து இரு குழந்தைகளைப் பெற்றார். குழந்தைகளுக்கு எக்ஸ், ஒய் என பெயரிடப்பட்டுள்ளன. எலன், எக்ஸ் என்ற தனது குழந்தையை தூக்கிக்கொண்டுதான் அலுவலக சந்திப்புகளை எதிர்கொள்கிறார்.தொழில்நுட்பம் மூலம் இசையை உருவாக்குவதில் புதுமையான நாட்டம் கொண்டவர் கிளெர். நீங்கள் உங்கள் குரலை இசை ஆல்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அளித்திருக்கிறீர்கள். கட்டற்ற உரிமையில் குரலை கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா? குரல் மட்டுமல்ல என்னுடைய முழு அடையாளத்தையே கொடுத்திருக்கிறேன். எதற்காக இப்படி செய்தீர்கள்? நான் நிகழ்ச்சி தயாரிப்பாளர், பொறியாளராக   இருக்க விரும்புகிறேன். நான் சிறந்த முறையில் பாடும் பாடகர் அல்ல. கூச்ச சுபாவம் கொண்டவள். தொடக்கத்தில் நான் உருவாக்கிய பாடல்களுக்கு வீடியோவில் தோன்றிப்பாட பாடகர்களை தேடினேன். யாரும் அப்படி பாட முன்வரவில்லை. மான்ட்ரியலைச் சேர்ந்தவள். சுயாதீனமாக செயல்பட்டேன் என்பதால் பிறருக்கு தயக்கங்கள் இருந்திருக்கலாம்.   பிற பெண் இசைக்கலைஞர்களோடு பாடும்போது என

செயற்கை நுண்ணறிவோடு உரையாடும் அளவுக்கு மக்கள் மேம்படவில்லை - நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத்

படம்
பேராசிரியர் எழுத்தாளர் அனில் சேத் அண்மையில் நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத், பீயிங் யூ – எ நியூ சயின்ஸ் கான்ஷியஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் இருபது ஆண்டு ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கிறது. மூளை, தன்னுணர்வு நிலை என இரண்டையும் மையப்பொருளாக கொண்ட நூல் இது.   மூளை, தன்னுணர்வு கொண்ட நிஜத்தை கற்பனையாக உருவாக்குகிறது என டெட்டாக் நிகழ்ச்சியில் பேசினீர்கள். அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு இடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அறிவியல் கொள்கை, தத்துவங்களில் தன்னுணர்வு நிலை என்பது இன்றும் மர்மமான ஒன்றாக உள்ளதுதான். மேலும் இது மிகவும் ஒருவருக்கு அந்தரங்கமானதும் கூட. பிறப்பதற்கு முன்னர் என்னவாக இருந்தோம், இறந்தபிறகு என்னவாக மாறுவோம் என்ற கேள்விகள் பலருக்கும் மனதில் உள்ளது.  அறிவியல் நவீனமான காலத்தில் மூளைதான் அனைத்துக்கும் காரணம் என தெரிய வந்திருக்கிறது. தன்னுணர்வு நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? அது ஒரு அனுபவம். சிவப்பு நிறம் என்றால் சிவப்பு நிறம். வலி உணர்வு என்றால் வலி. த

நிலவுக்குச் சென்று எஸ்பெல் இனக்குழுவைக் காப்பாற்றும் டோராமன் - நோபிடா டீம் - டோராமன் -மூன் எக்ஸ்ப்ளோரேஷன்

படம்
  டோராமன் – நோபிட் குரோனிக்கல் – மூன் எக்ஸ்ப்ளோரேஷன் ஜப்பான் மாங்காஅனிமேஷன் நோபிட் பள்ளி மாணவன். ஒருநாள் நிலவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ரோவர் ஏதோ ஒரு சக்தியால் தாக்கப்பட்டு பழுதாகிறது.. அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான் நோபிட். அதற்கு டோராமன் ரோபோ உதவுகிறது. நோபிட்டும் டோராமன்னும் சேர்ந்து நிலவுக்கு மந்திரக்கதவு மூலம் போகிறார்கள். அங்கு சென்று, களிமண்ணால் முயல்களை உருவாக்கி முயல்களுக்கான உலகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில் நோபிட்டின் பள்ளியில் லூகா என்ற சிறுவன் சேர்கிறான். எப்போதும் தொப்பி அணிந்தபடியே இருப்பவன் வினோதமான தெரிகிறான். அவன் நோபிட்டின் நிலவு பற்றிய கருத்துகளைக் கேட்டு ஆச்சரியப்படுகிறான். அவன் நிலவு பற்றி செய்யும் ஆராய்ச்சிகளை அறிய நினைக்கிறான். அப்படித்தான் பள்ளி நண்பர்கள் பலரும் சேர்ந்து நோபிட்டின் வீட்டிலுள்ள மந்திரக்கதவு மூலம் நிலவுக்கு செல்கிறார்கள். அங்கு வாழ்பவர்களுக்கும் லூகாவிற்கும் தொடர்பு உள்ளது. இதுபற்றிய கதையை பார்த்து தெ(பு)ரிந்துகொள்ளுங்கள்.   இந்த தமிழ் படத்திற்கு டப்பிங் பேசியவர்கள் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் க

சாதாரண டைப்ரைட்டரில் ஏஐயை இணைத்தால்.... தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் சஞ்சீவ்

படம்
  இப்போது எல்லோருமே சாட் ஜிபிடி, அதானி பங்கு, மோசடி, வாழ்க்கை, எதிர்காலம், வேலை போய்விடுவோமோ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சாட் ஜிபிடி சொல்லும் பதில்களில் உள்ள சரி தவறு என்பதைப் பற்றி நாமும் விவாதங்களை செய்யப்போவதில்லை. பிங் தன்னுடைய தேடுதல் தளத்தில் சாட் ஜிபிடியை இணைத்துள்ளது. அதுபோல ஏஐயை வேறு ஏதாவது சாதனங்களில் இணைக்க முடிந்தால் எப்படியிருக்கும்? யோசித்ததோடு அதை தனது திறமை மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இளைஞரான அரவிந்த் சஞ்சீவ். ‘’ஏஐ யைப் பயன்படுத்தி சோதனைகளை செய்வது, மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான உறவை மேம்படுத்தும்’’ என்கிறார். இவர், இ காமர்ஸ் தளத்தில் வாங்கிய சாதாரண டைப்ரைட்டரை ஏஐ ஆற்றல் கொண்டதாக மாற்றியிருக்கிறார். இதற்கென சில மாறுதல்களை எந்திரத்தில் செய்திருக்கிறார்.   இந்த எந்திரம், ஓபன் ஏஐயின் சாட் ஜிபிடி 3 மாடலில் இயங்குகிறது. அரவிந்த் பயன்படுத்துவது, எண்பதில் வெளியான பிரதர்ஸ் நிறுவனத்தின் டைப்ரைட்டர். சாதாரண டைப்ரைட்டரில் எப்படி ஏஐயை இணைக்கும் யோசனை வந்தது? எல்லாம் ஒரு கலைதாகம்தான் அப்படி ஒரு திசை நோக்கி செலுத்தியிருக்கிறது. அரவிந்

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால

வயதுவந்தவர்களுக்கு மூளையின் அமைப்புகள் புதிதாக வளர்கின்றன

படம்
                விட் ஈகிள்மேன் David eagleman நரம்பியல் அறிவியலாளர் , stanford university, california நமது மூளை இன்றும் கூட அதிசயமான பொருள் . அதில் கற்றல் எப்படி நடைபெறுகிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் கண்டறிய முயன்று வருகிறார்கள் . இப்படி மூளையில் பல்வேறு உணர்வுநிலைகளில் எப்படி கற்றல் நடைபெறுகிறது என டேவிட் ஆராய்ச்சி செய்துவருகிறார் .   மனிதர்கள் தாம் பெறும் அனுபவங்களைப் பொறுத்து மூளையின் மாறுதல்களைப் பற்றியதுதானே உங்களது ஆராய்ச்சி ? மூளையின் அமைப்பு மாறுவதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன் . இந்த துறையில்தான் நீங்கள் எனது பெயரைப் பார்க்க முடியும் . இப்படித்தான் என்னை நீங்கள் அடுத்தமுறை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும் . மூளையை தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருள் போல என்றுதான் நினைத்தார்கள் . ஆனால் நான் அதை லைவ் வயர்ட் என்ற அமைப்பாக பார்க்கிறேன் . அதாவது அனுபவங்களுக்கு ஏற்றபடி நிகழ்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது . இதன் வலிமை மாறிக்கொண்டே இருக்கும் . அதற்கேற்றாற்போல பிளக்குகளை பிடுங்கி வேறிடம் பொருத்திக