இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த வரலஙற்றை சொல்லும் நூல்! - புதிய புத்தகம் அறிமுகம்

படம்
                      பெ ஸ்ட் ஷார்ட் ஸ்டோரிஸ் எவர் டெர்ரி ஓ பிரையன் வெஸ்ட்லேண்ட் ரூ .199 உலகம் முழுக்க புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 41 சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . இதனை எழுத்தாளர் ஆசிரியர் டெர்ரி ஓ பிரையன் தொகுத்துள்ளார் . மொழிவளமும் , உணர்ச்சிகரமும் கொண்ட புதிய பாணி கதைகள் இதில் உள்ளன . எட்கர் ஆலன்போ எர்னஸ்ட் ஹெமிங்வே , சோமர்செட் மாகாம் , வர்ஜீனியா உல்ப் ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன . சுலை ஜான் கிரிசம் ஹாசெட் ரூ .699 17 வயது நிரம்பிய சாமுவேல் சுலைமான் தெற்கு சூடானைச் சேர்ந்தவன் . இவனுக்கு பேஸ்கட் பால் விளையாட்டில் திறமை இருக்கிறது . இவனை கவனித்த பயிற்சியாளர் அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் . அவன் அமெரிக்காவிற்கு சென்றானா , விளையாட்டில் சாதித்தானா என்பதே கதை . சிங் ஆப் லைப் பிரியா சருக்காய் வெஸ்ட்லேண்ட் ரூ .499 தாகூரின் கீதாஞ்சலி போலவே இதுவும் ஆன்மிகத்தை தேடும் முயற்சிதான் . தனக்குள் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை உள்ளடக்கி நூல் உருவாகியுள்ளது . இந்த உலகத்தை மீண்டும் தாகூர் போல

பேருந்து விபத்தில் இறந்தவனின் முடிவு தற்செயலானதா? - ஆராய்ந்து நீதியை நிலைநாட்டும் கணேஷ் வஸந்த் - நிஜத்தைத் தேடி - சுஜாதா

படம்
                நிஜத்தை தேடி சுஜாதா விசா பதிப்பகம் ப .112 ரூ . 55 சுஜாதா எழுதி பல்வேறு மாத , வார இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது . அவரின் எழுத்தில் அனைத்து கதைகளுமே படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன . இதில் விதி என்ற கதை மட்டுமே குறுநாவல் எல்லையைத் தொடுகிறது . பிற கதைகள் அனைத்துமே சுவாரசியமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன . விதி கதை , சுஜாதாவின் ஆஸ்தான கணேஷ் வஸந்த் துப்பறிகிறார்கள் . பெங்களூரு செல்லும் பஸ்ஸில் தாமோதர் என்பவர் திடீரென புக் செய்து பயணப்படுகிறார் . ஆனால் பஸ் திடீரென விபத்தாகி பலரும் உயிரிழக்கின்றனர் . இந்த நேரத்தில் கணேஷ் தனது வேலையில் முழ்கியுள்ளான் . அப்போது அவனை சந்திக்க வரும் பெண்மணி , தாமோதர் இறங்கிய உணமையை விசாரிக்க வேண்டும் என்கிறாள் . உண்மையில் பஸ் விபத்து என்பது தற்செயலா , திட்டமிட்டு தாமோதர் கொல்லப்பட்டாரா எ்ன்பதை வஸந்த் சரச சல்லாப குணத்துடன் எப்படி கண்டுபிடிக்கிறார் . அதற்கு கணேஷ் எப்படி திருப்புமுனையாக உள்ளார் என்பதை விளக்குகிறது கதை . இதுதவிர பிற கதைகள் அனைத்து சிறு திருப்புமுனைகளுடன் எழுதப்பட்ட கதைகள்தான் ஒ

அன்பின் ஈரம் குறையாத சிறுகதைகள்! - நாபிக்கமலம் - வண்ணதாசன்

படம்
            நாபிக்கமலம் வண்ணதாசன் இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன . இதில் வண்ணதாசன் கதைகளில் இல்லாத சிறப்பு என்னவென்றால் , இதில் இடம்பெறும் பாத்திரங்கள் முன்னர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைகளுக்கு யாரையும் குறை சொல்லமாட்டார்கள் . ஆனால் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மனிதர்கள் தங்களுக்கு பிடித்ததைப் போலவே பிடிக்காத விஷயங்களையும் பகிர்கிறார்கள் . அடுத்தவர்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படுத்த நினைக்கிறார்கள் . ஒருவரின் உலகில் ஒருவர் மட்டுமே இருந்தால் போதுமா என நாபிக்கமலத்தில் சங்கரபாதம் கேட்கும் கேள்வி முக்கியமானது . அவரது மனைவி அவரின் தோழிகளின் மீதும் , அவர் மீதும சந்தேகப்படுவதால் அவரது வாழ்க்கை நரகமாகிறது அதனை அவர் எங்கும் வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் அவரது வாழ்க்கை சுதந்திரமானதாக இல்லை . வருத்தம் தொய்ந்ததாக மாறுகிறது . காசிராஜன் , தாயம்மளா , அகஸ்திய அத்தை , தனுஷ்கோடி அண்ணன் , பிரேமா , சரவணன் என பல்வேறு கதாபாத்திரங்கள் உறவுகளுக்கு ஏங்குபவர்களாகவும் , ஒருவரின் கரம் பற்றி பேசுவதில் தங்கள் ஆன்மாவை மறக்கிறவர்களாகவும் உள்ள

குரங்கு வளர்க்கும் பெண்ணை நேசிக்கும் காதலனின் காதல் கதை! - குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன்

படம்
                      குரங்கு வளர்க்கும் பெண் தமிழில் மோகனரங்கன் லியனோர்டு மைக்கேல்ஸ் எழுதியுள்ள கதைதான் நூலின் தலைப்பாக உள்ளது . இந்த அமெரிக்க சிறுகதையாளரின் கதையில் உள்ள காதலும் , காமமும் பித்தேறிய நிலையில் உள்ளது . வேலை காரணமாக நகருக்கு வரும் பியர்டு , விலைமாது ஒருவளின் மீது காதல் கொள்வதுதான் கதை . அந்த காதலும் , இதயத்துடிப்பு போல அதனூடே பரவி வதைக்கும் காமமும் அவனை நெருப்பாக சுடுகிறது . இதற்காக அவன் செய்யும் விஷயங்கள்தான் கதையை நடத்திச்செல்கின்றன . காதலும் இரு பாலினத்தவருக்கான உறவுமுறைச்சிக்கலும் உரையாடலில் வெளிப்படுகிறது . மயக்கத்தில் இருப்பதுபோலான ஒன்றாக இருக்கும்போது தெரியாத வேறுபாடுகள் அவர்கள் உறவு கொண்டபின் வெளியாகின்றன . அது இருவருக்கும் கசப்பு ஏற்படுத்த பிரிகிறார்கள் . ஆனால் பியர்டுவினால் இங்கரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை . இந்த மயக்கம் அவனை என்ன செய்யத் தூண்டுகிறது என்பதுதான் கதையின் மையம் . யுவான் சுய்ங் சுய்ங் எழுதிய காதலனின் காது என்ற கதை பெண்களின் மனதைப் பேசியவகையில் முக்கியமான கதை . தாய்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் யுவான் . உறவு கொள்ளும்

பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு ஒரு பயணம்

    பயணிகள்  பேருந்தில்  பாலச்சந்திரனோடு    ஒரு பயணம்                                                                                                 ஏகாங்கி சென்னையில் இருந்த வேலையைவிட்டு வந்து ஒரு வாரமாகியிருந்தது . மனம் முழுவதும்   அந்த வேலையின் கசப்பை ஆழமாக இறங்கிட மெல்ல கனமாகிகொண்டிருந்தது . இலக்கியவாதியாக இருந்து பின் சிறந்த வியாபாரியாகி பல தொலைக்காட்சி நேர்காணல்களில் சமூக அக்கறையை வெளிப்படுத்தி மேதாவித்தனத்தை செவ்வனே உரக்க தலையாட்டி அறைகூவுபவர் நான் வேலை செய்த இதழின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் .! நான் வேலைக்கு சேரும் இடங்களிலெல்லாம் இந்த இருவேட நாடகங்களை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை . இனி வேறு ஏதாவது வேலை தேடவேண்டும் என்ற நினைத்து   மெல்ல   இமைகளை திறந்தபோது , வெளிச்சம் அதிகமாகிக்கொண்டிருந்தது வானில் . ஏறுவெயில் மெல்ல தன்பரப்பை சுவற்றில் அதிகரித்தபடி இருந்தது . தென்னந்தோப்பில் காக்கைகள் குரலெழுப்பி ஊருக்கே இவைதான் அலாரமோ என நினைக்க வைத்துக்கொண்டிருந்தன . எழுவதற்கே மிகச் சோம்பலாக இருந்தது . ஈரோட்டில்