இடுகைகள்

நூல் அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தி பற்றி அறிய நூல்கள் இதோ!

படம்
காந்தி பற்றி வெளிவந்துள்ள நூல்களில் முக்கியமானது. அவருடைய வாழ்க்கை, கொள்கை, அரசியல் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.  காந்தியின் வாழ்க்கை அவருடைய செயல்பாடுகளாலும், அவரை தீவிரமாக விமர்சித்த ஆட்களாலும்தான் நிறைவு பெற்றது. ரிச்சர்ட் அட்டன்பாரோவின் காந்தி படம் மற்றும் அதுதொடர்பான கருத்துகள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் இந்த நூல் பேசுகிறது.  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜூடித் எம் ப்ரௌன், எழுதியுள்ள காந்தியின் சுயசரிதை. காந்தியை சாமியார் அல்லது அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து மாற்றி வாசிப்பவர்களுக்கு நெருக்கமாக காண்பிக்கிறது.                                 1869 -1948 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த காந்தி எதிர்கொள்ளாத நம்பிக்கையும் கிடையாது. வெறுப்பும் கிடையாது. அவரின் வாழ்க்கை, அரசியல், சமூகம் பற்றிய பார்வைகளை சுருக்கமாக முன்வைக்கும் நூல் இது.       பழிக்குப்பழி என துடித்துக்கொண்டிருந்த மக்கள் வன்முறை வேண்டாம் என்று சொல்லி ஒரு பக்கிரி சொன்னதைக் கேட்டார்கள் என்றால் அவர் பெயரை காந்தி என நீங்களே கூறிவிடுவீர்கள். அவர் அகிம

வானியல் துறையில் ஓர் அறிவாளி - ஹாக்கிங் பற்றி அறிமுகம்!

படம்
வாசிப்பறை! என்சைக்ளோபீடியா ஆஃப் டைனோசர்ஸ்! தி தெரபாட்ஸ் பதிப்பு- நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஜூராசிக் பார்க் படத்தை  மகிழ்ச்சியாக பார்த்திருப்பீர்கள். அது தொடங்கி டைனோசர்களை கோபமாக, மகிழ்ச்சியாக பார்த்திருக்கிறோம். பயத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாலும் டைனோசர்களை யாருக்குத்தான் பிடிக்காது. பயமோ, அருவெறுப்போ எதுவாகினும் அந்த பேருயிர்கள் எப்படி வாழ்ந்தன, வளர்ந்தன, அழிந்தன என்பது பற்றி சுவாரசியக் கட்டுரைகள் இவை. எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள நூலில் பல்வேறு டைனோசர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சில பக்கங்கள் படித்தாலே இந்த நூல் கல்வி நிறுவனங்களுக்காக எழுதப்பட்டுள்ளது தெரிந்துவிடும். ஆனாலும் பிரச்னையில்லை. படிக்கலாம். மகிழலாம். 50 திங்க்ஸ் டு சீ இன் தி ஸ்கை சாரா பார்க்கர் பவில்லியன் வானில் தொலைநோக்கி மூலமாக பார்க்கவேண்டிய ஐம்பது விஷயங்களைப் பற்றி வான் இயற்பியலாளர் சாரா பார்க்கர் கூறுகிறார். விண்வெளி பற்றிய பைபிள் என்று கூட இந்த நூலைக் கூறலாம். ஹாக்கிங் - தி மேன், ஜீனியஸ் தியரி ஆஃப் எவ்ரிதிங் ஜோயல் லெவி ஹாக்கிங்கின் இறப்பிலிருந்து தொடங்குகிற நூல், ஆ

புத்தக அறிமுகம்- இணைய தாக்கம் மொழியை மாற்றியது இப்படித்தான்!

படம்
புத்தக அறிமுகம் இணையத்தால் ஏற்பட்ட தாக்கம்! இணையத்தில் எதுவும் மிகச்சிறியதாக கூறவேண்டும். முதலில் நிறைய பிளாக்குகளில் எழுதியவர்கள் கூட தடுமாறிப்போய், பின் மெல்ல சமூக வலைத்தளத்திற்கு பழகிப்போனார்கள். இணையத்தில் நீளமான செய்திகளிலிருந்து எப்படி மீம்ஸ்களுக்கு மக்கள் பழகினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும். வாங்கிப்படியுங்கள். குறிப்பாக ஆங்கிலமொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கிரெட்சன் எளிமையாக விளக்கியுள்ளார். எபோலா ஏற்படுத்திய மரணபயம்! 2013-14 தொடங்கி இன்றுவரை எபோலா தாக்குதல் ஏற்படுத்திய அச்சம் பலருக்கும் தீரவில்லை. எப்படி தடுப்பது, மக்களைக் காப்பாற்றுவது என மருத்துவர்கள் தடுமாறிப்போனார்கள். கண்டங்கள் தாண்டி எபோலா எப்படி மக்களைத் தாக்கி வீழ்த்தியது என்று ஆசிரியர் விளக்கியுள்ளார். அதோடு இந்த நூல் ஒருவகையில் எதிர்காலத்தில் நமக்கு ஏற்படும் நோய்களை நாம் எப்படி தடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பெண்களின் உடல்நலம்! 1970களுக்குப்பிறகு பெண்கள் வெறும் குடும்பம் என்று இல்லாமல் பல்வேறு பணிவாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்

அரசியலுக்கு வரும் ஆசை எனக்கும் உண்டு!

படம்
நேர்காணல்! சேட்டன் பகத் பைவ் பாயிண்ட் சம்ஒன் என்ற நாவலுடன் தொடங்கிய இலக்கியப்பயணம் இன்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பத்தி எழுத்துகளையும் எழுதி வருகிறார். அரசு திட்டங்கள், நாட்டின் பிரச்னைகள் என ஒன்றுவிடாமல் இவர் யோசித்து எழுதிய கட்டுரைகளை திரட்டி இந்தியா பாசிட்டிவ் என்று பெயரிட்டு நூலாக்கியுள்ளார். அனைத்து நாவல்களும் நாட்டின் பிரச்னைகளை பேசியவையே என்று கூறியிருக்கிறீர்கள். எப்படி? அது உண்மைதான். நீங்கள் என்னுடைய பைவ் பாயிண்ட் சம் ஒன்  நூலில் கல்வி முறைகளை கடுமையாக விமர்சித்து எழுதியிருப்பேன். 2 ஸ்டேட்ஸ் நாவலில் தென்னிந்தியா - வட இந்தியா வேறுபாடுகளை விமர்சித்து எழுதியிருப்பேன். தி கேர்ள் இன் ரூம் நெ.105 நூலில் காஷ்மீர் பிரச்னைகளைப் பேசியிருப்பேன். நான் எழுதும் நூல்கள் அனைத்திலும் நாட்டை உலுக்கும் ஏதாவது பிரச்னையைப் பற்றி பேசியிருக்கிறேன். இப்போது நீங்கள் இந்தியா பாசிட்டிவ் என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள். கட்டுரையாக நாட்டின் பிரச்னைகளை பேசலாம் என்று நினைக்கிறீர்களா? நாவல், கட்டுரை என்ற இருவடிவங்களுமே எனக்க

புத்தகம் புதுசு - ஜூன் 26,2019

படம்
புத்தகம் புதுசு! American Predator: The Hunt for the Most Meticulous Serial Killer of the 21st Century by   Maureen Callahan அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த குற்றங்கள், சீரியல் கொலைகார ர்களின் பேட்டிகள், அவர்களைக் கண்டுபிடித்த போலீஸ்காரர்களின் அனுபவங்கள் என நூல் முழுக்க நிறைத்திருக்கிறார் எழுத்தாளர் மவ்ரீன் காலாஹன்.  Semicolon: The Past, Present, and Future of a Misunderstood Mark by   Cecelia Watson சுருக்கமாக செமிகோலனின் வரலாறு. இதனை எப்படி பயன்படுத்துவது, அதில் ஏற்பட்ட தவறுகள் என அனைத்தையும் நூலில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் சிசிலியா வாட்சன்.  Stronghold: One Man's Quest to Save the World's Wild Salmon by   Tucker Malarkey   குடோ ரஹர் என்பவர் ந தி நீரிலுள்ள சால்மன் மீன்களைக் காக்க என்னென்ன முயற்சிகளைச் செய்தார் என்பதுதான் நூலின் மையம்.  பசிபிக் கடலின் வடமேற்கு பகுதியில் இயற்கையைக் காக்க குடோ செய்து முயற்சிகளை நேர்மையாக விளக்குகிறது இந்த நூல்.  நன்றி - குட்ரீட்ஸ்

புதிய புத்தகங்கள் அறிமுகம் - ஜூன் 2019

படம்
புதிய புத்தகங்கள் அறிமுகம் 10 Women Who Changed Science and the World Rhodri Evans  and  Catherine Whitlock அறிவியல் துறையில் உலகை கவனிக்க வைத்த மேரி க்யூரி முதல் ரேச்சல் கார்சன் வரையிலான பெண்களைப் பற்றி பேசும் நூல் இது.  Bottle of Lies: The Inside Story of the Generic Drug Boom by   Katherine Eban மருத்துவத்துறையில் ஜெனரிக் மருந்துகள் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை ஆசிரியர் கேத்தரின் இபன் புட்டு வைக்கிறார்.  Superior: The Return of Race Science by   Angela Saini அறிவியல் துறையில் விஷமாய் உள்ளே நுழைந்த இனத்தூய்மை வாதம், தேசியவாதம் எப்படி உலகை பின்னிக்கு இழுத்துச்சென்றது என்பதை ஆஞ்சலா சைனி விளக்கமாக நூலில் எழுதியுள்ளார்.  Nuking the Moon: And Other Intelligence Schemes and Military Plots Left on the Drawing Board இராணுவத்தில் எதிரி நாடுகளை உளவறிய என்னென்ன திட்டங்களை தீட்டுவார்கள். உலகிற்கு அறியாத இப்படியும் நடக்குமா என்று எண்ணும் திட்டங்கள், தோல்வியடைந்த ஐடியாக்கள் ஆகியவற்றைக் குறித்த நூல் இது. சுவாரசியமாக படிக்கலாம்.  நன

தூங்க வைக்கும் சுயமுன்னேற்ற நூல் - வெற்றிச்சிந்தனை

படம்
புத்தக விமர்சனம் வாகை சூடும் வெற்றிச்சிந்தனை மொழிபெயர்ப்பு: ராஜ்மோகன் ஐபிஎஸ் வெற்றி பெறுவதற்கான சிந்தனைகள்தான் நூலாகியிருக்கிறது. ஆனால் அதனை ஆன்மீகத்துடன் இணைத்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஆங்கிலப் புத்தகங்கள் குறைந்தது நானூறு பக்கங்களுக்கு எழுதித் தள்ளுகையில் ஆசிரியர் ரியோ ஒகாவா 138 பக்கங்களில் சொல்ல வந்ததை நறுக்கென சொல்லியிருக்கிறார்.  சில பக்கங்களைப் படிக்கும்போது அருகிலிருந்த அரசுகார்த்திக் மீது தூங்கி சரிந்துவிட்டேன். இதனால் புத்தகம் மோசம் என நினைத்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டுகள் சரியாக உட்காரவில்லை. இது ஒகாவின் உரையை அப்படியே மொழிபெயர்த்திருப்பதால், எழுத்துக்கான விஷயங்கள் அவ்வளவு உறுதியாக இல்லை. இவர் பேச்சை எழுத்து வடிவிற்கு மாற்றியிருப்பதற்கு பதிலாக ஆடியோவாக மாற்றியிருக்கலாம். எழுத்திற்கென இருக்கும் எந்த விஷயங்களும் இந்த நூலில் இல்லை.  இதனால்தான் மற்றொரு சுயமுன்னேற்ற நூலாக மாறியிருக்கிறது. துயரம்.  - சோபியா லாரன் நன்றி: பாலகிருஷ்ண மேனன்

வரலாற்றில் முக்கிய நூல்கள்!

படம்
நூல் அறிமுகம்! வாழ்நாளுக்குள் வாசித்தே ஆக வேண்டிய நூல்கள் அல்ல இவை. ஆனாலும் இவை பதிப்பிக்கப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதனால் இதனைப் படிக்கலாம். Let Us Now Praise Famous Men by  James Agee  and  Walker Evans 1936 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இதழுக்கான அசைன்மெண்ட். ஜேம்ஸ் அகி மற்றும் வாக்கர் ஈவன்ஸ் ஆகியோர், குத்தகை விவசாயிகளின் வலியான வாழ்க்கையை பதிவு செய்தனர். இந்த நூலில் நாற்பது பக்கங்கள் புகைப்படப்பதிவாக இருக்கும். வெளியானபோது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நூல் இது.  The Immortal Life of Henrietta Lacks by   Rebecca Skloot   1951 ஆம் ஆண்டு உலகம் முழுக்க பிரபலமான இவரின் புற்றுநோய் திசுக்களை சோதனை செய்து புற்றுநோய்க்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்த முயற்சிக்கு இவரின் பங்கு மிக முக்கியமானது. லேக்ஸூக்கு ஐந்தாவது குழந்தை பிறந்தபோது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கரான லேக்ஸ் புகையிலை விவசாயியின் மகள்.  Steve Jobs by  Walter Isaacson ஆப்பிள் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமான ஊக்கசக்தி ஸ்டீவ் ஜாப

கட்டுரை நூல்கள் 3! மே மாத வாசிப்பு

படம்
புத்தக விமர்சனம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? நீங்கள் இன்று உங்கள் தந்தையை விட அதிகம் சம்பாதிக்கிறீர்கள். அதிக வசதிகளை அனுபவிக்கிறீர்கள். ரெட்பாக்ஸ் ரெஸ்டாரண்ட் உணவை ஸோமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் உலகம் நம்பிக்கையானதா? அதேசமயத்தில் வெனிசுலாவில் ஆட்சியாளருக்கு எதிராக கடும் கலவரம் நடைபெறுகிறது. சோமாலியாவில் சாப்பிட உணவின்றி குழந்தைகள் சாகின்றன. என்ன உலகம் இது? என்று வருத்தப்படவும் வைக்கிறது பூமி. எங்கிருந்து நம்பிக்கை பெற என வருந்தாதீர்கள். அதற்குத்தான் மார்க் மேன்சன் எவ்ரிதிங் இஸ் பக்டு என்ற நூலை எழுதியிருக்கிறார். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கான அனைத்து விஷயங்களும் இதில் உண்டு. 2. இந்தியா கிரிப்டோ கரன்சியை நம்பாவிட்டாலும் விங்கிலோவ்ஸ் சகோதரர்கள் அதனை நம்புகிறார்கள். இவர்கள் மார்க் ஸூக்கர்பெர்க்கோடு இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்கள். பின்னர் மார்க் இவர்களுக்கு டாட்டா சொல்லிவிட இன்று கிரிப்டோ கரன்சி மூலம் மெகா பணக்காரர்கள் ஆகிவிட்டனர். இவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது. 3. வா

உலகை ஆட்டிப் படைக்கும் செயற்கை நுண்ணறிவு!

படம்
1.  மழை பெய்வது, மரங்களின் அறிவியல், அவை தமக்குள் பேசிக்கொள்கின்றனவா என்பது போன்ற கேள்விகள் நமக்குள் இருந்தாலும் நாம் யாரிடமும் கேட்டிருக்க மாட்டோம். இவை பற்றி பேசுகிறார் ஆசிரியர்.  2. நீங்கள் பார்க்கும் செய்தி, படிக்கும் நாளிதழ், வாங்கும் கடலை மிட்டாய் என அனைத்திலும் ஏதோவொரு செய்தி தாக்கம், தூண்டுதல் உண்டு. இதனை நன்றாக யோசித்தால் உணர்வீர்கள். மைக்ரோசாஃப்டின் tay சாட்பாட் போன்ற கண்டுபிடிப்பு எப்படி இனவெறி கொண்டதாக மெல்ல மாறியது முதற்கொண்டு செயற்கை அறிவு குறித்த தாக்கத்தை அருமையாக எழுதியுள்ளார் கார்த்திக்.  -கோமாளிமேடை டீம்

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தீர்ப்பது எப்படி?

படம்
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் இவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை; நகரில் நடைபெறும் விபத்துகளில் 47 சதவீதம் இவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மணிக்கணக்கில் வேலை பார்த்தும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறினாலே தெரிந்துவிடும். ஆம் இத்தனையிலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அவர்களைப் பற்றிய நூல்தான் இது. உலகம் முழுக்க கல்வி, அறிவியல், சமூகம், தொழில்துறை சார்ந்த ஆய்வுகளிலிருந்து தரவுகளைத் தேர்ந்தெடுத்து அடுக்கி பெண்களை எப்படி உலகம் மறந்துபோனது என குற்றவுணர்ச்சியைத் தூண்டியுள்ளார் ஆசிரியர். உலகில் பல்வேறு விலங்குகளின் உணர்ச்சிகளைக் குறித்து ஆசிரியர் வால் விலாவரியாக எழுதியுள்ள நூல்தான் இது.  மாமா எனும் சிம்பன்சியின் வாழ்வு வழியாக அதன் உடல்மொழி, தகவல் தொடர்பு ஆகியவற்றைப் பற்றி விளக்கியிருக்கிறார்.  பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதனை தீர்ப்பது எப்படி என எமிலி, அமேலியா ஆலோசித்து எழுதிய நூல்தான் இது. இதில் பெண்களின் மனது, ஒப்பீடு, சமூகத்தின் அழுத்தம் ஆகியவை தீவிரமான விவாதத்திற்குரியதாக எழுதப்பட்டுள்ளது.  - கோமாளிமேடை டீம்

ஓசாமைப் போட்டுத்தள்ளிய கதை!

படம்
Jesus and the Jewish Roots of the Eucharist   By Brant Pitre இயேசுவின் கடைசி விருந்து குறித்து அறிந்ததை விட அது தொடர்பான படங்களை ஓவியங்களை அதிகம் பார்த்திருப்பீர்கள். இயேசுவுக்கு யூதர்களுக்கும் உள்ள உறவு பற்றி தீர்க்கமாக விளக்கிப் பேசும் நூல் இது.  The Power of Charm   By Brian Tracy and Ron Arden மனித உறவுகளை மேம்படுத்தி வணிகத்தை மேம்படுத்துவது என்று விளக்குகிறார்கள் ஆசிரியர் பிரையன் ட்ரேசி மற்றும் ரோன் ஆர்டன். பிறருக்கு நம்பிக்கையூட்டும் உடல்மொழி, பேச்சு குறித்த பயிற்சிகள், ஆலோசனைகள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.  Beautiful Boy   By David Sheff நியூயார்க் டைம்ஸின் சிறப்பான விற்பனை நூல் இது. பத்திரிகையாளரின் மகன் ஒருவர், போதைமருந்து, ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் கதை. இதனை சினிமாவாகவும் எடுத்தனர்.  No Easy Day   By Mark Owen with Kevin Maurer ஒசாமா பின்லேடனை பாக் புகுந்து போட்டுத்தள்ளியது அமெரிக்காவின் சீல் எனும் படை. அதில் அப்போது இருந்த வீரர் ஒருவர், அதனை எப்படி சாதித்தோம் என சூப்பராக விளக்குகிறார். புக் விற்க இது போதாதா?  நன்றி: புக்பப்  

தடுப்பூசிகள் நம்மை நோயிலிருந்து காக்கிறதா?

படம்
goodreads Vaccine Science Revisited: Are Childhood Immunizations As Safe As Claimed? (The Underground Knowledge Series #8) by   James Morcan   (Goodreads Author) ,   Lance Morcan   (Goodreads Author) ,  Elisabet Norris   (Foreword) நீங்கள் கல்வியாளரோ, பத்திரிகை ஆசிரியரோ, டாக்டரோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் தடுப்பூசி பற்றிய இந்நூல் அதுகுறித்த கவனத்தை உங்களிடம் ஏற்படுத்தும். தடுப்பூசிகளின் தயாரிப்பு, அது அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவையும் இதில் பேசப்படுகின்றன. புலனாய்வு முறையில் தடுப்பூசிகள் எப்படி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதை ஆசிரியர்  வி ளக்கி அதிர்ச்சியை தருகிறார்.  Goodreads The Electric War: Edison, Tesla, Westinghouse, and the Race to Light the World (Gilded Age #1) by   Mike Winchell   (Goodreads Author) மின்சாரத்தை யார் கண்டுபிடித்தது என்றால் என்ன பதிலைக் கூறுவீர்கள்? ஆனால் அக்காலத்தில் அப்போட்டியில் தாமஸ் எடிசன், நிக்கோலா டெஸ்லா, ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்