இடுகைகள்

சேட்டன் பகத்: வரி கொடுக்கும் மக்கள் குற்றவாளிகள் அல்ல!

படம்
2016 ஆம் ஆண்டு வருமான வரி கட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 1.2 கோடி. இந்திய மக்கள் தொகை 120 கோடி எனும்போது இந்த வேறுபாட்டை நம்மால் உணர முடியும். இந்த வரி வருவாய் என்பது முழுக்க அலுவலக பணியாளர்களுடையது. ஆண்டு வருமானம் 50 இலட்சத்திற்கு மேலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,50,000 என்று வருமானவரித்துறை கூறியுள்ளது ஆச்சரியமளிக்கிறது. மும்பையின் புறநகர் கட்டிடங்களை வாங்கி வசிப்பவர்கள் அப்போது யார்? அவர்கள் இந்த வரி வரம்பிற்குள் வருவார்களா? மாட்டார்களா என்று தெரியவில்லை. நிச்சயம் இந்த வரி ஏய்ப்பை மக்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் செய்திருக்க முடியும் என்றால் குழந்தை கூட நம்பாது. அதேசமயம் முன்கூட்டியவரி, முறையாக வரி கட்டுபவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் என்பது மிக மோசமானது. உலகில் வேறெங்கும் இதுபோல மோசமான காட்சிகளை நாம் கண்டிருக்க முடியாது. காரணம், அதிகாரிகள் இந்தியாவில் வரி கட்டுபவர்களை குற்றவாளிகளைப் போல கருதுகிறார்கள். இது முறையாக வரி கட்டும் எண்ணமுடையவர்களுக்கு இன்றும் அச்சுறுத்தி வருகிறது. இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தியா போன்ற நாட்டில் பணக்கார ர்களாக இரு

இந்தியர்களுக்கு டிஜிட்டல் யுகத்திலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது!

படம்
ஆனந்த் கோபால் மகிந்திரா...இன்று ட்விட்டரில் யார் இருக்கிறார்களோ இல்லையோ. இந்தியா மற்றும் உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஆனந்த் கவனிக்கிறார். நிறுவன முதலாளிக்கு இதற்கெல்லாம் நேரமிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் அதற்கும் அவர் பதில் வைத்திருக்கிறார். உங்களுடைய நிறுவனத்தில் எந்த பதவி எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்? சீஃப் பீப்பிள் ஆபீசர் என்ற பதவிதான். அல்லது சீஃப் கவர்னன்ஸ் ஆபீசர் என்ற பதவி. காரணம், இன்று நிறுவனம் உலகளவில் உயர அந்நிறுவனத்தின் மதிப்பு, பிராண் ட் முக்கியம். என் வாழ்க்கையில் நான் ஃபெராரி கார் வாங்குவேன். அதுதான் என லட்சியம் என்று ஒருவர் சொன்னால், அவர் எப்படி நேர் வழியில் பயணிப்பார். அப்படி ஒருவர் நிறுவன அதிகாரி என்ற முறையில் தேர்ந்தெடுத்தால் நிறுவனத்தின் மதிப்பு என்னாகும்? நோக்கம் என்னாகும்? சொல்லுங்கள் 20.7 பில்லியன் டாலர்களைக் கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் நீங்கள். ஆனால் உங்களை வேறெங்கும் பார்ப்பதைவிட ட்விட்டரில் பார்க்க முடிகிறதே? நான் சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் மற்றும் சில மென்பொருள் நிறுவனங்களிடம், அனைத்து நிறுவனங்களையும்

அரசு மருத்துவமனைகளின் அவலம் தீர மோடிகேர் உதவும் - சேட்டன் பகத்

படம்
கடமையைச் செய்ய கையூட்டா? அரசு மருத்துவமனை அவலம்! உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சாபகேட்டின் விளைவாக 72க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோயுள்ளன. இதற்கு தனிநபர் பணிமாற்றம் எந்தளவு சாத்தியமான மாற்றத்தை, விழிப்புணர்வை அங்கு கொண்டுவரும் என்று எனக்குப் புரியவில்லை. இந்திய அரசு இந்தியாவில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் இவை மட்டுமன்றி எல்ஐசி போன்ற லாபத்தில் இயங்கும் நிதிநிறுவனங்களும் கூட கையில் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை என்றால் நாம் இந்த நிலைக்கு வெட்கப்படவேண்டாமா?  இந்தியாவில் அரசுத்துறையில் அலங்கோலத்திற்கு அரசு ஹோட்டல்கள் மற்றும் எம்டிஎன்எல், ஏர் இந்தியா சாட்சியாக இருக்கின்றன. உலகில் வேலை செய்யாமலிருக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் மருத்துவமனையில் தன் பணியைக் கடமையைச் செய்யவே காசு கேட்கிறார்கள். காந்தி காலத்து தர்மம் இதுதான்.  இந்த நிலையில் மருத்துவத்துறையை தனியாருக்கு கொடுப்பது சேவையை மேம்படுத்த உதவும். சேவையை க

வங்கிகள் தேசியமயமாக்கம் - உதவிய வங்கிச்சட்டம்!

படம்
வங்கிகள் தேசியமயமாக்கல்! தனியார் நிறுவனங்களாக செயற்பட்டு வரும் வங்கிகளை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதாவை சட்டமாக்கி, அதனை அரசின் நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதே, தேசியமயமாக்குதல் எனப்படும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த சொத்துக்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்தியாவில் இதுவரை 20 வங்கிகள் இம்முறையில் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் வங்கி நிறுவனங்கள் சட்டப்படி (“Banking Companies (Acquisition and Transfer of Undertaking) Bill) அரசு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. 1969ஆம் ஆண்டு பதினான்கு வங்கிகளும், 1980 ஆம் ஆண்டில் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. 1894 ஆம் ஆண்டு பஞ்சாப் தேசிய வங்கி கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் இந்த வங்கியை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவர். இந்த வங்கி 1969ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. அதேசமயம் இது பொதுத்துறை வங்கியும் கூட. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி, பொதுத்துறை வங்கி. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல. குறிப்பு: தேசியமயமாக்கம் என்றால், அந்த வங்கி பெருநகரம்,சிறு

சேட்டன் பகத் - வரி கட்டுப்பாட்டை விட தொழில்வளர்ச்சி முக்கியம்

படம்
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸ் முந்தைய காலத்தில் செய்த ஊழல்கள் முக்கியக்காரணம். ஆட்சிக்கு வந்த அரசு, உருவாக்கிய முக்கிய சீர்த்திருத்தங்களில் ஒன்று ஜிஎஸ்டி. ஆனால் ஒரே வரியாக இல்லாமல் ஜிஎஸ்டி5 எனும் ஐந்து வரி முறையாக சுழன்றடித்ததில், வணிகப்பட்டப்படிப்பு படித்த எனக்கே தலை சுற்றி போய்விட்டது. இத்தனைக்கும் வணிகப்படிப்பு படித்துவிட்டு வெளிநாடுகளில் முதலீட்டு வங்கியாளராகவும் பணியாற்றிவன். இந்திய அரசு அமல்படுத்திய 0,5,18,28 என சதவீத அளவுகளில் வரியை விதித்ததில் தொழில்துறைகளே பீதியடைந்து கிடக்கின்றன. அதிலும் சினிமா துறைக்கு 28 சதவீதம், டிடிஹெச் செட்டாப் பாக்ஸ்களுக்கு 18 சதவீத வரி என்பதில் என்ன நியாயம் உள்ளதோ? இதில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் தரவிறக்கிப் பார்ப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும்? அதிலும் மாதந்தோறும் மூன்றுமுறை ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் விண்ணப்பங்களைப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதுபற்றி ஏதும் அறியாத தொழில்முனைவோர்களுக்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவில் தொழில்முயற்சிகள் தொ

இராணுவ அதிகாரியின் உயிரைப் பறிக்கும் பேராசை! -

படம்
ஜேம்ஸ்  ஹாட்லி சேஸ் எழுதிய  ஆறாவது அறிவு கண்ணதாசன் பதிப்பகம் திரு.பென்சன் திருமதி பென்சன் திருமணம் முடித்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன. பென்சன், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர். வியட்நாம் போரில் தொண்ணூறு பேர்களுக்கு மேல் சுட்டுக்கொன்றவர். துப்பாக்கியைச் சுடும் திறனை தன் வாழ்வாதாரமாக மாற்ற நினைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியை வாங்கி புதிய பொலிவாக மாற்றுகிறார். அதுதான் அவருக்கு சிக்கலைக் கொண்டு வருகிறது. அங்கு அவரைச் சந்திக்கும் பணக்காரர், ஐம்பதாயிரம் டாலர்களுக்கு ஒரு டீல் பேசுகிறார். தன் மகனுக்கு ஒன்பதே நாட்களில் குறிபார்த்து சுடக்கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ஆனால் அவரது மகனுக்கு இருக்கும் மனநலப் பிரச்னைகள் பற்றி பென்சன் தெரிந்துகொள்ளாதது, அவரின் உயிரைப் பறிக்கும் பிரச்னையாக மாறுகிறது. அவரது மனைவி லூசி, பணக்காரர் சவாண்டோ, அவரது அடிமை வேலைக்கார ர்கள் ரேய்முண்டோ, கார்லோ ஆகியோர் பென்சனின் தினசரி வாழ்க்கையை தலைகீழாக்குகிறார்கள். நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களுடன் கதை நகர்கிறது. கிளைமேக்ஸ் பணம் எல்லாவற்றையும்

சமூக பொறுப்பு சட்டம் செயல்படுகிறதா? - இந்திய அரசு கண்காணிக்கிறதா?

படம்
இந்திய அரசின் சமூகநலப்பொறுப்பு (CSR Act) சட்டம் (2013 ) அமலானபிறகு, இதுதொடர்பாக செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா போன்ற பல்வேறு நிலப்பரப்பு மற்றும் கலாசாரம் சார்ந்த நாட்டில் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று சேர்வது மிகச்சிரமம். இதனைச் சாத்தியப்படுத்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உருவாயின.  இவை அரசின் திட்டங்களை பல்வேறு அடிப்படை வசதிகளற்ற தொலைதூரக் கிராமங்களிலும் கொண்டு சென்று சேர்க்கும் பணியைச் செய்கின்றன. உலக நாடுகளில் தொழில்நிறுவனங்கள் தம் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூகநலத் திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என்பது சட்டமாகவே உள்ளது. இந்திய அரசு சமூகப்பொறுப்பு திட்டத்தை, 2013 ஆம் ஆண்டு மேம்படுத்தி உருவாக்கியது. இதன் விளைவாக சூழல், கல்வி, வாழ்க்கைத்தரம், சம்பளப் பற்றாக்குறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உழைக்கும் தன்னார்வலர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இம்முறையில் இந்தியாவில் கேட்ஸ் பவுண்டேஷன், டாடா டிரஸ்ட், அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். 1980 -90 களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில்

முகமறியும் சோதனை - இந்திய அரசின் புதிய முயற்சி!

படம்
முகமறியும் சோதனையை ஆதரிக்கலாமா?  இந்தியாவில் முகமறியும் சோதனை ஆந்திரத்திலுள்ள ஹைதராபாத் நகரில் அறிமுகமாகி உள்ளது. விமானநிலைய பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூலை 1 முதல் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் முகமறியும் சோதனை பரிசோதனை முறையில் தொடங்கியுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்துவதில் தன்னார்வமாக 250 பேர் இணைந்துள்ளனர். பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா விமானநிலையம், போர்ச்சுகீசிய நிறுவனமான விஷன் பாக்ஸூடன் முகமறியும் சோதனை தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசின் டிஜி யாத்ரா கொள்கைக்கேற்ப இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு உருவான இச்சட்டப்படி, இவ்வசதியைப் பயன்படுத்த பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது பயோமெட்ரிக் வசதிகளைக் கொண்ட ஆதார் இருந்தால் கூட போதும்.  காவல்துறை, தேசிய குற்றப்பதிவு ஆணையம்  முகமறியும் சோதனைகளைப் பயன்படுத்த ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது.  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், மக்களின் பாதுகாப்புக்காக முகமறியும் சோதனைகளை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.  வேலை செய்யும் விதம்! பயணிகள் தம் விமான ந

ஃபேஸ்புக்கின் லிப்ரா புகழ்பெறுமா? - புதிய கிரிப்டோகரன்சி!

படம்
லிப்ரா கிரிப்டோ கரன்சி மக்களை ஈர்க்குமா?  சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், லிப்ரா எனும் புதிய கிரிப்ட்டோ கரன்சியை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.  நவீன உலகில் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இணையத்தையே நம்பியுள்ளன. இதில் மக்கள் செய்யும் பணப்பரிமாற்றமும் கூட பல்வேறு வகையில் பாதுகாப்பானதாகவும் நவீனமாகவும் மாறிவருகிறது. இணையத்தில் கட்டற்ற வணிகம் செய்வதற்காக உருவானதுதான் கிரிப்டோகரன்சி. இதிலுள்ள பலமும் பலவீனமும் இதனை அரசும், மத்திய வங்கிகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் வணிகத்திற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இதனால், கிரிப்டோகரன்சிகளின் புழக்கம் குறையவெல்லாம் இல்லை. சட்டத்திற்கு புறம்பாகவும் பிட்காயின் கரன்சிகள், இணையம் வழியாக வணிகத்தில் புழங்கி வருகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் லிப்ரா கரன்சி, கட்டற்றதல்ல. இதனை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள தன்னார்வ அமைப்பு கட்டுப்படுத்துகிறது. உலகெங்கும் உள்ள லிப்ரா அசோச

கணினி புரோகிராமிங் அறிவு தேவை!

படம்
 இந்தியாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய கல்வி வாரியங்கள் கணினிபுரோகிராமிங்கை பாடமாக கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளன. இன்று வீட்டு ஹாலில் உள்ள ஸ்மார்ட் டிவிகள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கார்டூன் தொடர்களை ஒரம்கட்டியுள்ளன. வீட்டில் விளையாடும் செஸ் போன்ற விளையாட்டுகளும் கூட அந்த காலத்தில் விளையாடிய விளையாட்டுகளாகிவிட்டன. வீட்டினுள்ளே அல்லது வெளியே விளையாடும் விளையாட்டுகளை விட இணைய விளையாட்டுகள், புதிர்களையே சிறுவர்கள் இன்று விரும்புகின்றனர். எனவேதான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 6,7, 8 ஆம் வகுப்புகளில் விசுவல் பேசிக் மற்றும் ஹெச்டிஎம்எல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9, 10ஆம் வகுப்புகளில் ஜாவா, சி மொழி ஆகிய பாடங்கள் கற்றுத்தருகின்றனர். ஆனால் இது கட்டாயமல்ல: மாணவர்களின் தேர்வாகவே இருக்கிறது. தற்போது தொடக்கப் பள்ளியில் படிக்கும் 65 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, தற்போதுள்ளவற்றை விட மாறுபட்டதாக இருக்கும் என்று வேர்ல்டு எகனாமிக் ஃபாரம் தன் எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ற அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. எதிர்கால வாய்ப்புகள் கணினி புரோகிராமிங் ம

துப்பாக்கி விதிகள் மாற்றவேண்டுமா? - கலிஃபோர்னியாவில் புதிய பிரச்னை!

படம்
வடக்கு கலிஃபோர்னியாவிலுள்ள கில்ராய் எனுமிடத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் வெள்ளை இனவெறியர் துப்பாக்கியில் சுட்டதில் 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2014 ஆம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியாவில் நடைபெறும் ஏழாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. டெக்சாஸ் மாநிலம் இவ்வகையில் நான்கு துப்பாக்கிச்சூடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச்சூட்டை செய்தவருக்கு வயது 19 தான். சான்டினோ வில்லியம் லீகன் என்பவர் போலீசாரால் உணவுத்திருவிழா இடத்திலேயே கொல்லப்பட்டார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் துப்பாக்கிச்சூட்டிற்கு சில மணிநேரம் முன்பு மைட் ஈஸ் ரைட் எனும் ராக்னர் ரெட்பியர்டு 1890 ஆண்டு எழுதிய நூலை பகிர்ந்துள்ளார். இது வெள்ளையர்களின் இனமேன்மையை தூக்கி பிடிக்கும் நூல். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் நடைபெறும் சமயம் மட்டும் பேசப்படும் சமாச்சாரமாக மாறிவிட்டது. தேசிய ரைபிள் அசோசியேஷனின் பணம் பெற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் நிச்சயம் துப்பாக்கிகளை இளைஞர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை. வெள்ளை இனவாதம் என்பதை போலியாக உருவாக்கி தேர்தலில் வெல்ல