இடுகைகள்

அரிதாரம். அவதாரம்.. அரங்கேற்றம்…

அரிதாரம். அவதாரம்.. அரங்கேற்றம்…                        ஜனனி சம்பத்                         தமிழில்: ஹெலன் ஃபாக்ஸ் அறுபது வயதான நாடகக் கலைஞர் பி.கே சம்பந்தம் வியாசரின் மகாபாரதத்தில் வரும் துச்சாதனன் வேடம் தரித்து அந்த கதாபாத்திரத்தினை கண்முன் நிகழ்த்திக் காண்பித்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தை சேர்ந்த கலைஞர்கள் ‘வஸ்திராபரணம்’ எனும் திரௌபதியினை மையப்படுத்திய நாடகத்தை அரங்கேற்றி பல்வேறு மக்களை காட்சியில் உருக்கமும், உணர்வுமாக நடித்து மெய்மறந்து போக வைத்திருக்கிறார்கள்.  சென்னையில் ஸ்பிக்மெகே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தமது நாடகத்தை நிகழ்த்தியபின் அவரிடம் பேசினேன். தன் அண்ணன் துரியோதனின் கட்டளைக்கு இணங்க சூதாட்டத்தில் தோற்றுப்போன பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை அவளின் கூந்தலைப்பிடித்து அனைவரும் கூடிய சபைக்கு இழுத்து வருகிறான் துச்சாதனன். அவளின் ஆடையை உருவி பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்கள் கௌரவர்கள். வஸ்திராபரணம் என்ற பகுதியில் நாடகமாக நிகழ்த்தப்படும் இந்த சம்பவங்கள் பின்னால் நிகழும் குருஷேத்ரம் எனும் பெரும்

‘குடி’மக்கள் தேசம் இந்தியா!

‘குடி’மக்கள் தேசம் இந்தியா!               ச.ஜெ அன்பரசு கேரள அரசின்  முதல்வரான உம்மன் சாண்டி 418 மதுபான பார்களை புதுப்பிக்கும் உரிமத்தை தடைசெய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதே ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கும் 312 மதுபான பார்களின் உரிமமும் தடை செய்யப்பட்டு இருப்பதோடு 730 பார்கள் மூடப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த சூழலை கேரளாவில் பலரும் ஆதரித்திருக்கையில் இந்நிலை தொடர்ந்து எவ்வளவு தூரம் சிறப்பான சூழலை ஏற்படுத்தப்போகிறது? தடை என்பது கள்ளச்சாராயத்தை அதிகம் பயன்படுத்த தூண்டுமா? சுற்றுலா மற்றும் மது விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய என்ன அரசிடம் திட்டமிருக்கிறது? என்று பேசுகிறது இந்தக்கட்டுரை. மது அருந்துவது ஒரு தகுதி      தமிழர்கள் தம் கொண்டாட்ட மனநிலையில் மட்டும் பருகிய உற்சாக பானங்கள் இன்று ஆங்கில கலாச்சாரத்தின் வழியே தினசரி நாம் பருகவேண்டிய அத்தியாவசிய உணவுப்பொருட்கள் போலாகிவிட்டன. இதற்கு காரணம் நமது நாட்டில் ஊடுருவிய மேற்கு கலாச்சாரங்களின் பெரும் ஆதிக்கம் என்றும் கூறலாம். அதோடு நடுத்தர மக்களின் பெரும் நுகர்வு பசிக்கு இறு

எனக்குப்பிடித்த சிறுகதை

எனக்குப்பிடித்த சிறுகதை ஆத்ம ருசி                        சுகா வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெருமுனையிலுள்ள கோயில்வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள் கடை, நயினார் குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து தொளதொளவென வெள்ளைக் கதர்ச்சட்டையும், நாலுமுழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாக கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்கவரும்போது, மதியப்பொழுதில் சிறிதுநேரம் கட்டையைச் சாய்க்கும்போதுதான் என அபூர்வமான தருணங்களில்தான் அந்த துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்டவெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள்தாடி நிரந்தரமாக கந்தையா பெரியப்பாவின் முகத்தில் உண்டு. எல்லோருமே அவரை பெரியப்பா என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார்கோயில்  தெருவில் ஒரு பழைய சுண்ண

பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு ஒரு பயணம்

    பயணிகள்  பேருந்தில்  பாலச்சந்திரனோடு    ஒரு பயணம்                                                                                                 ஏகாங்கி சென்னையில் இருந்த வேலையைவிட்டு வந்து ஒரு வாரமாகியிருந்தது . மனம் முழுவதும்   அந்த வேலையின் கசப்பை ஆழமாக இறங்கிட மெல்ல கனமாகிகொண்டிருந்தது . இலக்கியவாதியாக இருந்து பின் சிறந்த வியாபாரியாகி பல தொலைக்காட்சி நேர்காணல்களில் சமூக அக்கறையை வெளிப்படுத்தி மேதாவித்தனத்தை செவ்வனே உரக்க தலையாட்டி அறைகூவுபவர் நான் வேலை செய்த இதழின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் .! நான் வேலைக்கு சேரும் இடங்களிலெல்லாம் இந்த இருவேட நாடகங்களை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை . இனி வேறு ஏதாவது வேலை தேடவேண்டும் என்ற நினைத்து   மெல்ல   இமைகளை திறந்தபோது , வெளிச்சம் அதிகமாகிக்கொண்டிருந்தது வானில் . ஏறுவெயில் மெல்ல தன்பரப்பை சுவற்றில் அதிகரித்தபடி இருந்தது . தென்னந்தோப்பில் காக்கைகள் குரலெழுப்பி ஊருக்கே இவைதான் அலாரமோ என நினைக்க வைத்துக்கொண்டிருந்தன . எழுவதற்கே மிகச் சோம்பலாக இருந்தது . ஈரோட்டில்