காந்தி பற்றி அறிய நூல்கள் இதோ!
காந்தி பற்றி வெளிவந்துள்ள நூல்களில் முக்கியமானது. அவருடைய வாழ்க்கை, கொள்கை, அரசியல் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.
காந்தியின் வாழ்க்கை அவருடைய செயல்பாடுகளாலும், அவரை தீவிரமாக விமர்சித்த ஆட்களாலும்தான் நிறைவு பெற்றது. ரிச்சர்ட் அட்டன்பாரோவின் காந்தி படம் மற்றும் அதுதொடர்பான கருத்துகள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் இந்த நூல் பேசுகிறது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜூடித் எம் ப்ரௌன், எழுதியுள்ள காந்தியின் சுயசரிதை. காந்தியை சாமியார் அல்லது அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து மாற்றி வாசிப்பவர்களுக்கு நெருக்கமாக காண்பிக்கிறது.
1869 -1948 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த காந்தி எதிர்கொள்ளாத நம்பிக்கையும் கிடையாது. வெறுப்பும் கிடையாது. அவரின் வாழ்க்கை, அரசியல், சமூகம் பற்றிய பார்வைகளை சுருக்கமாக முன்வைக்கும் நூல் இது.
பழிக்குப்பழி என துடித்துக்கொண்டிருந்த மக்கள் வன்முறை வேண்டாம் என்று சொல்லி ஒரு பக்கிரி சொன்னதைக் கேட்டார்கள் என்றால் அவர் பெயரை காந்தி என நீங்களே கூறிவிடுவீர்கள். அவர் அகிம்சை, வன்முறையற்ற போராட்டங்களின் மூலம் சாதித்தது என்ன என்பதை ஆசிரியர் ஃபைசல் தேவ்ஜி எழுதியிருக்கிறார்.