இடுகைகள்

காலத்தின் புழுதி படியாத லட்சியவாத நாவல்! - உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்

படம்
      தி.ஜானகிராமன்   உயிர்த்தேன்  தி.ஜானகிராமன்  பொதுமுடக்க காலத்தில் இந்த நூலை படிப்பவர்களுக்கு பெரும் உற்சாகம் ஏற்படும். காரணம், இந்த நாவலில் கூட நாயகன் சென்னையிலிருந்து போதுண்டா பாண்டுரங்கா என்று தந்தை வாழ்ந்த சொந்த ஊரான ஆறுகட்டிக்கு வந்து வாழ்கிறார். அங்கு வரும் பிரச்னைகளை சமாளிக்கிறார். பூவராகவன் காகிதங்களை விற்கும் தொழில் செய்து அவரது அப்பா சம்பாதிக்காத அளவு, ஏன், பூவராகவனே நினைத்துப்பார்க்கமுடியாத காசு கொட்டுகிறது. சரியான முதலீடு செய்தால் உழைக்காமல் பணம் கிடைக்கும் அல்லவா? அதேதான். பணம் கிடைத்தாலும் மனத்தில் நிம்மதி இல்லை. ஊரில் உள்ள பெருமாள் கோவிலை புனருத்தானம் செய்ய அவரது அப்பா முயல்கிறார். ஆனால் பிராப்தமின்றி சில நாட்களிலேயே உயிர் துறக்கிறார். அந்த ஆசையை மகன் பூவராகவன் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் மையக்கதை. ஜானகிராமனின் மற்ற கதைகளை விட இந்தக் கதை தீவிரமான லட்சியவாத தன்மை கொண்டது. சமூகத்திற்கு உழைக்கும் ஆன்மாகவாக பூவராகவன் உருவாக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் அப்பா காரணமாக இருக்கலாம். அவரது சூழல் அப்படித்தான். அவரது வருகையால் உயிர்ப்பு பெறும் முக்கியமான பாத்திரம் செங

வான் ஒளியும் மண் இருளும் கொண்ட நூல் ! யாத்ரீகனின் பாதை - வினோத் பாலுச்சாமி- ஒளிப்பட பயணக்கதை

படம்
      பழங்குடி இனச்சிறுவன் புகைப்படம்- வினோத்           யாத்ரீகனின் பாதை வினோத் பாலுச்சாமி ப. 150 விலை ரூ. 500 மதுரை காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத். விகடனின் மாணவர் பத்திரிக்கையாளராக  செயல்பட்டவர். தற்போது திருவண்ணாமலையில் வாழ்கிறார். அவர் எழுதியுள்ள நூல்தான் யாத்ரீகனின் பாதை. அவர் தேர்ந்த எழுத்தாளர் அல்ல என்பதை ஆசிரியர் உரையில் நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது மன உணர்வுகளை எந்தளவு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மட்டுமே பார்த்து இந்த நூலை பார்த்து படித்து ரசிக்கலாம்.  தனது ஆதர்ச வழிகாட்டி பீட்டர் ஜெயராஜ் உடன் (தொப்பி அணிந்தவர்) ஏறத்தாழ இதில் எழுதியுள்ள புகைப்படம் அருகிலுள்ள எழுத்துகள் யாவுமே நமக்கு டைரிக்குறிப்புகள் போலத்தான் படுகிறது. இதன் அர்த்தம், அவை அதே தரத்தில் உள்ளன என்பதல்ல. சுய அனுபவத் தொனியில் எழுதப்பட்டாலும், புகைப்படத்தின் உணர்வுகளை வாசிப்பவர்களின் மனத்திற்கு கடத்துவதில் நூல் மகத்தான வெற்றி கண்டிருக்கிறது. சில அத்தியாயங்களில் நாம் மனதில் நினைத்து்க்கொள்ள பல வாக்கியங்கள் உள்ளன. அறிமுகமில்லாமல் ரபீந்திரனை சந்திக்கச்செல்வது, அச்சூழ்நிலையில் எளிதாக மனிதர்கள் பிற

கவனம் குவித்து பத்து மணிநேரம் தினசரி படித்து வந்தேன்!-பிரதீபா வர்மா

படம்
    பிரதீபா வர்மா உ.பியைச் சேர்ந்த பிரதீபா வர்மா குடிமைப்பணித் தேர்வில் 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவரின் வெற்றிப்பயணம் பற்றி பேசினோம். ஒரு பெண்ணாக உங்களுக்கு இந்த பயணம் எப்படி இருந்தது? நான் ஒன்பதாவது படிக்கும்போது எனக்கு ரத்தசோகை பிரச்னை இருந்தது. நான் தனியாக எங்கேயும் போகவே மாட்டேன். பிறகு பதினொன்றாவது படிக்கும்போது ஈவ்டீசிங் பிரச்னை ஏற்பட்டது. இதனால் நான் பள்ளிக்குப் போகும்போது எனது அப்பா, எனது பின்னாலேயே வந்து பாதுகாப்பாக பள்ளிக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டு திரும்புவார். கிண்டல் செய்வது தொடர்பாக கா்வல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி நிலைமை சென்றது. எனது அப்பா, இதற்கு பயந்துகொண்டு படிப்பை கைவிடுவது தவறு என்று சொன்னார். அவர் வார்த்தைகள்தான் எனக்கு தைரியத்தைக் கொடுத்தன. குடிமைப் பணித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? தனி அகாடமிகளில் சென்று படிப்பது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்காது. பாடநூல்களை நன்றாக படியுங்கள். தினசரி நாளிதழ்களை தீர்க்கமாக வாசியுங்கள். அதுவே போதுமானது. தேர்வுக்கு படிக்கு்ம்போது எந்த இடத்திலாவது நம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள

உழைப்பு, தன்னம்பிக்கை, கவனம் ஆகியவை என்னை வெற்றி பெற வைத்துள்ளன! பிரதீப் சிங்.

படம்
      பிரதீப் சிங்       இன்று குடிமைப்பணித் தேர்வுகளை எழுத நீங்கள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் கூட அட்மிஷன் போட வேண்டாம். எளிமையாக் உங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்தே சிறப்பாக முயன்றால் குடிமைப்பணித்தேர்வில் வெல்ல முடியும் . அதற்கு ஆதாரமாக இந்த ஆண்டு ஐ.ஏ.எ்ஸ் தேர்வில் வென்றவர்களை கைகாட்டலாம். அதில் முக்கியமானவர், முதல் இடம் பிடித்த ஹரியாணாவைச் சேர்ந்த பிரதீப் சிங். அவரிடம் பேசினோம். நீங்கள் முதலிடம் வருவீர்கள் என்று நம்பினீர்களா? வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நான் முதல் நூறு ரேங்குகளுக்குள் வருவேன் என்று நினைத்தேன். ஆனால் நெ.1 என்பது நான் எதிர்பார்க்காத பரிசு. என்னுடைய பெயரை தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் பார்த்துதான் எனக்கு நம்பிக்கை வந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட எனது அப்பா விவசாய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். ஒட்டுமொத்த ஊரும் எங்கள் வீடு தேடி வந்து வாழ்த்துகளை சொல்லியபடி இருந்தார்கள். அன்றிரவு எங்கள் முழு குடும்பமே தூங்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களத

குற்றங்களின் மீது விரிக்கப்படும் சைபர் வலை! ஃபேப்ரிகேட்டட் சிட்டி 2017 korea

படம்
          ஃபேப்ரிகேட்டட் சிட்டி 2017 korea இயக்கம் Park Kwang-hyun ஒளிப்பதிவு Nam Dong-geun இசை Kim Tae-seong கம்ப்யூட்டர் கேமர் மீது அநியாய கொலைப்பழி சுமத்தப்பட்டு, 24 மணிநேரத்திற்குள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. உண்மையில் அந்தக்கொலையை செய்தவர் யார்? கொலைப்பழியை எதற்கு கம்ப்யூட்டர் கேமர் மீது போட்டார் என்பதுதான் கதை. படத்தின் தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டை எப்படி கேப்டன் தலைமையிலான குழு உயிரைக்கொடுத்து மீட்கிறது என்ற காடசி அது. அதில் கேப்டன் தனது குண்டு நண்பன் ஹாரியை மீட்க போராடி அதனாலேயே உயிரை விடுகிறான். ஹாரி இதனால் கடுமையாக மனக்காயம்பட்டு அலறுகிறான். ஐயையோ படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் செத்தால் எப்படி படம் பார்ப்பது என்று நாம் யோசிப்பதற்குள், அது கம்ப்யூட்டர் கேம் என்று  பிறகுதான் தெரிகிறது. வேலைக்கு செல்லாமல் கம்ப்யூட்டர் கேம் விளையாடி வெறித்தனமாக வாழும் இளைஞன்தான் கேப்டன். ஆம் அவனது ஆன்லைன் விளையாடு சகாக்கள் அவனை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். கொலைப்பழி கேப்டன் மீது போடப்படுகிறது. அவன் ஏன் கொலை செய்தான் என்பதற்கு, க

நாட்டை உருக்குலைக்கும் அதிபுத்திசாலி கிரிமினல் மாஸ்டர்! - மாஸ்டர்

படம்
          மாஸ்டர் இயக்கம் Cho Ui-seok ஒளிப்பதிவு Yoo Eok Kim Jung-woo இசை Dalpalan Jang Yeong-gyu கொரியாவில் நூதனமாக நிதிமோசடி செய்யும் அதி புத்திசாலியை காவல்துறை ஒருவர் எப்படி ஸ்கெட்ச் போட்டு பிடிக்கிறார் என்பதுதான் கதை. கொரிய படங்களைப் பொருத்தவரை பெண்களை விட ஆண்கள் அட்டகாச அழகுடன் இருக்கிறார்கள். படத்தில் காவல்துறை அதிகாரி கேப்டன் கிம் அப்படிப்பட்டவர்தான். நாம் இ்ங்கு கூறுவதை அங்கு வசனமாகவே எழுதிவிட்டார்கள்(தமிழ் டப்பில்). படத்தின் உயிர் நாடியே ஒன் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை நடத்தி மக்களிடம் பேராசையைத் தூண்டிவிட்டு பணத்தை முதலீடு செய்ய வற்பறுத்தும் நிதி நிறுவனர் கதாபாத்திரம்தான். ஜி.ஐ. ஜோவில் வெள்ளுடை அணிந்த ஸ்டோர்ம் ஷாடோதான், இந்த பாத்திரத்தில் பின்னி எடுத்திருக்கிறார். வணிகம் செய்து ஏமாற்றுபவரின் வசன உச்சரிப்பு, உடல் மொழி என அத்தனையிலும் அட்டகாசப்படுத்துகிறார்  மனிதர். படத்தில் காதல் கிடையாது. சேசிங், அனல் பறக்கும் ஆக்சன்கள் கிடையாது. ஆனால் படம் பார்க்க நன்றாக இருக்கிறது. நிதி மோசடி, பங்குச்சந்தை என்ற விஷயம் பலருக்கும் புரியாது என்றாலும் நிதானமாக படத்தின் போக்கிலேயே என்ற நடக்கிறது

இம்பேக்ட் 50 - சாதனைப் பெண்கள்! பெண்களுக்கு சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்! - சுக்லீன் அனேஜா

படம்
      சுக்லீன் அனேஜா      சுக்லீன் அனேஜா ஆர்பி ஹைஜீன் ஹோம் தெற்கு ஆசியா, விநியோக இயக்குநர் அனேஜா இதுவரை  யுனிலீவரின் பல்வேறு பிராண்டுகளுக்கு விற்பனை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இத்துறையில் அவருக்கு 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.  தற்போது சுகாதாரம் தொடர்பான ரெக்கிட் பென்கிஸர் நிறுவனத்தின் பல்வேறு பொருட்களை சந்தையில் விற்று வருகிறார். இவரின் ஹார்பிக், டியூரெக்ஸ் விளம்பரங்கள் பரவலாக பேசப்பட்டவை என்பதோடு இவருக்கும் துறையில் புகழையும் பெற்றுத்தந்தவை. பெண்களின் சுகாதாரம் பற்றி இவர் உருவாக்கிய ஹார்பிக் விளம்பரம் கேன்ஸ் விழாவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. வணிகரீதியாக ஹார்பிக், கார்னியர், லோரியல், டெட்டால், டியூரக்ஸ் ஆகிய நிறுவனங்களை சிறப்பாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.  எகனாமிக் டைம்ஸின் 2018ஆம் ஆண்டு விருது, இம்பேக்ட் இதழின் விருதை 2019 ஆம் ஆண்டும் பெற்றவர்  சுக்லீன் அனேஜா.