இடுகைகள்

நவாஸூதின் சித்திக் நேர்காணல்

படம்
வாழ்வின் கடினமான தருணங்களே என்னை பக்குவப்பட்ட  மனிதனாக மாற்றியது                                     - நவாஸூதீன் சித்திக் மான்ஞ்சி திரைப்படம் நவாஸூதின் சித்திக்கை பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகராக ஏன் அவர் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. அவர் நம்மோடு தன் வாழ்வின் போராட்ட காலங்களில் நான்கு ஐந்து நண்பர்களோடு தங்கி வாய்ப்புக்காக போராடி வந்த காலங்களில் வறுமையின் விளைவாக தான் கற்றதும் பெற்றதுமான அனுபவங்களே தான் யார் என்பதை உணர்த்தியதாக கூறுகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் உங்களை காண்பதற்காக மக்கள் திரையரங்கிற்கு ஆவலாக வருவது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?    மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பது நல்ல விஷயம். ஏனெனில் அதுதான் என்னை வாழ வைக்கிறது. ஒவ்வொரு படமும் சிறு கீறல் போல தொடங்கியவைதான். பாராட்டு என்பது அவற்றினை எளிதில் திசைதிருப்பி விட முடியும். எனவே நான் இந்த பாராட்டுக்களை பெரிதாக நினைக்காமல் தவிர்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க முயல்கிறேன்.  எப்படி அதனை செயல்படுத்துகிறீர்கள்?  நான் என்னுடைய பழைய நண்பர்களை சந

உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான் தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க்

படம்
உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான் தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க் எட்னா ஃபைனாரு – 1991 ஆங்கிலத்தில்: டேன் ஃபைனாரு தமிழில்: லாய்ட்டர் லூன் தற்போது நீங்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்திருக்கிறீர்கள் – அதாவது தொலைக்காட்சி நிருபராக இருக்கும் முக்கிய கதாபாத்திரம் ஒருவர் குறித்து உருவாகியிருக்கும் உங்களது படத்தினைக் குறித்து உரையாடலாம். தொலைக்காட்சி பார்ப்பது என்பதில் உங்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றே படுகிறது.       ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? அண்மையில் தி பேட்டில்ஷிப் பொடம்கின் படத்தை தொலைக்காட்சியில் பார்க்க முனைந்தேன். ஆனால் அது விரைவிலேயே இயலாத ஒன்றாக மாறிவிட்டது. பெர்க்மன் படம் தொலைக்காட்சியில் பார்க்க பொருத்தமாக இருக்கும். வலிமையான உணர்ச்சிகள், ஏராளமான அண்மைக்காட்சிகள் என உள்ளே உள்ள விஷயங்களை அவை தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டாலும் எதுவும் இழக்கப்படாது உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம். ஆனால் ஒரு படம் மிகுதியான அளவு அமைதியை நீண்ட நேரம் கொண்ட இயற்கைக் காட்சிகளை வசனங்களுக்கு இணையா க கொண்டிருக்கும் படத்திற்கு தொலைக்காட்சி முழுமையாக நி

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் சினிமா தத்துவம் நிறைவுப்பகுதி

படம்
தேனீக்காவலர் படம் காட்டெருமை தோன்றிய காட்சியின் பிறகு நிகழ்வுகள் பின்னோக்கிச் செல்கிறது என்னும் விதத்தில் அடையாளம் காட்டப்படுகிறது என்னும் விதத்தில் அவை குறித்து இரு கேள்விகள் உள்ளன. உலகளாவிய முக்கியமான நட்சத்திர நடிகர் ஒருவரைப் பயன்படுத்தியுள்ளீர்கள். மார்செலோ மாஸ்ட்ரோயன்னி ஒரு தனித்துவ அடையாளம் கொண்டவராக, தான் நடித்த படங்களை அனைத்தையும் மேம்பட்டதாக அமைத்துக்கொண்டவர். எப்படி அவரைப் புரிந்துகொண்டு பயன்படுத்தினீர்கள்? அதேநேரம் எப்படி அவரை படத்திற்காக மாறுதல்களைச் செய்யவைத்தீர்கள்? இரண்டாவது கேள்வி: எழுதப்பட்ட கதைக்கும் படப்பிடிப்பு தளத்தின் நடைமுறை விஷயங்கள் குறித்ததுமாகும். ஸ்பைரோஸின் வீடு, அவர் தங்கியுள்ள வீடு, அவரது சிறுவயது வீடு இதில் தேன்கூட்டையும் சேர்க்கலாம். பாடல் கேட்கும் பெட்டி, சோடா நிறுத்தி இவைகளை நான் குறிப்பிடவில்லை. இதனை முன் கூட்டியே திட்டமிடுவது மிகவும் சிக்கலான ஒன்று அல்லதுத இவை மேம்படுத்தப்படுவது படப்பிடிப்புத் தளத்தில்தானா எப்படி இந்த செயல்களை நிறைவேற்றுகிறீர்கள்? மாஸ்ட்ரோய்யன்னி வெளிக்காட்டிய அடையாளத்தை அதற்கு நேரெதிராக திருப்பவே எனது ஆற்றலை செ

தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்

படம்
நீளமான காட்சி, தொடர்ச்சியான காட்சி, 360 கோணவாக்கிலான காட்சி என இந்த நிலைகள் அனைத்தும் பார்வையாளர்கள் அதனை குறிப்பிட்ட நேரத்திற்கு காண அனுமதிக்கிறது என்பது குறித்து இப்போது விவாதிப்போம். இந்தக்காட்சிகளில் நீங்கள் விரும்புவது இடைவெளி, காலம் குறித்தா அல்லது பார்வையாளரின் கவனம் குறித்து சிந்திப்பீர்களா? நாட்டின் கலாசார வரலாறு குறித்த மரபான கதாபாத்திரங்களை இதில் உருவாக்குவதோடு உண்மையான காரணம் என்றும் தொடர்புடையதுமாக உள்ளது என்று கூறலாமா?       பல ஆண்டுகள் சினிமா கண்டு வந்ததிலிலிருந்து கதாபாத்திரங்களின் தன்மைகளை நான் உருவாக்கிக் கொள்கிறேன். என்னை சுற்றி வெளிவரும் படங்களைப் பார்த்து அதிலுள்ள சுவாரசியமான அம்சங்களை குறித்து வைத்துக்கொள்வேன். பின்னர் நான் எழுதவும், படங்களை உருவாக்கத் தொடங்கியபிறகு, இவை அனைத்தையும் எனக்குள் கொண்டு வந்து எனது எழுத்தின் பாணியில் உருவாக்கத் தொடங்கினேன். நீளமான காட்சி தொடர்ச்சியான காட்சி என பொதுவாக இணை தொகுப்புக்கு உதவும் தன்மைகளை நான் ஏன் மறுத்தேன் என்பதற்கு அவை இழைபோல ஒன்றாகி உள்ளதை கூறவேண்டியுள்ளது. மான்டேஜ் காட்சிகளை வரலாற்றுக் காரணங்களு

தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்

படம்
36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள் மற்றும் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் எனும் வரலாற்று பின்புலம் கொண்ட படங்களை இயக்கியுள்ளீர்கள். 1870 இல் மாரதோன் பகுதியில் கிரீக் பண்டிட்கள் ஆங்கில சுற்றுலாப் பயணிகளை கடத்தினர் என்பது போன்ற பாதியளவு உண்மைகளைத்தான் வரலாற்றில் இருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளீர்கள். 15 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒருவரை விடுதலைப்போராளியை மெசியா என்று நாடே அவரை நினைக்க அவர் சிறிது காலத்திலேயே கடும் சர்வாதிகாரியாக மாறுகிறார் என்பது நிகழ்வாக இருக்கையில் படம் தன்னுள் இதுபோன்ற ஒன்றை புனைவாக தன்னுள் கொண்டிருக்கிறது. எதார்த்தம் மற்றும் கனவு எதார்த்தம் என இரண்டுக்கும் இடையில் உங்களுடைய படங்கள் எப்போது தோன்றத் தொடங்கின?   மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் தத்துவரீதியான – அரசியல் அதிகார பிரதிபலிப்பைக் கொண்ட அதிகாரத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற என்னுடைய மூன்று படங்களும் கசப்பான முடிவுகளைக் கொண்டுள்ள படமாகும். மனிதனுடைய நம்பிக்கை எப்படி குறிப்பிடப்பட்டாலும் என்னுடைய படத்தில் அவை தனக்குள்ளேயே சிறிதாகி மறைந்துபோகும் துன்பியல் தன்மையைக் கொண்டுள்ளது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் கிழக்

நூல்வெளி2: நம் காலத்து நாயகன்

படம்
நம் காலத்துக்கு நாயகன் மி.யூ. லேர்மன்தவ் தமிழில்: பூ.சோமசுந்தரம் சந்தியா பதிப்பகம் விலை: ரூ.80  போர்படையில் குறிப்பிட்ட பதவி வகிக்கும் ஒருவர் தன் பயண வழியில் படைப்பிரிவில் முக்கியமான பதவி வகிக்கும் மக்ஸீம் மக்ஸீமிச் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மெல்ல தன் வாழ்க்கையை போர்ப்படை வீரரிடம் கூறுகிறார். அப்போதுதான் பிச்சோரின் என்னும் மனிதரைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார். இந்நாவலின் நாயகனும் பிச்சோரின்தான். ஆனால் உண்மையில் இவனை நீங்கள் ஏற்றுக்கொள்வது என்பது மிக கடினமான ஒன்றே. ஆனால் நாயகர்கள் எல்லோரும் உண்மையில் அகம் புறம் இருபத்திநான்கு மணி நேரமும், ஏழு நாட்களும் எப்படி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வரும் பிச்சோரின் செய்வதையெல்லாம் பார்த்தால். கதையில் வரும் மக்ஸீம் பிச்சோரின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். ஆனால் பிச்சோரின் அவரைச் சந்தித்தாலும் முடிந்தவரை அவரைத் தவிர்த்து விட்டு கிளம்பவே விரும்புகிறான். அவன் எழுதிய குறிப்புகளை தன் வண்டிக்குள் வைத்திருக்கிற மக்ஸீம், அதை தனது பயண வழி நண்பரிடம் கொடுக்க மக்ஸீம் சொல்லி முடித்தவரையிலான கதை மெல்ல பிச்சோரின

நூல்வெளி2: ஐந்து சகோதரர்கள்

படம்
5 சீன சகோதரர்கள் சீன நாட்டுப்புறக் கதைகள் கூத்தலிங்கம் புக்ஸ் ஃபார் சில்ரன் விலை: ரூ. 10 இந்த நூலில் மொத்தம் நான்கு கதைகள் உள்ளன. அனைத்துமே எளிமையான தன்மை கொண்டதாக எதையும் பிரசாரம் செய்யும் தன்மையில் அமையாதவை என்பவை இதில் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் இது ஒரட்டாங்கை குழுவினரது பதிப்பகம் சார்ந்த நூல் அல்லவா!     5 சகோதரர்கள் கதை ஒன்று போலவே இருக்கும் 5 சகோதரர்களின் இயல்பான சக்தி மூலம் அவர்கள் எப்படி ஒரு வழக்கிலிருந்து தப்பிக்கிறார்கள் என்று கூறும் கதை. இத்தொகுப்பில் மார்வெல் காமிக்ஸ் போல நம்மை வசீகரிக்கும் ஒரு கதை என்று கூறலாம்.      ஏழு வண்ண இளம்பெண்கள் கதை என்பது என்ன தலைப்பு கேட்டவுடன் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அதேதான். ஒற்றுமை என்பதை வெளிப்படுத்தும் கதை.       எதிரொலி கதை வனதேவதைக்கு நேர்ந்த சாபத்தின் வழி எப்படி காடு அல்லது மலை நமது குரலை ஒலிக்கிறது என்று தெரிந்துகொள்ளும் விதமாக உள்ளது.        பசுமை தேவதை கதையை நாம் தொடர்ந்து சிறு சிறு தொன்மைக் கதைகளை படமாக எடுத்து கல்லா கட்டும் டிஸ்னி வகையறா என்று கூறலாம். பல உணர்ச்சிகரமான காட்சிகள், மகிழ்ச்சி, நெஞ்சை பிழியும்

தியோ ஏஞ்சலோ பவுலோஸின் சினிமா தத்துவம்

படம்
நமது பார்வையாளர்கள் இங்க்மர் பெர்க்மனின் படங்களோடு பழகிப்போனவர்கள் அவர் உங்களைப் போலவே தானே கதையை எழுதி இயக்கியவராவார். அவரைப்போலவே நீங்களும் வழக்கமான ஒரே ஒளிப்பதிவாளரை (ஜியோர்கோஸ் அர்வானிட்டிஸ்) தொடர்ச்சியாக பயன்படுத்துவது என்பதிலிருந்து ஒரே நடிகர்களை நடிக்க வைப்பது என ஒற்றுமை உள்ளது என்றாலும், முக்கியமான வேறுபாடும் இருவருக்குமிடையே உள்ளது. பெர்க்மன் தன் கதையில் நடிப்பவர்களை மனதில் கொண்டு கதை எழுதுகிறார். ஆனால் நீங்கள் அப்படி செயல்படுவதில்லை. மேலும் அவரது கதைகளில் தனிப்பட்ட உளவியல் பிரச்சனைகள், நரம்பு தொடர்பானவை (இவற்றை வேறுவிதமாக குறிப்பிடவில்லை) இடம்பெறுகின்றன. உங்களது படத்தில் மரபான நாட்டின் வரலாற்றுடன் இணைந்த வாழ்க்கை ஹோமர், அச்சிலஸ், யுலிபிடெஸ், ஸோபோகில்ஸ், அலெக்ஸாண்டர் தி கிரேட் உள்ளிட்ட படங்களில் காட்டப்படுகிறது. இங்க்மர் பெர்க்மனோடு ஒப்புமைப்படுத்துவதன் மூலம் இருவரிடையே உள்ள விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.       பெர்க்மனின் படங்களோடு என் படங்களுக்கு எந்த ஒற்றுமையும் இல்லை. என்னுடைய படம் உளவியல் சார்ந்தது அல்ல. ஏறத்தாழ காவியத்தன்மை சார்ந்தது. இது உளவியல் தன்மைக்கு

சமூகத்தின் முன் எழுப்பப்படும் கேள்விகள்தான் க்யூ: சஞ்சீவ் குப்தா

படம்
உத்திரப்பிரதேசம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த இயக்குநர் சஞ்சீப் குப்தா தனது க்யூ(q) படத்திற்கு 2015 ஆண்டிற்கான கொலுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது பெற்றிருக்கிறார். தங்களின் படமான க்யூ எதைப்பற்றியது?           8000 ரூபாய்க்கு விற்கப்படும் எட்டு வயதான சிறுமியின் பயணம் குறித்தது ஆகும். விலைக்கு விற்கப்பட்ட சிறுமி மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  ஒரு குடும்பத்துடன் வாழ்கிறாள். அந்த குடும்பத்திற்கென ஒரு இலக்கு உள்ளது. ஆனால் சிறுமிக்கு வரும் காய்ச்சல் காரணமாக அந்த இலக்கு தவறுகிறது. அங்கு வாழும் ஒரு பெண்மணிக்கு அவளோடு எந்த உறவும் ஏற்படாமல் பிரிக்கப்பட்டு இருக்கிறாள். அவளின் குழந்தையோடு சிறுமிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு என்னவானது என்பதுதான் படம். க்யூ என்று உங்கள் படத்திற்கு பெயர் வைத்ததன் காரணம் என்ன? க்யூ எதைக் குறிக்கிறது?          இதில் பல கேள்விகள் சமூகத்திற்கு முன்பாக எழுப்பப்படுகிறது என்பதால் அதன் அடையாளமாய் படத்தின் தலைப்பு க்யூ என்பதாக உள்ளது. 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் இறுதி 20 நிமிடங்கள்தான் பார்வையாளர்களுக்கு முழுப்படத்தையும் புரிந்துகொள்ள உதவும