இடுகைகள்

வழக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோசமான குற்ற வழக்குரைஞருக்கு எதிராக வாளேந்தும் இளைஞன்! - பேட் பிராசிகியூட்டர்

படம்
  பேட் பிராசிகியூட்டர் பேட் பிராசிகியூட்டர் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் போஸ்டர் நன்றாக இருந்தால் தொடர் நன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்லாம். அதற்கான எடுத்துக்காட்டு இந்த தொடர். இந்த தொடரில் நடிக்க ஜின் என்ற பாத்திரத்திற்கான நடிகரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதிர்ச்சியான காட்சியில் கண்களை உருட்டி விழிக்கிறார். சண்டைக்காட்சிகளில்   துறுதுறுப்பாக இருக்கிறார். காதல் என்பதை பெண்களுக்கென ஒதுக்கிவிட்டனர். எனவே, நடிப்பு என்பதை ஜின் ஜூங் என்ற பாத்திர நடிகர் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. இயக்குநரும் வராத ஒன்றை எதற்கு இழுத்துக்கிட்டு என நினைத்துவிட்டார். ஷின் ஆ ரா பாத்திரத்தில் நடித்த நடிகை நன்றாக நடித்திருக்கிறார். அடுத்து, கணினி ஹேக்கராக வருபவரின் காமெடியும், சுன் சுல் என்ற மோசடிக்காரரின் காமெடி வில்லத்தனமும் பரவாயில்லை. மீதி அனைத்துமே பரிதாபகரமான தோல்வியாக முடிகிறது. சியோ என்ற வழக்குரைஞர். பெரும்புள்ளிகளின் சட்டவிரோத விஷயங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி கொரிய சட்டத்துறையையே கைக்குள் வைத்திருக்கிறார். எந்த வழக்கை விசாரிப்பது,

தொட்டால் குற்றங்களைக் கண்டுபிடித்துவிடும் இளைஞனின் அபூர்வ சக்தி!

படம்
  ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   பள்ளியில் படிக்கும் லி ஆன், அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்துபோனவர்களை சோதிக்கிறான். அவனால் இறந்துபோனவர்களை, ஒரு பொருளை, கதவு கைபிடியைக் கூட கையால் தொட்டு காட்சிகளை அறிய முடியும். இதன்படி இறந்துபோனவர்களைப் பற்றிய எண்களைக் கூறுகிறான். அது அவர்களின் உள்ளாடை அளவாக இருக்க பிணவறையில் உள்ள மருத்துவர், டிடெக்டிவாக உள்ள அவனது அக்கா ஜி சூ என இருவரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். கூடுதலாக அவனது அண்ணன் காங் வேறு அவன் திறமை இன்னும் தேறவில்லை என கிண்டல் செய்கிறார். இப்படித்தான் தொடர் தொடங்குகிறது.   பள்ளிக்கு பெரும்பாலும் போகாமல் வெளியில் சுற்றுபவனுக்கு பெட்ரோல் பங்க் வைத்திருப்பவரின் மகன் டாங் மட்டுமே நெருங்கிய தோஸ்த். தேர்வுகளில் மிக குறைந்த மதிப்பெண் எடுப்பதில்தான் லீ ஆனுக்கும் டாங்கிற்கும் போட்டி. இந்த நிலையில் நாயகி யூன் பாத்ரூமில் உடை மாற்றும்போது யாரோ ஒரு மாணவன் சாவி துவாரம் வழியாக பார்க்கிறான். இதை யூன் கண்டுபிடித்து அவனை பிடிக்க வரும்போது, அவனைப்போலவே ஹூடி போட்டுக்கொண்டு நடந்து செல்லும் லீ ஆ

ராணுவத்தில் உள்ள சூது செய்யும் கொலைகாரர்களை பழிவாங்கும் வழக்குரைஞர்கள்!

படம்
  மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் - கே டிராமா   மிலிட்டரி பிராசிகியூட்டர் டாபர்மேன் கொரிய டிராமா தொடர் ராக்குட்டன் விக்கி ஆப்   கொரிய ராணுவத்தில் நடைபெறும் ஊழல்கள், அதற்கான சூத்திரதாரிகளை இரு ராணுவ வழக்குரைஞர்கள் சேர்ந்து சுளுக்கெடுப்பதுதான் பதினாறு எபிசோடுகளின் கதை. நாயகன் பெயர்தான் டாபர்மேன். அப்படியல்ல டோ பே மன். அவனது எதிரிகள் அவனது பணத்திற்கான விசுவாசத்தைப் பார்த்து அவனை டாபர்மேன் என்ற அழைத்து மகிழ்கிறார்கள். ஒருகட்டத்தில் நாயகன் , தன்னைப் போலவே உள்ள டாபர்மேன் நாயை வளர்க்கிறார். தொடரின் தலைப்பு வந்துவிட்டதல்லவா? பள்ளியில் படிக்கும் டோ பே மன்னின் பெற்றோர் ராணுவத்தில் வழக்குரைஞர்களாக இருந்து கார் விபத்தில் மர்மமாக இறந்துபோகிறார்கள். அதிலிருந்து ராணுவம் , சேவை என்றாலே கசப்பாக இருக்கிறது டோவுக்கு. எனவே, ராணுவ சேவை வயது வந்தாலே தன்னை ஏதாவது குற்றங்களில் ஈடுபடுத்திக்கொண்டு பள்ளியில் இருந்து வெளியே வந்துவிடுவான். ஆனாலும் கூட வழக்குரைஞர் தேர்வில் விரைவில் வெற்றி பெற்றுவிடுகிறான். ஆனால், பள்ளி சிறுவனான அவனை எந்த நிறுவனமும் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. அப்போது அவனுக்க

கனவில் வன்முறை செய்யும் மனிதர்கள் - பாராசோம்னியா ஆபத்து

படம்
  பாராசோம்னியா ஆபத்து   இன்சோம்னியா பிரச்னையே பலருக்கும் தீரவில்லை. ஆனால், இப்போது வந்திருப்பது பாராசோம்னியா. இன்சோம்னியா பிரச்னை   என்பது தூக்கமின்மை. தூங்காமல் ஏதோ ஒன்றை இரவிலும் செய்துகொண்டிருப்பார்கள். தூங்கும் நேரம் மிக குறைவாக இருக்கும். பாராசோம்னியாவில் வன்முறையான செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக குற்றவழக்குகளும் பதிவாகி வருகின்றன. குற்றவாளி கொலையை, திருட்டை செய்கிறார் என்றால் அதற்கென ஒரு காரணம் வேண்டும் அல்லவா? தூக்கத்தில் செய்யும் விஷயங்கள் ஒருவருக்கு நினைவிலேயே இல்லாதபோது அவரை நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்குதான் கிராமர் போர்னிமன் துணைக்கு வருகிறார். இவர், ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் என்ற அமைப்பில் வேலை செய்துவருகிறார். நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து என பறந்து சென்று பாராசோம்னியா பற்றி விளக்கம் கொடுத்து வருகிறார். நீதிபதிகளுக்கு, ஜூரிகளுக்கு தூக்கத்தில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்பது பற்றிய தெளிவும் அறிவும் கிடையாது. எனவே, கிராமர் அதை அவர்களுக்கு விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. நர

அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள் - தடுமாறும் அமெரிக்க காவல்துறை

படம்
  கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஹாக்கின்ஸ். இவர் 2019 ஆம் ஆண்டு தொடங்கி மாகாணமெங்கும் புகைப்படங்களைக் கொண்ட பில்போர்டுகளை வைத்து வருகிறார். அதில், படுகொலையாகி குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத மனிதர்களின் முகங்கள் உள்ளன. எங்களை கொன்றவர்கள் யார்? என தலைப்பிட்டு புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தகவல் கொடுக்க காவல்துறையின் தொடர்புஎண் உள்ளது. ஹாக்கின்ஸ் எதற்கு இப்படி செய்கிறார்? ஏனெனில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் ஆறு   அன்று, அவரது மகன் ரெகி பத்தொன்பது வயதில் தெருவில் சுடப்பட்டு படுகொலையாகி கிடந்தார் 27 ஆண்டுகளாகியும் காவல்துறையால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. முயற்சிக்காமல் இல்லை ஆனால் குற்றவாளி கிடைக்கவில்லை.   அந்த ஆண்டில் நடைபெற்ற 838 கொலைகளில ரெகியும் ஒருவராக பட்டியலில் ஆவணப்படுத்தப்பட்டார். மகன்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த   ஹாக்கின்ஸ் மனதளவில் நொறுங்கிப்போனார். அவர் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஹிப் ஹாப் இசைக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த இளைஞன், அங்குள்ள உள்ளூர் குழுக்களில் சேர்ந்து சிறுசிறு கடத்தல்களுக்கு குருவியாக செயல்பட்டு பின்னாளில் உயிர் இழந்துள்ளான். ரெகி என்ற ஹாக்கின

சூழல் போராட்டங்களால் பாதுகாக்கப்படும் இயற்கை சூழல்!

படம்
  புத்துயிர்ப்பு தொழில்வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவது இடையறாமல் நடந்து வருகிறது. இதோடு ஒப்பிடும்போது, மரக்கன்றுகளை நடும் செயல் சற்றுவேகம் குறைவானதாகவே உள்ளது. காடுகள் வளர்க்கப்பட்டால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவு குறையும். மண் அரிப்பு மெல்ல குறையும். இதெல்லாம் தாண்டி இயற்கை வளம் சீரானால் வேலைவாய்ப்புகள் கூடும். மரங்கள், கார்பனை உறிஞ்சி தனது வேர்ப்பகுதியில் சேமிக்கிறது. 20-30 சதவீத அளவுக்கு மரத்தின் உயிரியல் பகுதி, கார்பனை உறிஞ்சும் ஸ்பான்ஞ்ச் போல செயல்படுகிறது. இறந்த அழுகிய மரத்தின் வேர்கள் கார்பனை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கை செய்யும் மரங்கள், கழிவுப்பொருளாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. காடுகள் அழிந்தாலும் அதனை செயற்கையாக முறையில் மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புறங்களில் உருவாக்க முயல்கிறார்கள். இந்தவகையில் நகர்ப்புற கட்டுமானங்களுக்கு புகழ்பெற்ற சிங்கப்பூரில் கூட செயற்கையான பசுமைப்பரப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இயற்கை சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டால் அதை மறுகட்டுமானம் செய்வதற்கு சிறிது காலம் தேவை. மனிதர்கள் தங்களது தலையீட்டாலும், மாசுபாடுகளை உருவாக்குவதாலும் இயற்கை தனது

சைக்கோபாத் கொலைகாரனுக்கு விபத்தில் நினைவுகள் அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பினால் - மவுஸ்

படம்
  மவுஸ் - கே டிராமா மவுஸ் கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   வன்மம் கொண்ட ஆபத்தான சீரியல் கொலைகாரனை கொரிய போலீஸ் தேடி வருகிறது. ஆனால், அவனோ அவர்களுக்கு ஒரு படி முன்னே சென்றுகொண்டே இருக்கிறான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதரவற்றவையாக மாறுகின்றன. சீரியல் கொலைகாரர்களால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த போலீஸ்காரர்   துணிச்சலாக களமிறங்க, அவருக்கு சைக்கோபாத் கொலைகாரன் சவால் விட ஊடகங்கள் இடைத்தரகர்களாக மாற என்னவானது என்பதே கதை. மேலே சொன்னது கதையின் ஆதாரமான பகுதி அல்ல. பொதுவாக சைக்கோபாத்/ தொடர் கொலைகாரர்கள் கதையில் பூனை – எலி விளையாட்டு போல ஓடுதல், தப்பித்தல், வேட்டையாடுதல் எல்லாமே உண்டு. இந்த கதையிலும் அதெல்லாம் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த டிவி தொடர் பேசும் விஷயம் சற்று சர்ச்சையானது. இங்கிலாந்தில் படித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர், டேனியல் கொரியாவை பூர்விகமாக கொண்டவர். இவர். சியோ ஹன் என்ற மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அடையாளம் காணப்பட்டு புகழ்பெறுகிறார். மூளை தொடர்பான ஆய்வ

இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள ஜனநாயகம்!

படம்
  பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்ப்பு நமது மரபணுக்களில் ஜனநாயகம் உள்ளதா? இந்திய பிரதமர், அண்மையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். அங்கு சென்று உரையாற்றியதில் அவர் ஒரு விஷயத்தை மட்டும் தவறவிட்டுவிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மனித உரிமைகள் இந்தியாவில் எப்படி நசுக்கப்பட்டன என்பதைக் கூறவில்லை. அமெரிக்க அதிபர்   மனித உரிமை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம். வெள்ளை மாளிகையில் மோடியின் வருகையொட்டி பூக்களின் அலங்காரம் செய்யப்ப்பட்டிருந்தது. மேசையில் சைவ உணவு பரிமாறப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் ஊடக சந்திப்பில் அமெரிக்க நிருபர் மனித உரிமைகள் பற்றி கேள்வியைக் கேட்டார். உடனே   மோடி மறைமுகமாக ‘’ஜனநாயகம் எங்கள் மரபணுக்களில் உள்ளது. அதுதான் எங்கள் ஆன்மா. எங்கள் ரத்த நாளங்களில்   ஓடுகிறது’’ என்று உரையாற்றினார். பிரதமர் கூறியதில் சற்றும் உண்மை இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பசுக்களை வளர்க்கும் முஸ்லீம்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கண்காணிக்கப்பட்டு தொடர்ச்சியாக தாக்கப்பட்டனர். அல்லது திட்டமிட்டு மதவாத கும்பல்களால் கொல்லப்பட்டனர். பிரதமர் மோட

சீரியல் கொலைகாரனால் கொல்லப்பட்ட சகோதரியின் உடலைத் தேடி அலையும் காவல்துறை அதிகாரி! பியாண்ட் ஈவில்

படம்
  பியாண்ட் ஈவில் - கே டிராமா பியாண்ட் ஈவில் கொரிய டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   2020ஆம் ஆண்டு லீ டாங் சிக் என்பவரின் சகோதரி, காணாமல் போகிறார். அவரது வெட்டப்பட்ட கைவிரல்கள் மட்டும் வீட்டின் முன் கிடைக்கின்றன. சம்பவ இடத்தில் லீ டாங் சிக்கின் கிடார் மீட்டும் கருவி கிடைக்க, அவரை வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படுகிறார்கள். அதனால், அவர் வாழும் ஊர் அவரை அக்காவைக் கொன்ற தம்பி என முன்முடிவு செய்துவிடுகிறது. ஊடகங்கள் அதை சிறப்பு செய்தியாக்குகின்றன. ஆனால் அக்காவின் உடல் கிடைக்காத காரணத்தால் தம்பி குற்றவாளி அல்ல என விடுவிக்கப்படுகிறார். அவரை கைது செய்த காவல்நிலைய தலைவர், லீ டாங் சிக் விரும்பியபடி காவல்துறை செர்ஜென்ட் ஆக உதவுகிறார். பெண் பிள்ளை இறந்த துக்கத்தால் லீ டாங் சிக்கின் அப்பா, பனியில் பிள்ளைக்காக காத்திருந்து மனம் சிதைந்து போய் உறைந்து இறக்கிறார். அதைப்பார்த்த அவரது மனைவிக்கு புத்தி பேதலித்துவிடுகிறது. லீ டாங் சிக்கை ஊர் முழுக்க தூற்றுகிறது. ஏறத்தாழ அவரது நெருங்கிய நண்பர்களே ஒருவேளை கொலை செய்திருப்பானோ, சைக்கோ பயலோ என சந்தேகப்படுகிறார்கள். ஆனால் லீ மனம்