இடுகைகள்

போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உக்ரைனில் டெக் ஸ்டார்ட்அப்பில் சாதிக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  விக்டோரியா ரெபா, பெட்டர்மீ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம்,   உக்ரைன் நாட்டில் டெக் துறை சற்று முன்னேற்றம் கண்டது. 2015-2021 காலகட்டத்தில் , டெக் துறையின் வருமானம் மூன்று மடங்காக உயர்ந்தது. வருமானம் 7 பில்லியன்களாக இருந்தது. இதற்கு அந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களும், அங்கு படித்த அறிவியல் மாணவர்களும் அளித்த பங்களிப்புதான் முக்கியமான காரணம். உக்ரைன் நாட்டில் பல்வேறு டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆராய்ச்சி மையங்களும் தொடங்கி இயங்கி வந்தன. இதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் உள்ளடங்கும். ரஷ்யாவின் போர் தொடங்கியதில் பாதிக்கப்பட்டது மக்களும், ராணுவமும் மட்டுமல்ல. அங்கு பெரிய கனவுகளோடு தொழிலைத் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனர்களும்தான். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். நிறைய தொழில்கள் முடங்கின. ரஷ்யா, உக்ரைனின் அடிப்படை கட்டமைப்புகளை முதலில் தகர்க்கும் வேலையைத் தொடங்கியது.   இதன்படி, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு தொழில் தொடங்கிய உள்நாட்டு குடிமக்கள் தங்கள் தொழிலுக்கான முதலீடு, வாடிக்கையாளர்கள் என பலவற்றையும் மெல்ல இ

விலங்குகளின் அறிவுத்திறன் அதிகரித்தால், மனிதர்களின் நிலை என்னவாகும்?

படம்
  ஆக்டோபஸ் விலங்குகளின் சிந்தனைத்திறன் வளர்கிறதா?   இன்று மனிதர்கள் முழு உலகையும் ஆளுகிறார்கள். இதை எப்படி செய்கிறார்கள்?. அவர்களுடைய சிந்தனை செய்யும் திறனால்தான். பிற விலங்குகளுக்கு இந்த திறன் குறைவு. இல்லை என்று கூறவில்லை. குறைவு என்றுதான் கருத வேண்டும். அவை பரிணாம வளர்ச்சி பெறும்போது, மனிதர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அரிஸ்டாட்டில் மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுவதால் விலங்குகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் இருப்பதாக கூறினார். மனித இனத்திற்கு அறிவியல் பெயராக ஹோமோசெபியன்ஸ் வழங்கப்படுகிறது. புத்திசாலி மனிதன் என்பதுதான் இதன் அர்த்தம். மனித குலம் முழுமைக்குமே இயற்கை வளங்கள் அழிந்து வருவது, அணுகுண்டு வெடிப்பு, போர், வரலாறு தொடர்பான பிரச்னைகள் உண்டு. விலங்குகளுக்கு இயற்கை கொடையாக கொடுத்துள்ள பற்கள், நகங்கள் அவை தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் பயன்படுத்தவே. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. போர், படுகொலை, அடிமைமுறை என மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவு பெரியதாக உள்ளது. அறிவுஜீவிகளை நாம் விரும்புகிற அளவுக்கு நாம் வாழும் பூமி நம்மை நேசிக்கவில்லை என்கிறார் டால்பின்களின் மொ

சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மனிடமிருந்து ரத்தம் சிந்தாமல் காஞ்சியை மீட்கும் நந்திவர்மன்! - சமுத்திரகோஷம் - உதயணன்

படம்
  எழுத்தாளர் உதயணன் சமுத்திர கோஷம் உதயணன் வைதேகி பதிப்பகம் விலை ரூ.110 பல்லவ மல்லன் நந்திவர்மன், பாண்டியர்களோடு எல்லையில் போரிடும்போது ஜென்ம எதிரியான சாளுக்கிய அரசு, பின்புறமாக வந்து மன்னன் இல்லாத காஞ்சி கோட்டையை சூழ்ச்சியாக கைப்பற்றுகிறது. பாண்டியர்களை வென்ற நந்திவர்மன், திரும்பி வந்து தனது பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியை எப்படி கைப்பற்றுகிறான் என்பதே கதை. இந்த சரித்திர நாவலில் கல்வெட்டுகளின் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள தகவல்படி, நந்திவர்மன் இல்லாத காலகட்டத்தில் சாளுக்கியர்கள் காஞ்சியை தங்கள் வசமாக்குகிறார்கள். பிறிதொரு காலகட்டத்தில் சாளுக்கியர்களிடமிருந்து அதை நந்திவர்மன் மீட்கிறான். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.   அந்த இடத்தை பயன்படுத்தி நாவலை எழுத்தாளர் உதயணன் எழுதியிருக்கிறார். நாவலில் பராக்கிரம யுத்தங்கள், ஒற்றைக்கு ஒற்றை என சண்டைகள் ஏதும் கிடையாது. அனைத்துமே சூழ்ச்சி, தந்திரம் என மூளை விளையாட்டுகள்தான் நிறைந்திருக்கின்றன. நந்திவர்மன் கதையில் வரவே அதிக பக்கங்களை நீங்கள் தாண்டவேண்டும். நந்திவர்மனை பிழையில்லாத வீரனாக எழுத்தாளர் உத

இறவாசக்தி பெற்ற முனிவர்களிடம் பெற்ற அதீத சக்தியால் கொலைவேட்கை கொள்ளும் நாயகன் - பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர்

படம்
  தி   பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர் (மங்கா காமிக்ஸ்) தொடர்கிறது… மங்கா ஃபாக்ஸ்   வலைத்தளம் முயி ஒரு அனாதை. அவன் அம்மாவைப் பார்த்ததில்லை. ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறான். ஊரிலுள்ளோர் அவனை அடித்து உதைப்பது, தூங்கும் இடத்தை தீ வைத்து எரிப்பது என அவமானப்படுத்துகிறார்கள். கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். ஆதரவற்றவன் என்பதால் அவமானத்திற்கு பஞ்சமில்லை.   காட்டில் வேட்டையாடச் செல்பவர்களுக்கு தூண்டில் மீன் போல இரையை பொறியில் சிக்க வைக்கும் வேலையை செய்து வருகிறான். அதில் கிடைக்கும் காசுதான் அவன் சோற்றுக்கு உதவுகிறது. அப்படி ஒரு நாள் புலியை பிடிக்கப் போகும்போது ஏற்படும் விபத்தில் புலியின் தாக்குதலில் வேட்டைக்காரர்கள் அனைவரும் பலியாகிவிடுகிறார்கள். இறுதியில் முயியின் தாக்குதலில் புலி இறந்துவிடுகிறது. ஆனால், தாக்குதலின் போது, புலியால் படுகாயமடையும் முயி சாவின் விளிம்பில் இருக்கிறான். அவனைப் பார்த்து இரக்கப்படும் இறவாசக்தி பெற்ற முனிவர்கள் தங்களின் முன்னூறு ஆண்டு தற்காப்பு கலையை சக்தியை அவனுக்கு கொடுத்துவிட்டு உடல் நலிவுற்று இறக்கிறார்கள். உடல் பலவீனமாக இருக்கும் நிலையில் அதீத சக்தி கிடைத்

சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
        தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   குழந்தைகளின் வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர், முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா? ஒரு செடியை, விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது, அம்முறையின் வழியாக  அவர்களை மெல்ல கொல்கிறோம். உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் நடைபெறக் கூடாது. நீங்கள் நேசிக

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவ

நல்லவர், கெட்டவர் யார், எங்கிருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும் கிராமத்து சிறுமி -

படம்
    தி ஸ்கூல் ஆஃப் குட் அண்ட் ஈவில்   ஒரு கிராமம். அங்கு சோபியா என்ற சிறுமியும், அகதா என்ற சிறுமியும் நண்பர்களாக வாழ்கிறார்கள். இதில் சோபியாவுக்கு கிராமத்தில் வாழ்வதில் விருப்பமில்லை. தனித்துவம் கொண்டவள் என அவளது அம்மா சொன்னது சோபியாவுக்கு அடிக்கடி மனதில் ஒலிக்க, பகல் கனவு கண்டபடி வாழ்கிறாள். கிராமத்திலுள்ள சுடுகாட்டின் அருகில் வாழ்கிறாள் அகதா. அவளது அம்மா, மந்திரவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை மந்திரவாதி ஆக்குவதுதான் அவளது லட்சியம்.   ஆனால் அகதாவுக்கு   அமைதியாக வாழ்ந்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நேரத்தில் சோபியாவுக்கு புத்தக கடையில் உள்ளவர், மந்திரப் பள்ளி பற்றி சொல்லுகிறார். எனவே, அவள் தான் எப்படியாவது மந்திரப்பள்ளிக்கு சென்று இளவரசியாகி சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைக்கிறாள். இதை வேண்டுதல் மரத்தில் எழுதி வைக்கிறாள். ஆனால் அகதாவுக்கு சோபியா தன்னை விட்டு செல்வதில் விருப்பமில்லை. கிராமத்தில் அவள்மீதும், அவளது அம்மா மீதும் பாசம் காட்டுபவள் சோபியா மட்டும்தான். பிறர் அவளை மந்திரவாதி என்று சொல்லி தீயிட்டு எரிக்க நினைக்கிறார்கள். சோபியா எங்கு சென்றாலும் தானும் வருவேன் எ

ரேடார் எப்படி செயல்படுகிறது?

படம்
  quantum radar, china ரேடார் எப்படி செயல்படுகிறது? இரண்டாம் உலகப்போர். அதுதான் பிரிட்டனுக்கு ரேடாரின் முக்கியத்துவத்தை சொன்ன முக்கியமான வரலாற்று காலகட்டம். அப்போது ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர், தன்னை உலக அதிபராக நினைத்து பல்வேறு நாடுகளை ராணுவத்தால் ஆக்கிரமித்து வந்தார். அந்த வகையில் பிரிட்டனை எப்படியாவது அடக்கி ஆளவேண்டும் என்பது அவரது ஆசை.   வெறும் ஆசை மட்டுமல்ல, அதற்கான தயாரிப்புகளோடுதான் அவர் கனவையும் கண்டார். ஜெர்மனியின் விமானங்கள், கப்பல்கள் களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றிவாகை சூடின. நோக்கம் உயர்வாக இருந்தாலும் அதைநோக்கிய பயணத்திற்கு உழைப்பும் முக்கியம். அதுவும் ஹிட்லரிடம் இருந்தது. ரேடியோ அலைகளை வானில் ஏவி அது விமானத்தில் பட்டு திரும்பி வந்தால் வல்லுநர்கள் மூலம் விமானத்தின் அளவு, வேகம், தூரம் என அனைத்தையும் கணக்கிட முடியும். இதற்கு பயன்படுவதுதான் ரேடார். ரேடியோ டிடெக்ஷன் அண்ட் ரேஞ்சிங். 1885ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வேல்   ரேடியோ அலைகள் உலோகங்களில் மோதும்போது பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார். ஏறத்தாழ ஒளி அலைகளின் இயல்பும் அதுதான