இடுகைகள்

நேபாளத்தின் ஸ்கேட்டிங் பூங்கா!

படம்
ஸ்கேட்டிங் பூங்கா! நேபாளத்தின் காத்மாண்டுவில் நாட்டிலேயே முதல் ஸ்கேட்டிங் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. உஜ்வல் தங்கல் என்ற உள்ளூர் ஸகேட்டிங் வீரர் இதனை உருவாக்கியுள்ளார். தன் பதினான்கு வயதிலிருந்து ஸ்கேட்டிங் போர்டு ஏறி சுற்றி உலகம் சுற்றிவந்தவர் காத்மாண்டுவில் முதலில் தொடங்கியது ஸ்கேட்டிங் பொருட்களை விற்கும் கடைதான். 2014 ஆம் ஆண்டு பாங்காக் பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பியவர் கடை மூலம் பல்வேறு ஸ்கேட்டிங் விளையாட்டிற்கான பொருட்களை பார்த்து பார்த்து சேர்த்தார் உஜ்வல் தங்கல். ஸகேட்டிங் பூங்கா தொடங்குவதற்கான வேலைகளின் ஆரம்பம் என இம்முயற்சியை கூறவேண்டும். இதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கனவை நிறைவேற்றியுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில ஸ்கேட்டிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்றும் இவ்விளையாட்டு போதைப்பொருள், குற்றவாளிகள் சார்ந்ததாக பார்க்கப்பட்டு வருவதை மாற்ற உஜ்வல் தங்கல் மாற்ற முயற்சித்து வருகிறார்.

ஊழலில் கரைகண்ட தேசங்கள்!

படம்
ஊழல் தேசங்கள்! நேரடியாக பிடுங்கினால் வரி, மறைவாக கொள்ளையடித்தால் ஊழல் என்ற அளவில் ஊழல் வழக்குகள் உலகளவில் உண்டு. இந்த ஆண்டில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா, அர்ஜென்டினா முன்னாள் அதிபர் கிரிஸ்டினா கிர்ச்சனர், தாய்லாந்து முன்னாள் அதிபர் யிங்லக் ஷினவத்ரா ஆகியோர் ஊழல் வழக்குகள் காரணமாக செய்திகளில் அடிபட்ட பிரபலங்கள். ஊழல் ஏற்பட நாடுகளின சமூக அமைப்பும் முக்கியக்காரணம் என்பதை   அண்மையில் வெளியான அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. 80 நாடுகளிலுள்ள 20 ஆயிரம் குடிமக்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் நைஜீரியாவும், அடுத்த இடங்களில் கொலம்பியா, பாகிஸ்தான், இரான், மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் டாப் 10 இல் இந்தியா வரவில்லை என்பதற்கு பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அமெரிக்கா 61 இடத்திலும், ஆஸ்திரேலியா(79), கனடா(80) இடத்தையும் பிடித்துள்ளன.    

கூகுள் குரோம் பீட்டா!

படம்
கூகுள் குரோம் பீட்டா 70! அண்மையில் தனது பத்தாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள கூகுள் குரோம், தனது புதிய ப்ரௌசரை சோதனை பதிப்பாக விரைவில் வெளியிடவுள்ளது. இதில் ஆப்பிளின் டச்ஐடி போன்ற பிங்கர்பிரிண்ட், விண்டோஸ் 10 ஓஎஸ்ஸிலுள்ள வெப் ப்ளூடூத்   வசதிகளும், ஸ்மார்ட்போன்களை இணையத்தில் ஈஸியாக இணைக்கும் புதிய வசதிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் லாகின் பாப் செய்திகள் வரும்போது உடனே புதிய குரோம் ப்ரௌசர் ஃபுல் ஸ்கிரீன் வசதி சுருக்கப்படுவதும் இதில் புதிது. எழுத்துகள், படங்களை எளிதில் கண்டறியும் அல்காரிதம் இதில் ஸ்பெஷல். கைரேகை மூலம் இணையதளங்களில் லாகின் செய்வதை குரோம் 70 இல் புதிதாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஜெயிக்கிறதோ இல்லையோ முயற்சி செய்து பார்க்க வாய்ப்புள்ளது. இணையதளம் பாதுகாப்பானதா இல்லையா என அறி சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை வரும் என்பதும் புதிய வசதிகளில் முக்கியமானது. இதன்மூலம் செக்யூர் எனும் பழையவசதி நீக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் XS Max

படம்
ஆப்பிள் MAX அதிரடி! ஆப்பிள் நிறுவனம், புதிய XS MAX ஐபோனை வெளியிட்டு சந்தையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஐஓஎஸ் 12 மூலம் ஹெக்ஸாகோர் சிப் செட்டில் இயங்கும் 208 கிராம் ஆப்பிள் எக்ஸ்எஸ் மேக்ஸ் போனின் நினைவகத்திறன் 64 ஜிபி. 6.50 இன்ச் டிஸ்ப்ளேயில் மனம் மயக்கும் ஆப்பிளின் தரம் வியக்கவைக்கிறது. முன்புறம் ஏழு எம்.பி கேமரா, பின்புறம் 12 எம்பி கேமராவுடன் ஃபேஸ் லாக், வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், லைட்சென்சார் 3டி சென்சார் என எக்கச்சக்க வசதிகளை உள்ளே நுழைத்திருக்கிறார்கள்.  வெள்ளை, மஞ்சள், ப்ரௌன் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள ஆப்பிள் எக்ஸ்எஸ் மேக்ஸின் திரை அளவு 1242 X 2688. ஆனால் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கிடையாது என்பது குறை. ஹெட்போன், சார்ஜர் அனைத்தும் அழகாக அம்சமாக வேலை செய்கின்றன. ஆப்பிள் 8, எக்ஸ் ஆகியவற்றை விட எக்ஸ்எக்ஸ் பேட்டரிகள் சிறப்பாக மல்டி டாஸ்கிங்கில் தாக்குப்பிடிக்கின்றன. இரண்டு நானோ சிம்களும் 3ஜி,4ஜி வசதிகளுக்கேற்ப இருந்தாலும் 5ஜிக்கேற்ப டிசைன் செய்திருந்தால் கொடுக்கிற காசுக்கு மதிப்பாக இருந்திருக்கும்.  

மூளையின் சூழ்ச்சி!

படம்
பொய்களை பரப்பும் மூளை! இணையத்தில் பரப்பும் போலிச்செய்திகளுக்கு மனிதரின் மூளைதான் காரணம் என எம்ஐடி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம்பிக்கையான நாளிதழ்கள், டிவி சேனல்களை விட செய்திகளை வேகமாக தருவதில் சமூகவலைதளங்கள் முன்னணியில் இருந்தாலும் அவை சரியாக இருப்பதில்லை. 2006-17 வரையிலான ட்விட்டர் தகவல்களை ஆராய்ந்த சோரோஸ் வோசோகி, டெப்ராய், சினன் அரல் உள்ளிட்ட எம்ஐடி குழுவினர், 30 லட்சம் பேர் அனுப்பிய ஒரு லட்சம் தகவல்களை ஆராய்ந்தபோது அவை 4.5 மில்லியன் முறைகள் பகிரப்பட்டிருந்ததை ஆராய்ச்சி வழியாக கண்டறிந்தனர். இத்தகவல்களை தகவல்சரிபார்ப்பு ( snopes.com ,  politifact.com , factcheck.org ) தளங்களின் வழியே ஆராய்ந்தபோது போலித்தகவல்கள் பரவும் வேகம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.  குறிப்பாக 2013, 2015, 2016   ஆகிய காலகட்டங்கல் வதந்தி தகவல்கள் 70 சதவிகிதம் வேகமாக பரவி மக்களை குழம்பியுள்ளன. இந்தியாவில் கும்பல் படுகொலைகள் நிகழ வாட்ஸ்அப் செய்திகளே காரணம் என கூறுவது ஞாபகம் வருகிறதா? “கடவுளின் அருள் செய்திகளையும் தாண்டி மக்களின் வாழ்வைக் குலைக்கும் அதிர்ச்சியூட்டும் போலிச்செய்திகள் பெருமளவு பதட்

நெல்சன் மண்டேலாவின் அகிம்சை வழி!

படம்
நெல்சன் மண்டேலா வழியில்! 2005 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகையாளர் எஸ்கிண்டர் நெகா, மனைவி செர்கலம் ஃபாசில் எத்தியோப்பியா அரசினால் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார் நெகா. 1974 ஆம் ஆண்டு மார்க்சிய ராணுவம் எத்தியோப்பாவில் ஆட்சிக்கு வந்தபோது, நெகா அமெரிக்காவில் அரசியல் பொருளாதார பட்டம் பெற உழைத்துக்கொண்டிருந்தார். 1991 ஆம் ஆண்டு எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி(EPRDF) கட்சி ஆட்சிக்கு வந்தது. 1993 ஆம் ஆண்டு தைரியமாக புதிய நாளிதழை நெகா தொடங்கினார். அப்போது ஆட்சிசெய்தது, மக்கள் தொகையில் 6% உள்ள திக்ராயன்ஸ் மக்களைக் கொண்டுள்ளது எத்தியோப்பா அரசு. உள்நாட்டு நிகழ்வுகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில் நெகா எழுத அரசின் பார்வை இவர் மீது விழுந்தது. பொய் குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையிலடைக்கப்பட்டார் நெகா. “எத்தியோப்பா அரசு தென் ஆப்பிரிக்க அரசியல் மாதிரிகளை அப்படியே பின்பற்றுகிறது. நாம் அனைவரும் வெ்வேறு வேகத்தில் சென்றாலும் நம் இறுதி இலக்கு ஜனநாயக சுதந்திரம்தான்.

இலக்கணம் திருத்தும் நோய்!

படம்
பிட்ஸ்! படுக்கையில் படுத்துக்கொண்டு புத்தகங்களை படிப்பதற்கு Librocubicularist என்று பெயர். கூகுள் சர்ச் எஞ்சினில் Askew என டைப் செய்தால் கிடைக்கும் ரிசல்டுகள் சற்றே வலதுஓரம் தள்ளி கோணலாக வரும். பஜ்ஜி மடித்து கொடுத்த காகிதம் முதற்கொண்டு மாரியம்மன் கோவில் பத்திரிக்கை வரையில் இலக்கணத் திருத்தம் செய்யும் பழக்கத்திற்கு 'Grammar Pedantry Syndrome' என்று பெயர். உலகம் முழுக்க சீரியல்கொலைகாரர்களின் பொதுவான ராசிகள் சிம்மம்,கன்னி, தனுசு, மீனம். பீநட் பட்டரை கண்டறிந்த மர்சிலஸ் கில்மோர் எட்சன், அதனை உணவை மென்று தின்ன முடியாத பற்களில்லாத முதியவர்களுக்கு முதலில் பரிந்துரைத்தார். தாராள, பழமைவாதிகள் என அனைவரும் பெரும்பான்மையாக புகாரின்றி வாசிக்கும் பத்திரிகை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் மட்டுமே.          

கல்வி பணமில்லை; ஆயுதம் வாங்குவோம்!

படம்
ஆயுத தேசம்! கல்வி, உணவு அனைத்திற்கும் பற்றாக்குறை நிலவுகிற தேசம், ஆயுதங்களுக்கு பணம் செலவழிக்கிறது என்றால் நம்புவீர்களா? மத்திய ஆப்பிரிக்க குடியரசு செய்வது அதேதான். 65 மில்லியன் டாலர்களை கல்விக்காக மானியம் பெற்ற மத்திய ஆப்பிரிக்க குடியரசு, 53 மில்லியன் பற்றாக்குறை உள்ளது மீண்டும் கைவிரித்துள்ளது. ஆனால் போருக்காக 6 மில்லியன் டாலர்களை செலவழித்தது தற்போது தெரிய வந்துள்ளது. தினசரி இரண்டு டாலர்களை தனிநபர் வருமானமாக கொண்ட நாடு, மூன்றில் இருபங்கு ஏழைகள் 59 மில்லியன் டாலர்களை(2015) ஆயுதங்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டுப்போரினால் தனது தலைநகரமான பாங்குயியை 14 படைகள் மூலம் பாதுகாத்து வருகிறது. அரசு. ஆப்பிரிக்க குடியரசு நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை ரஷ்யா, ஐ.நா சபையின் அனுமதி பெற்று வழங்கிவருகிறது.     

கூகுளை நொறுக்கும் இன்டர்நெட் விதிகள்!

படம்
வெனிசுலா அகதிகள்! ஹியூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்தில்(2000-2012) சமூகநல திட்டங்களுக்கு பெயர்பெற்ற நாடான வெனிசுலா இன்று உணவு, மருந்துகள் பற்றாக்குறையால் தவித்துவருகிறது. வெனிசுலாவிலுள்ள பிரச்னைகளால் 7 சதவிகித மக்கள்(2.3 மில்லியன்) நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். தென் அமெரிக்காவுக்கு செல்லும் வெனிசுலா மக்களின் சதவிகிதம் 900% என அறிவித்துள்ளது ஐ.நா சபை. 78 சதவிகித மருந்து பற்றாக்குறையால் அங்குள்ள மருத்துவமனைகளும், மருந்தகங்களும் அடைக்கப்பட்டுவிட்டன. சம்பளம் குறைப்படுவதால் நாட்டிலுள்ள ஐந்து பல்கலைகளிலிருந்து 1,600 ஆசிரியர்கள் பதவி விலகியுள்ளனர்(2012-18). வெனிசுலாவிலிருந்து வெளியேறிய 8,70,093 மக்கள் கொலம்பியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதில் 45 ஆயிரம் பேருக்கு முறையான அடையாள அட்டை இல்லாமல் (அ) காலாவதி விசாவை வைத்துள்ளனர். ஐரோப்பியநாடான ஸ்பெயினுக்கு அகதி மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அரசியல், பொருளாதார பிரச்னைகளை வெனிசுலா தீர்க்காதவரையில் அந்நாட்டு மக்களின் இடம்பெயர்வை தடுப்பது இயலாத ஒன்றே.   2 இயற்கையை அழிக்கும் வரிச்சலுகை! வரியற்ற சொர்க்கங்கள் எ

சுதந்திர மென்பொருட்கள் எதற்கு?

படம்
கட்டற்ற அறிவு!- வின்சென்ட் காபோ திலீப் பிரசாந்த் சில சொகுசு வசதிகளுக்கு பழகிவிட்டால் நம்மால் புதிய முயற்சிகளை செய்யமுடியாது. டிவியில் பட்டன்களை எழுந்து சென்று மாற்றும் எரிச்சல் பிளஸ் சோம்பலால் ரிமோட் உருவானது. ஆனால் அந்த ரிமோட்டைக் கண்டுபிடிக்கும் அறிவு நமக்கிருந்தால் அது பிளஸ்பாய்ண்ட்தானே! ஆனால புதியவற்றை கற்கும் இளமையில் சொகுசை தேடியதால்தான நம்மில் பலருக்கும் கணினி வசதிகளை பயன்படுத்தினாலும் புரோகிராம்களை சுயமாக எழுதமுடியாமல் போனது. கணக்கில் கில்லியானால் கணினி புரோகிராம்களை சொல்லியடிக்கலாம் என்பது அசல் உண்மை. நம்மில் பலரும் அதில் பங்கேற்பாளராக இன்றி பயனராக இருப்பது தற்செயலானதல்ல. மூளையை பயன்படுத்த விடாமல் சொகுசுக்கு பழக்கி பூட்டுவது பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களின் நெடுநாளைய கமர்சியல் சதி. சுதந்திரமும் கட்டுப்பாடும்! விண்டோஸ், மேக் ஓஎஸ்களில் சில புரோகிராம்களை இஷ்டமோ கஷ்டமோ பயன்படுத்த வேண்டியிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த இஷ்ட மாற்றங்களை செய்தால் எப்படியிருக்கும்? கட்டற்ற மென்பொருளை நீங்கள் பழகவேண்டியது அதற்குத்தான். புரோகிராம்களில் தேவ

உடல் வெப்பநிலை மாறுவது எப்படி?

படம்
உடலின் வெப்பநிலை! உடலின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்(98.6 டிகிரி ஃபாரன்ஹீட்) என்பது மருத்துவர்கள் வாக்கு. வயது, பாலினம், சூழல் பொறுத்து ஏறி இறங்கும் வெப்பநிலையில்   1 டிகிரி செல்சியஸ் வேறுபாடு நிச்சயம் உண்டு. முதியவர்களின் உடல்வெப்பம் இயல்பைவிட குறைவாகவே இருக்கும். குழந்தைகளுக்கு 36.6 -37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பெரியவர்களுக்கு 36.1 –- 37.2 டிகிரி செல்சியஸ வெப்பநிலையம், 65 வயதை தாண்டியவர்களுக்கு 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் சராசரியாக இருக்கும்.   19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வுண்டர்பிலிச், உடலின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என வரையறுத்தார். ஆனால் பின்னாளில் வெப்பநிலை அளவு 36.8 டிகிரி செல்சியஸ் என குறைக்கப்பட்டது. தினசரி காலையில் வெப்பம் அதிகமாக இருப்பதால் காய்ச்சல் குறைவாகவும் இரவு அதிகமாக இருக்கும். பெண்களின் உடல்வெப்பநிலை ஏற்றத்தாழ்வுக்கு ஹார்மோன்களும் முக்கியக்காரணம். காது(38 டிகிரி செல்சியஸ்), வாய்(37.8 டிகிரி செல்சியஸ்), அக்குள்(37.2 டிகிரி செல்சியஸ்) என மூன்று இடங்களில் காய்ச்சல் அளவீடு எடுக்க