இடுகைகள்

ஊழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் இன்னொரு நிறுவனம் - மோசடி மன்னன் அதானி - பகுதி 6

படம்
  பகுதி ஐந்தில் விடுபட்டு போன மின்னஞ்சல்  ஓபல் நிறுவனம் குருநால் நிறுவனம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதானி பவர் நிறுவனத்தில் 4.69% பங்குகள் அல்லது பத்தொன்பது சதவீத பங்குகளை ஓபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பரிவர்த்தனை கூட மொரிஷியஸிலுள்ள பிற நிதி நிறுவனங்களைப் போலவே சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஓபல் இன்வெஸ்ட்மென்ட் என்பது மொரிஷியஸைச் சேர்ந்த போலி நிறுவனம். அங்குள்ள, பெருநிறுவன ஆவணங்களை ஆராய்ந்ததில் ஓபலின் நிறுவனத் தலைவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஓபல் நிதி நிறுவனம் பற்றிய செய்திக்கட்டுரைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஊடகங்கள் இந்த நிதி நிறுவனம் எப்படி அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவு வாங்கியது என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை. ஓபல் நிதி நிறுவனத்திற்கு எந்த வலைத்தளமும் இல்லை. அதன் பணியாளர்கள் பற்றிய தகவல்களும் கூட லிங்க்டு இன் தளத்தில் இடம்பெறவில்லை. முதலீடு தொடர்பான மாநாட்டில் நிறுவனம் பங்கேற்றதிற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஓபல் நிறுவனம், பன்மைத்தன்மையோடு பல்வேறு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய

நாட்டுக்குப் போராடிய ராணுவ வீரன், 5 ஏக்கர் நிலத்தைக் காக்க எம்எல்ஏவை எதிர்த்து நின்றால்... சண்டி - ரவிதேஜா

படம்
  சண்டி ரவிதேஜா, சார்மி, அதுல் குல்கர்னி, டெய்ஸி போபனா   ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் சண்டி. அப்படி வரும் நிர்பந்த சூழ்நிலை, அவனது அப்பா மாரடைப்பால் இறந்த காரணத்தால் ஏற்படுகிறது. அப்பாவும், கண் பார்வையற்ற தங்கையும்தான் அவனுக்கு ஒரே சொந்தம். அப்பா இறந்த காரணத்தால் கிராமத்தில் தங்கி தங்கையைப் பார்த்துக்கொண்டு அவளுக்கு மணம் செய்ய நினைக்கிறான். இந்த நேரத்தில் அந்த ஊரில் உள்ள எம்எல்ஏ ராணுவ வீரன் சண்டிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறான். அதை கைப்பற்றி சாலை போட்டுவிட்டால் அருகில் உள்ள தொழிற்சாலையை எளிதாக இயங்க வைக்கலாம் என நினைக்கிறார். இதற்கு அவர் செய்யும் செயல்களும், அதற்கான ராணுவ வீரன் சண்டியின் எதிர்வினைகளும்தான் படம்… நிலம் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் மையக் கதை. நிலத்தை அடிப்படையாக வைத்துத்தான் பார்வைத்திறனற்ற தங்கையை கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என நிர்பந்தம் சண்டிக்கு உள்ளது. பிறகுதான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியும். நிலம் பற்றிய சிக்கல்கள் எழும் நேரத்தில் அவனை இரு பெண்கள் காதலிக்கிறார்கள். ஒருத்தி, உறவுக்காரப் ப

ஊழல் செய்வர்களை பாம் வைத்து கொல்வான் கோட்ஸே! - கோட்ஸே - சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி

படம்
  கோட்ஸே சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி, பிருதிவிராஜ் director - gopi ganesh pattaphi ஒரு தொழிலதிபரின் வீட்டில் இந்தி பேசும் கொள்ளைக்காரர்கள்   நுழைந்துவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து கர்ப்பவதியான பெண்ணைக் காக்க வைஷாலி என்ற பெண் அதிகாரி முயல்கிறார். ஆனால் அதற்குள் மேலதிகாரி தலையிட்டு ஒருவனை சுட்டு வீழ்த்த இன்னொருவன் கர்ப்பிணியின் கழுத்தை அறுத்துவிடுகிறான். இந்த சம்பவம் நடந்தபிறகு ஐஸ்வர்யா குற்றவுணர்ச்சி கொண்டு தனது வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார். ஆனால் மேலதிகாரி அதை ஏற்கவில்லை.   பிறகு அவரை   மாநில அரசு உயர் அதிகாரிகள் அவசர வேலைக்காக என்று அழைக்கிறார்கள். அழைத்தால் அங்கு ஒருவர் தான் வைஷாலி   என்ற அதிகாரியிடம் மட்டும்தான் பேசுவேன் என்கிறார். அங்கு பணயக் கைதியாக இருப்பவர், ஐஸ்வர்யாவின் துறை தலைவர்.   தன்னை கோட்ஸே என்று சொல்லிக் கொண்டு முக்கியமான முதல்வருக்கு நெருக்கமான ஆட்களை கடத்தியவர் யார், அவரது உண்மையான அடையாளம் என்ன, ஏன் அப்படி கடத்தி சிலரைக் கொல்கிறார், பிறரை சித்திரவதை செய்கிறார் என்பதே படத்தின் முக்கியமான பகுதி. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் அவர்களது கனவு

இரண்டாவது வாய்ப்பில் அரசியல்வாதியை திட்டம்போட்டு பழிவாங்கும் அரசு வழக்குரைஞர்! அகெய்ன் மை லைஃப்

படம்
  அகெய்ன் லைஃப் தென்கொரிய டிவி டிராமா எஸ்பிஎஸ்  லீ ஜூன் ஜி, கிம் ஜி யூன், கையாங் இயாங் இயக்குநர் ஹன் சுல் ஹூ வெப் நாவல் எழுத்தாளர் லீ ஹா நால் ராகுட்டன் விக்கி ஆப் சியோயில் உள்ள அரசு வழக்குரைஞர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர், கிம் ஹியூ வூ. இவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரான அதிகாரம் பொருந்திய ஜே டே சியோப் என்பவரை   விசாரணைக்கு அழைக்கிறார். அவருக்கு எதிரான சாட்சியத்தை வழக்குரைஞர் தக்க வைத்த தைரியத்தில் இதை செய்கிறார். ஆனால், சாட்சியத்தை கொன்றதோடு, தன்னை வழக்குரைஞர் நிறுவனத்திற்கு வரவைத்த கிம் ஹியூ வூவையும் இரக்கமே இல்லாத அடியாள் மூலம் அடித்து   போதை ஊசி போட்டு கொன்று கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச செய்கிறார் ஜே டே சியோப். இது முதல் எபிசோடில் நடந்துவிடுகிறது. கதை அம்புட்டுத்தானா என தோன்றுகிறதா அங்க தான் முக்கியமான ட்விஸ்ட்.   இறந்துபோன வழக்குரைஞர் கிம்மின் உடலில் இருந்து ஆத்மா தனியாக பிரிந்து இறந்துபோன கட்டிட மொட்டை மாடியில் நிற்கிறது. தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அப்போது, அவரது அருகில் சிவப்பு உடை அணிந்த பெ

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள்!

  லத்தீன் அமெரிக்க நாடுகள் பறக்கும் சிவப்புக்கொடி லத்தீன் அமெரிக்க நாடுகளில் மில்லினிய ஆண்டு தொடங்கி இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வென்று வருகின்றன. இங்குள்ள நாடுகள் மெக்சிகோ, ஹோண்டுராஸ், கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி, பொலிவியா, அர்ஜென்டினா. மெக்சிகோ ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரோடர் 2018 போதைப்பொருட்களை ஒழிப்பதாக சொல்லி நாட்டின் அதிபரான இடது சாரித் தலைவர். இந்த வகையில் முதல்முறையாக அதிபரான முதல் இடதுசாரி இவரே. இருபது ஆண்டுகளாக இவரே மெக்சிகோவை ஆள்கிறார். அர்ஜென்டினா ஆல்பெர்டோ ஃபெர்னான்டெஸ்   2019 சற்று மையமான இடதுசாரி தலைவர். பொருளாதார சீரற்ற நிலையில் நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு கடுமையான போட்டியில்தான் வென்று அதிபரானார். பொலிவியா லூயிஸ் அர்சே 2020 மார்க்சியர். தற்போது அதிபராக உள்ளவர் முந்தைய காலத்தில் ஈவோ மொராலெஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர். சிலி கேப்ரியல் போரிக் 2021 36 வயதில் நாட்டின் அதிபரான சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து ஒருவர் வாழவே அதிகம் செலவு செய்யும் நிலையை மாற்றுவதாக சொல்லி

பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

படம்
  மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்...  கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம்.    ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான்.  ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய

அதானியால் கையகப்படுத்தப்படும் என்டிடிவி - முடிவுக்கு வரும் டிரெண்ட் செட்டிங் சேனலின் யுகம்!

படம்
            இந்திய ஊடகங்களின் முன்னோடி என்டிடிவி! இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன்பெற்று, அதைக்கட்டக்கூட நினைக்காத தொழிலதிபர். அவருக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, ஹேர்கட் என்ற பெயரில் கடன் தள்ளுபடியை ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அப்படிப்பட்ட தகைமை சான்ற தொழிலதிபர் தான் கௌதம் அதானி. அவரின் எண்ணெய், பருப்பு, அரிசி வகைகளால் புழங்காத இந்தியாவின் நகரங்கள் கிடையாது. அவர் தற்போது என்டிடிவிக்கு கடன் கொடுத்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் என்டிடிவியை மறைமுகமாக கைப்பற்றியுள்ளார். குறிப்பாக ஏன் என்டிடி டிவி. இந்த டிவி தான் தற்போது மத்திய அரசுக்கு எதிரான என்பதை விட உண்மையை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து வருகிறது. யாருக்கு என்று கேட்கிறீர்களா? சிறு, குறு நகரிலுள்ள ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான். என்டிடி டிவி எதனால் முக்கியத்துவம் பெறுகிறது? 1984ஆம் ஆண்டு ராதிகா ராய், பிரனாய் ராய் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் இது. தொடக்கத்தில் டிவி சேனல்களுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தது. குறிப்பாக தூர்தர்ஷனில் தி வேர்ல்ட் திஸ் வீக் என்ற உலக நிகழ்வுகளை அலசும் நிகழ்ச்

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை சேர்த்து சாதித்த பிராந்திய கட்சிகள்!

படம்
  தேர்தல் பத்திரங்களில் நிதி சேர்த்த அரசியல் கட்சிகள்! 2020-2021ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையை ஐந்து பிராந்திய கட்சிகள் வெளியிட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி, 2020-21  காலகட்டத்தில் மட்டும் 218.5  கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர தொகை பற்றி  ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு ஏடிஆர் செய்தி வெளியிட்டுள்ளது.  திமுக -218.5 கோடி தெலுங்குதேச கட்சி - 54.8 கோடி அதிமுக -42.4 கோடி ஐக்கிய ஜனதாதளம் - 24.3 கோடி தெலங்கான ராஷ்டிர சமிதி -22.3 கோடி   மொத்தமாக இந்த கட்சிகள் பெற்ற தொகை 434.3  கோடி. இது கட்சிகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீதமாகும். தன்னார்வ நிதியாக கட்சிகள் பெற்றுள்ள தொகை 250.60 கோடி. வருமானத்தில் இதன் அளவு 47.34 சதவீதம். பிற வழியில் பெற்ற நிதி சதவீதம் 23.9 சதவீதம்.  மொத்தமுள்ள 31 கட்சிகளில் 5 கட்சிகள் மட்டும்தான் நிதி பற்றிய தகவலை வெளியே கூறியுள்ளன. 17 பிராந்தியக் கட்சிகள் தமது நிதியை செலவிடாமல் வைத்திருப்பதையும் கூறியுள்ளன.  டைம்ஸ் ஆப் இந்தியா