இடுகைகள்

சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா? -

படம்
                சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா ? ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ இதழில் மூன்று வல்லுநர்கள் சமூக வலைத்தளங்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குமுறைபடுத்திக் கொள்ளவேண்டுமென கூறியுள்ளனர் . அமெரிக்காவில் கேபிடல் ஹில் தாக்குதலுக்கு சமூக வலைத்தளங்களே காரணமாக இருந்தன . இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை பிரதமர் மோடி உருவாக்கினார் . இதற்கு வாட்ஸ்அப் , ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளன . இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம் . உலகிலுள்ள 33 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடுகளுடன் இயங்க வலியுறுத்தியுள்ளன . மூன்றில் ஒரு நாடு சமூக வலைத்தளங்களை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தியுள்ளது . உலகில் 13 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடுத்துள்ளன . வட அமெரிக்காவில் கட்டுப்பாட்டு சட்டங்கள் கிடையாது . ஆனால் தென் அமெரிக்காவில் சட்டங்கள் உள்ளன . 2015 ஆம் ஆண்டு தொடங்கி முப்பது நாடுகளில் நான்கு நாடுகள் சமூக வலைத்தளங்களை தடுக்கத் தொடங்கியுள்ளன . 54 நாடுகளில் 29 நா

தேச பாதுகாப்பு சட்டம் என்பது பசுக்கொலைகளை உள்ளடக்கியது அல்ல! முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர்

படம்
            கோவிந்த் மாத்தூர் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் , தேர்தல் ஆணையத்தின் மீது கொரோனாவை பரப்பிய காரணத்திற்காக வழக்கு பதியவேண்டும் என்று கூறியுள்ளதே ? நீங்கள் நீதிமன்றம் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் . நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஆராய்ந்தால் கடினமாகவே இருக்கும் . நீதிமன்றங்கள் இப்படி கூறுவது இயல்பானதுதான் . இதனை தலைப்புசெய்தியாக ஊடகங்கள் மாற்றுகின்றன . ஆனால் இதனால் முக்கியமான விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வராமல் போகின்றன . நீதிபதிகள் தங்கள் வரையறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் கூறப்படுகின்றனவே ? உயர்நீதிமன்றம் இப்படி நடந்துகொள்வதாக தெரிந்தால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகலாம் . அதில் எந்த தவறும் இல்லை . நீதிமன்றங்கள் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள் உள்ளன . தவறுகள் கண்டறியப்பட்டால் அவை மெல்ல சரிசெய்யப்படுவது உறுதி . பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ? அவர்களின் பணி என்ன ? அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதுதான

மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

படம்
                மாரடைப்பைத் தடுப்பது எப்படி ? மாரடைப்பைத் தடுக்க சிபிஆர் , டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன . கொழுப்பைத் தடுப்பது பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது . இதனை தடுக்க பிசிஎஸ்கே 9 எனும் மருந்தை பயன்படுத்தலாம் . இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது . அழற்சி இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி , மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் . கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர் . 2017 இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற , விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை . மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளது என்று சொல்லலாம் . மாரடைப்புக்கு

வாழ்க்கையை மாற்றும் பல்வேறு பழக்கங்கள், இதன் பின்னணியில் உள்ள உளவியல் ஆய்வுகள்!

படம்
                முடிவெடுக்கும் பழக்கம் ! உலகம் இன்று நவீனமாக மாறி வருகிறது . அதற்கேற்ப தினசரி வாழ்க்கையிலும் , தொழிலை சார்ந்தும் ஏராளமான முடிவுகளை எடுத்துவருகிறோம் . இதில் எது சரி , எது தவறு என்பதை உணர்வதற்கு காலம் தேவைப்படலா்ம் . ஆனால் இப்படி முடிவு எடுப்பதற்கான தகவல்களை நாம் எப்படி பரிசோதிக்கிறோம் , அலசுகிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம் . அப்போதுதான் ஆபத்தான காலங்களில் மனிதர்கள் உயிர்பிழைத்து வந்திருப்பதற்கான திறனை அறிய முடியும் . சுயநலன் , பொதுநலன் என இரண்டு சார்ந்தும் முடிவுகளை வேகமாக அல்லது நிதானமாக எடுப்பது நடைபெறுகிறது . இதில் முன்னுரிமை தருவதைப் பற்றி யோசிப்பதும் எப்படி நடைபெறுகிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்வது முக்கியம் . தள்ளுபடி ஆதாயங்கள் இயல்பாகவே மனித மனம் உடனடியாக பரிசுகளை ஆதாயங்களை எதிர்பார்க்க கூடியது . இதனால் உலகம் முழுக்க பொன்ஸி திட்டங்கள் இன்றும் கூட செயல்பட்டு மக்களை ஏமாற்றுகின்றன . இதுபற்றிய செய்திகளைப் படித்தாலும் கூட அதிக லாபம் என்ற சொல்லை மக்கள் கைவிடத் தயாராக இல்லை . இது அடிப்படையான மனிதர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிற தன்

மரபணுக்கள் ஏற்படுத்தும் பரம்பரை நோய்களை உணவு, உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்!

படம்
                மரபணுவை வெ்ல்ல முடியுமா ? ஒருவரால் அவரது குடும்பம் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது . ஆனால் அதற்கேற்ப உணவுப்பழக்கம் , உடற்பயிற்சி அமைவது அவசியம் . ஒருவரது குடும்பம் சார்ந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு , புகைப்பிடிப்பது , அதிக கொழுப்பு , உடல் பருமன் , நீரிழிவு நோய் , அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம் . சிலர் பிறக்கும்போது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் , ரத்த தட்டுகளில் அழற்சி உருவாகியிருக்கும் . இவர்களுக்கு இதயத்தசை சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . முறையான உடற்பயிற்சி , உணவுமுறை ஆகியவற்றை ஒருவர் கையாளும்போது மரபணு ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் . பழங்கள் , காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு கொழுப்பு குறைவான உணவுகளையும் பானங்களையும் சாப்பிடலாம் . இதில் உப்பும் , சர்க்கரையும் கவனிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு . உடற்பயிற்சி பொதுவாக முக்கியத்துவமானது . இதயத்தை வலுவாக்கும் என்று சொல்லும்படியான பயிற்சிகள் ஏதும் இல்லை . எனவே இதயத்தின் ஆர்டரியில் உள்ள கொலாட்டரலில் ரத்தவோட்டத்தை அதிக

உடலை இயக்கும் ஸ்பார்க் பிளக்கைக் கொண்ட இதயத்தின் செயல்பாடு!

படம்
                  உடலே நலமா ? உடலுக்கு சக்தி கிடைக்க உணவு அவசியம் . அதோடு சுவாசிக்க காற்று முக்கியம் . இதெல்லாம் இருந்தாலும் கூட உடலெங்கும் உறுப்புகள் செயல்பட ரத்தம் உடலெங்கு் செல்வதற்கு சர்குலேட்டர் அமைப்பு உதவுகிறது . இப்படி செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன் , மினரல்கள் உள்ளன . இந்த ரத்தம் தலை முதல் கால் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது . இதில் தடுமாற்றம் ஏற்பட்டால் உடனே பாதிப்பு ஏற்படும் . உடலின் நரம்புகள் , ஆர்டெரி , காபிலரிஸ் என அனைத்து இடங்களிலும் ரத்தம் பயணிக்கும் தொலைவு தோராயமாக பத்தாயிரம் கி . மீ . என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் . இதய வல்லுநர்கள் பர்ஃபியூஸ் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்த விரும்புவார்கள் . இதுதான் சர்குலேட்டர் அமைப்பைக் குறிக்கிறது . இதில்தான் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் சென்று வருகிறது . இதன்மூலம்தான் சத்துகள் உறுப்புகளுக்கு சென்றுசேர்வதோடு , உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் சரியாக சுரப்பதையும் உறுதி செய்கிறது . செல்களுக்கு ஆபத்து ஏற்படுத்து்ம் கழிவுப் பொருட்களை அகற்றுவதோடு , கார்பன் டை ஆக்சைடையும் உடலிலிருந்து வெளியேற்றுகிறது . உடல் வெப்பநிலையை பர

குற்றம் செய்யும் சாகச உணர்வை அழுத்தி வைக்க முடியாது!

படம்
                  குற்றவாளிகள் ஒரே விதமான குற்றங்களை திரும்ப செய்கிறார்கள் ? இதனை குடிநோய் போல குணப்படுத்த முடியுமா ? தொடர்ச்சியாக குற்றங்களைச் செய்பவர்கள் , குறிப்பிட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை . இவர்களுக்கு பணம் , அதிகாரம் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படுகிறது . எனவே கொலை , கொள்ளை , வல்லுறவு ஆகியவற்றை செய்கிறார்கள் . குடிநோய் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கும் உண்டு . இவர்களும் பிறர் போலவே வாழ விரும்புவர்கள்தான் . கொலைக்குற்றம் செயதவர்களை அதிலிருந்து மீ்ட்க வாழ்க்கைக்கல்வியை அளிக்கலாம் . சீரியல் கொலைகாரர்கள் , குற்றத்திற்கு அடிமையானவர்களா ? ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வருகிறவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் . கொலை செய்தவர்களை ஆராயும்போது முன்னர் அவர்கள் கொள்ளை அடித்தவர்களாக இருக்கிறார்கள் . அல்லது குழந்தைகளை வல்லுறவு செய்தவர்கள் , ஆபாச புகைப்படங்களை எடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் . எனவே இவர்களை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூட ஒருவகையில் குறிப்பிடலாம்தான் . இந்த குற்றவாளிக்கு இடையில் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா ? பெரும்பாலான குற்றவாளிகளுக்கு

நாட்டைக் காப்பாற்ற போரத் செய்யும் காமெடி களேபரங்கள்! போரத் 2

படம்
            போரத் கஜக்ஸ்தான் நாட்டில் தண்டனை வழங்கப்பட்டு குவாரியில் வேலை செய்யும் போரத் இம்முறை சர்வாதிகார அரசின் அனுமதி பெற்று , அமெரிக்காவிற்கு அனுப்ப ப்படுகிறார் . அங்கு அவர் அதிபருக்கு பரிசு ஒன்றை வழங்கி நாட்டின் மீதான தடைகளை நீ்க்கவேண்டும் . எப்போதும் போல போரத் தனது கோமாளித்தனங்களோடு அமெரிக்கா செல்கிறார் . புத்திசாலித்தனம் கொண்ட குரங்கை பரிசாக கொடுக்க நினைக்கிறார் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த கூண்டில் அவரது மகள்தான் இருக்கிறாள் . ஆம் குரங்கை கொன்று தின்றுவிட்டு அவள்தான் அமெரிக்கா வந்திருக்கிறாள் . அதுவும் தனது மரப்பெட்டியில் . இதனால் அரசின் மரணதண்டனையிலிருந்து தப்பிக்க தனது மகளை பரிசாக கொடுத்துவிடலாம் என நினைக்கிறார் . மகளை கூண்டில் அடைத்து அழைத்துச்செல்கிறார் . உண்மையில் அவர் செய்யும் விஷயம் பற்றி அவருக்குத் தெரிந்ததா ? உண்மையில் பரிசை டிரம்புக்கு தர முடிந்த்தா அல்லது குறைந்தபட்சம் அவரது நெருங்கிய வட்டத்தினருக்கு அளிக்க முடிந்ததா ? என்பதுதான் இறுதிப்பகுதி .. அமெரிக்கா மற்றும் முஸ்லீம் நாடுகளை மையப்படுத்திய காமெடிதான் . ஆனால் நடப்பு நிகழ்வுகள் , ஆணா