இடுகைகள்

தேநீர் தயாரிக்கப்படுவதில்தான் சிறப்பு இருக்கிறது!

படம்
டீ குடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் மிகவும் பிரபலம். கோடிப்பேருக்கு மேல் அங்கு டீ குடித்து மகிழ்கின்றனர்.முன்னர் இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவிலும டீ குடிப்பதற்கு பெரும் மவுசு உண்டு. டீயில் பெரும்பாலும் தேயிலையையின் துவர்ப்புக்காக அதனை மேட்ச் செய்த பால் ஊற்றி குடிக்கின்றனர். இன்று பிளாக் டீ குடிப்பது ஃபேஷனாகி வருகிறது. இதோடு ஸ்பெஷல் டீ, லெமன் டீ என நிறைய வகைகள் உருவாகிவிட்டன. குறிப்பாக சாய்கிங் போன்ற ஸ்டார்ட் அப்கள் டீயின் தரத்தையும் விலையையும் காபிக்கு நிகராக கொண்டு வந்து விட்டனர். டீயில் என்ன முக்கியம்? நன்கு உலர வைக்கப்பட்டு அரைத்த தேயிலை. அதில்தான் வொய்ட் டீ, பிளாக் டீ, ஊலங் டீ, புவெர் டீ ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவது டஸ்ட் டீ ரகம். இது தேயிலையில் மூன்றாவது தரம். முதல் தரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் டீ, பால் சேர்க்காமல் அருந்தப்படுகிறது. கிழக்காசியாவில் க்ரீன் மிகவும் பிரபலமாக உள்ளது. கேமெலியா சினென்சிஸ் என்ற தாவரத்திலிருந்து தேயிலை பறிக்கப்பட்டு டீ தயாரிக்கப்படுகிறது. இ

சாகசப்படங்களைப் பார்ப்பது ஆபத்தா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி திகில் படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அதில் ஆபத்து ஏதேனும் உள்ளதா? ஆல்பிரட் ஹிட்சாக் கூட பயந்த சுபாவம் கொண்டவர்தான். அதனால்தான் அவர் பேர்ட்ஸ் போன்ற திகில் படங்களை எடுக்க முடிந்தது என்று அவரே கிண்டலாக கூறுவார். காரணம், பயம் பற்றி பிறரை விட அவரே நன்றாக அறிவார். பொதுவாக மூளையின் செயல்பாடு, நரம்புத் துடிப்புகள் ஆகியவை பேய்ப்படங்களை சாகசங்களை விரும்புபவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சாதாரணமாக நகரும் மெலோடிராமா குடும்ப படங்களைப் பார்க்கும்போது தூங்கிவிடுவார்கள். இதற்காகவே அவர்கள் பாய்ன்ட் பிரேக் போன்ற அதிசாகச படங்களைப் பார்க்கிறார்கள். ஸ்கை டைவிங், மலையேற்றம் போன்ற மிஷன் இம்பாசிபிள் விஷயங்களைச் செய்கிறார்கள். தம்பதிகளாக உட்கார்ந்து பேய்ப்படங்களை, திரில்லர், சாகசப்படங்களை பார்ப்பதை உளவியலாளர்கள் ஸ்னக்கில் தியரி என்று குறிப்பிடுகின்றனர். நன்றி - பிபிசி

பெர்லின் சுவரும், சீனாவின் கம்யூனிசமும்!

படம்
பெர்லின் சுவர் இடிந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. உலகம் முழுக்க கம்யூனிச விஷயங்களின் சரிவும் அப்போதுதான் தொடங்குகிறது. சோவியத் ரஷ்யாவின் காலத்தில் அங்கிருந்த அகிலம், உலகம் முழுக்க இருந்த கம்யூனிச அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்தது. பின்னர் சோவியத் தொண்ணூறுகளில் கோர்ப்பசேவ் வந்து சோவியத்தை மறு உருவாக்கம் செய்தபோது அனைத்தும் நொறுங்கத் தொடங்கின. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது நிறுவன தினத்தை கொண்டாடி வருகிறது. இவர்கள் சோவியத் வீழ்வதற்கு முன்னரே அங்கு சென்று அவர்களின் கோர்ப்பசேவின் கருத்தியல் சரியானதும் முறையானதும் அல்ல என்று கூறிவிட்டு வந்தனர் என்று நண்பர் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. இன்றும் சீனா எப்படி உலகின் நெருக்குதல்களை சமாளித்து கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்றால் உள்நாட்டிலேயே பல்வேறு தடைகளை போட்டுத்தான் சமாளித்து வருகிறது. தடைகளை அன்று வேலியாக போட்டால் இன்று டிஜிட்டல் வடிவில் அரசுக்கு பாதகமான அம்சங்களை தவிர்த்து ஆட்சியை நடத்தி தனக்கேற்றபடி நாட்டை வடிவமைத்து வருகிறது சீன அரசு. கோர்ப்பசேவ் தனது சீர்த்திருத்தங்களை பெரஸ்ட்ரோய்கா, கிளாஸ்னாஸ்ட் என்ற ப

சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்த ராபர்ட் கென்னடி!

படம்
ராபர்ட் கென்னடி ராபர்ட் கென்னடி ஜான் எஃப் கென்னடியின் சகோதரர். 1925 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர். சகோதர ருக்குப் பின்னர் தேர்தலில் நிற்க நினைத்தார். ஆனால் சதிகார ர்களால் படுகொலை செய்யப்பட்டார். சகோதர ரின் ஆதரவுடன் அவரது ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாக, பதவி வகித்தார். 1925 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் கென்னடி, 1960 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். பின்னர், சகோதரர் படுகொலையான பின்னர் நியூயாரக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் முயற்சியிலும் இருந்தார். 1968 ஆம் ஆண்டு ஜூன் 5 தாக்கப்பட்டு படுகாயமுற்றார். அடுத்தநாள் இறந்துபோனார். ராபர்ட்டின் தந்தை ஜோசப் சீனியர், தொழிலதிபர். இவரின் அம்மா ரோஸ், போஸ்டன் நகர மேயர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் அனைவரும் செல்வச்செழிப்பான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். ஜோசப்பிற்கு பிரிட்டனில் அமெரிக்கத்தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் ஏற்க, குடும்பம் இங்கிலாந்திற்கு பயணமானது. பின்னர் இரண்டாம் உலகப்போர் வெடிக்க, வேகமாக அமெரிக்காவுக்குத

காலை உணவு உடலுக்கு அவசியமா?

படம்
giphy.com காலை உணவு சாப்பிடுவதை முக்கியம் என பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். உணவு என்பது ஒருவரின் உடலிலுள்ள கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் எடையைப் பொறுத்த தே. இதன் பொருள் காலை உணவை நாம் அலட்சியப்படுத்தவேண்டும் என்பதல்ல. கவனமாக அதனை வடிவமைத்து சாப்பிட வேண்டும் என்பதே. இம்முறையில் காலையில் வேக வைத்த பீன்ஸ், காளான்கள், தக்காளி ஆகியவற்றுடன் முட்டை சேர்த்து சாப்பிடலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிட உதவும் செரிலாக் போன்ற உணவுகளை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் நூறு கிராமுக்கு 5 கிராம் எனுமளவு சர்க்கரை உள்ள பொருட்களைத்தான் வாங்கவேண்டும். நாம் சாப்பிடும் மூன்று பங்கில் ஒரு பங்கு சர்க்கரையாக இருப்பதை தவிர்க்கவேண்டும். உணவுப்பொருட்களை உடல் சர்க்கரையாக மாற்றுவதே நல்லது. நேரடியான சர்க்கரை என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. நீங்கள் ஓட்ஸ், பார்லி போன்றவற்றை சாப்பிடலாம். காரணம் இவை குறைவான சர்க்கரையைக் கொண்டவை. பொதுவாக காலையில் அதிகமாகவும் பின்னர் வரும் உணவு வேளைகளில் குறைவாகவும் உணவு உண்பது உடல் எ

இறைச்சி சுவையில் சைவ பலகாரங்கள் எப்படி உருவாயின?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி இறைச்சி சுவையில் முறுக்குகள் எப்படி உருவாகின்றன? இறைச்சி சுவையில் உருவாகும் பல்வேறு பிஸ்கெட்டுகள், முறுக்குகள் சைவ வகையைச் சேர்ந்தவைதான். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கு நாடுகளில் 2013 ஆம் ஆண்டு தொடங்கின. இன்று பல்வேறு இறைச்சி சுவையில் தின்பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர். இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள்தான் அதன் மணத்திற்கு காரணம், இவற்றை சூடுபடுத்தும்போது இறைச்சிக்கான தன்மை உணவில் உண்டாகிறது. இதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சைவ உணவுகள் ரெடியாகின்றன. அப்படியே அல்ல. தாவரங்களிலுள்ள அமினோ அமிலங்களான எல் - சிஸ்டெய்ன் எனும் அமினோ அமிலத்தை இதற்காக பயன்படுத்துகின்றனர். இதன்விளைவாக சைவத்திலும் நிறைய தின்பண்டங்கள் புதிய மணம் சுவையில் சாப்பிடக் கிடைக்கின்றன. நன்றி - பிபிசி

அசுரகுலம் - பிணங்களைப் பார்த்து சுய இன்பம் செய்த ஜெஃப்ரி!

படம்
அசுரகுலம் ஜெஃப்ரி டாமர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி செய்த கொலைகள் 17 அனைத்தும் இளைஞர்கள். அதுவும் பல்வேறு ஓரினச்சேர்க்கை பார்களில் பார்த்த இளைஞர்களுக்கு செக்ஸ் ஆசை, பணம் காட்டி வீட்டுக்கு கூட்டி வந்து கொன்றவர். இதற்காக 16 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றார். ஆனால் முதல் கொலைமுயற்சியில் கழுத்தறுபட்டு தப்பித்தவர், இரண்டாவது முயற்சியில் கொல்லப்பட்டார். கொன்றவர் சக கைதியான ஸ்கார்வர். இவர் மரணித்த ஆண்டு 1994. பதிமூன்று ஆண்டுகளில் 17 இளைஞர்களை கொன்றவர் ஜெஃப்ரி. எப்படி தெரியுமா? ஓரினச்சேர்க்கை, பூங்கா, பேருந்து நிறுத்தம் என்று செல்வார்.அங்குள்ளவர்களில் செக்ஸ் விற்பனைக்கு என தில்லாக நிற்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தேர்வு செய்து பேரம் பேசி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு சென்றதும் முதலில் மது பிறகு சமாச்சாரம் என்று சொல்லிவிட்டு, ஆல்கஹாலில் மயக்க மாத்திரைகளை கலந்துகொடுப்பார். அவர் குடித்துவிட்டு மயங்கியவதும் அவரின் உடல் பாகங்களை அக்கு அக்காக பிரிப்பார். ஜெஃப்ரி ஜோம்பி என்ற உணர்விழந்த மனிதர்களை நம்பினார். அதற்காக கூட்டி வந்த ஆட்களின் மண்டையில் துளையிட்டு அமிலங்க

புதிய புத்தகம் பேசுது! - தேசியவாதம் நல்லது!

படம்
தி கேஸ் ஃபார்  நேஷனலிசம் ரிச் லோரி உலகெங்கும் தேசியவாதம் வளர்ந்து வருகிறது. இதை வைத்து பல்வேறு வலதுசாரி வாத கட்சிகள் தேர்தலில் வென்று வருகின்றன. அதற்கு காரணம் என்ற என்று ஆசிரியர் லோரி ஆராய்ந்திருக்கிறார். ஏறத்தாழ ட்ரம்பிசம் முதற்கொண்டு அனைத்து தேசியவாதங்களும் நல்லதுதான் என முடிவு செய்து எழுதியுள்ளார் ரிச் லோரி. ஃபீமேல்ஸ் ஆண்ட்ரூ லாங் சூ அதிகம் விரும்பப்படுவதும், வெறுக்கப்படுவதும் பெண்கள்தான். அந்த பெண்களைப் பற்றியதுதான் இந்த புத்தகம். அனைவரும் பெண்கள்தான் என ஆசிரியர் சொல்லுகிறார். எதை வைத்து என்பதை புத்தகம் படித்து புரிந்துகொள்ளுங்கள். ஆபாச படங்களுக்கு எதிரான பெண்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு துறை சார்ந்த பெண்களைப் பற்றியும் ஆசிரியர் கவலைப்பட்டு எழுதியிருக்கிறார். இன் டிஃபன்ஸ் ஆஃப் எலைட்டிசம் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பாப்புலிச சிந்தனைகளைச் சொல்லி அடித்தட்டு அமெரிக்கர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதன்பிறகு பேசியே மக்களின் மனதில் நின்றார். அடுத்த தேர்தலிலும் அவர் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. எப்படி தன்னை தற்காத்துகொள்கிறது மேல்தட்டு வர்க்கம் என ஜோயல் ஸ்டெய்ன் விளக்

வேலை வாய்ப்புச் சந்தை மாறி வருகிறது - நீங்களும் மாறுங்கள்!

படம்
வேலைவாய்ப்புச்சந்தைகள் இப்போது மாறிவருகின்றன. முதலில் லிங்க்டு இன்னில் புரபைல் பதிந்து வேலை தேடியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.இன்று நொடியில் வேலைக்கு தகுதியானவர்களா இல்லையா என அறிய டிண்டர் ஆப்பை போலவே புதிய ஆப்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி பல ஆப்கள் உள்ளன. இனிமேலும் நீங்கள் நாக்ரி.காமில் பதிந்து வைத்தேனே அதெல்லாம் வீணா என்றால் வாழ்க்கை மொத்தமும் வீணாகிவிடும். ஆட்டோமேஷன் உலகில் கிடைக்கும் வேலை எவ்வளவு முக்கியம் தெரியுமா?   ஜாப்பர், பிளாங்க். ஸ்விட்ச், வேவ், ஷேப்பர் எனும் ஆப்களை இன்று மனிதவளத்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் இனி சிபாரிசுகளை விட உங்களுக்கு தகுதிதான் முக்கியமாகப் போகிறது. டிண்டர் என்பது ஜாலியான டேட்டிங் ஆப். அதற்கும் வேலைக்கும் வித்தியாசம் இல்லையா என சிலர் கேட்கலாம். உண்மைதான் டெக் ஆட்கள் புரிந்துகொண்டது அதன் இடைமுக எளிமைத்தன்மையை மட்டுமே. எளிமையாக சில கம்பெனிகளைப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை ஸ்வைப் செய்து அந்த நிறுவன ஹெச் ஆர் ஆட்களிடம் ஆப் லைனில் பேசலாம். அவர்கள் தேடிய ஆட்களில் நீங்களும் ஒருவர் என நம்பிக்கை தோன்ற

சிறைவாதிகளுக்கு பயிற்சி தரும் பின்லாந்து அரசு!

படம்
giphy.com சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வெளி