இடுகைகள்

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆர்கனாய்டு மினி ப்ரெய்ன் ஆராய்ச்சி! - ஆட்டிசம், அல்சீமர், டிமென்ஷியா குறைபாடுகளை தீர்க்கலாம்!

படம்
  cc மூளை ஆராய்ச்சி     மினி மூளை ஆராய்ச்சி ஆட்டிசம், அல்சீமர், சிசோபெரெனியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் மூளை முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெறுவதில் உள்ள சிக்கல், அதன் அமைப்புதான். இப்போது அத்தடைகளையும் தாண்டி அதனை ஆய்வகத்தில் வளர்க்க முய்ன்று வருகிறார்கள். கேம்பிரிட்ஜிலுள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர் மேடலின் லான்காஸ்டர் என்ற பெண்மணி, மூளையிலுள்ள ஸ்டெம்செல்களை தனியாக பிரித்து வைத்து அதனை ஆராய்ந்து வருகிறார். வியன்னாவில் முதுகலைபடிப்பிற்கு செய்த ஆராய்ச்சியின் போது விபத்தாக மூளை ஆராய்ச்சியை செய்யும் நோக்கம் தொடங்கியிருக்கிறது. கருப்பையில் மூளை எப்படி வளருகிறது என்பதைப் பற்றித்தான் லான்காஸ்டர் முதலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர்தான், அது மூளையை தனியாக ஆய்வகத்தில் வளர்க்கும் நோக்கத்தில் வந்து நின்றது. ஆர்கனாய்டுகளை ஆராய்ந்து வந்த லான்காஸ்டர் இப்போது மெல்ல மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதன் புதிர்தன்மையை காண முயன்று வருகிறார். பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கூட நாம் மூளையின் வளர்ச்சியைத்தான் பார்க்க முடியும். ஆனால் அதில் உள்ளே வர

சுயலநலமில்லாத அன்பு அனைத்தையும் சகித்துக்கொள்ளும்! அமரம் அகிலம் பிரேமா - ஜொனாதன் எட்வர்ட்ஸ்

படம்
    அமரம் அகிலம் பிரேமம்         அமரம் அகிலம் பிரேமம் ஜொனாதன் எட்வர்ட்ஸ் தமிழில் நாம் பார்த்து நெகிழ்ந்த அபியும் நானும் படம்தான். தெலுங்கில் வசனங்களை நறுக்கென்று எழுதி, பாசத்தில் சுயநலம் கூடாது என செய்தி சொல்லி படம் எடுத்திருக்கிறார்கள்.   படத்திற்கு பெரும் பலம் அப்பாவாக நடித்துள்ள ஶ்ரீகாந்த் ஐயங்கார். படத்தின் நாயகன் இவர்தான். படம் முழுக்க இவர் வருகிறார். நாயகன் அமர், அகிலாவாக நடித்த விஜய்ராம், சிவ்சக்தி சச்தேவ் ஆகியோர் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் முக்கியமான மையம், அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசம். காதல் மகளின் மனதில் பூக்கும்போது காணாமல் போகிறதா இல்லையா என்பதுதான். அருண் பிரசாத் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவரே அனைத்து முடிவுகளை எடுக்க நினைப்பதில்லை. மகள் தான் செய்யும், செய்யப்போகும் விஷயங்களை தன்னிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறார். ஆனால் காதல் வரும்போது கள்ளத்தனம் அனைவரின் மனதிலும் குடியேறும்தானே? அகிலாவுக்கும் அப்படியே ஆகிறது. அப்பா அருண், கடும்கோபமாகி இனி அவள் என் மகள் கிடையாது என அனைத்து அன்பையும் வெறுப்பாக்கி காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். இதனால் எஞ்சினியர் ஆக

ஐபிஎம் நிறுவனத்தின் வணிகத்தை விரிவாக்கிய விற்பனைப்பிரிவு ஆளுமை! தீபாளி நாயர்.

படம்
      தீபாளி நாயர் ஐபிஎம் விற்பனைபிரிவு இயக்குநர், தெற்காசியா, இந்தியா பிரிவு எல்அண்ட் டி, மகிந்திரா ஹாலிடேஸ், ஹெச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களில் நிதி சார்ந்த பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஐபிஎம் நிறுவனத்தின் தெற்காசிய விற்பனை சமாச்சாரங்களை கவனிக்கிறார். இத்துறையில் நாயருக்கு 20 ஆண்டுகள் அனுபவம் உண்டு. ஐபிஎம் காரேஜ் என்ற திட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் செயல்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்தார். நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் ஐபிஎம் இப்போது தனது வணிகத்தை மீண்டும் செய்து வருகிறது. இவரது தலைமையிலான விற்பனைக் குழு கிரியேட்டிவிட்டி சார்ந்தும், விற்பனை சார்ந்து நல்ல நிலையில் உள்ளது. ஏராளமான விருதுகளையும் கூட வாங்கியுள்ளது. இம்பேக்ட் இதழில் 2018,2019 ஆகிய ஆண்டுகளிலும் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் தீபாளி நாயர் இடம்பெற்றுள்ளது அவரது திறமையை உலகிற்குச் சொல்லும். 6 அபர்ணா அகார்கர் நிகழ்ச்சி ஆக்கத்தலைமை, ஜீ5 இந்தியா ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர். டைம்ஸ் குழுமத்தில் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர். அண்மையில் இ வணிகம் சார்ந்த டிப்ளமோ ஒன்றை படித்துள்ள

கோத்ரெஜ் நிறுவனத்தின் பிராண்டுகளின் வளர்ச்சி உயர காரணம் இவர்தான்! - சோமஸ்ரீ போஸ் அவஸ்தி

படம்
    சோமஸ்ரீ போஸ் அவஸ்தி கோத்ரெஸ் பயனர் பொருட்கள்- அழகுசாதனப்பொருட்கள் விற்பனைப் பிரிவு தலைவர். அவஸ்தியினுடைய வேலை ஹிட், குட்நைட், சோப்புகள், அறை வாசனை திரவியங்கள் ஆகியற்றை சிறப்பாக விற்று சந்தையில் முக்கியமான நிறுவனமாக மாறுவதுதான். தற்போது நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 3500 கோடியாக உள்ளது. இவர்களின் சோப்புகளில் சிந்தால், கோத்ரெஜ் நெ. 1 ஆகிய சோப்பு பிராண்டுகள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அவஸ்தி தலைமையேற்ற சில ஆண்டுகளில் பூச்சிமருந்தான ஹிட் 11 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் கூட கோத்ரெஜ்ஜின் தனிநபர் பொருட்கள் அழகு சாதனப் பொருட்கள் பெரிதாக விற்பனையில் சுணங்கவில்லை. இந்த நேரத்தில் கோத்ரெஜ் ஏர், கோத்ரெஜ் புரொடெக்ட் ஹேண்ட்வாஷ் சிறப்பாக விற்றுள்ளன. 2 ரதி கங்கப்பா ஸ்டார்காம் இந்தியா இயக்குநர் குரூப் எம், வோடபோன் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்  ரதி. முக்கியமான விருது பெறும் விளம்பரங்களை சிறப்பாக தயாரிக்கும் திறன் பெற்றவர். விளம்பரம், பிரசாரம்,நிறுவனங்கள் சார்ந்து 20 ஆண்டுகள் அனுபவங்கள் பெற்றுள்ளார். தொழில்துறை 15 சதவீத வளர்ச்சி காண்பித்தால் இவரது ஸ்டார்காம் நிறுவ

இந்தியாவின் உள்ளூர் விஷயங்களை நிறுவனத்தின் பலமாக மாற்றியவர்! - டெபோஸ்மிதா மஜூம்தார் - புமா இந்தியா

படம்
    டெபோஸ்மிதா மஜூம்தார்   டெபோஸ்மிதா மஜூம்தார். விற்பனைப்பிரிவு தலைவர், புமா இந்தியா இந்தியா போன்ற நாடுகளில்தான் ஷூக்களுக்கு அதிக தேவை இருக்கும். அதனை குறிவைத்துதான் தனது விளம்பரங்களை அமைத்துக்கொள்கிறார். இப்படித்தான் ஷூக்கள் அணிவதற்கான குழுக்களை தொடங்கி வளர்த்து வருகிறார். விராட்கோலி, சாரா அலிகான், மேரி கோம், டூட்டி சந்த் ஆகியோரை புமா நிறுவனத்திற்கான தூதர்களாக ஒப்பந்தம் போட்டு இந்தியர்களுக்கு நெருக்கமான பிராண்டாக மாற்றியிருக்கிறார் டெபோஸ்மிதா. புமா நிறுவனம், பிற நிறுவனங்கள் செய்யும் மரபான விளையாட்டை மையப்படுத்திய விளம்பரங்களை செய்வதில்லை. இந்தியா சார்ந்த உள்ளூர் விஷயங்களை விளம்பரத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார். கிரிக்கெட் அல்லாத பல்வேறு விளையாட்டுகளை புமா அளவுக்கு வேறு எந்த பிராண்டும் விளம்பரப்படுத்தவில்லை. பெண்களுக்கான விளையாட்டு விதிமுறைகளைப் பற்றிய புமாவின் பிரசாரம் உலகம் முழுக்க் பேசப்பட்ட தனித்தன்மையாக பிரசாரமாக அமைந்துபோனது.டெபோஸ்மிதா புமாவின் விற்பனை தலைவராக இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் தலைமைத்துவ திறன்தான் காரணம்.

வணிக நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்ற ஊடக நிறுவன இயக்குநர்! வாலேரி பின்டோ

    இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள் வாலேரி பின்டோ இவர் வெபர் சாண்ட்விக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம் தகவல் தொடர்பு, கருத்து, கிரியேட்டிவிட்டி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம். பின்டோவின் தலைமையின் கீழ் வெபர் சாண்ட்விக் நிறுவனம், ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. பிண்டோ வெபர் இந்தியாவில் சேர்ந்து கடுமையாக உழைத்து இன்று அதனை முக்கியமான மக்கள்தொடர்பு நிறுவனமாக வளர்த்துள்ளார். ஹீரோ குழுமம்,ஓபராய் போன்ற நிறுவனங்கள் வெபர் நிறுவனத்தின் வா்டிக்கையாளர்களாக வெகு காலமாக இருக்கிறார்கள். தேசிய அளவிலான விளையாட்டு வீரர், சமையல் கலைஞர் என்ற தனித்துவமும் வாலேரி பின்டோவுக்கு உண்டு. இவர் தனது நிறுவனத்தின் வளர்ச்சியை 35 சதவீதம் எனுமளவுக்கு உயர்த்தியுள்ளார்.  

தன்னியல்பாக பயணிக்கும் நாடோடி நாயகனின் கதை! பிளேடு ஆப் தி பாண்டம் மாஸ்டர் அனிமேஷன்

படம்
        பிளேடு ஆப் தி பாண்டம் மாஸ்டர்     பிளேடு ஆப் தி பாண்டம் மாஸ்டர் அனிமேஷன் பாலைவனத்தில் ஒருவர் நடந்து போகிறார். தண்ணீர் கையிருப்பு இல்லை. தாகத்தால் மயங்கி விழுந்து விடுகிறார். அவரை இளைஞன் ஒருவன் தண்ணீர் கொடுத்து காப்பாற்றுகிறான். அப்போது அவன் தன் கதையை சொல்லுகிறான். அவனது காதலியை மன்னர் கைது செய்து வைத்துள்ளார் என்கிறான். தண்ணீர் கொடுத்த கருணைக்காக அந்த வீரர் இளைஞன் சொல்வதையெல்லாம் காது கொடுத்து கேட்கிறார். மற்றபடி அவருக்கு யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள்தான் அவர்களை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார். அப்போது பாலைவனத்தில் மனிதர்களை வேட்டையாடி தின்னு்ம கூட்டும் திடீரென வந்து தாக்க, அந்த இளைஞன் தன் காதலியைக் காப்பாற்றச் சொல்லிவிட்டு கொடூர கூட்டத்திற்கு பலியாகிறான்.  shandow மூன்று குதிரைகள் என்ற அதிசய படைபல சக்திகொண்ட முத்திரையை வீரர் வைத்துள்ளார். அவரால் பல்வேறு மாறு வேடங்களை போட முடியும். இளைஞனின் காதலியை காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் கதை.  

நவீன இளைஞனை டார்ச்சர் செய்யும் வெவ்வேறு காலகட்ட மனிதர்கள்! டைம் என்ன பாஸ்? - சூப்பர் சுப்பு

படம்
            டைம் என்ன பாஸ்?     டைம் என்ன பாஸ்? சூப்பர் சுப்பு சுட்டகதை என்ற படத்தை எடுத்தவர்தான் இந்த இயக்குநர். ஏறத்தாழ அந்தப்படத்திலிருந்து பெரிய மாறுதல்கள் இல்லாமல் மற்றொரு மேடை நாடகம் போன்ற வெப்தொடரை உருவாக்கியுள்ளார்.  டைம் என்ன பாஸ்? 2019இல் வாழும் ஐடி இளைஞன் அறைக்கு வரும் பல்லவ நாட்டு உளவாளி, இஸ்ரோ விஞ்ஞானி, பிரிட்டிஷ் கால ஆங்கிலோ இந்தியன் பெண், எதிர்காலத்திலிருந்து வரும் டெக் இளைஞன் ஆகியோர் வந்தால் என்ன களேபரங்கள் நடைபெறும் என்பதுதான் கதையின் முக்கியமான மையம். இந்த வெப் தொடரை பெரிதாக எதிர்பார்ப்புகளுடன் பார்த்தால், மிஞ்சுவது வாட்ச்மேனாக வரும் சந்தோஷம் (அலெக்ஸ்), பல்லவ உளவாளி (கிள்ளிவளவன்) ஆகிய இருவர் மட்டும்தான். குழுவில் வித்தியாசமாக தென்படுவது, செவத்தபையனாக வரும் பரத்தான். மாட்டு ஊசி போடும் டாக்டர் போல என்ன செய்வதென தெரியாமல் வெப் தொடர் முழுக்க தவித்திருக்கிறார். வெவ்வேறு காலத்திலிருந்து நவீன காலத்திற்கு வருகிறார்கள் நிச்சயம் பட்ஜெட் பெரிதாக இருந்தால் மட்டுமே பெரிதாக ஏதேனும் சாதிக்கமுடியும். இல்லையென்றாலும் உரையாடல்களில் கூட சுவாரசியம் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வெப்தொடரில் எ

அஸ்கார்ட் எனும் சபிக்கப்பட்ட வேட்டைக்காரன், கடவுளுடன் நடத்தும் போராட்டம்! - அசுரவேட்டை!

படம்
  cc/ அசுரவேட்டை - காமிக் பிடிஎஃப் டைம்ஸ்   ஜானியின் அசுரவேட்டை காமிக் பிடிஎப் டைம்ஸ் தமிழில் ஜானி வைக்கிங் போராளிகளில் ஒருவராக போரிட்டவர் அஸ்கார்ட். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அங்கிருந்து விலகி, காசுக்காக விலங்குகளை வேட்டையாடி பிழைத்து வருகிறார். அவரிடம் யார்முன்காண்டர் என்ற வித்தியாசமான விலங்கை (க்ராக்கன்) வேட்டையாடும் பணி வருகிறது. அதனை எப்படி நிறைவேற்றினார், அதில் இழந்த து என்ன, பெற்றது என்ன என்பதுதான் காமிக்ஸின் கதை. 18 பிளஸ் காமிக்ஸ் என்பதால் நிர்வாண, உடலுறவு காட்சிகள்  நூலில் உண்டு. கதையில் அவை துறுத்தலாக தெரியவில்லை. கதை முழுக்க சபிக்கப்பட்ட குழந்தையாக ஒற்றைக்காலுடன் பிறந்து கஷ்டப்படும் அஸ்கார்டின் வாழ்க்கையைப் பேசுகிறது. இதில் கார்லின் உள்ளிட்ட பலரும் பலவீனமான இனம் என்று பேசுவது அவர் தாழ்ந்த சாதியைச் சொல்லுகிறார்களா, ஒற்றைக் காலை இழந்த காரணத்தாலா என்று தெரியவில்லை. காமிக்ஸின் ஒவியங்கள் பல்வேறு பருவ காலங்களையும் சண்டைக்காட்சிகளையும் துல்லியமாகவும் விவரங்கள் நிறைந்தவையாகவும் மாற்றிக்காட்டுகிறது. புராணக்கதையை மையமாக கொண்ட காமிக்ஸ் கதை. எனவே, ஆத்திக நாத்திக பேச்சுகள் காமிக்ஸ் நூல்

பெண்கள் கல்வி பற்றி முடிவெடுக்கும் முடிவு எப்படியிருந்தாலும் சரிதான்! - வித்யா பாலன்

படம்
          வித்யாபாலன்     வித்யாபாலன், இந்தி திரைப்பட நடிகை நீங்கள் அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற பெண்கள் சார்ந்த கதைகள்தான். இக்கதைகளை நீங்களாகவே இப்படி வேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா? அப்படிக்கூறமுடியாது. ஆழ்மனதில் இதுபோன்ற படங்களில் நடிக்கும் ஆசை இந்த முறையில் வெளிப்பட்டிருக்கலாம். முன்னர் ஆண்கள் வென்றதை படமாக எடுத்தார்கள். இப்போது பெண்கள் முறை என்று கூட வைத்துக்கொள்ளலாம்.  வெற்றி பெற்ற பெண்கள் என்று நீங்கள் சொன்னாலும் கூட அவர்களுக்கு இடையே ஒற்றுமைகள் அதிகம் கிடையாது. சுலு என்ற பெண்ணுக்கு விண்வெளிக்கு ராக்கெட்டுகள் அனுப்புவதை பற்றி ஏதும் தெரியாது. அவள் சகுந்தலா தேவி அளவுக்கு புத்திசாலியும் கிடையாது. சினிமா என்பதை சூழல்களை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று பார்க்கலாம். சுலு வெறும் வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி என்பதைத் தாண்டி வெளியே செல்லவேண்டும் என்பதை விருப்பமாக கொண்டவள். அவள் தனது குடும்பத்தையும், கனவையும் ஒன்றுபோலவே நினைக்கிறாள். அதனை சமநிலையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள். நமது நாட்டில் தாரா ஷிண்டே, சகுந்தலாதேவி, சுலோச்சனா ஆகியோர் எங்கும் நிறைந

சி்ம்பயோட்டிக் மிருகத்தை வைத்துக்கொண்டு வாழ நினைக்கும் விண்வெளி வீரனின் பரிதாப கதை! - ஸ்புட்னிக்

படம்
        ஸ்புட்னிக்   ஸ்புட்னிக்  Director: Egor Abramenko Writer(s): Oleg Malovichko, Andrei Zolotarev ரஷ்யாக்காரர்கள் எடுத்த ஏலியன் பற்றிய படம் வெனோம் படம் பார்த்திருப்பீர்கள். அதே கான்செப்ட்தான். விண்வெளிக்குச் சென்று பூமிக்கு திரும்புகிற வழியில் சிம்பயாட்டிக் உயிரி விண்கலனில் புட்போர்ட் அடித்து ஏறிவிடுகிறது. அது நாயகன் உடலில் புகுந்துகொள்கிறது. அவனது நண்பனைக் கொன்று தின்றுவிடுகிறது.  பூமியில் தரையிறங்குபவர்களில் நாயகனுக்கும் கூட படுகாயம் ஏற்படுகிறது. ஆனால் மருத்துவமனையில் அவரை சிகிச்சையளிக்கும்போது, இரண்டே நாட்களில் உடலின் காயங்கள் ஆறுகின்றன. எப்படி என அவரை சோதிக்கின்றனர். அவருக்குள் உள்ள வேற்று உயிரியை கண்டுபிடித்துவிடுகின்றனர. அதனை எப்படி சோதிக்கின்றனர், நாயகன் இப்பிரச்னையிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதை. இதில் முக்கியமான பாத்திரம் உளவியலாளராக நடித்துள்ள நாயகிக்குத்தான்( Oksana Akinshina ) அதிக முக்கியத்துவம் உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் விஷயங்களை மெல்ல புரிந்துகொண்டு அதிர்ச்சியாவது, நாயகனை காப்பாற்ற பிரம்ம பிரயத்தன முயற்சிகளை செய்வது, இறுதியில் நாயகன் எடுக்கும் முட