இடுகைகள்

கிழிந்த பட்டம் போல பறக்கும் காதல் கதை! - காதல் இது காதல்

படம்
       காதல் இது காதல்  அழகப்பன்   மலையாளத்தில் பட்டம் போலே என்ற பெயரில் வெளியான படம். தமிழில் காதல் இது காதல் என காதல் பேசியிருக்கிறது.    படத்தில் தொடக்கமும் முடிவும் ஒன்றுபோலவ இருக்கவேண்டும் என நினைத்திருப்பதைத் தாண்டி படத்தில் எதுவும் இயல்பாகவே இல்லை.  ஐயர் குடும்பத்து பையன் கார்த்திக்குக்கும், கிறிஸ்துவக் குடும்பத்து பையன் மன்னிக்கவும் பெண் ரியாவுக்கும் வரும் காதலும், ஈகோவும் இன்னபிற பஞ்சாயத்துகளும்தான் படத்தின் கதை.  எஞ்சினியரிங் படித்துவிட்டு அதற்கு தொடர்பில்லாத ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்பை படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறார் கார்த்திக். அதைப்போலேவே ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் வேலைதேடி கொண்டிருக்கிறாள் ரியா. இருவருக்கும் மனதிற்கு பிடித்திருக்கிறது. எனவே கல்யாணம் செய்துகொண்டு தனியாக வாழ்வோம் என கிளம்புகிறார்கள். வீட்டில் கலவரம் ஆகிறது. ஊட்டியில் சொகுசு ஹோட்டலில் தங்கும் கார்த்திக் ரியா ஜோடிக்கு பணம் பிரச்னையாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு ஊர் வந்து சேர்கிறார்கள்.   கார்த்திக் ரோசாரியோ என்ற கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். ட

தானியங்கி கார்கள் உருவாக்கப்போகும் மாற்றம் இவைதான்! - டாக்சி இல்லாத காலமும் வரும்!

படம்
          ஓட்டுநர் இல்லாத கார்கள் உருவாக்கும் மாற்றம்! இப்போது வரும் கார்களில் பார்க்கிங் அசிஸ்டென்ஸ் வசதிகள் உண்டு. ஒட்டுநர் இல்லாத கார்களில் நீங்கள் எங்கு இறங்கவேண்டுமோ அங்கு இறங்கிக்கொள்ளலாம். பின்னர் கார் தானாகவே சென்று தேவையான இடத்தில் நின்றுகொள்ளும். அதனை நாமாகவே எடுத்துச்சென்று நிறுத்தவேண்டியதில்லை. பழகுவது அவசியம் சாதாரண கார்களில் வண்டியை ஓட்டிப்பழகுவது, நடைமுறைக்குவருவது என ஆறு மாதங்கள் பிடிக்கும். தானியங்கி கார்களை பழகுவதும் அப்படித்தான். உங்கள் குரல் காரில் உள்ள ஏ.ஐக்கு புரியவேண்டும். சென்று வரும் இடங்களின் மேப் பதிவாக வேண்டும். எனவே இக்கார்களை ஓட்ட நன்கு பயில்வது அவசியம். நோ டாக்சி சொந்த கார்களே இனி தானாகவே ஓடும்போது நிறைய வசதிகள் உண்டு. வாடகை கார்கள் ஓட்டும் டிரைவர்கள் இதற்கு தேவை இல்லை. உபர் கூட இந்த வழியில் யோசித்து செயல்பட்டு வருகிறார்கள். உடனே இல்லை என்றாலும் எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிறது. எனவே, ட்ரைவரிடம் பேசுவது, சண்டை போடுவது எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமைதியாக பயணிப்பது இனி நடைமுறைக்கு வரலாம். உறக்கமா, கலக்கமா? நீங்கள் தூங்கும்போது கூட காரை கவனிக்கவேண்ட

நூறுவயது வரை வாழ என்ன செய்யலாம்?

படம்
          cc       நூறு வயது வாழ்வது எப்படி? சாப்பிடு குடி கொண்டாடு உதவியாக நண்பர்கள் ஆதரவாக குடும்பம் என்று இருப்பது நெருகடியாக சூழலில் மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதாக பிரகாம் யங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நண்பர்கள் உறவின்றி, உறவுகளின் அண்மையின்றி இருப்பவர்களை விட 50 சதவீதம் அதிக ஆயுளுடன் ஒருவர் வாழ சமூகத்தோடு பழகி வருவது முக்கியம். ஆயுள் நீள மனச்சோர்வை போக்குவது முக்கியமான அம்சம். சிந்தனைகள் முக்கியம் நூறுவயது ஆனவர்களின் இளமைப் பருவத்தை ஆராய்ந்தபோது அவர்கள் அனைவரிடம் பேசி பழகிய தன்மை கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. வாழ்க்கையில் குறிப்பிட்ட நோக்கம் என்று உழைப்பவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றாது. எனவே, பரபரவென உழையுங்கள். உழைத்து ஓய்ந்தபிறகு உறங்குங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஜாமா சைக்கியாட்ரி இதழ் ஆய்வு கூறுகிறது. ஓடினால் வாழலாம். ஒருமணிநேரம் டிவி பார்த்தால் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும். இதனால் ஆயுளில் 22 நிமிடங்கள் குறைகிறது என்கிறார்கள். 25 வயதுக்குப் பிறகு முடிந்தளவு காலை அல்லது மாலையில் சாலையில் ஓடுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செ

எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ

படம்
          cc       எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு. முன்பே நோயைத் தடுக்கலாம். இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டெம்செல் தெரப்பி இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்தளவு சரிசெய்ய முடியும் என்கிறார்கள். பா

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆர்கனாய்டு மினி ப்ரெய்ன் ஆராய்ச்சி! - ஆட்டிசம், அல்சீமர், டிமென்ஷியா குறைபாடுகளை தீர்க்கலாம்!

படம்
  cc மூளை ஆராய்ச்சி     மினி மூளை ஆராய்ச்சி ஆட்டிசம், அல்சீமர், சிசோபெரெனியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் மூளை முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெறுவதில் உள்ள சிக்கல், அதன் அமைப்புதான். இப்போது அத்தடைகளையும் தாண்டி அதனை ஆய்வகத்தில் வளர்க்க முய்ன்று வருகிறார்கள். கேம்பிரிட்ஜிலுள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர் மேடலின் லான்காஸ்டர் என்ற பெண்மணி, மூளையிலுள்ள ஸ்டெம்செல்களை தனியாக பிரித்து வைத்து அதனை ஆராய்ந்து வருகிறார். வியன்னாவில் முதுகலைபடிப்பிற்கு செய்த ஆராய்ச்சியின் போது விபத்தாக மூளை ஆராய்ச்சியை செய்யும் நோக்கம் தொடங்கியிருக்கிறது. கருப்பையில் மூளை எப்படி வளருகிறது என்பதைப் பற்றித்தான் லான்காஸ்டர் முதலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர்தான், அது மூளையை தனியாக ஆய்வகத்தில் வளர்க்கும் நோக்கத்தில் வந்து நின்றது. ஆர்கனாய்டுகளை ஆராய்ந்து வந்த லான்காஸ்டர் இப்போது மெல்ல மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதன் புதிர்தன்மையை காண முயன்று வருகிறார். பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கூட நாம் மூளையின் வளர்ச்சியைத்தான் பார்க்க முடியும். ஆனால் அதில் உள்ளே வர

சுயலநலமில்லாத அன்பு அனைத்தையும் சகித்துக்கொள்ளும்! அமரம் அகிலம் பிரேமா - ஜொனாதன் எட்வர்ட்ஸ்

படம்
    அமரம் அகிலம் பிரேமம்         அமரம் அகிலம் பிரேமம் ஜொனாதன் எட்வர்ட்ஸ் தமிழில் நாம் பார்த்து நெகிழ்ந்த அபியும் நானும் படம்தான். தெலுங்கில் வசனங்களை நறுக்கென்று எழுதி, பாசத்தில் சுயநலம் கூடாது என செய்தி சொல்லி படம் எடுத்திருக்கிறார்கள்.   படத்திற்கு பெரும் பலம் அப்பாவாக நடித்துள்ள ஶ்ரீகாந்த் ஐயங்கார். படத்தின் நாயகன் இவர்தான். படம் முழுக்க இவர் வருகிறார். நாயகன் அமர், அகிலாவாக நடித்த விஜய்ராம், சிவ்சக்தி சச்தேவ் ஆகியோர் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் முக்கியமான மையம், அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசம். காதல் மகளின் மனதில் பூக்கும்போது காணாமல் போகிறதா இல்லையா என்பதுதான். அருண் பிரசாத் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவரே அனைத்து முடிவுகளை எடுக்க நினைப்பதில்லை. மகள் தான் செய்யும், செய்யப்போகும் விஷயங்களை தன்னிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறார். ஆனால் காதல் வரும்போது கள்ளத்தனம் அனைவரின் மனதிலும் குடியேறும்தானே? அகிலாவுக்கும் அப்படியே ஆகிறது. அப்பா அருண், கடும்கோபமாகி இனி அவள் என் மகள் கிடையாது என அனைத்து அன்பையும் வெறுப்பாக்கி காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். இதனால் எஞ்சினியர் ஆக

ஐபிஎம் நிறுவனத்தின் வணிகத்தை விரிவாக்கிய விற்பனைப்பிரிவு ஆளுமை! தீபாளி நாயர்.

படம்
      தீபாளி நாயர் ஐபிஎம் விற்பனைபிரிவு இயக்குநர், தெற்காசியா, இந்தியா பிரிவு எல்அண்ட் டி, மகிந்திரா ஹாலிடேஸ், ஹெச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களில் நிதி சார்ந்த பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஐபிஎம் நிறுவனத்தின் தெற்காசிய விற்பனை சமாச்சாரங்களை கவனிக்கிறார். இத்துறையில் நாயருக்கு 20 ஆண்டுகள் அனுபவம் உண்டு. ஐபிஎம் காரேஜ் என்ற திட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் செயல்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்தார். நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் ஐபிஎம் இப்போது தனது வணிகத்தை மீண்டும் செய்து வருகிறது. இவரது தலைமையிலான விற்பனைக் குழு கிரியேட்டிவிட்டி சார்ந்தும், விற்பனை சார்ந்து நல்ல நிலையில் உள்ளது. ஏராளமான விருதுகளையும் கூட வாங்கியுள்ளது. இம்பேக்ட் இதழில் 2018,2019 ஆகிய ஆண்டுகளிலும் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் தீபாளி நாயர் இடம்பெற்றுள்ளது அவரது திறமையை உலகிற்குச் சொல்லும். 6 அபர்ணா அகார்கர் நிகழ்ச்சி ஆக்கத்தலைமை, ஜீ5 இந்தியா ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர். டைம்ஸ் குழுமத்தில் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர். அண்மையில் இ வணிகம் சார்ந்த டிப்ளமோ ஒன்றை படித்துள்ள