இடுகைகள்

சமரசம் செய்பவர்கள் எழுத்தாளராக முடியாது

படம்
எழுத்தாளர் பென்யாமின் நேர்காணல் சமரசம் செய்துகொண்டால் நிச்சயம் நான் எழுதியிருக்க முடியாது எழுத்தாளர் பென்யாமின் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாள எழுத்தாளர் பென்யாமின், ஜாஸ்மின் டேஸ் என்ற நூலுக்காக ஜேசிபி பரிசை 2018 ஆம் ஆண்டு வென்றிருக்கிறார். இந்த நூல் தந்த தைரியத்தில் தன் வேலையைக் கூட விட்டு விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏறத்தாழ 21 ஆண்டுகளாக செய்து வந்த வேலையைக் கைவிடச்செய்த தன்னம்பிக்கை இந்த நூல் பென்யாமினுக்கு கொடுத்திருக்கிறது. அரபு வசந்தத்தை பின்புலமாக வைத்து எழுதிய உங்கள் நூலில் நீங்கள் சொல்லவருவது என்ன? நீங்கள் எழுதுவது என்பது எதற்காக என்ற முடிவுக்கு வரவேண்டும். ஏனெனில் எதற்கு நாவல் அதில் நீங்கள் கூறுவது என்ன? நாம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறோம் என்பதற்கான ஊடகமே எழுத்து.  நாவல், சிறுகதை, குறுநாவல் இந்த வடிவங்கள் கூட அதற்காகத்தான். ஷியா, சன்னி ஆகிய பிரச்னைகள் இதில் உள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு இருபிரிவிலும் நண்பர்கள் உண்டு. நாவலில் அரபு தேசத்தின் அரசியல் குறித்து இந்நூலில் பேசியுள்ளேன். ஏறத்தாழ உங்கள் நாவல் மூல

சைலண்ட் கஃபே கலாசாரம்!

படம்
ozy சைலண்ட் கஃபே அதிகரிக்கும் காரணம் என்ன? பிரான்ஸின் பாரீசிலுள்ள மொராக்கன் கஃபேவில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம். இங்கு சமையல்காரர் தொடங்கி வெய்ட்டர் வரை அனைவருமே காது கேளாத மாற்றுத்திறனாளிகள். இங்கு உங்களுக்குத் தேவையான உணவு வகைகளை போர்டில் எழுதவேண்டும். அதனை அவர்கள் உங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறுவார்கள். அந்த உணவகத்தின் பெயர் 1000 & 1 signes. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் காதுகேளாதவர் உரிமையாளரைக் கொண்ட உணவகம் இது. 2016 ஆம் ஆண்டு ஸாக்ரெப்- குரோஷியா, கோலோஜின்- ஜெர்மனி, லண்டன், யுனைடெட் கிங்டம், டெல்லி, இந்தியா, கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா, பாங்காக், தாய்லாந்து, கோகோட்டா, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் காதுகேளாதோர் உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மலேசியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், காதுகேளாதோருக்கான கஃபே ஒன்றை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் புதிய கஃபே ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சியையும் ஸ்டார்பக்ஸ் செய்துள்ளது. நிறுவனர், சித் நூவர், ozy பிரெஞ்சு மக்கள், காதுகேளாதோரின் உலகைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இது. மெனுவில் சைகை

வன்முறையைத் தூண்டுகிறதா இசை?

படம்
பிபிசி மெட்டல் மியூசிக் வன்முறையைத் தூண்டுகிறதா? பொதுவாக ஹெவி மெட்டல் எனும் இசைவகை, வன்முறை கொண்டதாக பலரும் பார்க்கிறார்கள். டாட்டூ குத்தியபடி கிடாரின் கம்பிகள் அறுந்துவிழும் வேகத்தில் இசைக்கும் இசையை பலரும் கேட்டு கெட்ட ஆட்டம் போடுவது உலக வழக்கம். அப்போது அத்தனை பேரின் மனநிலையும் வன்முறையை நோக்கித்தான் குவிகிறதா? என்று ஆராய்ந்தபோது கிடைத்த முடிவுகள் அப்படி அல்ல என்று கூறிவிட்டன. பார்க்கும் படம், சாப்பிடும் உணவு ஆகியவற்றை வைத்து ஒருவரின் கேரக்டரை வரையும் பழக்கம் இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுக்கவே உண்டு. இசை கேட்பதும் அதில் ஒன்றுதான். வன்முறையான தீமில் இசை கேட்பது, மனதில் வன்முறையை ஏற்படுத்தும் என்பது தவறு மேக்குவார் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. வறுமை, உறவு, போதைப் பொருட்கள் பயன்பாடு, தனிமை உணர்ச்சி ஆகியவையும் இதனோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டில் இதுபற்றி, ஒருவர் நீண்டநாட்கள் குறிப்பிட்ட வகையிலான இசையைக் கேட்பது அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதோடு,  உள்மன ஆசைகளையும் கூறுகிறது என்கிறார். ஆனால் இந்த கருத்துகளையும் தாண்டி மெட்டல் இசை கேட்கும்

மேக்வாவிலுள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்க முடியுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலை மேக்மாவில் நமக்கு கனிமங்கள் கிடைக்குமா? உண்மையாகச் சொன்னால் கிடைக்காது. ஏன் என்றால், மேக்மா பாறைகளை உருக்கியபடி வரும் ஒரு நீர்மம். அதில் கனிமங்கள் உள்ளது உண்மை என்றாலும் அதனை அடர்த்தியான தன்மையில் மாற்றினால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேக்மாவை குளிரவைத்து கனிமங்களை திட நிலையில் பெறலாம். மேக்மாவை நீரில் கரைத்து அதிலிருந்து கனிமங்களை பிரித்தெடுக்க முயற்சிக்கலாம். நன்றி: பிபிசி

பதற்றத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள் உண்டா?

படம்
blackdog institute ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பதற்றத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் எது? ஈஸ்ட்டை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், பி வைட்டமின்கள் என சாப்பிட்டாலே மனதில் ஏற்படும் பதற்றம் குறையும் என்கிறது ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சி செய்தி. வைட்டமின் பி12,  நம் மனநிலையைக் கட்டுப்படுத்தும் செரடோனினை உற்பத்தி செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதோடு பருப்புகள், மீன் உள்ளிட்ட ஒமேகா 3 அமிலம் கொண்ட உணவுகள் பதற்றத்தை குறைக்க உதவுவதாக தைவான் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. நன்றி:பிபிசி

லவ் இன்ஃபினிட்டி 21: சுடும் வாழ்க்கையைப் பழகினேன்

படம்
மாங்கா. டோக்கியோ 21 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு:  உத்தம் சிங், சிக்கந்தர் இதுநாள் வரை மைதிலி ஏன் அவ்வளவு தூரம் விலகி நின்றாள் என்பது அந்த கணம் புரிந்துவிட்டது. என்ன செய்வது? காலம் கடந்துவிட்டது. ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். நான் நண்பர்களோடு ஒருநாள் போய் பார்த்தேன். மெலிதாக இருந்த தேகத்தில் உயிர் கபடி விளையாடிக் கொண்டிருந்தது. முகத்தில் அனைத்தும் முடியப்போவதற்கான நிம்மதி அதிகரித்திருந்தது. உடலில் புரிந்துகொள்ளமுடியாத ஒளி தெரிந்தது. நான் வெடித்து அழுதுவிடுவேனோ என்று பயந்தேன். மெல்ல சமாளித்து, மைதிலியின் பெற்றோர் முகம் பார்க்காமல் கவனமாக வெளியே வந்தேன். மருத்துவமனையில் நோயாளி மட்டுமல்ல, அங்கிருப்பவர்களின் முகங்கள் கூட இருள்சாயத்தில் முழுகிவிடுகின்றன. இருள்சாயத்தில் நம்பிக்கையின் ஒளியை எங்கே போய் தேட.... அவள் இறந்த மாதம் நவம்பர் வேறு. எனக்குப் பிடித்த மாதம் என்பதோடு, மழையின் ஈரம், மண்ணின் அணுக்களில் சொட்டிக்கொண்டே இருக்கும் நேரமும் அதுவே. மெல்ல கரைந்தழுந்துகொண்டே பைக்கில் காங்கேயத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பினேன். பாப்பினி பிரிவ

வலியறியாத பெண்!

படம்
kth வலியறியாத பெண்! ஸ்காட்லாந்து பெண், மரபணு மாற்றத்தால் வலியிலிருந்து குணமாகும் தன்மையைப் பெற்றுள்ளதோடு, காயத்திலிருந்தும் விரைவாக குணமடைந்திருக்கிறார். இதன்விளைவாக, வலி காயத்திலிருந்து விரைவாக குணமாகும் சிகிச்சைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளனர்.  ஜோ கேமரூன் என்ற 66 வயது பெண்மணி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் அவருக்குத் தேவைப்பட்டது. இதற்கான சிகிச்சைகள் கடுமையான வலிதரும் என்பதால் கேமரூன் பயத்துடன் இருந்தார். சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர். மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார்.  கேமரூன், ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு வலியற்று இருப்பதற்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது. இதில் அதே பெயரிலான என்சைமும் உதவுகிறது. அதேசமயம் இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாகிறது. அதோடு வலி, காயம் தொடர்பான ப

கல்வியில் தடுமாறும் இந்தியா!

படம்
franchise india இந்தியா, சீனாவை விட மூன்று மடங்கு அதிக பள்ளிகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் கல்வித்தரத்தில் பலமடங்கு கீழே உள்ளது. என்ன காரணம் உள்ளது?  கல்வி உரிமைச்சட்டம்  நூறு சதவீதம் கல்வியை வலியுறுத்துகிறது. ஆனால் கல்வியில் குறிப்பிட்ட தரத்தை கொண்டு வர அரசு தடுமாறி வருகிறது. தற்போது நிதி ஆயோக், கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் பிரச்னைகளுக்கான வேராக உள்ளது, திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படாதே ஆகும். ”இந்தியா எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் ஆபத்து ஆசிரியர்கள் பற்றாக்குறையே ஆகும். இந்த சூழலில் கல்வியில் சிறந்த திறனை எட்டுவது என்பது மிகவும் சிரமம்” என்கிறார் நிதி ஆயோக் ஆலோசகரான ஆலோக் குமார் மற்றும் சீமா பன்சால்(இயக்குநர், போஸ்டன் ஆலோசனை நிறுவனம்) சீனாவில் ஐந்து லட்சம் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் இந்தியாவில் பதினைந்து லட்சம் பள்ளிகள் இயங்கியும் நம் குழந்தைகளுக்கு சரியான கல்வியை பயிற்றுவிக்க முடியவில்லை. இந்தியாவிலுள்ள நான்கு லட்சம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 50 தான் என்றால் நம்புவீர்கள

லவ் இன்ஃபினிட்டி: காதல் தேசம் நானும் கடந்தேன்

படம்
அனா கரோலினா\ பின்ட்ரெஸ்ட் 20 லவ் இன்ஃபினிட்டி 20 குமார் சண்முகம் தொகுப்பு: இளங்கண்ணன், விசாலாட்சி பிருந்தாகிட்ட நான் என்ன சொன்னேன். நான் எதுவுமே சொல்லல. நீ அருகம்புல்லு மாதிரியான அழகின்னேன். சார், என்ன நான் பின்னாடி சுத்தும்போதெல்லாம் ரெட் சிக்னல் கொடுப்பாரு. இப்ப க்ரீன் கிடைச்சுரும் போலயே  ன்னு சிரிச்சா. கள்ளி! ஐஸ்க்ரீம் அவளோட கழுத்தில இறங்கிறது தெரிஞ்சுது.  அவளுக்கு எல்லாமே தெரியும். எனக்கு தெரிஞ்சு கவிக்கு அடுத்தபடியா ஏதாவது கிஃப்ட் அனுப்பிக்கிட்டே இருக்கிற ஒரே ஜீவன் அவதான். திடீர்னு காலேஜூக்கு ஒரு பார்சல் வந்தது. எடுத்துப் பார்த்தா, சட்டை. இவளோட பேரும் நம்பரும் மட்டும் இருந்தது. எதுக்கு இதெல்லாம் பணறேன்னு கேட்டேன். ஐபிசி படி இதெல்லாம் தப்பா? ன்னு ஒரு கேள்வி கேட்டா. அசந்துட்டேன். அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். இது ஸ்கூல்ல படிச்சப்ப பார்த்த பிருந்தா இல்லன்னு. என்ன அப்டேட். வேகம். அதனால்தான் சொல்றேன். பெண்களிடம் ஆண்கள் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. அவர்களாக விரும்பினால் தோற்கிற மாதிரி தன்னைக் காட்டிக்குவாங்க. ஆனால் உண்மையில் தோற்கிறது ஆண்கள்தான்

துல்லியமான உணர்ச்சிப் பெருக்கு கொண்ட சிறுகதைகள் - தீண்டா திருமேனி

படம்
பனுவல் தீண்டா திருமேனி ஆர்.வெங்கடேஷ் அகநாழிகை மொத்த தொகுப்பில் பதினெட்டு கதைகள். ஒவ்வொன்றும் அதன் விரிவான தகவல்கள், நறுக்கென்ற வாக்கியங்கள் ஆகியவற்றால் தனித்து தெரிகின்றன. ஆசிரியரின் கதாபாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நினைவுகளை, கசப்புகளை சுமந்துகொண்டு திரிகிறார்கள். முதல் கதையான அலைவரிசை தொடங்கி, புதிய கோணங்கள் குறுநாவல் வரைக்கும் இது அப்படியே தொடர்கிறது. இறுதியில் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லது இறைவனைத் தஞ்சமடைந்து ஆறுதல் அடைகிறார்கள். இதுவேதான் இந்த நூலின் அடிச்சரடாக உள்ளது. குருஷேத்திரம், ஒவ்வொரு முறையும், ஒரு கேள்வி ஆகிய சிறுகதைகளின் நாயகர்கள், எளிமையானவர்கள். அதேசமயம் கனவுகளை அழியவிட்டு வேடிக்கை பார்த்து மனம் புழுங்குபவர்கள். வாழ்க்கையின் எதார்த்தத்திற்காக சந்தோஷ் அடிபணிந்தாலும் தான் அடகு வைக்கும் தன்மானம், சந்தோஷம் ஆகியவை பற்றிய கவனம் எப்போதும் அவருக்கு இருக்கிறது.  ஒரு கேள்வி, வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு பணிந்தவரை(மணி) ஒரு கேள்வி வெடிக்கும் எரிமலையாக்குகிறது. அது மனதில் புதையுண்டு போனாலும் சிறிய கேள்வி, அவர் பெற்ற தோல்வியை நினைவி

நிலவு இல்லாத பூமி?

படம்
bbc ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிலவு இல்லையென்றால் என்னாகும்? நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. ஒருவேளை நிலவு இல்லாதபோது, பூமியில் என்ன மாற்றம் நடக்கும்? கடல் அலைகளின் எழுச்சி குறையும். சூரியனின் ஈர்ப்பு விசை மட்டுமே பூமியைப் பாதிக்கும். தினசரி நேரத்தில் 0.002 நொடி வித்தியாசம் ஏற்படும். இப்போது பூமி 23.5 டிகிரி கோணத்தில் உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசை இதனை இந்த இடத்தில் பொருத்தியுள்ளது. ஆனால் நிலவு இல்லாதபோது, இந்நிலை மாறும். செவ்வாய் 60 டிகிரி கோணத்தில் அதன் வட்டப்பாதையில் சாய்ந்துள்ளது ஈர்ப்புவிசை வலிமையற்ற துணைக்கோள்களால்தான். நன்றி: பிபிசி