இடுகைகள்

புளோரிடாவை நடுங்க வைத்த காதல் சைக்கோ - டெட் பண்டி

படம்
டெட் பண்டி - காதலைக் கொன்றேன்! அமெரிக்காவில் வெர்மாண்ட்டில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று பிறந்தார் டெட் பண்டி. இப்படித்தான் போலீஸ் கூறுகிறது. இயற்பெயர் தியோடர் ராபர்ட் கோவெல். அம்மா, தங்கையுடன் வசித்த சிறுவன் தன் தந்தையைப் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம், திருமண உறவில் பிறக்கும் அதிர்ஷ்டம் டெட் பண்டிக்கு இல்லை, அவரின் சகோதரிக்கும் இல்லை. இப்படியொரு பெண்ணை வீட்டில் வைத்திருந்தார் அம்மா எலினார் லூயிசின் அப்பா. டெட்டின் தாத்தா. ஆனால், தினசரி எலினாரையும் டெட்டையும் அடித்து துவைப்பது மட்டுமே சமூகத்தின் அழுத்த த்திலிருந்து தப்பிக்க உதவியது. இதனால் அங்கிருந்து தன் சகோதர ர்களின் வீட்டுக்கு இடம்பெயர்ந்தார் எலினார். அங்குதான் எலினாருக்கு பிடித்த சமையல்காரர் மன(ண)த்துணையாக,கிடைத்தார். அம்மா, ஜானி பண்டி என்பவரைத் திருமணம் செய்தார்.அது டெட் பண்டிக்கு பிடிக்கவில்லை. காரணம், இரண்டாவது தந்தை அழகாகவும் இல்லை. அவர் கையில் பெரியளவு பணமும் இல்லை. இதை அவர் தன் பெண்தோழியிடம் சொல்லிச் சிரித்தார். இயல்பிலேயே வாட்ட சாட்டமான ஆள். வசீகரமான தோற்றம் என பள்ளியிலேயே புகழ்பெற்றிருந்தார்

நாடோடி வாழ்க்கையின் மகிழ்ச்சி! - டேஸ் ஆஃப் ஹெவன்

படம்
சினிமா விமர்சனம் டேஸ் ஆஃப் ஹெவன் (ஆங்கிலம்) இயக்கம் - டெரன்ஸ் மாலிக் ஒளிப்பதிவு: நெஸ்டர் அல்மென்ட்ரோஸ், ஹாஸ்கெல் வெக்ஸ்லர் இசை: என்னியோ மோரிகோன், லியோ கோட்கே எந்த பொறுப்புமின்றி எதையும் என்னுடையது என்று சொல்ல முடியாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்களா? அதுதான் டேஸ் ஆஃப் ஹெவன் சொல்லுகிற வாழ்க்கை. அமெரிக்காவின் சிகாகோவில் வாழும் பில் நொடியில் கோபம் கொள்ளும் முரடன். அதனால் வேலை செய்யும் தொழிற்சாலையில் முதலாளியை குமட்டில் குத்தி நினைவிழக்கச் செய்கிறான். அப்புறம் வேலை எப்படி அங்கு இருக்கும்?  உடனே தன் தங்கை லிண்டாவை கூட்டிக்கொண்டு கூடவே காதலி அப்பியுடன் டெக்ஸாஸ் செல்கிறான். அங்கு மூவருமாக பணக்கார பண்ணைக்காரரின் கோதுமை வயலில் வேலை பார்க்கின்றனர். அங்கு சந்திப்பவர்களிடம் அப்பியை தன்னுடைய தங்கை என்று பில் சொல்லிவிடுகிறார். பணக்கார விவசாயி, அப்பியை முதல் பார்வையில் இருந்து காதலிக்கிறார். அப்போது அதனை சில நிகழ்ச்சிகள் மூலம் அறிகிறார் பில். அப்போது பணக்கார விவசாயி குறித்த சில செய்திகளை அறிகிறார். உடனே அவரிடமிருந்த பணத்தை ஆட்டையைப் போல முடிவு செய்கிறார். இதற்காக காதலி அப்ப

கீபோர்டு டேட்டா!

படம்
உலகில் பயன்படுத்தப்படும் கீபோர்டுகளில் 104 கீக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கீபோர்டுகளில் 104 கீக்கள் உண்டு. க்வெர்டி கீபோர்டு கண்டறியப்படும் முன்பு 51 வகை கீபோர்டுகள் கண்டறியப்பட்டிருந்தன. ஒரு நிமிடத்திற்கு எத்தனை வார்த்தைகளை நீங்கள் டைப் செய்வீர்கள். மார்க் கிஸ்லிங்பரி என்பவர், ஒரு நிமிடத்திற்கு 360 வார்த்தைகளை டைப் செய்தார். 1946 ஆம் ஆண்டு ஸ்டெல்லா பாஜூனாஸ் ஐபிஎம் டைப்ரைட்டரில் 216 வார்த்தைகளை ஒரு நிமிடத்திற்கு டைப் செய்தார். டைப்ரைட்டிங் பழகியவர்கள் ஒரு நிமிடத்திற்கு டைப் செய்யும் வேகம் சராசரியாக 60-90. ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர்களை டைப்ரைட்டிங் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் டைப் செய்த சராசரி வேகம் 52. -க்வார்ட்ஸ்

ஓபன் சோர்ஸ் ஆப்கள்!

படம்
ஓபன் சோர்ஸ் ஆப்ஸ்! விண்டோஸ், ஆப்பிள், கூகுள் ஆப்ஸ்களுக்கு நிகராக ஓப்பன் ஆபீசிலும் நிறைய ஆப்ஸ்கள் பயனர்களுக்கு ஒளி, ஒலி, புகைப்படம், குறுஞ்செய்தி ஆகிய பயன்பாடுகளுக்கு உதவுகின்றன. MPDroid An Android controller for the Music Player Daemon (MPD) இசையைப் பெற்று ஸ்பீக்கர்கள் வழியாக கொண்டாட சூப்பர் வழி. எம்பிட்ராய்டு ஆப்பை டவுன்லோடு செய்வதுதான். இணையத்திலிருக்கும் ரேடியோக்களை கேட்பது முதல் உங்கள் மெமரிகார்டிலுள்ள பாடல்களை ரசிக்க வைப்பது வரையிலான பயன்கள் இதில் அனேகம். RadioDroid An Android internet radio tuner that I use standalone and with Chromecast ஸ்பெஷலாக ரேடியோக்களை கேட்டு ரசிப்பவர்களுக்கானது ஆப்பை இன்ஸ்டால் செய்து இயக்கி ஹெட்போனை செருகினால் போதும். ஸ்பானிஷ் ரேடியோவைக் கூட தங்கத்தமிழ் மண்ணில் கேட்டு ரவுசு பண்ணலாம்.  Signal A secure messaging client for Android, iOS, and desktop அப்படியே வாட்ஸ் அப்பின் நகல் போல. ஆனால் பாதுகாப்பும், செய்திக்கான பாதுகாப்பும் மீட்டருக்கு மேல் உள்ளது. அதனால் நம்பி இன்ஸ்டால் பண்ணுங்க, நல்லா வாழுங்க.  ConnectBot Andr

ஆர்பிஐ - கருவூல உண்டியல்

படம்
கருவூல உண்டியல் இந்திய அரசு வெளியிடும் டி.பில்கள் அல்லது கருவூல உண்டியல் என்பவை, குறுகிய கால கடன் உபகரணமாகும். இவற்றை 91, 182,364 என மூன்று காலகட்டங்களில் இப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை ஜீரோ வட்டிவிகிதப் பத்திரங்கள் ஆகும். 91 நாட்கள் கொண்ட ரூ.100 மதிப்பிலான பத்திரம் ரூ.98.20 க்கு விற்கப்படும். கழிவு என்பது ரூ.1.80 வழங்கப்பட்டாலும் மதிப்பு என்பது ரூ.100க்குத்தான். வாரம்தோறும் புதன்கிழமை, கருவூல உண்டியல் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் ஏலமிடப்படுகின்றன. 91 நாட்கள் காலம் கொண்ட கருவூல உண்டியல் பத்திரங்கள் வாரம்தோறும் புதன்கிழமையும், 182, 364 நாட்கள் காலம் கொண்ட பத்திரங்கள் ஒருவாரம் விட்டு புதன்கிழமை ஏலத்திற்கு ஏற்கப்படுகின்றன. பத்திரங்களுக்கான பணம் அனுப்பீடு தொடர்பான வேலைகள் ஏலம் முடிந்தபின்னர் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஏலம் தொடர்பான செய்திகளை ரிசர்வ் வங்கி தன் பத்திரிக்கை வெளியீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கிறது. செய்தி: ஆர்பிஐ, ஷா அகாடமி

காமெடி திருடர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

படம்
காமெடி திருடர்கள்! உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதைத் திருடிக் கொள்ளையடித்து சென்று சோக்காளியாக வாழ்வது. திருடர்களின் அசகாயர்களும் உண்டு, அசடுகளும் உண்டு. அதில் சிலர்... கேட்காத காது! ஜெர்மனியில் நடந்த திருட்டுக் கதை இது. பெர்லினில் உள்ள வங்கியில் நுழைந்த திருடர் துப்பாக்கியைக் காட்டி பணத்தை பேக்கில் நிறைக்கச் சொன்னார். கேஷியரும் வியர்த்து வழிந்தபடி,  பணத்தை பேக்கில் போட்டார். அப்போது பேக் நிரம்ப, இன்னொரு பேக் வேண்டுமா என ஊழியர் கேட்டார். அதற்கு, அத்திருடர், கையில் வைத்திருக்குக்கும் துப்பாக்கி ஒரிஜினல்தான் என்று பதில் சொல்லியிருக்கிறார். காது டமாராமா? என புன்னகைத்தவர் உடனே போலீசை அழைக்கும் அலாரத்தை ஒலிக்கவிட, திருடர் மாட்டிக்கொண்டார். இலவச வலை! இங்கிலாந்தின் டெர்பிஷையரில் இருந்த சிலருக்கு தபாலில் வந்த கடிதம் ஆச்சரியமளித்தது. அவர்கள் போட்டியில் வென்றுள்ளதாகவும், அதற்குப் பரிசாக பீர் வழங்கப்படும் என்று எழுதியிருந்ததைப் படித்ததும் உச்சி குளிர்ந்து போயினர். சொன்ன இடத்திற்கு வந்தவர்களை போலீஸ் லத்தியில் முட்டிக்கு முட்டி தட்டி கெட்டியாய் காரில் ஏற்றி

கோல்டுமேன் சூழல் பரிசு 2019!

படம்
கோல்டுமேன் சூழல் பரிசு 2019 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஆறுபேர் இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆளுமைகள் இதில் அடக்கம். 1989 ஆம் ஆண்டு தொடங்கிய கோல்டுமேன் சூழல் பரிசுக்கு இந்த ஆண்டு 30 வயது ஆகிறது. இதுவரை 89 நாடுகளைச் சேர்ந்த 194 சூழலியலாளர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். லைபீரிய காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்திய வழக்குரைஞர், மங்கோலியாவில் காடுகளை பாதுகாக்க முயற்சித்த சூழலியலாளர், பால்கன் பறவைகளைக் காப்பாற்ற முயற்சித்து வரும் வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த உயிரியலாளர், சிலியைச் சேர்ந்த பழங்குடி தலைவர். இவர் நீர்மின்நிலையம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். கடல் சூழலியலாளர் ஒருவர் அமெரிக்காவில் எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தைத் தடுத்து வருகிறார். நன்றி: குளோபல் ஈகோகிரான்ட்ஸ் - ஈகோவாட்ச்

ஸ்பெயின் தேர்தல் 2019: என்ன மாற்றம் எதிர்பார்க்கலாம்?

படம்
ஸ்பெயின் நாட்டில் சோசலிஸ்ட் கட்சி 126 சீட்டுகள் வென்று சாதனை செய்துள்ளது. ஆட்சி அமைக்க 176 சீட்டுகள் தேவை என்பதால் சோசலிஸ்ட் கட்சி பிறகட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. மத்திய வலதுசாரி கட்சி மிக மோசமான சரிவைச் சந்தித்து 66 சீட்டுகளை வென்றுள்ளது. தேசியவாத கட்சி வாக்ஸ் 24 சீட்டுகளை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் ஊக்கத்துடன் செயல்பட்டு வந்த கட்சி சோசலிஸ்ட் கட்சிதான். ஆட்சியிலிருந்து கட்சி ஊழலால் தன் ஆதரவை இழந்தது. இதன்விளைவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் தோல்வி காண தேர்தல் நடத்தப்பட முடிவானது.  பசுமை திட்டங்களை சோசலிஸ்ட் கட்சி தீட்டியுள்ளது. 2050 க்குள் 90 சதவீத கார்பன் அளவைக் குறைப்பது. 2040 க்குள் இயற்கை வாயு வண்டிகளை அதிகரிப்பது, பிற வாகனங்களின் பதிவுகளை குறைப்பது. கரிம வாயுப்பொருட்களுக்கான அரசு மானியத்தை வெட்டுவது ஆகியவற்றை கட்சி முன்மொழிந்து செயல்பட உள்ளது. சோசலிஸ்ட் கட்சித் தலைவர் சான்செஸை, பொடேமோஸ் கட்சி தலைவர் பாப்லோ இக்லெசியாஸ் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் 37 பேருக்கு தூக்கு!

சவுதி அரேபியாவில் 37 பேர்களுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஷியா பிரிவு முஸ்லீம்கள். இவர்களில் கணிசமானவர்கள் ஆண்கள். இதோடு வலைப்பூ எழுதியவர்களும் இதில் உண்டு. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பதினான்கு பேர் கைது செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் ஆம்னஸ்டி அமைப்பு இணைந்து தகவல் தெரிவிக்கின்றன. இதில் போராட்டக்காரர்களை சித்திரவதை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்திருக்கிறது காவல்துறை.  ஷியா சிறுபான்மையினரை அச்சுறுத்துவதற்கான கருவியான மரண தண்டனையைக் கருதுகிறது. அண்மையில் சவுதியைச் சேர்ந்த வலைப்பூ எழுத்தாளர்கள், வாஷிங்டன் போஸ்ட் எழுத்தாளர் கஷோகி கொல்லப்பட்டதைப் பற்றி எழுதியதற்காக கைது செய்யப்பட்டனர். டிச. 2018 தகவல்படி, பதினாறு பத்திரிகையாளர்கள் சவுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே குடிமக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பது நாம் அறியவேண்டிய விஷயம். - குளோபல் வாய்சஸ்

மோட்டரோலா ரேசர் வி4!

படம்
மோட்டரோலாவின் அடுத்த போனாக ரேசர் வி4 என்ற போன் வரவிருக்கிறது. இதன் வடிவமைப்பு குறித்த புகைப்படங்கள் சீன இணையதளங்களில் கசிந்துள்ளன. சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு என்ற போனுக்கு போட்டி என இதைக்கூறலாம். அந்த போனைவிட இது பாக்கெட்டில் எளிதாக வைத்துக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டே வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட போன் இது. வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை இதன் விலை 1500 டாலர்களாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. மோட்டரோலா போன் வெளியிட இது சரியான சந்தர்ப்பம் அல்ல என டெக் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் இப்போதுதான் சாம்சங், மடிக்கும் டேப்லட் வெளியிட்டனர். ஆனால் அதில் சிக்கல்கள் ஏற்பட மேம்படுத்தி வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர். நன்றி: ஃப்யூச்சரிசம்

அசுரகுலம்- சாலி சலான்

அசுரகுலம் -  சேலி சலான் சேலி சலான் ஒன்றும் செய்யவில்லை. கணவரை சுத்தியால் இருபதுமுறை தலையில் அடித்து கொன்றார். அப்புறம் குற்ற உணர்வு தாங்காமல் தற்கொலை செய்ய முயற்சித்தார். போலீஸ் அவரை கைது செய்தது. அவருக்கு மனநிலை பிரச்னை உள்ளதா என்று சோதித்தது. இறுதியில் தந்தையைக் கொன்றதைக் கண்டுகொள்ளாமல் அவரது மகன்களே தாயை பிணையில் எடுக்க முயற்சித்தனர். நடந்தது என்ன? சாலி தன் பதினைந்து வயதில் 22 வயதான ரிச்சர்டைச் சந்தித்தார். பேசினார்கள், பழகினார்கள். உள்ளம் கலந்தால் அப்புறம் என்ன அச்சம்? திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பிள்ளைகளும் தாம்பத்திய சந்தோஷத்தின் அடையாளமாக கிடைத்தார்கள். 31 ஆண்டுகள் ஆனபிறகு கருத்து வேறுபாடு ஏற்பட ஓராண்டு இருவரும் பிரிந்து இருந்தனர். பின்னர் சமரசம் ஏற்பட்டது. இச்சம்பவங்களை நான் உங்களுக்கு சொல்லுவது 2010 ஆண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது இருவரும் சாலியின் பெற்றோர் வீடு அருகே சந்தித்தனர். அந்த வீட்டை விற்றுவிட ரிச்சர்டு விரும்பினார். சாலியும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அந்த வீட்டில் தங்கிய ரிச்சர்டு மனைவியிடம் பன்றி இறைச்சியும் முட்டையும் சமைத்து