இடுகைகள்

மருத்துவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளுக்கு செயற்கைக் கால்களைக் கிடைக்கச் செய்யும் மருத்துவர்!

படம்
  மருத்துவர் தபேஷ் மாத்தூர் 2014ஆம் ஆண்டு மருத்துவர் தபேஷ் மாத்தூர், ஹிங்கோனியா பசு மறுவாழ்வு மையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பசு அமைவிடம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது. இங்கு அதிகளவு பசு இறப்பு நடந்ததால், அதனைக் குறைக்கவே மருத்துவர் அழைக்கப்பட்டார்.  பசுக்கள்,  ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டிருந்தன. அதுதான் இறப்பிற்கான முக்கியமான காரணம்.  எனவே, அவற்றைக் காப்பாற்ற தினசரி ஏதேனும் ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து வந்தார் மருத்துவர் தபேஷ். இதனால் பசுக்களின் இறப்பு பெருமளவில் குறைந்தது. அத்தோடு பசுக்களின் பிரச்னை முடியவில்லை. விபத்துக்குள்ளாகி கால்கள் முடமான பசுக்களின் இறப்பு பற்றியும் புகார்கள் வந்தன.  விபத்துக்குள்ளாகி அகற்றப்பட்ட கால்களால் முடமாகிப் போன பசுக்களின் வாழ்நாள் குறைந்து வந்தது. அதனை சரிசெய்ய, செயற்கைக் கால்களை பொருத்த மருத்துவர் முடிவு செய்தார். எனவே, கிருஷ்ணா லிம்ப் என்ற பிராண்டின் பெயரில் இவரே கால்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இன்றுவரை 160 செயற்கைக்கால்களை உருவாக்கி பொருத்தியுள்ளார். இதனால் பசுக்களின் வாழ்நாளும் நீண்டுள்ளது.  செயற்கைக் கால்களை

குழந்தைகளின் இறப்பை மறைத்தவர்களுக்கு பரிசுகள் கிடைத்தன! - மருத்துவர் காஃபீல் கான்

படம்
  மருத்துவர் காஃபீல் கான் மருத்துவர் காஃபீல் கான் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரிந்த மருத்துவர். ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறிய குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக சிலிண்டர்களையும் சொந்தசெலவில் ஏற்பாடு செய்தார். இதனால் மக்களின் நாயகன் ஆனார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளினார். இவரது குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டத் தொடங்கியது. தற்போது சிறைவாசம் மீண்டு வந்தவர், சம்பவம் பற்றிய நூலை எழுதியுள்ளார்.  கோரக்பூர் சம்பவம் எப்படி நடந்தது? ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் அங்கு குழந்தைகள் இறந்துகொண்டே இருப்பது இயல்பானது என்கிறார்களே? புஷ்பா சேல்ஸ் என்ற நிறுவனம், முதல்வர், செயலாளர் ஆகியோருக்கு பதினான்கு கடிதங்களை எழுதியது. ஆனால் அவர்கள் யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை. பணத்தை சரியான நேரத்திற்கு கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்னை வந்திருக்காது.  2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் பணம் பட்டுவாடா ஆனது. அதே ஆண்டில்தான் உ.பி மாநில அரசு சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடை 50 சதவீதமாக குறைத்தது.  குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகிறார்கள் என்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க ம

ஆக்சிஜன் தொழிற்சாலை- அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் மருத்துவர்

படம்
  விருதுநகரில் சுந்தரபாண்டியம் கிராமம் உள்ளது. இங்கு மருத்துவர் சுப்புராஜ், ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். இதன் மூலம் கார்பனை எளிதாக ஈர்க்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் சுப்புராஜ். இவர் புராஜெக்ட் ஆக்சிஜன் ஃபேக்டரி என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் இந்த பணியைத் தொடங்கியிருக்கிறார்.இதனால் அவருக்கு நிதானமாக யோசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. இந்த ஐடியாவை தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் நிதியுதவி செய்ய தயாராகிவிட்டனர்.  சிறுவயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் சுப்புராஜ். இந்தியாவின் சுதந்திர தினம் 1997ஆம் ஆண்டு கொண்டாடியபோது, நாங்கள் பள்ளியில் நூறு தேக்கு மரங்களை ஊன்றி வைக்க நினைத்தோம். அப்படி தொடங்கிய முயற்சிதான்  இப்போது ஆக்சிஜன் ஃபேக்டரி செயல்பாடாக மாறியுள்ளது.  நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் கிடைந்த அரை ஏக்கர் நிலத்தை மரக்கன்றுகளை நட்டு வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு. முழுக்க கருவேலம் மரங்கள் சூழ்ந்து கிடந்த நி

மருத்துவத்தை மக்களுக்காக மாற்ற முயன்றதற்காக பழிவாங்கப்படும் சிறந்த மருத்துவன்! - டாக்டர் ரொமான்டிக் - முதல் பகுதி - கொரியா

படம்
      டாக்டர் ரொமான்டிக்           டாக்டர் ரொமான்டிக்   Genre: Medical, Melodrama, Romance Written by: Kang Eun-kyung Directed by: Yoo In-shik மருத்துவம் மக்களுக்கானதா , மக்களில் செல்வந்தர்களாக உள்ளவர்களுக்காக என்பதைப் பேசும் படைப்பு . டாக்டர் கிம் டீச்சர் முதல் காட்சியில் ஏழை ஒருவருக்கு மருத்துவம் தேவைப்பட்டும் அவருக்கு சிகிச்சை வழங்கப்படவிலை . காரணம் , அங்கு வந்துள்ள விஐபி ஒருவருக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதால் , அதைப்பற்றியே அனைவரும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் . இதனால் சிகிச்சை கிடைக்காத மனிதர் இறந்துபோய்விடுகிறார் . அவரது அம்மா , இயலாமையில் அழ , கோபம் கொள்ளும் அவரது மகன் , அடுத்த நாள் பேஸ்பால் மட்டையை எடுத்துக்கொண்டு வந்து மருத்துவமனையை அடித்து நொறுக்குகிறான் . அப்போது அவனை தடுக்கும் மருத்துவர் , அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து , உன்னை அவமானப்படுத்தியவர்களை திறமையால் தோற்கடி என்று செய்தி சொல்லிவிட்டு காணாமல் போகிறார் . அந்த சிறுவன் அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகளை மறக்கவே இல்லை . நாட்டிலேயே அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகிறான் . குறிப்

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மருத்துவரின் கனவும், அவரை பகடைக்காயாக்கும் மருத்துவமனை சூழ்ச்சிகளும்! - எ மிராக்கிள் - துருக்கி தொடர் - முதல் பாகம்

படம்
              எ மிராக்கிள் துருக்கி தொடர் குட் டாக்டர் எனும் தென்கொரிய தொடரை ரீமேக்கியிருக்கிறார்கள் . ஆனால் காட்சிகளில் நடித்துள்ளவர்கள் நிறைய வேறுபாடுகளை காட்டியுள்ளதோடு காட்சிகளும் மாற்றப்பட்டுள்ளன . ஆட்டிசமும் , சாவன்ட் சிண்ட்ரோம் என்ற குறைபாடும் கொண்ட அலி பாபா , ஹயாத் எனும் பன்னோக்கு மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறான் . அவனை அங்கு தலைமை மருத்துவராக உள்ளவர் தனது செல்வாக்கினால் சேர்க்கிறார் . காரணம் , அவனை வளர்த்து கவனித்துக்கொண்டது அவர்தான் . ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் அவனை வைத்தே தலைமை மருத்துவரை வேலையை விட்டு நீக்கலாம் . என அரசியல் விளையாட்டு நடக்கிறது . இந்த அரசியல் விளையாட்டு அலியை பந்தாடியதா , அவனது அறுவை சிகிச்சை நிபுணராகும் கனவு என்னவானது என்பதைத்த்தான் தொடர் சொல்லுகிறது . தொடரில் மொத்தம் 22 எபிசோடுகள் , ஒரு எபிசோடு என்பது நாற்பது நிமிடங்ங்கள் வருகிறது . ஆட்டிசம் பாதிப்பு பற்றிய எண்ணங்களை இத்தொடர் மாற்றும் என உறுதியாக நம்பலாம் . இயல்பான வாழ்க்கை என்பது ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு சாத்தியமில்லை . ஆட்டிச குறைபாட்டிற்க

300 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த தன்னார்வ உளவியல் மருத்துவர்! - கேரளத்தில் அர்ப்பணிப்பான மருத்துவர்

படம்
                  மனநலன் காத்த மருத்துவர் ! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ . எஃப் . நிதின் . இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி மருத்துவர் ஆவார் . நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர் , கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார் . கொரோனா பரவத்தொடங்கிய போது , இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது . இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும் . இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார் . பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன . காரணம் , நோய் பற்றி தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன . நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன . இதனால் ந

ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்றுள்ள அசாதாரண மனிதர்கள்! - மருத்துவர் முதல் ஆசிரியர் வரை

படம்
                  காஷ்மீரில் சட்டக்கல்லூரி மாணவர் முதல் பல்மருத்துவர் , ஆசிரியர் என பல்வேறு நபர்கள் அரசியல் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் . அவர்களி்ல சிலரை நாம் இங்கு பார்ப்போம் . சபிர் அஹ்மது லோன் ரோஹமா பரமுல்லா தேசிய மாநாட்டு பணியாளராக 1999 ஆம் ஆண்டு தொடங்கி பணியாற்றினார் . பொதுமக்களுக்கான அமைதி சட்டம் அடிப்படையில் கைதான அரசியல்வாதிகளில் லோனுக்கும் முக்கிய இடமுண்டு . ஆறுமாதம் ஶ்ரீநகர் சிறைவாசம் அனுபவித்தவர் , மாநிலம் யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்றபிறகு விடுதலையானார் . மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நோக்கி போராடுவோம் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸகூர் அஹ்மது மிர் , என்பவரை எதிர்த்து நின்று 1500 வாக்குகள் அடிப்படையில் வென்றுள்ளார் . 2014 இல் உருவாக்கப்பட்ட சாலைகளை மேம்படுத்துவேன் என்று கூறியுள்ளார் . இர்பான் ஹபீஸ் லோன் சங்ராமா , வடக்கு காஷ்மீர் 2007 இல் காஷ்மீர் பல்கையில் சட்ட மாணவராக படித்துக்கொண்டிருந்தார் . சிந்து ந்தி நீர் ஒப்பந்தம் காரணமாக காஷ்மீருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி போராட்டம் செய்தார் . 13 ஆண்டுகாலமாக அரசியல்