இடுகைகள்

நாயின் உடல்மொழி என்ன சொல்கிறது?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?-Mr. ரோனி முன்காலை தாழ்த்தி உடலை பின்னோக்கி இழுக்கும் நாயின் உடல்மொழியை எப்படி புரிந்துகொள்வது ? காட்டில் இருந்த நாயின் முன்னோர்களான ஓநாய்கள் இரையை கொன்று தின்னும் முன்பு மேற்சொன்ன உடல்மொழியை பின்பற்றும் . பின்னாளில் வீட்டு விலங்காக அதன் வம்சாவளியாக நாய்கள் வந்தபின் இந்த உடல்மொழிகள் மரபின் வழியாக அப்படியே வந்துவிட்டன . இன்னொரு சக நாயுடன் இணக்கமாக உரையாட இந்த உடல்மொழியை நாய்கள் கைக்கொண்டு மெல்ல பொய்க்கடி கடித்து உருண்டு புரண்டு விளையாடி மகிழும் . டென்ஷனிலுள்ள தன் எஜமானரை பந்துகளை வீசி எடுத்துவரவும் , கைகளை மெல்ல நக்கி விளையாட அழைப்பதும் இந்த வகையில்தான் . இதைப்படித்துவிட்டு நாயின் முன்பு பிஸ்கட்டை வீசுவதாக ஏமாற்றி அம்பியாய் கடிவாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல .  

கோப்ராபோஸ்ட்டின் துணிச்சலான முயற்சி!

படம்
முத்தாரம் Mini   ஸ்டிங் ஆபரேஷன்கள் எதற்காக ? பத்திரிகையாளர்களின் செய்தி என்பது தீர்க்கமான ஆதாரங்களிலும் உண்மையிலும் எழுந்துநிற்பவை . ஆனால் ஊடக நிறுவனங்கள் சில இதுபோன்ற திடுக்கிடும் செய்திகளை மறுக்கும்போது ஸ்டிங் ஆபரேஷன்கள் பிறக்கின்றன . 136 என்பது உலக பிரஸ் ப்ரீடம் பிரஸ் பட்டியலில் இந்தியாவின் இடத்தைக் குறிப்பது . தற்போது இந்தியா 138 ஆவது இடத்திற்கு வந்துவிட்டது . ஊடக நிறுவனங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ? அச்சு , காட்சி , இணைய ஊடகங்களை தோராயமாக தேர்ந்தெடுத்து எங்கள் செய்தியாளர் ஊடக உரிமையாளரை , விற்பனை மேலாளரை சந்திக்கிறார் . பொதுவாக ரிஷப்ஷனுக்கு போனில் தொடர்புகொண்டு பேசுவார்கள் . கோப்ரா போஸ்ட் செய்கிற இதுபோன்ற ஸ்டிங் முறைகள் ஊடகத்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தாதா ? ஊடகம் என்பது மக்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிற துறை . ஆனால் ஊடகங்களின் ஆசிரியர் பிரிவு என்பது லஞ்சம் பெறுகிறதாக மாறினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து அல்லவா ? நாளிதழ்கள் அரசிடம் மானிய உதவிகள் பெறுவது பொதுமக்களின் சேவைக்காக மட்டுமே . - அனிருத்தா பாஹல் , கோப்ராபோஸ்ட் ஆசிரியர்

கன்னடம் தேசியமொழியாக இருந்த காலமும் ஒன்றுண்டு!

படம்
  நேர்காணல் ! " கன்னட மன்னர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள் " வசுந்தரா ஃபிளியோசட் , வரலாற்று ஆய்வாளர் . தமிழில் : ச . அன்பரசு கர்நாடகாவின் வரலாறு தொடர்பாக 1960 ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார் வசுந்தரா . பண்டிதர் சென்ன பசவப்பா கவலி என்பவரின் மகளாக பிறந்த வசுந்தரா , கர்நாடக பல்கலையில் வரலாறு , பிரெஞ்சு , கல்வெட்டியல் படித்தவர் . சோர்பன் பல்கலையில் நாடகம் மற்றும் வரலாறு படிப்பில் முனைவர் பட்டம் வென்றவர் கல்வெட்டியல் குறித்த நூல்களை எழுதியுள்ளார் . 1940 ஆம் ஆண்டு தார்வாடில் உங்களது வாழ்க்கை எப்படி இருந்தது ? நெகரா ( நெசவாளர் ) இனத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம் . 1920 ஆம் ஆண்டில் கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் கற்ற தந்தை சென்னபசவப்பா , நாடகங்கள் பற்றி தடையின்றி எங்களுடன் உரையாடுவார் . ரேடியோவல் மல்லிகார்ஜூன் கான்செர்ட் நடக்கும்போது எனக்கு இளங்கலை இறுதித்தேர்வு நடக்கவிருந்தது . தேர்வு அடுத்தாண்டு எழுதிக்கொள்ளலாம் ; இந்த இசைநிகழ்ச்சி முக்கியம் என்று தந்தை கூறியதை தாயும் ஆட்சேபிக்கவில்லை . வரலாற்றில் ஆர்வம் வந்தது எப்படி ? வர

வியாழனில் என்ன நடக்கிறது?

படம்
வியாழனின் மின்னல் ! வியாழனில் ஏற்படும் மின்னல் குறித்த ரகசியங்களை நாசா கண்டறிந்துள்ளது . முதன்முதலில் இது குறித்த தகவலை 1979 ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் கண்டறிந்தது . தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு பூமியிலும் , வியாழனிலும் ஏற்படும்  மின்னல்களில் வேறுபாடு உண்டு என நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . " மின்னல் என்பது எந்த கோளில் ஏற்பட்டாலும் அது ரேடியோ அலைகளை பிரதிபலிக்கும் " என்கிறார் கலிஃபோர்னியா பசடெனா நாசா ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஷனோன் ப்ரௌன் .  Microwave Radiometer Instrument (MWR) எனும் கருவியை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள் . இக்கருவி ஜூபிடரிலிருந்து வெளியாகும் அலைகளை பதிவு செய்கிறது . முதலில் கிடைத்த கிலோஹெர்ட்ஸ் தகவல்களை விட மின்னல் பற்றிய தகவல்கள் தற்போது மெகாஹெர்ட்ஸில் சேகரிப்பதாக நாசா கூறுகிறது . வாயேஜர் 1&2, காசினி , ஜூனோ (377 முறை ) ஆகியவை வாயுக்கோளான வியாழனின் ஏற்படும் மின்னல்களை பதிவு செய்து வருகிறது . பூமியை விட 25% குறைவான சூரியவெப்பத்தை வியாழன் பெறுகிறது . ஜூலை மாதம் ஜூனோ வியாழனை மிக அருகில் சுற்றிவரவி

அறியப்படாத அர்ஜூனா விருது வீரர்கள்!

படம்
அறியப்படாத அர்ஜூனா விருது வீரர்கள் !  1   பிரகாஷ் நஞ்சப்பா பெங்களூரில் பிறந்து கனடாவில வளர்ந்த பிரகாஷ் நஞ்சப்பா மூன்றுமுறை விருதுப்பட்டியலில் இடம்பெற்று தற்போதுதான் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் . அரிய முக முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட பிரகாஷ் , கனடாவில் பணியாற்றிக்கொண்டே துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார் . முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான பிரகாஷின் தந்தை   பிபி பாபண்ணா , வற்புறுத்தலால் வேலையை கைவிட்டு துப்பாக்கி தூக்கினார் . இந்தியாவில் பயிற்சி செய்து பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ( காமன்வெல்த 2014) வரை பதக்கம் வென்றவர் இவர் . " மூன்றுமுறை முயற்சித்து இம்முறை அர்ஜூனா விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி . ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே என் லட்சியம் . ரியோ ஒலிம்பிக்கில் முடக்குவாத சிக்கலால் , போட்டியில் பதக்கம் வெல்லமுடியவில்லை . 2020 போட்டியில் 10 மீ . பிரிவிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் 50 மீ . பிரிவிலும் சாதிப்பேன் " என்கிறார் பிரகாஷ் நஞ்சப்பா . பிரசாந்திசிங் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த பே

மலேரியாவுக்கு புதிய மருந்து!

படம்
மலேரியாவுக்கு சிந்தடிக் ஊசி ! வேதிப்பொருட்களால் செயற்கைமுறையில் தயாரான சிந்தடிக் தடுப்பூசி இவ்வாண்டின் இறுதியில் மனிதர்களின் மீது சோதிக்கப்படவிருக்கிறது . Plasmodium falciparum எனும் ஒட்டுண்ணி ஏற்படுத்தும் மலேரியாவை இந்த ஊசிமருந்து தடுக்கிறது . தற்போது கொலம்பியா மற்றும் ஆப்பிரிக்காவின் கானாவில் இச்சோதனையை ஆராய்ச்சியாளர் மானுவேல் எல்கின் படாரோயோ முரில்லோ , அவரது மகன் அல்ஃபோன்ஸோ ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் . வேதிப்பொருட்கள் மூலம் ரெடியாகும் இந்த செயற்கை ஊசி மருந்து வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதம் . குளிர்சாதன முறையில் மருந்தை பாதுகாக்க அவசியமில்லை . Plasmodium vivax எனும் ஒட்டுண்ணி இந்தியாவில் மலேரியாவுக்கு பரவக் காரணம் . 1987 ஆம் ஆண்டு FIDIC   அமைப்பைச் சேர்ந்த மானுவேல் , தயாரித்த சிந்தடிக் மருந்தை உலகசுகாதார நிறுவனம் ஏற்கவில்லை . கடந்தாண்டு மட்டும் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த 216 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 2016 ஆம் ஆண்டு மலேரியாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரம் . மருந்தோடு சுகாதாரத்தையும் பராமரிப்பது அவசிய

டைம் பத்திரிகையின் நம்பிக்கைக்குரிய நாளைய இளைஞர்கள்!

படம்
நம்பிக்கை மனிதர்கள் ! Kerstin Forsberg(33) பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது தன் ஒன்பது வயதில் இயற்கை சங்கம் தொடங்கியவர் . பெரு நாட்டில் பிளானட்டோ ஓசானோ என்ற என்ஜிஓ மூலம் கடல் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் . " கணவாய் மீன்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்யும் நிலையில் அதனை வேட்டையாடி உண்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை " என்பவர் அதிகாரிகளிடம் 2 ஆண்டுகளாக போராடியதன் பலனாக தற்போது நடவடிக்கை தொடங்கியுள்ளது . Sonita Alizadeh(21) சுதந்திரத்திற்கான குரல் . முதல்முறை திருமண உடையை இராக்கைச் சேர்ந்த சோனிடா அணிந்தது மங்கல நாணை   அணிவதற்காக அல்ல ; இசை வீடியோவுக்காக . பெண்களின் மௌனத்தை உடைக்க நான் அலறுகிறேன் எனும் சோனிடா , தன்னை 9 ஆயிரம் டாலர்களுக்கு பெற்றோர் விற்க முயன்றபோது Daughters for Sale என்ற ராப் பாடலை எழுதி பாடினார் . குழந்தை திருமணத்திற்கு எதிரான தேசியகீதமாக ஒலிக்கிறது அப்பாடல் . அப்பாடல் மூலம் அமெரிக்க இசைப்பள்ளியில் இலவசமாக கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது ." குழந்தை திருமணத்தை ஒப்புக