இடுகைகள்

தத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வை பிரதிபலிக்கும் அற்புதமான ஹைகூ கவிதைகள்! - ஜப்பானிய ஹைகூ - தி.லீலாவதி

படம்
  ஜப்பானிய ஹைகூ தமிழில் தி.லீலாவதி அன்னம் பதிப்பகம் தமிழிணையம் கவிஞர் அப்துல் ரகுமான் வழிகாட்டலில் ஹைகூ கவிதைகள் மீது ஆர்வம் வந்து எழுத்தாளர் தி.லீலாவதி மொழிபெயர்த்துள்ள ஹைகூ கவிதைகள் நூல். ஹைகூ கவிதைகள் மூன்றடி கொண்டவை. இதில் மிக குறைவான வார்தைகளில் வாழ்க்கை, சோகம், வறுமை, காதல், ஆச்சரியம், வெறுமை ஆகியவற்றை எளிதாக உணர்த்திவிட முடியும். தமிழ் மொழிபெயர்ப்பில் கவிதைகள் சிறப்பாகவே உள்ளன. தினத்தந்தி, மாலைமதி, தேவியின்   கண்மணி, பாக்யா வரை அனைத்து நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ்களிலும் ஹைகூ வெளியாகியுள்ளது. வெளியாகிக் கொண்டும் இருக்கிறது. இதன் இறுக்கமான வடிவம், குறைந்த வார்த்தைகள் ஆகியவை இதன் பலம். ஜப்பானிய ஹைகூவில் புகழ்பெற்ற ஹைகூ கவிதைகளை மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.   பாஷா, இஸ்ஸா ஆகியோரின் கவிதைகளை வாசிக்க உணர சிறப்பாக இருக்கிறது.   உதிர்ந்து வீழ்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறதோ ஓ.. வண்ணத்துப்பூச்சி என்ற ஹைகூ அற்புதமானது. இந்த கவிதை கவிஞர் அப்துல் ரகுமானை ரசிக்க வைத்துள்ளது. எனவே, அவர் நூலை லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார். இதேபோல

அரசு, அதிகாரம் கட்டுப்படுத்த முடியாத மனத்தை அடைவது சாத்தியம்தான்! ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி ஜே கே கிருஷ்ணமூர்த்தி பெரும்பாலான மாணவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை ஆராய்ந்து விசாரணை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கேள்வி  கேட்பதை பெற்றோர் ஆசிரியர் ஆகியோர் ஊக்குவிப்பதில்லை. பிள்ளைகள் கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவர்களாக அதிருப்தி கொண்டவர்களாக இருப்பது பெற்றோர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பிள்ளைகள் இனி எப்போதும் கேள்வி கேட்காத முறையில் யோசிக்க தெரியாத அளவில் அவர்களை மாற்ற முயல்கிறார்கள். கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் புறக்கணித்து அவர்களை மந்தமான மனிதர்களாக மாற்றுகிறார்கள். தங்களது வாதங்களை பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் முன்வைக்க கலாசாரம். தொன்மையான பாரம்பரியம், சமூக மதிப்பு ஆகியவற்றை ஆதாரமாக காட்டுகிறார்கள். இதில் வயதானவர்கள் சிறப்பாக செயல்பட்டு பிள்ளைகளை மந்தமானவர்களாக மாற்றுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர் மேற்சொன்ன முறைகளை கைவிட்டு பிள்ளைகளை, மாணவர்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும். சிறுபிள்ளைகள் உயிருடன் வாழ்கிறார்கள் என்றால் அதிருப்தி கொண்டவர்களாக அதேநேரம் நம்பிக்கையுடன்தான் இருக்கமுட

சுதந்திரமான மனதை பெறுவது எப்படி? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கலாசாரங்களைப் பின்பற்றும் சமூகத்தில் இருந்துகொண்டு நாம் எப்படி சுதந்திரமான மனதைக் கொண்டிருப்பது? முதலில் சுதந்திரமாக சிந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். வானில் பறவை பறப்பது போல, ஆற்றில் நீர் நுரையுடன் பெருகி பாய்வது போல உங்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். சுதந்திரமடைவதற்கு உங்களிடம் இப்படி ஒரு வேட்கை உண்டா? அப்படி இருந்தால் எது உங்களை தடுத்துவிடும்? சமூகம், பெற்றோர்   உங்களை மாற்றுவதற்கு முயல்வார்கள். அவர்களை எதிர்க்க முடியுமா? அதை செய்ய உங்கள் மனதில் உள்ள பயம் உங்களைத் தடுக்கிறது. எனவே, உங்கள் வெளியிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்க்க முடியவில்லை. உங்களைச்சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயம் உங்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உங்களை சுதந்திரமடைவதிலிருந்து தடுக்கிறது. இதனால்தான் பெற்றோர், சமூகத்தின் அழுத்தங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வது நடக்கிறது. நான் பட்டினியாக கிடந்தாலும் அழுகி கிடக்கும் சமூகத்திற்கு எதிராக போராடுவேன் என்று உங்களால் கூறமுடியுமா, எது நடந்தாலும் எத்தனை சவால்கள் வந்தாலும் நான் தட

கடவுள் ஆணா, பெண்ணா, ஏன் வறுமை, மகிழ்ச்சி எங்கே, சமூகத்தின் விதிமுறை - ஜே கிருஷ்ணமூர்த்தி பதில்கள்

படம்
  ஜே கே ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   பயமில்லாத நிலை என்ற பழக்கத்தை நாம் எப்படி பெறுவது ? நீங்கள் பயமில்லாத நிலை என்பதை பழக்கம் என்று கூறுகிறீர்கள். அதை சரியாக கவனியுங்கள். பழக்கம் என்பது தினசரி திரும்ப திரும்ப செய்வதன் மூலம் உருவாகிறது. பயமில்லாத நிலை என்பது பழக்கங்களில் ஒன்றா? இல்லை. வாழ்க்கை, மரணம் என இரண்டையும் நேரடியாக சந்திக்கும்போதுதான் பயமற்ற நிலை உருவாகும். அவற்றை நீங்கள் நேரடியாக பார்த்து அவற்றை ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை பற்றிய பயங்களிலிருந்து சுதந்திரம் பெற்று பயமற்ற நிலையை அடைய முடியும். நீங்கள் செய்யும் விஷயங்களை பழக்கவழக்கங்கள் என புரிந்துகொண்டீர்கள் என்றால் அது தவறான புரிதல். பழக்கங்களை அடிப்படையாக கொண்டுதான் வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் செயல்களை செய்யும் எந்திரமாக வாழ்கிறீர்கள் என்று பொருள். பழக்கவழக்கங்களை தினசரி செய்வது வருவது என்பது உங்களை நீங்களே பாதுகாக்க சுவரைச் சுற்றி கட்டிக்கொள்வது போலத்தான். அதனால் நாம் மனதளவில் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், உணர்ச்சிகள

தத்துவங்களின் படி கல்வி அமைந்தால் என்னவாகும்? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கல்வி தத்துவத்தின் படி அமையக்கூடாது! நெறிமுறைகள் குறிக்கோள்கள் ஆகியவற்றின் இயல்புகளை விட அவற்றை எவை என அடையாளம் காண்பது முக்கியம். கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் அவற்றை கற்பிக்கும் முறை என்பது அவர் கற்று அறிந்த விஷயங்களை விட முக்கியம். ஏனெனில் கல்வி கற்கும் முறையில்தான் ஒருவர் இன்னொருவரின் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும். ஊக்குவித்து வளர்க்க முடியும்.ம குறிப்பிட்ட விதிமுறைகள், நெறிகள், நுட்பங்கள் வழி கற்பிப்பது ஆசிரியருக்கு எளிதானதாக மாறுகிறது. இதன் வழியாக மாணவர்களுக்கு அவர் எளிதாக கற்பிக்கலாம். ஆனால் அமைப்பு முறை, கருத்துகளை வறட்சியுடன் கூறுவது ஆகியவை தவிர்க்கப்படுவது அவசியம். கல்வி என்பது குறிக்கோள்கள், லட்சியவாதிகளைக் கொண்டது அல்ல. கல்வி என்பதைக் கற்கும் பிள்ளைகளின் வழி பெற்றோர் அவர்களைப் புரிந்துகொள்வது நடக்கவேண்டும். விதிகளை, நெறிகளை, குறிக்கோள்களை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் சிறு வயதிலேயே மூடிய இயல்பு கொண்டவர்களாக இறுக்கமான மனம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னர், தங்கள் மனதில் எழும் முரண்பாடுகளை சமாளித்து வென

ஓவியத்தில் நிறைய பரிசோதனை முயற்சிகள் அவசியம் ! ராதிகா ஷேக்சரியா - ஓவியக்கலைஞர்

படம்
  ராதிகா ஷேக் சரியா  ஓவியக்கலைஞர் 20 ஆண்டுகளாக ஓவியக்கலைஞராக ராதிகா ஷேக் சரியா பணியாற்றி வருகிறார். கோரக்பூரில் பிறந்து வளர்ந்தவர், சிறுவயதிலிருந்தே கலையின் கைபிடித்து வளர்ந்தவர். ரூமியின் கவிதைகளை ஓவியங்களாக வடிவமைக்க முயன்று வருகிறார். தற்போது அக்ரிலிக் ஓவியங்களை வரைந்து வருகிறார்.  கலை மீதான காதலைப் பற்றிச் சொல்லுங்கள்.  சிறுவயது முதலே பெயின்ட் பிரஷ் மீது காதல் பிறந்துவிட்டது. தொடக்க காலத்தில் நான் நிறைய நிறங்களை பரிசோதித்து வந்தேன். இதில் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்தேன்.  பிறகு எனக்கு திருமணமானபோது நான் மும்பைக்கு இடம்பெயர்ந்தேன். ஜேஜே கலைப்பள்ளியில் ஓவியத்தை பயின்றேன். இதற்குப் பிறகு நான் வரைந்த ஓவியங்களை மிராயா என்ற பெயரில் ஓவியக் கண்காட்சியாக வைத்தேன்.  நடிகை ராகேஸ்வரி என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு, அதில் ஆன்மிகத்தன்மை இருக்கிறது என்று விமர்சனம் செய்தார். அவர்தான் ரூமியை வாசி என்று கூறினார்.  பிறகுதான் என்னுடைய பயணம் ரூமியுடன் தொடங்கியது. அதில் வாழ்க்கைக்கான கொண்டாட்டம், ஒற்றுமை, பேரானந்தம் என நிறைய விஷயங்கள் இருந்தன.  உங்களுடைய ஆன்மிகம் தொடர்பான கலை கண்காட்சி பற்றி சொல

எதைச்செய்தாலும் நம்பர் 1 ஆக இருக்கவேண்டுமா?

படம்
மிஸஸ் டக்ளஸ் வெற்றியாளன் நண்பர்கள் உள்ள எவனும்  தோற்றுப்போனவன் இல்லை. நம்பிக்கை பிரார்த்தனை உங்கள்  நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது. நம்பிக்கைதான் உங்கள் பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும். சிறப்பாக செய் எதைச் செய்தாலும்  அதில் முதலாவதாக இரு. அல்லது சிறப்பாக இரு.  அல்லது புதுமையாகவாவது இரு.  அக்கறை நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து யாரும் அக்கறைப்பட மாட்டார்கள்.  நீங்கள் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும் வரை.  நன்றி: ஆனந்த விகடன் 30.4.20008

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. கார்ல் மார்க்சும் அவருடைய சகாவான ஏங்கெல்சும் ஒன்றிணைந்தும் தனியா