இடுகைகள்

முத்தாரம் ஒரு பக்கம்!

படம்
ரோல்ஸ்‌ராய்ஸின் அட்டகாச படகு ! ரோல்ஸ்ராய்ஸ் கார் சூப்பர் சொகுசு கார்களுக்கு பிரபலம் .  தற்போது ஆட்டோமேடிக் படகு தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது புது நியூஸ் .  கப்பல் உருவாக்கி அதில் கேப்டன் வேலையாட்களை பணிக்கு சேர்த்து என எக்கச்சக்க செலவு பிடிப்பதால் அதனை குறைக்க ஆட்டோமேடிக் கப்பல் ரோல்ஸ்‌ராய்ஸின் ஐடியா . 60 மீ . நீளத்தில் மணிக்கு 28 கி . மீ வேகம் செல்லும் ரோந்து படகை உருவாக்கி வருகிறது ரோல்ஸ்‌ராய்ஸ் . முழுக்க எலக்ட்ரிக்மயமான கப்பலில் , MTU 4000 ரக ஜெனரேட்டர்கள் , 3 ஆயிரம் கி . வாட் சக்தி கொண்ட சோலார்பேனல் என வசதிகளில் ஆளை அசத்துகிறது இந்த புதிய படகு . " மனிதர்களைக் கொண்ட படகுகளைவிட ஏஐ சென்சார்களைக் கொண்ட தானியங்கி படகுகள் பாதுகாப்பானவை " என்கிறார் ரோல்ஸ்‌ராய்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் படகு பிரிவு தலைவர் பெஞ்சமின் தோர்ப் .   ஆன்டிவைரஸூக்கு அமெரிக்கா தடை ! அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அமைப்பு , அரசு அமைப்புகள் அனைத்தும் 3 மாதத்திற்குள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் சேவைகளை துண்டிக்க உத்தரவிட்டுள்ளதை வாஷிங்டன் போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது .

ஜாலி பிட்ஸ்!

படம்
கோடையில் அதிகரிக்கிறதா ஆக்சிஜன் ? ஒவ்வொரு சீஸன்களுக்கும் பருவம் மாறினால் ஒட்டுமொத்த சூழல்களும் மாறுகிறது என்றே அர்த்தம் . 1992 ஆம் ஆண்டு கொலராடோவின் போல்டர் நகரிலுள்ள அமெரிக்க தேசிய வானிலை ஆராய்ச்சிமையம்  ஒவ்வொரு பருவகாலத்திலும் ஆக்சிஜன் அளவு உயர்ந்து குறைவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் . இதில் கடலில் ஏற்படும் வெப்ப மாறுபாடும் முக்கிய பங்கு வகிக்கிறது . " தாவரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் அளவோடு , கடலின் ஆக்சிஜன் அளவும் இணையும்போது , மாறுபாடு தெரிய வந்திருக்கிறது . இது சிறிய அளவு என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு பெரியளவு முக்கியத்துவம் தரவில்லை " என்கிறார் அறிவியலாளர் லே நேடால் . லக்காய் மாட்டிக்கிச்சு ! - ரோனி லக்காய் மாட்டினாலும் தீராத கிக்காய் ஷாப்பிங் செய்வதுதானே பெண்களின் உலக வழக்கம் . யுனிவர்சிட்டி பெண் ஒருவருக்கு ராங் ரூட்டில் லக்காய் கிடைத்த பணம் என்னாச்சு தெரியுமா ? தென் ஆப்பிரிக்காவின் வால்டர் சிசுலு பல்கலையில் நடந்தது சிம்பிள் தவறுதான் . விளைவு ? அரசே தவிக்கும் அவலம் . கடந்த ஜூனில் தனியார் நிறுவனம் ஒன்று அரசு கல்விக்கடனில் உணவுக்காக தரவே

பிட்ஸ் செய்திகள்

படம்
இந்தியாவின் சுதேசி ஜிபிஎஸ் ! இந்தியா விரைவில் தனித்துவமான சுதேசி ஜிபிஎஸ் சாட்டிலைட் நாடு பெருமையை நெஞ்சில் தாங்கப்போகிறது . இஸ்‌ரோ IRNSS-1H எனும் புதிய சாட்டிலைட்டை விண்வெளியில் நிலைநிறுத்துவதற்கான கவுண்டிங்கை தொடங்கிவிட்டது .    ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோள் , முன்னர் ஏவி செயலிழந்த IRNSS-1A எனும் செயற்கைகோளுக்கு மாற்று . இதில் மூன்று துல்லிய அணுக்கடிகாரங்களும் உள்ளன . பிஎஸ்எல்வி - சி 39 ராக்கெட் மூலம் 1,425 கி . கி எடையுள்ள செயற்கைக்கோள் செலுத்தப்படவிருக்கிறது .   சரி , எதற்கு இந்த சாட்டிலைட் ? ரயில்வே , ஆய்வுப்பணிகளுக்கும் , இடம் சார்ந்த பணிகளுக்கும் இவை மிகவும் பயன்படும் . அதோடு பேரழிவு மேலாண்மை , வாகனங்களை கண்டறிவது உள்ளிட்ட ராணுவ பணிகளுக்கும் அவசியமான சேட்டிலைட் இது . இந்த சீரிஸில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் அடுத்த சேட்டிலைட் ரிலீஸ் .  ஆபீசில் தூங்க உதவும் கேப்சூல் ! ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து தரும் ? பஸ் வசதி , கேன்ட்டீன் , இன்க்ரிமென்ட் , போனஸ் ஆகியவை இதில் அடங்கும்

ஸ்மார்ட் ரோபாட்டுகளின் வரலாறு!

படம்
ஸ்மார்ட் ரோபாட்டுகளின் வரலாறு ! 1800 ஆம் ஆண்டுகளிலேயே நெசவு ஆலைகளில் மெஷின்கள் இயங்கத்தொடங்கிவிட்டன . 1960 ஆம் ஆண்டுகளிலேயே மெஷின்கள் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இயங்கத்தொடங்கியதோடு , ராணுவத்திலும் இரண்டாம் உலகப்போர் சமயத்திலிருந்தே பயன்படத்தொடங்கிவிட்டன . எலிசா (1966) இன்று ஃபேஸ்புக் சாட்பாட்டுக்கு முன்னோடி எலிசா . உளவியல் நிபுணரிடம் கேள்வி கேட்டு பதில் பெறுவது போல இதனை பயன்படுத்தலாம் . மிகச்சிறந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் சரியானபடி ஸ்க்ரிப்ட் செய்தால் மிக புத்திசாலித்தனமான மெஷின்தான் இது . விர்ச்சுவல் கிரியேச்சர் (1994) கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர் மற்றும் கலைஞரான கார்ல் சிம்ஸ் என்பவர் கண்டறியந்த ரோபாட் இது . ஜெனடிக் அல்காரிதம் மூலம் நீந்த , குதிக்க ஆகிய விஷயங்களை செய்தது . டீப் ப்ளூ (1977) ரஷ்யாவின் கேரி காஸ்பரோவை தோற்கடித்த சூப்பர் கம்ப்யூட்டர் இது .  முதல்முதலாக மனிதனின் மூளையை  கணினி வென்ற நிகழ்விது . இந்த வெற்றிக்கு காரணம் இதனை திறமையாக வடிவமைத்த பொறியாளர் குழுவும் விளையாட்டில் இது கையாண்ட முறைகளும்தான் . செஸ் கடந்து பெரியளவில் இந்த கணினி கொ

தலைவன் இவன் ஒருவன்! -பகதூர் ராம்ஸி

படம்
தலைவன் இவன் ஒருவன் 1  டோனெல் பைர்ட் " நம்முடைய குழந்தைகளை நோயில் தள்ளுவதே நாம் வாழும் பழைய இந்த வீடுகள்தான் " என பரபரவென பேசும் மாற்றத்தின் தலைமகனான டோனெல் பைர்ட் மோசமான சூழல் கொண்ட நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரில் ஒற்றை படுக்கை வீட்டில் வளர்ந்தவர் . கயானாவில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களால் அமெரிக்காவுக்கு கிளம்பி அகதிகளாக வந்தவர்கள்தான் டோனெல்லின் பெற்றோர்கள் . 2013 ஆம் ஆண்டு சூழலினை பாதிக்காத வகையில் காற்றோட்டமும் ஆற்றலை சேமிக்கும் வகையில் வீடுகளை ஏழைமக்களுக்கு குறைந்தவிலையில் கட்டித்தரும் BlocPower எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார் டோனெல் பைர்ட் . இந்த திட்டத்தை தொடங்க காரணமே பால்யத்தில் இவர் சிறிய வீட்டில் வசிக்க நேர்ந்த துயரம்தான் . " நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரில் நாங்கள் வாழ்ந்த இடம் நெருக்கடியானது . வீட்டில் சமையல் செய்தால் அந்த வெப்பம் எளிதில் வெளியே போகும் வசதி கூட இல்லை . என்னுடைய 6 வயதில் தெருவிலிருந்த கடையில் மிட்டாய் வாங்கிக்கொண்டு வந்தபோதுதான் ஒரு இளைஞர் , மற்றொருவரை தலையில் துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்து ஷாக்கானேன் .

உலகை சுற்றிவரும் ஆல்ரவுண்டர் பெண்கள்! -ச.அன்பரசு

படம்
உலகை சுற்றிவரும் ஆல்ரவுண்டர் பெண்கள் ! - ச . அன்பரசு கரை தெரியாத கடலில் பாய்படகில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ட்ராவல் செய்யும் டாஸ்க் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் ? இரண்டு மாதம் கடலிலா என டரியலாகி அடுத்த சீட்டிலுள்ள ஆளுக்கு டாஸ்க்கை பாஸ் செய்து எஸ்கேப்பாக முயற்சிப்போம் . ஆனால் டாஸ்க் கொடுக்கப்பட்ட பெண்கள் இதை தன் திறமைக்கான சவாலாக ஏற்று விரைவில் கடலில் அட்வென்ச்சர் பயணத்துக்கு ரெடியாகிவிட்டார்கள் . யார் இந்த பெண்கள் ?  இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆறுபெண்களான வர்திகா ஜோஷி பிரதிபா ஜாம்வால் , ஸ்வாதி , விஜயாதேவி , ஐஸ்வர்யா , பாயல்குப்தா ஆகியோர்தான் அந்த கடல்புலி வீராங்கனைகள் . நவிகா சாகர் பரிக்ரமா எனும் திட்டத்தில்தான் இந்திய பெண் கடல்படை வீராங்கனைகள்   கோவா டூ கேப்டவுன் வரை 43 நாட்களில் அதிதீரமாக 38 ஆயிரத்து 892 கி . மீ தூரம் பயணிக்கபோகிறார்கள் . உலகிலும் , ஆசிய அளவிலும் பெண் கடல்படையினர் இப்படி பயணம் செய்வது இதுவே முதல்முறை . நவிகா சாகர் பரிக்ரமா எனும் கடல்படை நிகழ்வில் இது மூன்றாவது பயணம் . முதல் பயணம் , முன்னாள் கேப்டனான திலீப் தோண்டேவும் (2009-10)

ஜாலிபிட்ஸ்!

படம்
பிட்ஸ் ! குதிரையில் பர்சேஸ் ! மெக்சிகோவின் அகாபுல்கோவிலுள்ள ஆக்‌ஷோ சூப்பர் மார்க்கெட்டில் கஸ்டமர் தனது வாகனத்தில் கடைக்குள்ளே வந்ததுதான் பெரும் சர்ச்சை . தனது குதிரையில் அமர்ந்தபடி கடைக்குள் வந்து பீர் பர்சேஸ் செய்ய முயன்றதுதான் கடைக்காரர்கள் பீதியானதற்கு காரணம் . பீரைக் கொடுத்து குதிரைக்காரரை அனுப்பியுள்ள வீடியோ இணையத்தில் வைல்டு ஹிட் . பொறுமையிழந்த நாய் ! பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நானைமோ பார்க்கில் ஒருவர் , தன் காரை தன் செல்ல நாயுடன் நிறுத்திவிட்டு உலாவச்சென்றார் . நாயும் எவ்வளவு நேரம் வெயிட் செய்யும் ? நாய் அடித்த ஹாரனில் பார்க்கே மிரண்டது . பின் செக் செய்து பார்த்ததில் அப்பாவியாக ஸ்டீரிங்கில் பாதம் வைத்திருந்த நாய்தான் ஓனரை டென்ஷனாகி அலர்ட் செய்திருக்கிறது என தெரிந்திருக்கிறது . ஜிக்ஸா சாதனை ! அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த ஜாக் ப்ரெய்ட் 6 அடி நீளம் , 22 அடி அகலம் கொண்ட டிஸ்னி ஜிக்ஸாவை மூன்று மாதங்களாக போராடி தீர்த்திருக்கிறார் . ஜெர்மனியின் ஜிக்ஸா நிபுணர் ராவன்பர்க்கரின் டிசைன் இது . 40,230 ஜிக்ஸா துண்டுகளை ஒன்றிணைத்து சாதனை படைத்த முதல் அ

துர்க்கை பூஜை!

படம்
பரவச அருள் வழங்கும் துர்க்கை பூஜை ! - ச . அன்பரசு அகில உலகமே கவனிக்கும் 10 நாட்கள் நடைபெறும் ஆன்மிகத்திருவிழா . சாக்த மதத்தின் முக்கிய கொண்டாட்டமாக கருதப்படும் துர்க்கை பூஜை கொல்கத்தாவாசிகளின் ஸ்பெஷல் நிகழ்வு . தாக் ட்ரம்ஸ்கள் முழங்க , பண்டிதர்கள் மந்திரங்களை உச்சரிக்க , பாட்டும் இசையும் புல்லட் ட்ரெயின் வேகத்தில் பரபர விறுவிறு பக்தி பரவசம் . செப் . 21 - 30 வரை துர்க்கை பூஜை களைகட்டவிருக்கிறது .   தீபாவளி போனஸ் போலவே கொல்கத்தாவில் துர்க்கை பூஜைக்கான போனஸ் , லீவ் உண்டு . இரு மாதங்களுக்கு முன்பே விழாவுக்காக பஜார்களில் கலகலவென ஜரூர் பிஸினஸ் தொடங்கிவிடுவது வாடிக்கை .       ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் டூ அக்டோபர் மாதங்களில் மகாளய அமாவாசையில் தொடங்கி பத்து நாள் திருவிழாவாக களைகட்டும் துர்க்கை பூஜைக்கு நவராத்திரி , துர்க்கோஸ்தவம் என்ற பெயர்கள் உண்டு . ஆறாம் நாளுக்குப் பிறகே சஷ்டி , நவமி , தசமி தின அன்லிமிடெட் அமர்க்களம் ஆரம்பிக்கிறது . துர்க்கை , அவரது மகளான லஷ்மி , சரஸ்வதி , விநாயகர் , கார்த்திகேயன் ஆகியோர் உருவங்களை ஒரே உருவங்களின் வடிக்கும் அலங்கார உருவங்களை மேற்சொ

புத்தக விமர்சனம்!-தொகுப்பு கா.சி.வின்சென்ட்

படம்
  அறிவியல் நூல்கள்! RIPPLES IN SPACETIME Einstein, Gravitational Waves, and the Future of Astronomy by Govert Schilling 340pp  Belknap/Harvard Univ. 21 ஆம் நூற்றாண்டு இயற்பியலின் வரலாறு இது . 2013 ஆம் ஆண்டு ஹிக்ஸ் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதை விட 2015 இல் ஈர்ப்புவிசை பற்றி கண்டறியப்பட்டது சுவாரசிய செய்தியாக மாறியது . ஐன்ஸ்டீன் கணிப்பாக சொன்ன ஈர்ப்புவிசை பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை ஆதாரம் தேடி தொடர்கிறது . புவிஈர்ப்பு விசை குறித்து பல்வேறு டெலஸ்கோப் கண்டுபிடித்த தகவல்களை ஷில்லிங் சுவாரசியமாக சொல்லிச்செல்வது ரசனை . பெருவெடிப்பு , ஐன்ஸ்டீன் தியரி என பல விஷயங்களையும் இதனூடே விவரிப்பது அறிவியல் தேடல் உள்ளவர்களை ஈர்க்கும் . அறிவியல் விரும்பிகளுக்கான ஸ்பெஷல் நூல் இது . ZAPPED From Infrared to X-rays, the Curious History of Invisible Light by Bob Berman Page count: 272pp Publisher: Little, Brown நம்மைச்சுற்றிய கதிர்வீச்சு பற்றி அறிவீர்களா ? செல்போன் டவர் , மைக்ரோவேவ் ஓவன் , சிடிஸ்கேன் ஆகியவை அனைத்தும் நாமறியாமல் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவைதான் . இவை