இடுகைகள்

அசாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேநீர் தயாரிக்கப்படுவதில்தான் சிறப்பு இருக்கிறது!

படம்
டீ குடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் மிகவும் பிரபலம். கோடிப்பேருக்கு மேல் அங்கு டீ குடித்து மகிழ்கின்றனர்.முன்னர் இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவிலும டீ குடிப்பதற்கு பெரும் மவுசு உண்டு. டீயில் பெரும்பாலும் தேயிலையையின் துவர்ப்புக்காக அதனை மேட்ச் செய்த பால் ஊற்றி குடிக்கின்றனர். இன்று பிளாக் டீ குடிப்பது ஃபேஷனாகி வருகிறது. இதோடு ஸ்பெஷல் டீ, லெமன் டீ என நிறைய வகைகள் உருவாகிவிட்டன. குறிப்பாக சாய்கிங் போன்ற ஸ்டார்ட் அப்கள் டீயின் தரத்தையும் விலையையும் காபிக்கு நிகராக கொண்டு வந்து விட்டனர். டீயில் என்ன முக்கியம்? நன்கு உலர வைக்கப்பட்டு அரைத்த தேயிலை. அதில்தான் வொய்ட் டீ, பிளாக் டீ, ஊலங் டீ, புவெர் டீ ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவது டஸ்ட் டீ ரகம். இது தேயிலையில் மூன்றாவது தரம். முதல் தரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் டீ, பால் சேர்க்காமல் அருந்தப்படுகிறது. கிழக்காசியாவில் க்ரீன் மிகவும் பிரபலமாக உள்ளது. கேமெலியா சினென்சிஸ் என்ற தாவரத்திலிருந்து தேயிலை பறிக்கப்பட்டு டீ தயாரிக்கப்படுகிறது. இ

அசாமும் நம்மில் ஒரு பகுதிதான்- இனவெறி வேண்டாம் - சேட்டன் பகத்!

படம்
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஆவணங்களை பதிவு செய்ய கந்துவட்டிக்கு கடன் வாங்கி அசாமியர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். டெல்லி முதன்முறையாக கிழக்கிந்தியர்களை இப்படி செய்கிறது என நினைக்க முடியவில்லை. அசாமில் தீவிரவாதிகளின் போராட்டம், கலவரம், நிடோ டானியா  என்ற இளைஞரின் கொலை போன்ற விஷயங்கள் நம்மை நாமே வெறுக்க வைப்பன. கிழந்திந்தியாவின் வாசலான அசாமில் உள்ள மக்களை வெறுப்பது இந்தியாவில் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அங்குள்ளவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை பொருளாதார மண்டலம் அமைத்து உருவாக்கலாம். பல்வேறு இசை, கலாசார நிகழ்வுகளை அங்கு நடத்தலாம். இந்திய எல்லையை ஒட்டி உள்ள மக்கள் என்பதால் எளிதாக அவர்கள் சீனாவின் பக்கம் சாய வாய்ப்புள்ளது. இந்திய அரசு தன்னுடைய மக்களாக அசாமியர்களைப் பார்ப்பது பன்மைத்துவத்திற்கு நல்லது. இனிமேலும் அசாம் மக்கள் நாம் பாகுபாட்டுடன் கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் இந்திய மக்களாக இருப்பது கஷ்டம். விரைவில் இதனை இதை இந்திய அரசு உணரும் வாய்ப்பு வரும். அசாமியர்களை தங்களுடன் தக்கவைத்துக்கொள்ள இந்தியா, தாய்மொழி, மண் என பிராந்திய அரசியலை கையகப்படுத்த முயற்சிக்கிறது