இடுகைகள்

சைக்கோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது தொழிற்சாலை சகாக்களுக்கு காபியில் விஷம் கலந்த சைக்கோ கொலைகாரர் - கிரகாம் யங்

படம்
                கோடரிக் கொலைகள் ! பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அமெரிக்கர்கள் , பண்ணை வீட்டில் வசித்தனர் . அவர்கள் அங்கு கத்தி , கோடரி , கடப்பாரை என பல்வேறு கருவிகளை வைத்துக்கொண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தனர் . இதனால் அங்கு நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களிலும் கோடரி , கத்தி ஆகியவை முக்கியமான கொலை பொருட்களாக இருந்தன . இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ? இப்போதும் கூட கோபம் வரும்போது கையில் கிடைப்பதை எடுத்து பிறரை அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே ? 1836 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ராபின்சன் என்ற செல்வச் செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர் , கொலையாளியாக மாறினார் . அப்போது நியூயார்க்கில் புகழ்பெற்றிருந்த விலைமாது ஹெலன் என்பவரை கோடரி மூலம் மண்டையை பிளந்து கொன்றார் . இதனால்தான் ரிச்சர்ட் அந்த நகரில் பிரபலமானார் . முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெல்லா குன்னஸ் என்ற பெண்மணி , ஒரு டஜன்பேர்களுக்கு மேல் கோடரியால் வெட்டி கொன்றார் . அப்படிதான் இந்த கொலைகள் வெளியானபோது ஊடகங்கள் பேசிக்கொண்டன . 1940 களில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக் பேர்ட் என்பவர் , கோடரியால் ஏராளமான வெள்

உடலை கீறி, துண்டாக நறுக்கி இன்பம் அனுபவித்த கொலைகாரர்கள்

படம்
        அடையாளம் , சடங்குகள் தனது மனதில் தோன்றும் கற்பனை , அதன் உந்துதலில் கிடைக்கும் வாய்ப்புகளால் ஒருவர் கொலை செய்கிறார் . அதேசமயம் ஏதாவது மெசேஜ் சொல்லியே ஆகவேண்டும் என யோசிக்கும் ஆட்களும் இந்தவகையில் உண்டு . இவர்கள் சாத்தானின் வடிவம் , கற்கள் , பேப்பர் என எதையாவது மடித்து கொலை செய்யப்பட்டவரின் உடலில் திணித்துவைத்துவிட்டு சென்றுவிடுவார்கள் . இவர்கள் , இதன் மூலம் காவல்துறைக்கு தங்களது அடையாளத்தை சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அடுத்து நடக்கும் கொலைகளையும் கூட ஒருவர் கண்டுபிடிக்கலாம் . இதெல்லாம் துப்பறியும் ஆட்களின் திறமையைப் பொறுத்தது . ஜோடியாக் கில்லர் என்பவர் வட்டம் வரைந்து அதில் சிலுவையை வரைந்து விட்டு சென்றார் . போஸ்டனைச் சேர்ந்த கொலைகாரர் பிறந்த நாள் ரிப்பன் வடிவத்தை வரைந்துவிட்டு செல்வது வழக்கம் . ராமிரெஸ் சாத்தானைக் குறிக்கும் அடையாளத்தை வரைந்தார் . க்ரீன் ரிவர் கில்லர் என்பவர் , பெண்களின் யோனியில் பிரமிட் வடிவ கற்களை திணித்து வைத்தார் . இப்படி வரைவது ஒருவகையில் இவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டவும் , ஊடகங்கள் நாயகர்களாக அல்லது தீய சக்தி என கூறப்படக்கூட காரண