இடுகைகள்

பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி

படம்
newzz நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள். சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன? இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குற

இன்று நடப்பதை நேற்றே அறிய முடியுமா? - தேஜா வூ கதை!

படம்
தெரிஞ்சுக்கோ  - தேஜா வூ தேஜா வூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரெஞ்சில் இதற்கு முன்னமே பார்த்தது என்று பொருள். பொதுவாக தாராளவாத கருத்துகள், யாத்ரீகராகச் சுற்றுவது, நிறைய நூல்களைப் படிப்பது, டஜன் கணக்கிலான படங்களைப் பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தேஜா வூ பாதிப்பு இருக்கிறது. உளவியல் பூர்வமாக இது சாதாரணமானது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சம்பவங்களை முன்னமே பார்த்தது போல் இருப்பது யாரையும் சற்றே அதிர வைக்கும். அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். உலகில் மூன்றில் இருபங்கு பேருக்கு தேஜா வூ அனுபவம் நடந்திருக்கிறது. எனவே உங்களை நீங்களே அமானுஷ்யமானவர், அபூர்வமானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தேஜா வூ அனுபவங்கள் நடப்பதற்கான குறைந்தபட்ச வயது எட்டு முதல் ஒன்பது வயது வரை. இது பற்றி 30க்கும் மேலான விளக்கங்கள் அறிவியலில் உண்டு. இவற்றைக் கொஞ்சம் நம்பலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகில் 32 சதவீதம் பேருக்கு தேஜா வூ அனுபவம் ஏற்படுகிறது என்றால் அவர்களில் பலரும் ஆண்டுக்கு நான்கு முறை அங்குமிங்கும் பயணிப்பவர்கள். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே எங்கும் பயணிக்காதவர்கள். ஆ

இ சிகரெட்டை கண்டு அரசுகள் பயப்படுவது இதனால்தான்!

படம்
giphy.com புகை நமக்கு பகை! இ சிகரெட்டுகளைத் தடுத்து புகையிலைக்கு ஆதரவாக இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் உலகளவில் இ சிகரெட்டுகள புகழ்பெற்று வருகின்றன. இதுவரை அமெரிக்காவில் 26 பேர் இதற்கு பலியாகி உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இளைஞர்கள் நேரடியாக இ சிகரெட்டை இப்போது புகைக்கத் தொடங்கியுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். புகையிலை கம்பெனிகள் இ சிகரெட்டை தடை செய்யக்காரணம், மரபான சிகரெட்டுகள் பீடிகளுக்கான லாபம் பறிபோகிறதே என்றுதான். பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி இருக்கின்றன. உண்மையில் இ சிகரெட்டுகளால் சிகரெட் சந்தை பேரழிவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியெல்லாம் கிடையாது என்று பதில் கிடைக்கிறது. தெரிஞ்சுக்கோ... உலகிலுள்ள நிகோட்டின் சந்தை மதிப்பு 785 பில்லியன் டாலர்கள். ஏறத்தாழ 89 சதவீத சந்தையில் சிகரெட்தான் ராஜா. 2013-2018 காலகட்டத்தில் சிகரெட்டுகளின் வளர்ச்சி 8 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதே காலத்தில் இ சிகரெட்டுகளின் வளர்ச்சி இருபது மடங்கு அதிகரித்துள்ளது. எங்கே என்கிறீர்க

ஜனநாயகத்தை மலர வைக்கிறதா டெலிகிராம்?

படம்
இணையம் சார்ந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நிறுவனங்கள் மெல்ல ஏற்படுத்தி வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்காக அரசியல்வாதிகளுக்கு ஏற்ப பயனர்களின் பதிவுகளை அழிப்பது, நீக்குவது போன்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதனால் பலரும் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களிலிருந்து விலகிவருகின்றனர். திறமூல மென்பொருள் ஆப்பான டெலிகிராமில் பதிலுக்கு இணைகின்றனர். டெலிகிராம் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் நிகோலாய், பாவ்லோவ் என்ற இருவரால் 2013 இல் தொடங்கப்பட்டது. என்ன சிறப்பு இதில் இருக்கிறது? நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே படங்கள் உங்கள் போனில் இறங்கும் இல்லையெனில் க்ளவுட் கம்ப்யூட்டரில் மட்டுமே இருக்கும். இதனால் வாட்ஸ்அப் இயங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் நம் போனுக்கு ஏற்படாது. குறைந்த ரேம் கொண்ட போனிலும் டெலிகிராம் சிறப்பாக இயங்கும். இதில் எந்த குழுவிலும் நீங்கள் இணையலாம். எந்த அட்மினும் உங்களை கேள்வி கேட்க முடியாது. இல்லையென்றால் அக்குழுவில் உள்ள விஷயங்களை தரவிறக்கிக்கொள்ள முடியும். சரி விடுங்கள். இதனால் நடைமுறை பயன் என்ன? ஜனநாய

உயிர்ப்பில்லாத காட்சிகள் - சிஜி வலிமையில் சாஹோ

படம்
சாஹோ இயக்கம் சுஜித் ஒளிப்பதிவு - மதி இசை - பாடல்கள் Songs: Tanishk Bagchi Guru Randhawa Badshah Shankar–Ehsaan–Loy பின்னணி - ஜிப்ரான் கார்ப்பரேட் அடிதடிகள்தான். ராய் எனும் நிறுவனத்தின் தலைவர் கொல்லப்படுகிறார். அந்த சீட்டைப் பிடிக்க குழு உறுப்பினர்களுக்குள் அடிதடி. யார் ஜெயித்தது என்பதுதான் கதை. படம் திரைக்கு வரும்போதே லார்க்கோ வின்ச் காமிக்ஸை படுமோசமாக எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு பிரெஞ்சு  இயக்குநர் மூலமே கிளம்பிவிட்டது. எனவே கதை பற்றிய ரகசியத்தை படம் காப்பாற்ற முடியவில்லை. சரி எடுத்தவரை என்னதான் செய்திருக்கிறார்கள். ஆஹா.... மேக்கிங். அப்போதுதான் தூங்கி எழுந்தது போலவே இருக்கும் பிரபாசை வைத்து ஆக்சன் படம் பண்ண நினைத்த சுஜித்தின் தைரியம். கூடவே, மேக்கிங். திகுதிகு வென காட்சிகள் ஓடுகின்றன. பாடல்கள் தனித்துவமாக தனியாக கேட்டால் நன்றாக இருக்கின்றன. பின்னணியில் பிரமாதமாக உழைத்திருக்கிறார் ஜிப்ரான். செட், விசுவல் எஃபக்ட்ஸ், சிஜி என அபார உழைப்பு. பொருட்செலவு என்பதை விடுங்கள். அந்த உழைப்புதான் வியக்க வைக்கிறது. முதல் பகுதி ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. இரண்டாம்

இந்திய கிராமங்களின் வறுமை நிலை! - சாய்நாத் பேசும் உண்மைகள்!

படம்
இந்திய மாநிலங்கள் தொழில் யுகங்களுக்கு முன்னர்,  சிறிய தொழில்களை நம்பி முன்னர் இருந்நதனர். தாழ்த்தப்பட்ட மக்கள் உணவுப் பொருட்களை விற்கும் கடைகளை தொடங்குவது சிரமம். எங்கள் ஊரில் தாழ்த்தப்பட்ட ஒருவர்தான் சீசனுக்கு கேழ்வரகு கூழ் (ராகி கூழ்) கடை வைத்தார். சாலையில் வண்டி ஓட்டி வருபவர், வாங்கிக் குடிக்கத்தான். எங்கள் ஊரில் சாதிக்கொரு தொழில் உண்டு. தலித் உணவுக்கடை வைத்தால் எப்படி? என மிரட்டி அவரது கடையை காலி செய்து கவுண்டர்கள் அந்த இடங்களை ஆக்கிரமித்து இப்போதும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த விஷயங்கள் நகரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. கிராமம் என்றால் அழகானது, அங்கு இருப்பவர்கள் பரம யோக்கியர்கள் என்று பகல் கனவு பலரும் காண்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் எப்படி கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதை அறிய நிறைய சம்பவங்களை உதாரணமாக கூறலாம். முக்கியமாக அங்கு வாழ்ந்த வந்த, தற்போது நகரில் உள்ளவர்கள் இதற்கு சரியானவர்கள். பி.சாய்நாத் அதே காரியத்தைத்தான் 1996 இல் செய்திருக்கிறார். இந்த நூலுக்கான களப்பணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா உதவியிருக்கிறது. சாய்நாத்தின் விரிவான கட்டுரைகளை டைம்ஸ்

இந்தியர்களுக்கு வர்க்க மனப்பான்மை அதிகம்! - அபிஜித் - எஸ்தர் டஃப்லோ

படம்
நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்களது ஆராய்ச்சி இதனால் சிறப்பு பெறுமா? எங்களது திட்டமே ஆர்சிடி முறையை அனைவரும் செய்யவேண்டும் என்பதுதான். நாங்கள் இந்த விருது பெற்றுள்ளதின் மூலம் எங்கள் குழுவில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பெரும் ஊக்கம் பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இது சிறந்த விஷயங்களைச் செய்யும் என நம்புகிறோம். இந்திய அரசு உங்களை அழைத்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? நாங்கள் கட்சி சார்ந்து எங்கள் ஆய்வுகளை செய்வதில்லை. நாங்கள் குஜராத் மாநில அரசு, மேற்கு வங்க அரசு ஆகியோருடனும் ஆய்வுகளைச்செய்து வருகிறோம். மத்திய அரசின் ஆதரவு என்று நாங்கள் தனியாக எதையும் கேட்கவில்லை. மாநிலங்களில் ஆய்வு செய்வதற்கான விஷயம் ஏதேனும் ஈர்த்தால் நாங்கள் ஆய்வுகளைச் செய்கிறோம். இதில் அரசுகளிடம் நாங்கள் வேண்டுவது ஆர்வத்தையும் நிறைய பொறுமையை மட்டுமே. எஸ்தர் - எங்களுடைய வறுமை ஒழிப்பு செயல்பாட்டு மையத்தின் ஊழியர்கள் பிரமாதமாக வேலை பார்த்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்த பரிசு அவர்களுக்கும் ஊக்கம் தருவதோடு அவர்களின் ப