இடுகைகள்

சோதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளியில் குழந்தைகள் பிறக்குமா?

படம்
நேர்காணல் டாக்டர் எக்பர்ட் எடில்புரோக் விண்வெளியில் குழந்தை பிறக்கும் என்கிறீர்களே எப்படி சாத்தியம்? பதினைந்து ஆண்டுகளில் சாத்தியம். ஐவிஎஃப் முறையில் குழந்தைகளை விண்வெளியில் பிறக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். இச்சோதனைகளை ஐந்து ஆண்டுகளில் முடித்தால், விரைவில் குழந்தைகளை நாங்கள் விண்வெளியில் பெற முடியும் என நிரூபிப்போம். நாங்கள் சொல்வதை நீங்கள் பேராசை என்று கூட நினைக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. குழந்தை அங்கு பிறக்கவில்லையென்றால், உங்களால் அங்கு வாழவும் முடியாது. எனவே இதற்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். நிச்சயம் நீங்கள் கேலி செய்வீர்கள். ஆனால், மருத்துவம் ரீதியாக பல்வேறு தடைகள் இருக்கின்றன. இவற்றையும் தாண்டி நாங்கள் சாதிப்போம். பெண்களை அதுவும் கர்ப்பிணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது ஆபத்தானது இல்லையா? நிச்சயம் ஆபத்து உள்ளது. ஆனால் நாம் இந்த சோதனையை செய்யாமல், குழந்தைகளை பிறக்க வைக்க முடியாது. இதுவும் இப்போதே நடைபெறப்போவது இல்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் இவை நடந்தேறும். படிப்படியாக நாங்கள் இதைச் செய்கிறோம

சிலர் பேசுவதை மட்டும் விரும்பிக் கேட்க காரணம் இதுதான்!

படம்
புத்தக விமர்சனம் உளவியலும் உண்மையும் நூல் ஆசிரியர், பல்வேறு கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் உளவியலாளராக பணியாற்றியுள்ளார். இதில் தான் சந்தித்த விஷயங்களைப் பற்றி ஆழமாக பேசுகிறார். தந்தைக்கு சிறுநீரகம் கெட்டுவிட, மகன் அவருக்கு சிறுநீரகத்தை தானம் தர முன்வருகிறார். சோதனையில் மகனுடைய சிறுநீரகம் பொருந்துகிறது. இதன் விளைவாக, அவருடைய உயிரியல் ரீதியான மகன் அவரில்லை என்ற உண்மையும் வெளிவருகிறது.இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். செய்தி சொல் கிளியே! சிலர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கிறோம். சிலர் சொல்ல வந்தால் வேறு பக்கம் கிளம்பி ஓடிவிடுகிறோம். அதற்கு என்ன காரணம்? அதைத்தான் இந்த நூல் கூறுகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை பிரெக்ஸிட் முதற்கொண்டு எடுத்து வைத்து கூறுகிறார்கள். படித்து பார்த்து வாழ்க்கையில் முயற்சித்து பாருங்கள். உதவக்கூடும். பழக்கங்கள் எனும் சங்கிலி! எப்படி பழக்கங்களுக்குள் நமது மனம் சிக்குகிறது? அதிலிருந்து வெளியே வருவது எப்படி? வாழ்க்கையை உருப்படியாக வாழச்செய்யும் பழக்கங்கள் எவை என ஆசிரியர் நம் கைபிடி

விளையாட்டை நேர்மையாக விளையாட உதவுகிறோம்!

படம்
மினி பேட்டி! ஆலன் பிரெய்ல்ஸ்போர்டு, ஆய்வக இயக்குநர் இங்கிலாந்து விளையாட்டு வீரர்களை எப்படி சோதிக்கிறீர்கள்? கோடைக்காலத்தில் எங்களுக்கு வரும் மாதிரிகள் குறைவு. ஆனால் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போது தினசரி 250 மாதிரிகளைச் சோதிப்போம். கடந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் மாதிரிகளை சோதித்தோம். ரத்தம், சிறுநீர் ஆகிய மாதிரிகளின் மூலம் சோதனைகள் செய்கிறோம். இன்று பெரும்பாலும் சிறுநீர் மாதிரிகள் அதிகம் வருகின்றன. இதில் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறீர்கள்? சோதனைகளை சரியாக செய்வதற்கான நேரம்தான். வேறென்ன? போட்டிகளில் பங்கேற்றும் வீர ர்களை சரியான முறையில் சோதிக்க நிறைய நேரம் தேவை. அப்போதுதான், ஏமாற்றும் வீரர்களை சரியான முறையில் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செய்கிற இந்த பணியால் விளையாட்டி கவனிக்கிற ஆர்வத்தை இழந்து விட்டீர்களாழ நான் விளையாட்டு வீரன் அல்ல. என்னுடைய பணி ஆய்வு செய்வதுதான். நான் இதில் மோசடி செய்யும் வீர ர்களை அடையாளம் காட்டி வருகிறேன். விளையாட்டை விதிமுறைகளுக்குட்பட்ட விளையாட்டாக இருக்க உதவுகிறோம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்  

பொய் சொன்னால் போலீஸ் கண்டுபிடிப்பது இப்படித்தான்!

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் மிஸ்டர் ரோனி பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்க சார் என்று சொன்னால் எந்த குற்றவாளியும் தெரிந்த விஷயங்களை சொல்வதில்லை. எனவே குறைந்தபட்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளுமளவு சுதந்திரம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மாஜிஸ்டிரேட் கூட மாவுக்கட்டை பார்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாயா என்று கேட்பதில்லை. அவருக்கும் பழகி யிருக்கும். நாம் கூறப்போவது சற்று ஜென்டிலமேன் தனமான விசாரணை முறை. இதில் இன்னொரு வகைதான் உண்மை கண்டறியும் சோதனை. இதில் நம் இதயத்துடிப்பு, கண்கள், நாடி என பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு டிமிக்கி கொடுக்கும் விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு ஜான் அகஸ்டஸ் லார்சன், லை டிடெக்டர் கருவியைக் கண்டுபிடித்தார். 1. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தொடர்பான விவரங்களை முதலில் ஆராய்ந்து, கேள்விகளைத் தயாரிப்பார்கள். இக்கேள்வி முழுக்க குற்றம் சாட்டப்பட்டவரை பல்வேறு அடுக்குகளாக ஆராய்வதாக இருக்கும். ராபிட் ஃபயர் ரவுண்ட் போல கேள்விகளை எறிவார்கள

உலகம் அழியக் காரணங்கள் என்ன? - புத்தக அறிமுகம்

படம்
புத்தக விமர்சனம் இந்த உலகம் அழியப்போகிறது? முதல் வேலையாக என்ன செய்வீர்கள்? உங்களைக் காப்பாற்றிக்கொண்டு அடுத்த வேலையாக எப்படி வீடு, குடும்பம் , நட்பை காப்பாற்றுவீர்கள்? அதைத்தான் இந்நூலில் ஆசிரியர் வால்ஸ் சொல்கிறார். டைம் பத்திரிகையில் பணிபுரிந்துள்ளவரான வால்ஸ், நாம் இன்று புதிதாக உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு, ஆன்டி பயாட்டிக் முதற்கொண்டு விளக்கி, அவை நம்மை காக்குமாக என்று பேசுகிறார். உலகம் அழியும் என்றால் அதற்கான காரணம் எதுவாக இருக்கும்? உடனே நமக்கு கற்பனை விரியலாம். டெர்மினேட்டர் படம் ரோபோக்கள் சிந்திக்க தொடங்கினால் மனிதர்கள் அழிவதைப் பேசுகிறது. அதைப்போலவே அணு ஆயுதப்போர், சூழல் அழிவு, எரிமலை வெடிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் ஆசிரியர். பத்திரிகையாளர் என்பதால் அனைத்து விஷயங்களுக்கும் ஏராளமான ஆதாரங்களை முன்வைத்து பேசுகிறார். அறிவியல்பூர்வமாக உலகின் முடிவு என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டுமா? இந்த புத்தகத்தை பிடிஎஃப் தளத்தில் கள்ளத்தனமாக தரவிறக்கியேனும் படித்துவிடுங்கள். மனதில் ஏற்படும் மூர்க்கத்தனமான, பிடிவாதமான, குரூர எண்ணங்கள் ஆகிய

மனிதர்களை சோதிப்பதில் ஏன் தடைகள்?

படம்
மேரிலாண்டில் ஆராய்ச்சியாளர் சோதிக்கிறார் அறிவியல் சோதனைகளின் எதிர்காலம்? புற்றுநோய்க்கு எதிராக நடைபெற்ற ஐந்து சோதனைகள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதன் பொருள், ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் விரக்தி அடைந்துவிட்டார்கள் என்பதல்ல. மருந்துகளைச் சோதித்துப் பார்க்க நோயாளிகள் முன்வரவில்லை. 1975 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பிழைக்க வாய்ப்பு குறைவு. இன்று அதன் சதவீதம் 36 மாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தடுமாறி வருகிறார்கள். காரணம், மனிதர்களின் உடல்களில் சோதிக்க சரியான ஏற்பாடுகளை இதுவரையிலும் செய்யவில்லை. இதனால் ஆராய்ச்சிகளை தொடங்கி முன்னேறினாலும் அதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடிவதில்லை. காரணம், விலங்குகளைச் சோதித்து மனிதர்களை சோதிக்கும் நிலையில் நோயாளிகள் ஆய்வுகளுக்குக் கிடைக்கவில்லை. பின் எப்படி மருந்துகள் சந்தையில் கிடைக்கும்? அரசின் விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. எனவே லெவைன் புற்றுநோய் கழகம், புற்றுநோய் ஆராய்ச்சி நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் அமெரிக்காவின் ஃஎப்டிஏவை அணுகி, விதிகளை தளர்த்த கோரியுள்ளன. இந்த ஆண்டு பைடன்

கண்கள் பொய் சொல்கிறதா? - புதிய ஆராய்ச்சிகள்!

படம்
பொய் சொல்லும் கண்கள்? போலீசில் சில பெயர் பெற்ற ஆட்கள் உண்டு. கண்ணைப் பார்த்தாலே தெரியுமேப்பா? திருடனா இல்லையான்னு... இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக தப்பிப்பார்கள். தற்போது ஜப்பானில் குற்றவாளிகளின் கண்களைப் பின்தொடர்ந்து உண்மை அறியும் சோதனையைச் செய்து வருகின்றனர். இதனை சிஐடி என சுருக்கமாகச்சொல்கின்றனர். இதன்மூலம் குற்றம்நடந்த இடம், ஆயுதம் ஆகியவற்றை அறிய முயற்சிக்கின்றனர். ஆனால் இன்னும் இது மக்களின் முகத்தை அறியப் பயன்படவில்லை. ஸ்காட்லாந்தில் மற்றொரு ஆய்வு, வேறுவிதமாக நம்மை ஈர்க்கிறது. இதில் குறிப்பிட்ட புகைப்படங்களை குற்றவாளிகளைப் பார்க்க வைக்கிறார்கள். அவர் தொடர்புடையவரா, இல்லையான என்றால் அதற்கான பட்டன்களை அழுத்த வேண்டும். கூடவே கண்களின் நகர்வும் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் பெயர் கான் ஃபேஸ் புராஜெக்ட். இதனை டாக்டர் அலிசா மிலன் செய்கிறார். இதற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஸ்டிர்லிங் நிதியுதவி செய்கிறது. இதில் தெரிந்த முகங்களைப் பார்த்து உண்மையை மறைக்க முயன்றால் சோதனையில் தெரிந்துவிடும். ”காவல்துறையில் நடத்தப்படும் சோதனையில் சிலர் வேண்டுமென்றே அல்லது பயத்தால்

சைக்கோ கொலைகாரர்கள் அசுரர்களா?

படம்
dahmeraesthetics\pinterest குழந்தைகளை கற்பழித்துக் கொன்று, உடலையும் எரித்துவிட்டு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் ஒருவரால் இருக்க முடிகிறது. பின்னர் போலீஸ் அவரை கைது செய்துவிட, பெயிலில் வந்தவர் அவர் செய்த குற்றத்தைப் பற்றி பேச கோபம் வருகிறது. அம்மாவையும் அடித்தே கொல்கிறார். இந்த செய்தியை நாளிதழில் படித்திருப்பீர்கள். இப்போது உங்கள்மனதுக்குள் என்ன விஷயம் ஓடுகிறது? இவன் மனிதனே அல்ல, மிருகம். என்பதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சைக்கோ கொலைகாரர்களின் சிக்னேச்சர் கொலைமுறைகள் கூட மனதில் ஓடலாம். ஆனால் இவர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என யோசித்தால்,  உங்கள் ஐக்யூவிற்கு வாழ்த்துகள் சொல்லலாம். 49 சைக்கோ கைதிகளின் மூளை செயல்படும் விதத்தை அறிய மருத்துவர், ஜோஸ்வா பக்ஹோல்ட்ஸ் முயற்சித்தார். நாம் சைக்கோ கொலைகாரர்கள், உடலிலும் உள்ளத்திலும் உணர்ச்சிகளே அதிர்வுகளே இல்லாதவர்கள் என நினைக்கிறோம் . அது தவறு என்று தில்லாக அறிவித்தே ஆராய்ச்சியைத் தொடங்கினார். டெமோ இதுதான். கைதிகளுக்கு, சிறியளவு பணத்தைக் கொடுத்து  அதை எப்படி செலவு செய்ய முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் சோதனை. இ