இடுகைகள்

பத்திரிகைகளை தாக்கும் சைபர் குழு!

படம்
நாளிதழ்களை தாக்கிய இணைய கொள்ளையர்கள்! அமெரிக்காவைச் சேரந்த லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழ் இணையத்தாக்குதலில் சிக்கியுள்ளது.  பத்திரிகையாளர்களை திட்டமிட்டு தாக்கிய இணைய தாக்குதல் குழு, நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகிய இதழ்களை அச்சகத்திற்கு அனுப்பும் பணியை தாமதப்படுத்தியுள்ளனர். அமெரிக்கர்கள் தாக்குதலுக்கு காரணம் யார் என்று கூறுவார்கள்? அதேதான். வடகொரியா அல்லது கிழக்கு ஐரோப்பா என சந்தேகப்பட்டனர் . பின்னர் தாக்குதல் அமெரிக்காவிலேயே நடந்துள்ளது கண்டறியப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். Ryuk  எனும் ரான்சம்வேர் அமெரிக்க பத்திரிகைகளை தொடர்ச்சியாக தாக்கியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பாரம்பரிய செய்தி நிறுவனங்களைக் கடந்த சோஷியல் தளங்களின் வழியே செய்திகளை படிக்கும் அமெரிக்கர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். இதில் தகவல்கள் சரியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

தூக்கத்தில் டெக்ஸ்டிங் செய்கிறீர்களா?

படம்
தூக்கத்தில் குறுஞ்செய்தி! இது எப்படி முடியும்? நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு தூக்கத்தின் அலம்பலில் மெசேஜ் அனுப்புவதுதான் டெக்ஸ்டிங் என பிரபலமாகிவருகிறது. போனை திறந்து கவனமின்றி எப்படி செய்தி அனுப்ப முடியும்? தூக்க கிறக்கத்திலேயே நண்பர்களுடன் பேசுகிறோம் அல்லவா? குறுஞ்செய்தி அனுப்புவதும் அப்படியே நிகழ்கிறது. என்ன அனுப்பினோம் என்பது கூட பலருக்கும் அடுத்தநாள் நினைவிருக்காது. அப்போது இது தூக்க குறைபாடு என கூறலாமா? நிச்சயமாக. பென்சில்வேனியாவில் 372 கல்லூரி மாணவர்களிடையே நடத்திய ஆய்வில் 26% பேர் தூக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்புவது தெரிய வந்துள்ளது. இதில் படுக்கையில் போன்களை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட கையில் க்ளவுஸ் கூட அணிந்து தங்களை சோதித்துள்ளனர். இதற்கு தீர்வுதான் என்ன? போனை படுக்கையிலிருந்து அகற்றுவதே ஒரே தீர்வு. உலகில் 5-10% பேருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளது. தூக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் குறைபாடும் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.   

சாம்சங்கின் புதிய நோட்புக்!

படம்
டெக் புதுசு! Samsung Notebook 9 2-in-1 இந்த ஆண்டில் ரிலீசாகவிருக்கும் முக்கியமான லேப்டாப் இது. 13.3 மற்றும் 15 இன்ச் திரை அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கணினி ஓவியக் கலைஞர்களுக்கானது. இதில் கொடுக்கப்பட்டுள்ள இருமடங்கு வேகம் கொண்ட S பேனா இதற்காக உதவும். 16 ஜிபி ராம், அலுமினிய பாகங்கள், ஐ7 புரோசஸர், 15 மணிநேர பேட்டரி சக்தி என அசத்தலாக உருவாகியுள்ளது. RM 25-01 காட்டில் தனியாக மாட்டிக்கொண்டுவிட்டீர்கள். எப்படி தப்பி பிழைப்பீர்கள். அதற்குத்தான் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் வடிவமைத்த இந்த கைக்கடிகாரம் உதவப்போகிறது. காம்பஸ், நீரின் தூய்மை அளவிடும் திறன் உள்ளிட்ட பல விஷயங்களை இதில் சாதிக்கலாம். nReal Light மேஜிக் லீப் நிறுவனத்தின் என்ரியல் லைட் கண்ணாடி, பார்க்கும் காட்சிகளை ஃபேன்டஸி எஃபக்ட்டுகளுடன் பார்க்க உதவுகிறது. நிஜ வாழ்வில் ஃபேன்டஸி தேவை என்பவர்களுக்கு இக்கண்ணாடி பிடிக்கும்.   

சோலார் பேனல் ஆராய்ச்சி சாதித்த மாணவி

படம்
சோலார்பேனல் ஆராய்ச்சி! அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பதிமூன்று வயது மாணவி ஜார்ஜியா ஹட்சின்சன் புதிய சோலார் பேனல் தயாரிப்புக்காக 25 ஆயிரம் டாலர்கள் பணப்பரிசை வென்றுள்ளார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பள்ளிகளுக்கிடையே பிராட்காம் மாஸ்டர்ஸ் அமைப்பு நடத்திய போட்டியில்தான் ஜார்ஜியா சாதித்திருக்கிறார். சூரியன் ஒளியை ட்யூயல் ஆக்சிஸ் ட்ராக்கர் மூலம் சேமிக்கும் நுட்பத்தை தனது சோலார் பேனலில் முயற்சித்து பரிசு வென்றிருக்கிறார் ஜார்ஜியா ஹட்சின்சன். இதன்மூலம் விலை அதிகமான சென்சார்களை விட துல்லியமாக சூரியனின் நகர்வை கண்காணித்து சோலார் பேனல்களை நகர்த்திக்கொள்ள முடியும். “வெப்பமயமாதலால் சூழல் மாறிவருகிறது. அதை எதிர்கொள்ள இதுபோன்ற கண்டுபிடிப்புகள் உதவும்” என்கிறார் ஜார்ஜியா. தன் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை வாங்க விண்ணப்பித்துள்ள ஜார்ஜியா கிடைத்த தொகையை தன் எதிர்கால கல்விக்கு செலவிட முடிவு செய்துள்ளார். “அறிவியல் படிப்பு என்பது ஆண்களுக்கு மட்டுமானதல்ல; பெண்களும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை என் தோழிகளுக்கு ஏற்படுத்துவதே என் முதல் வேலை” என்கிறார் ஹட்சின்சன்.

போராளிப் பெண்கள் 2018

படம்
ஏஞ்சலா சைனி(38) பஞ்சாபில் பிறந்த ஏஞ்சலா சைனி அறிவியல் எழுத்தாளர். பெண்களை அறிவியல் துறைக்குள் அனுமதிக்காத ஆண்களின் மேலாதிக்கத்தை கூறும் இன்ஃபெரியர் ஹவ் சயின்ஸ் காட் வுமன் ராங் எனும் நூலை எழுதியுள்ளார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் சைனி, படிக்கும்போது கணக்கு வகுப்பில் அவர் மட்டுமே ஒரே ஒரு சிறுமி. ”ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட 1945 வரை எந்த ஒரு பெண்ணுக்கும் பட்டம் வழங்க தயாராயில்லை. நான் சந்தித்த அறிவியலாளர் நேரடியாக என்னிடமே கணக்கில் பெண்கள் பிரமாதமானவர்கள் என பாலின வெறுப்போடு பேசினார்” என உறுதியாக பேசுகிறார் சைனி. அடுத்த புத்தகமும் அறிவியல் எப்படி பெண்களை பாலின பேதத்துடன் நடத்துகிறது என்பதைப் பற்றி எழுத திட்டமிட்டுள்ளார் சைனி. பி விஜி(50) கோழிக்கோட்டிலுள்ள கடைகளில் பெண்கள் நிம்மதியாக உட்காரந்து வேலை பார்க்க விஜியின் போராட்டம் முக்கியக்காரணம். 2018 ஆம் ஆண்டின் ஜூலையில் கேரள அரசு, புதிய தொழில்துறை சட்டம் மூலம் பெண்களுக்கான வேலைச்சூழலை உறுதி செய்துள்ளது. ”பெண்கள் வேலையில் கடுமையாக ஆண்களோடு போட்டியிட்டு உழைக்கிறார்கள் எனில் மாலையில் ஆண்களின் வன்முறைகளுக்க

2018 மறக்க முடியாத பெண் போராளிகள்

படம்
சக்தி 2018 நிர்ப்ரீத் கவுர்(50) 1984 சீக்கியர்கள் படுகொலை யாராலும் அந்த களங்கங்களை மறைக்க முடியாது. காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய பெண்மணி வீடு, வாசல், நிலம், நகை என அனைத்தையும் விற்று காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு தண்டனை பெற்று கொடுத்திருக்கிறார். கவுரின் பதினாறு வயதில் அக்கொடூரம் நிகழ்ந்தது. அவரின் தந்தையை கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்றனர். “நிச்சயம் என் தந்தையை நான் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவரை எரித்துக்கொன்றுவிட்டு அவர் துடித்து சாவதை பக்கத்திலேயே நின்று ரசித்தனர்” என்று கூறுவதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அந்நிகழ்விற்கு பிறகு கவுர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்து உயிர்பிழைத்திருக்கிறார். காங்கிரஸூக்கு எதிராக வழக்கு போட்டு வெல்வது சாத்தியமா? காலிஸ்தான் ஆதரவாளர் என பதினொரு ஆண்டுகள் சிறையில் தள்ளி சித்திரவதை செய்தது அரசு. ஆனால் கவுர் தளரவில்லை. சிபிஐ, நானாவதி கமிஷன் மீது நம்பிக்கை வைத்து குறைந்தபட்சம் சஜ்ஜன்குமாருக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் நீதிக்கான

2019 என்ன நடக்கப்போகிறது?

படம்
இந்தியாவில் யோகியின் ஆட்சியிலுள்ள உ.பியில் பிரக்யா ராஜில் ஜனவரி 15 ஆம் தேதி, கும்பமேளா நடைபெற விருக்கிறது. ராமர்கோவிலை கட்டுவதற்கான தீர்ப்பு ஜன. 4, சபரிமலை மனு மீதான விசாரணை ஜன.22 தொடங்கவிருக்கிறது. இலங்கை தேர்தல் ஜன.5 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்.1 ஆம் தேதி இந்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. கடல்படை அதிகாரி குல்பூஷன் யாதவ் மீதான மரண தண்டனையை எதிர்த்து இந்தியா முறையிட்ட மனு பிப்.18 - 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மார்ச் 29 ஆம் தேதி இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுகிறது. டிசி காமிக்ஸ் பணக்கார சூப்பர் மேனான பேட் மேனுக்கு மார்ச்சில் 80 வயது ஆகிறது. ஏப்ரல் மக்களவை தேர்தல் தொடங்குவது ஏப்ரலில். ஒடிஷா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜம்மு - காஷ்மீரிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே மாதம் 30 ஆம் தேதி, இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் 5 ஜி போனும் இங்கிலாந்தில் அறிமுகமாகவிருக்கிறது. தென் ஆப்பிரிக்க தேர்தல் நடைபெறும். ஜூன் மாதம், நிலவை மனிதர்கள் தொட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன

மறக்கமுடியாத சம்பவங்கள் 2018

படம்
சிபிஐ தொடங்கி 55 ஆண்டுகளான பின் அதன் நம்பகத்தன்மையை குலைக்க பாஜக செய்த சதி வேலை பார்த்தது. இதன்காரணமாக அதன் அலுவலகத்திற்குள்ளேயே ரெய்டு நடந்தது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட்  16 பில்லியன் டாலர்கள் தொகைக்கு விலைபேசி வாங்கியது. 159 ஆண்டுகளாக யாரும் முறியடிக்காத சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சியை பாஜக சத்யபால் சிங் கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கினார். மனிதக்குரங்கிலிருந்து மனிதர்கள் உருவாகி வருவதை யாருமே பார்க்கவில்லை என புதுமையான விளக்கம் சொன்னார் சிங். டார்வினின் ஆவியும் எதிர்பார்க்காத எதிர்ப்பு இல்லையா? பாலியல் படங்களை பார்ப்பதில் இந்தியர்களின் அடித்துக்கொள்ள முடியாத இடம் 3 என நிரூபணமானது. தன்பாலின மக்களை குற்றவாளிகள் எனக்கூறும் பழைமை வாத சட்டத்தை நீக்கியது உச்சநீதிமன்றம். இதற்கான தீர்ப்பு பக்கங்களின் எண்ணிக்கை 493. 27 ஆண்டுகளுக்கு பிறகு மேகாலயாவில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா நம்ப முடியாத வேகம் காட்டி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 69. அசாமில் தேசிய மக்கள் பதிவேட்டில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் கிடை

விண்வெளி சாதனைகள் 2018 - மறக்கமுடியாத முயற்சிகள்!

படம்
விண்வெளியில் கார் தொழில்துறை சூப்பர்ஸ்டார் எலன் மஸ்க், விண்வெளிக்கு காரை அனுப்பி சாதித்தார். டெஸ்லா ரோட்ஸ்டர் காரை பால்கன் ராக்கெட்டில் ஏற்றி விண்வெளிக்கு பார்சல் அனுப்பி பலரையும் பீதி கொள்ளச்செய்தார். கார் கவிழ்ந்துவிடவில்லை. இன்றும்  56, 237 கி.மீ வேகத்தில் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஜீன்களை மாற்றும் விண்வெளி விண்வெளியில் வாழ்ந்த நாசா வீரர் ஸ்காட் கெல்லிக்கு உடலிலுள்ள மரபணுக்கள் மாற்றம் கொண்டன. அவர் விண்வெளியில் ஓராண்டு இருந்ததால் பூமிக்கு திரும்பியும் ஜீன்கள் 7 சதவிகிதம் மாற்றமின்றி அந்நிலையிலேயே இருப்பது கண்டறியப்பட்டது. செவ்வாயில் நீர் மூன்று ஆண்டுகள் விண்வெளியில் செவ்வாயை ஆராய்ந்த இத்தாலி விண்வெளி ஆராய்ச்சியாளர் அங்கு 20 கி.மீ நீளத்தில் உறைந்த ஏரி இருப்பதாக கூறி பலருக்கும் பிரமிப்பூட்டினார். அந்த இடம் மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் நீர் உறைந்துள்ளதை ஆய்வறிக்கைகள் உறுதி செய்தன. சக்திவாய்ந்த ராக்கெட் கடந்த பிப்ரவரியில் எலன்மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ், 27 எஞ்சின்களை கொண்ட திரும்ப பயன்படுத்தும் திறன் கொண்ட ராக்கெட்டை விண்வெளியில் ஏவியது. பயன்படுத்தி

துப்பாக்கிச்சூடுகளை தடுக்கும் பாதுகாவலர்!

படம்
பள்ளிகளின் பாதுகாவலர்! பள்ளியின் நெருப்பு அலாரத்தை அடித்த சிறுவனை கண்டுபிடித்தபோது சிகாகோ பொதுப்பள்ளி பாதுகாப்பு அதிகாரி ஜேடின் சூ உறுதியாக சொன்னார். “இதற்காக நான் உன்னை தண்டிக்க போவதில்லை. நான் உனக்கு வேலைதருகிறேன். செய்கிறாயா?” என்று கேட்டார். கருப்பின மாணவர் ஒப்புக்கொள்ள, அதன்பின் நெருப்பு அலாரமணி ஒலிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு நவ.11 முதல் 3 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களது பாதுகாப்புக்கு ஜேடின் சூ பொறுப்பு.  பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் வரையிலும் கண்காணித்து அனுப்புகிறது ஜேடின் சூ குழு. 2009 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி இன்று விரிவான திட்டமாக பின்பற்றப்பட்டுவருகிறது. “பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்தின்போது, காலை பதினொரு மணிக்கு பள்ளிக்கு வெளியே மாணவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என யோசித்தேன்” என்கிறார் பள்ளி ஆய்வாளரான நிகோலஸ் ஜே ஸ்க்யூலெர். சிகாகோ பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் வென்றவர் மோட்டரோலா, கிராஃப்ட் புட்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்தவர் ஜேடின் சூ. 

திருநங்கை அரசியல்வாதி சாதித்தது எப்படி?

படம்
சக்தி! டேனிகா ரோம் 1984 ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் பிறந்தவரான டேனிகா ரோம் அமெரிக்காவின் மாநில செனட் சபை உறுப்பினர்(ஜனநாயக கட்சி 2017-18). திருநங்கை என்ற அடையாளத்துடன் தேர்தலில் வென்றுள்ளதே செய்தி. “பத்திரிகையாளரை விட மக்கள் பிரச்னைகளை வேறு யார் புரிந்துகொள்ளமுடியும்? மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் மசோதாக்களை கொண்டுவருவதே முக்கியம். நான் திருநங்கை என்பதல்ல” என உறுதியாக பேசுகிறார் டேனிகா. லோச்மாண்ட் லோமண்ட் பள்ளி, செயின்ட் போனவென்ச்சர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் நியூயார்க்கில் இதழியல் படித்தார். “என் தாத்தா, செய்திகளை அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர். அதனால்தான் செய்தியாளராக மாறும் ஆசை உருவானது” என்பவர் பத்தரை ஆண்டுகளாக செய்தியாளராக(Gainesville Times and Prince William Times.) பணியாற்றி 2 ஆயிரத்து 500 கட்டுரைகளை எழுதிக்குவித்தார்.  2004 ஆம் ஆண்டில் ஜார்ஜ் டபிள்யூ புஷ், தன்பாலினத்தோர் திருமண தடை சட்டத்தை தடைசெய்தபோது ரோம் அரசியலில் இணைய விரும்பினார். “நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை விட மக்களை முன்னேற்றும் ஐடியாக்கள் உங்களிடம் உள்ளதா, செயல்படுத்