வரலாற்றில் முக்கிய நூல்கள்!




Image result for books






நூல் அறிமுகம்!


வாழ்நாளுக்குள் வாசித்தே ஆக வேண்டிய நூல்கள் அல்ல இவை. ஆனாலும் இவை பதிப்பிக்கப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதனால் இதனைப் படிக்கலாம்.


Let Us Now Praise Famous Men


1936 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இதழுக்கான அசைன்மெண்ட். ஜேம்ஸ் அகி மற்றும் வாக்கர் ஈவன்ஸ் ஆகியோர், குத்தகை விவசாயிகளின் வலியான வாழ்க்கையை பதிவு செய்தனர். இந்த நூலில் நாற்பது பக்கங்கள் புகைப்படப்பதிவாக இருக்கும். வெளியானபோது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நூல் இது. 


The Immortal Life of Henrietta Lacks


1951 ஆம் ஆண்டு உலகம் முழுக்க பிரபலமான இவரின் புற்றுநோய் திசுக்களை சோதனை செய்து புற்றுநோய்க்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்த முயற்சிக்கு இவரின் பங்கு மிக முக்கியமானது. லேக்ஸூக்கு ஐந்தாவது குழந்தை பிறந்தபோது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கரான லேக்ஸ் புகையிலை விவசாயியின் மகள். 

Steve Jobs


ஆப்பிள் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமான ஊக்கசக்தி ஸ்டீவ் ஜாப்ஸ். ஏற்கிறீர்களோ இல்லையோ அவரது நிறுவனத்தினர் மனப்பூர்வமாக ஏற்கிறார்கள். நூலில் மொத்தம் நாற்பது நேர்காணல்கள் உள்ளன. இதில் சிலசமயம் கடுமையாக, மகிழ்ச்சியாக என நவரசங்களுடன் ஸ்டீவ் பேசும் பேச்சுகள் பலருக்கும் ஊக்கமூட்டும். அதேசமயம் ஸ்டீவை கடுமையாக விமர்சிக்கும் போக்குக்கும் இதில் இடமுண்டு. கிரியேட்டிவிட்டுக்கு இருட்டு புறமும் உண்டு. ஆனாலும் ஸ்டீவின் குணங்களுக்கும் ஆப்பிளின் டிஜிட்டல் சாதனங்களுக்கும் நிறைய தொடர்புண்டு. 


John Adams


அமெரிக்காவை உருவாக்கிய இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ். அவரின் வாழ்வை பேசுகிற நூல் இது. இக்கதையை ஹெச்பிஓவும் தொடராக தயாரிக்கிறது. எனவே ஏதோ ஒருவழியில்  இவரின் வாழ்க்கையை நீங்கள் பார்க்க முடியும். 
ஆடம்ஸின் வாழ்க்கை, அரசியல், போர், சமூக பிரச்னைகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. தொடராக வரும்போது காதல், அரசியல், துரோகம், நட்பு என அனைத்தையும் கரம் மசாலாவாக அரைப்பார்கள். நாமும் லேஸ் சாப்பிட்டுக்கொண்டே அதை ரசிப்போம்.  வேறுவழி?  

நன்றி: புக் பப்











பிரபலமான இடுகைகள்