இடுகைகள்

தாலிபான்கள் சீக்கியர்களை மோசமாக நடத்தவில்லை! எழுத்தாளர் அமர்தீப் சிங்

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் அமர்தீப் சிங், எழுத்தாளர், சிங்கப்பூர். 2014ஆம் ஆண்டு தனது அலுவலகப் பணியை அமர்தீப் கைவிட்டார். சீக்கிய மதம் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் பயணம் செய்து கிடைக்கும் தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார். இவ்வகையில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். சவுதி அரேபியா, ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணித்து தன் அனுபவங்களை திரைப்படமாகவும் உருவாக்க முயன்று வருகிறார். இச்சமயத்தில் காபூலில் உள்ள குருத்துவாரா தீவிரவாதிகளில் தாக்குதலுக்கு ஆட்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த நாற்பது ஆண்டுகளாக எப்படி சீக்கியர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள் என்பதை நம்மிடம் பேசினார். இந்தியாவில் அமலாகியுள்ள குடியுரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சட்டம் பற்றிக் கேட்டதும் ஆப்கானிஸ்தானிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இப்போதாவது நீதி கிடைத்ததே என்று நினைத்தேன். ஆனால் பிறகுதான் அந்த சட்டத்திலுள்ள பல்வேறு சிக்கலான அடுக்குகளை உணர்ந்தேன். இந்தியாவுக்கு வெளியே உள்ள சிறுபான்மை மக்களை அதிக ஆரவாரம் இல்லாமல் இந்தியாவுக்கு அழைத்துவர இந்த சட்டம் உதவும் என ந

மாஸ்க் அணிந்தால் கோவிட் -19 தொற்று ஏற்படாதா?

படம்
ஜிபி மாஸ்க் அணிந்தால் கோவிட் – 19 நோய்த்தொற்று ஏற்படாதா? அமெரிக்கா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு என பல்வேறு நாட்டு அரசும் முக கவசங்களை மக்கள் அணிவதை கட்டாயம் என்று அறிவித்துவிட்டன. இதை நாம் எழுதுவதற்கு முன்னரே உலக சுகாதார நிறுவனமும் முக கவசங்களை அணிவதை முக்கியமானது என்று   கூறிவிட்டது. உண்மையில் இதில் முக கவசம் நோய்த்தொற்றை தடுக்கிறதா? முக கவசம் அணிவதன் மூலம் நீங்கள் நோய்த்தொற்றை தடுக்க முடியும் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் கிடையாது. நோயால் பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக முக கவசத்தை அணிய வேண்டும். ஆனால் பிறர் அணிவது அவசியமில்லை. ஆனால் சமூக இடைவெளியை உறுதியாக அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் வான் டாமே. எம்ஐடி நிறுவனம் பாதிக்கப்பட்டவர் தும்மும்போது, இருமும்போது எட்டு மீட்டர் தூரத்திற்கு நீர்த்திவலைகள் தெறிப்பதை ஆய்வில் கண்டறிந்தனர். இதற்காக அதிக திறன் கொண்ட கேமராக்களைப் பயன்படுத்தினார். முக கவசம் அணிந்தவர்களை விட அணியாதவர்களுக்கு பத்தில் மூன்று பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது தெரிய வந்துள்ளது. கிருமி எப்படி பரவுகிறது என முழுமையாக அ

சமூக தனிமைப்படுத்துதல் உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
ஜிபி சமூக தனிமைப்படுத்துதல் பேசுவதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது   பேராசிரியர் ரெபெக்கா சாக்ஸே மூளை நரம்பியல் பேராசிரியை, எம்ஐடி இன்று உலக நாடுகள் பலவற்றிலும் முழுமையாக அல்லது பகுதி நேரமாக பொதுமுடக்கம் அமலாகி வருகிறது. இதனால் அவசியமான பொருட்களை வாங்குவது தவிர்த்து ஒருவர் வெளியே சுற்றுவதை தடுக்கப்பட்டுள்ளது. அரசு இதன் வழியே நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நினைக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள், நோய்த்தொற்று ஏற்படாதவர்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ள விஷயம், சமூக தனிமைப்படுத்தல்தான். பலர் நகரங்களில் தனிமையாக வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். சாப்பாடு தயாரித்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். வீடுகளில் இருந்துகொண்டே டிஜிட்டலாக வெளியில் உள்ள உலகத்திடம் உரையாடி வருகிறோம். உண்மையில் இப்போது உலகிலுள்ள மக்களுக்கு சாப்பிடுவதற்கான நேரம், டிவி,  சினிமா, ஸ்மார்ட்போன் ஆகியவற்றுடன் செலவு செய்வதற்கான நேரம் அதிகரித்துள்ளது. தூங்குவதற்கும் விழித்திருப்பதற்குமான எல்லைக்கோடு மெல்ல அழிந்து வருகிறது. உண்மையில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு பசி ஏற்படுகிறதா, அந்த உண

சிறுநீர், மலத்தின் மூலம் உடல்நிலையை கணிக்க முடியும்! அமெரிக்க ஆய்வில் தகவல்

படம்
ஜிபி உடல்நிலையைக் கணிக்கும் ஸ்மார்ட் டாய்லெட்! அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கழிவறையில் ஸ்மார்ட் பொருட்களை பொருத்தி அதன் மூலம் மனிதர்களுக்கு சிறுநீரகம் மற்றும் ஆசனவாயில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்றுள்ளனர். இந்த கழிவறையின் பெயர் ஐபிலாப் ஆகும். நாம் காந்தியைப் போல சிறுநீர் அல்லது மலம் கழிப்பதை அவ்வளவு கவனமாக பார்ப்பதில்லை. இந்த ஸ்மார்ட் கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள கேட்ஜெட்ஸ் மூலம் சிறுநீரின் அளவு, அதிலுள்ள கழிவுப்பொருட்களின் தன்மை ஆகியவற்றை அளவிட்டு புற்றுநோய் வாய்ப்பு, சிறுநீரக செயலிழப்பு, தொற்றுநோய்கள் வரையில் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மருத்துவர் சஞ்சீவ் காம்பீர் குழுவினரின் முயற்சியில் இந்த கழிப்பறை தயாரிக்கப்பட்டு 21 தன்னார்வலர்களைக் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்பான அறிக்கை நேச்சர் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் இதழில் வெளியாகியுள்ளது. இந்த சோதனைகள் உங்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால் இம்முறையில் மனிதர்களின் நோய்களை குறிப்பாக சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றை எளிமையாக கண்டுபிடிக்க முடி

இனி மைதானங்களில் அமர்ந்து விளையாட்டுகளைக் காண்பது கடினம்!

படம்
இனி மைதானங்களில் அமர்ந்து விளையாட்டுகளைக் காண்பது கடினம் ! உதய் சங்கர் , ஸ்டார் , டிஸ்னி நிறுவன இந்திய இயக்குநர் , தி வால்ட் டிஸ்னி ஆசியா பசிபிக் தலைவர் பொது முடக்க காலம் எப்படி செல்கிறது ? பணிகளை செய்துவருகிறீர்களா ? பொதுமுடக்க காலம் கடினமாகத்தான் இருக்கிறது . முதலில் அலுவலகம் சென்று வேலை செய்து வந்தோம் . இப்போது வீட்டிலேயே வேலை பார்த்து வரும் சூழல் . வீட்டிலும் கவனச்சிதறல் இல்லாமல் பணியாற்ற முடிகிறதுதான் . ஆனால் வீட்டில் அலுவலக பணிகளைச் செய்யும்போது வீடு , அலுவலகம் என்ற இரு விஷயங்களும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன . மற்றபடி எங்கள் குழு உறுப்பினர்களை நான் டிஜிட்டல் முறையில் சந்தித்து வருகிறோம் . வேலைகளையும் செய்து வருகிறோம் . ரசிகர்களின் மனநிலையை வைத்தே நாம் விளையாட்டுகளை நடத்தி வருகிறோம் . பொதுமுடக்கம் , பெருந்தொற்று என சிக்கலான நேரங்களில் இதனை எப்படி சமாளிக்கிறீர்கள் ? மக்கள் எப்போதும் பழைய முறையில் விளையாட்டுகளை இனியும் காணமுடியாது . இன்று மக்கள் விளையாட்டுகளை காண்பதை விட அவர்களின் பாதுகாப்பு முக்கியம் . நாங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாட்ஸ்டார் சேவை

மனதில் உணரும் விஷயங்கள் உண்மையான படைப்பாக மாறும்! - ஓவியர், திரைப்பட இயக்குநர் முஸாஃபர் அலி

படம்
முசாஃபர் அலி ஓவியர் , திரைப்பட இயக்குநர் Add caption தி அதர் சைட்  என்ற உங்களது ஓவியக் கண்காட்சி நடைபெற்று பதினைந்து ஆண்டுகளாகின்றன . அடுத்த ஓவியக்காட்சி என்பதை நடத்த ஏன் இவ்வளவு கால இடைவெளி ? ஓவியக்கலை என்பது யாரேனும் ஒருவரால் ஊக்கம் பெற்று உருவாக்கப்படுவது . இதில் ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கும் கட்டுப்பாடும் கிடையாது . என்னைப் பொறுத்தவரை கலை தன்னை தானாகவே வடிவமைத்துக்கொள்ளும் என நம்புகிறேன் . ஓவியங்கள் வரைவது என்பதை வெவ்வேறு வழிகளில் முயன்றுகொண்டேதான் இருக்கிறேன் . உங்கள் வாழ்க்கையில் வரும் சிலர் உங்களுக்கு ஊக்கம் தருவார்கள் , ஏதோ ஒரு வகையில் சுவாரசிய திருப்பங்களை உருவாக்குகிறவர்களாக இருப்பார்கள் அல்லவா ? அதுபோலத்தான் . ஓவியம் என்பதை கதை சொல்லுவது போல பார்க்கிறீர்களா ? நீங்கள் ஓவியர் என்பதோடு திரைப்பட இயக்குநரும் கூட . திரைப்பட வடிவத்தை ஓவியத்திலிருந்து வேறுபட்டதாக பார்க்கிறீர்களா ? கலைகளின் வடிவம் பெயர்கள் வேறுபட்டாலும் அதன் தன்மை ஒன்றுதான் . இவை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறும் . நீங்கள் கண்களால் பார்ப்பது , காதால் கேட்பது அனைத்தும் அர்த்தமின்மை என

இருபது லட்சம் கோடி ரூபாய் இந்திய தொழில்துறையைக் காப்பாற்றும் - நிதின் கட்கரி

படம்
தினதந்தி நிதின் கட்கரி போக்குவரத்துதுறை மற்றும் சிறு , குறு தொழில்துறை அமைச்சகம் மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுமா ? 4.5 மில்லியன் ( ஒரு மில்லியன் - பத்து லட்சம் ) சிறு , குறு தொழிலகங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள நிதித்தொகை உதவி செய்யும் . மத்திய பொது நிறுவனங்கள் , சிறு , குறு தொழிலகங்கள் பொது முடக்க காலத்தால் நிதிவசதி இன்றி தவித்து வருகின்றன . இதன் காரணமாக வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணையையும் , ஊழியர்களுக்கான சம்பளத்தையும் கொடுக்க முடியாமல் உள்ளன . அடுத்த 45 நாட்களில் இந்த நிறுவனங்களுக்கு வழங்கும் 5 லட்சம் கோடி ரூபாய் மூலம் நிறுவனங்கள் தம்மை சிக்கல்களிலிருந்து மீட்டெடுத்துக்கொள்ளும் என நம்புகிறோம் . கடினமான சூழலில் உள்ள சிறுகுறு தொழிலகங்களுக்கு வங்கிகள் எப்படி கடன்களை வழங்க முடியும் ? மத்திய அரசு , வங்கிகள் சிறுகுறு தொழிலகங்களுக்கு வழங்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கு , 1500 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையாக செலுத்தவிருக்கிறது . கடன்தொகையில் வங்கிகள் 25 சதவீதம் தந்தால் போதும் . மீதி 75 சதவீத தொகை