இடுகைகள்

ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு ஆய்விலும், வணிகப்படுத்துதலிலும் தடுமாறும் கூகுள்!

படம்
  சுந்தர்பிச்சை, இயக்குநர், கூகுள் 2016ஆம் ஆண்டே கூகுள், செயற்கை நுண்ணறிவு பாதை பற்றிய   அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. ஆனால் செயல்பாடு என்ற வகையில் பின்தங்கிவிட்டது. எனவே, சாட்ஜிபிடி மைக்ரோசாப்டின் முதலீட்டைப் பெற்று முதலில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதனால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது கூகுளின் இயக்குநர் சுந்தர் பிச்சைதான். அமெரிக்க டெக் நிறுவனங்களின் வசீகர இயக்குநர்கள் என்று சொல்லும் எந்த அம்சங்களும் இல்லாத அகவயமான தலைவர், சுந்தர். திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதில் காட்டிய தீவிரம் அவரை தலைவராக்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என யாருடைய மக்கள் செல்வாக்குக்கும் எதிராக சுந்தரை நிறுத்தமுடியாது. கூகுளின் ஐஓ மாநாட்டில் கூகுள் மெயிலுக்கு ஹெல்ப் மீ ரைட் எனும் வசதி, கூகுள் மேப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் 3 டியில் பார்ப்பது, புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் செம்மைபடுத்துவது, கூகுள் பார்ட் எனும் சாட் ஜிபிடிக்கு போட்டியானசெயற்கை நுண்ணறிவு, அதற்கான பால்ம் 2 எனும் லாங்குவேஜ் மாடல்   என ஏராளமான விஷயங்களை பேசினார்கள். ஆனால், பலரும் தெரிந்துகொள்ள விரும்பியது. கூகுள

விண்வெளியில் பேரரசு - அமெரிக்காவை முந்தும் சீனா -இரண்டாவது அத்தியாயம்

படம்
  தியான்காங் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளியில் பேரரசு – சீனாவின் மகத்தான கனவு சீனாவில் ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீன தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு, நிர்வாகம் மேற்பார்வை செய்துவருகிறது. சீனாவில் உள்ள முக்கியமான ராக்கெட் ஏவுதளங்களைப் பார்ப்போம். கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தின் பெயர், தையுவான். இங்கிருந்து வானிலைக்கான செயற்கைக்கோள்கள ஏவப்படுகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இங்கு சோதனை செய்திருக்கிறார்கள். சிச்சுவான் பகுதியில் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் தீவில் வென்சாங் விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு, விண்வெளிக்கு சென்று வரும் வீரர்கள் திரும்ப வந்திறங்குகிறார்கள். கூடவே, மனிதர்கள் இடம்பெறாத விண்கலன்களை அனுப்பி வைக்க இந்த ஏவுதளம் பயன்படுகிறது.   ஷாங்காய் நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் பயணித்தால், நிங்க்போ என்ற துறைமுகப் பகுதி வரும். இங்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான செயல்பாடுகளை செய்வதற்கான இடம். இங்கு ஆண்டுக்கு நூறு வணிக ராக்கெட்டுகளை ஏ

நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

படம்
  நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள். அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது. அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில் மி

மனதிற்கு தேவையான விடுமுறை!

படம்
  நிறையபேருக்கு வேலை கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. லிங்க்டு இன் தளத்தில் கூட புலம்பல்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் வேலை செய்வதிலும் அதில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கிக்கொள்வதும் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.   சில நிறுவனங்களில் உலகின் சூழல்களை புரிந்துகொள்ளாமல் ஆறுநாட்கள் வேலை நாட்களாக வைத்திருப்பார்கள். ஞாயிறு என்ற ஒருநாளில் ஒருவர் எங்கு போய்விட்டு வந்து திங்கட்கிழமை வேலைக்கு உற்சாகமாக வர முடியும் என்ற பொது அறிவு கூட இல்லை.   ஞாயிறு நிறைய கடைகள் இயங்காது. அவர்களுக்கும் ஓய்வெடுக்க ஒரு நாள் வேண்டுமே? இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாது. இந்த லட்சணத்தில் மனதை விடுமுறைக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொண்டால் என்ன என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வில், 441 அமெரிக்க பணியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வை கேஸி மோகில்னர் ஹோம்ஸ் என்ற யுசிஎல்ஏ பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தினார். அதாவது வெளியில் எங்கும் செல்லாமலேயே மனநிலையை விடுமுறையில் இருப்பது போல மாற்றிக்கொள்வதுதான் மையப்பொருள். இப்படி மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் வேலையில் மன அழுத்தம் கொள்வதில்லை.   தொய்வடையாமல் பணிபுர

தினசரி இயற்கையில் நடைபெறும் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது - எழுத்தாளர் மிதுல் பருவா

படம்
  ஸ்லோ டிஸாஸ்டர்  எழுத்தாளர் மிதுல் பருவா அசாம் மாநிலத்திலுள்ள மஜூலி, உலகின் நீளமான ஆற்றுத் தீவுகளில் ஒன்று. எழுத்தாளர் மிதுல் பருவா, இங்குதான் பிறந்து வளர்ந்தார். இவர் தற்போது சமூகவியல், மானுடவியல், சூழல் ஆராய்ச்சி படிப்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். மிதுல், ஸ்லோ டிஸாஸ்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் தான் வளர்ந்து வந்த ஆற்றுத்தீவு எப்படி வெள்ளம், மண் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் மறு குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை விளக்கி எழுதியுள்ளார். அவரிடம் நூல் பற்றி பேசினோம். பிரம்மபுத்திரா ஆறு, அதன் சவால்கள் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மஜூலி ஆற்றுத்தீவில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நூலில் முக்கிய அம்சங்களாக கூறியுள்ளவை எவை? ஸ்லோ டிஸாஸ்டர் நூலில், வெள்ளம், ஆற்றுபரப்பு அரிப்பு ஆகியவை மஜூலியை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கி எழுதியுள்ளேன். இது பிரம்மபுத்திரா ஆற்றின் பகுதியில் கூடுதலாக நடைபெறும் விளைவு எனலாம். இங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை, இயற்கை நெருக்கடிகளால் எப்படி மாறுகிறது என்பதை நூலில் விளக்கமாக எழுதி பதிவு செய்துள்ளேன். நான் ப

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, பாதுகாப்ப

குழந்தைகளே லட்சியம், விற்பனை நிச்சயம்!

படம்
  வீட்டுக்குத் தேவையான சோப்பு. தரையைத் துடைக்கும் பொருட்கள், சலவைததூள், சலவை சோப்பு ஆகியவற்றை வீட்டின் மூத்தவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் சாப்பிடும் பொருட்களைப் பொறுத்தவரை ஒரு வீட்டில் குழந்தைதான் முடிவு செய்யும். டிவிகளில் ஏராளமான விளம்பரங்களைப் பார்த்து, சாக்லெட் என்றால் கேண்டிமேன், கிண்டர் ஜாய், குவாக்கர் ஓட்ஸ், டோமினோ பீட்ஸா, சாண்ட்விட்ச் பிஸ்கெட்டுகள், ட்ராபிகானா ஜூஸ் என பலதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு வீட்டில் செல்வாக்கு அதிகம். பெற்றோர், தாத்தா, பாட்டி, உறவினர்கள் என நிறையப் பேரிடம் அவர்கள் பொருட்களைக் கேட்டுப் பெற முடியும். பொதுவாக குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே சில பிராண்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டால் ஒருவரை எளிதாக மாற்ற முடியாது. சில குடும்பங்களில் அவர்களின் கலாசார இயல்புப்படி, பேஸ்ட் என்றால் கோல்கேட்தான், பிரஷ் என்றால் சென்சோடைன், குளியல் சோப்பு என்றால் சின்தால் என முடிவே செய்திருப்பார்கள். இந்த சூழலில் வளரும் ஒரு குழந்தை தனது தேர்வை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ள முடியாது. உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளை கவருவதற்கு ஜூனியர் என

வாசனை மூலம் நினைவுகளைத் தூண்டிவிடுவது சாத்தியமா?

படம்
  மாலுக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள தரைதளத்தில் ஹைப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு சென்றவுடன் செல்ஃபில் உள்ள ஒரு பொருளை எடுக்கிறீர்கள். எப்படி அந்த பொருளை உடனே தேர்ந்தெடுத்தீர்கள், அதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன என்பதை யோசித்திருக்கிறீர்களா? அதைப்பற்றித்தான் இந்த நூலில் விலாவரியாக படிக்கப் போகிறோம். நம்மை நாமே புரிந்துகொள்ள போகிறோம். யாவரும் ஏமாளியாக மாற்றப்படுவது எப்படி அறியப்போகிறோம். சில சம்பவங்களைப் பார்ப்போமா? பல்வேறு விபத்துகளில் காயமாகி தனது பெயர் கூட மறந்தவர்களை, தான் எப்படி மருத்துவமனை வந்தோம் என்பதையே நினைவில் கொள்ளாதவர்களை இயல்பான நிலைக்கு எப்படி கொண்டு வருவது? நவீன மருத்துவத்தில் உடல், மனத்திற்கான பல்வேறு சிகிச்சைகள் அதற்கெனவே வந்துள்ளது. இதிலும் கூட டிமென்ஷியா, அம்னீசியா, கோமாவில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி மீட்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்தால் என்ன கெட்டுப்போய்விடப் போகிறது? இப்போது சற்று புதுமையான முயற்சி ஒன்றைப் பார்ப்போம். 1996ஆம் ஆண்டு, பிரான்சில் இருநூறுக்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு அம

பனைமரத்தில் கூடு கட்டித் தங்கும் கூழைக்கடா!

படம்
  கூழைக்கடா வீடு   மாறிய கூழைக்கடா திருநெல்வேலியில் கூந்தன்குளம் பறவை சரணாலயம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த கூழைக்கடா பறவைகள் இப்போது ஏரியில் தங்கி இனப்பெருக்கம் செய்யாமல் பனைமரங்களில் தங்கி வருகின்றன. 1994ஆம் ஆண்டு கூந்தன்குளம் பறவை சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பறவை ஆய்வாளரான பால் பாண்டி, 55 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவருகிறார். அவருக்கும் கூழைக்கடா, ஏரி அல்லது ஏரிக்கு அருகில் உள்ள இடங்களில் தங்காமல் பனையில் தங்குவது ஆச்சரியமாகவே உள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழை சதுப்புநிலத்தை நிறைக்க போதுமானதாக இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த கூழைக்கடா பறவைகள் நீரின் இருப்பு குறைவாக இருப்பதைப் பார்த்து, அருகிலுள்ள அருமனேரிக்கு சென்றுவிட்டன. அங்குள்ள சதுப்புநிலத்தில்   பனைமரங்கள் அதிகம்.   ‘’சதுப்பு நிலத்தில் நீர் வரத்து குறைவு என்பதால் கூழைக்கடாவோடு பிற பறவைகளையும் காப்பாற்ற, இங்கு வரச்செய்து தக்கவைக்க மணிமுத்தாறு அணையைத் திறந்து நீர் விடுமாறு மாவட்ட ஆட்சியரைக் கேட்டுள்ளோம். இதற்கு கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவும் கிட

உண்மை மதிப்பை விட பலமடங்கு பங்கு மதிப்பு உயர்ந்தால்.. - அதானி மோசடி - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

படம்
      1 மோசடி மன்னன் – அதானி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 – தமிழாக்கம்   இந்தியாவில் திறமை வாய்ந்த தொழிலதிபர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் உண்டு. இந்த அம்சங்கள்தான்   உலகளவில்   இந்தியாவை வலிமை வாய்ந்த நாடாக மாற்றி வருகிறது. இந்தியப்   பொருளாதாரம், அதன் தொழில் வளத்திற்கு முதலீடுகள் பெருமளவு கிடைக்கும் ஆதாரமாக பங்குச்சந்தையைப் நம்பியிருக்கிறது. மக்கள், பங்குச்சந்தையில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளை நாளிதழ்களிலும், டிவி சேனல்களின் வழியாகக் கூட அறிவது குறைவே. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் தலைவர், இயக்குநர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்   பற்றி நேர்மையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் உடனே சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது படுகொலை செய்யப்படுகிறார்கள். தொழில் நிறுவனங்கள் பற்றி எதிர்மறையாகப் பேசும், விமர்சிக்கும் பங்குச்சந்தை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்படி பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலும் நெருக்கடியும் உள்ள சூழ்நிலையில் பங்குச் சந்தையில் நடக்கும் பெருநிறுவன மோசடிகள் பற்றி மக்க

குற்றச்செயல்பாடுகளுக்கு மனமுதிர்ச்சியின்மை அடிப்படையான காரணமா?

படம்
  மனமுதிர்ச்சியும் குற்றமும் - படம்- பின்டிரெஸ்ட் குற்றச்செயல்களை செய்பவர்களுக்கும், அவர்களின் வயதில் குற்றங்களைச் செய்யாத சிறந்த குடிமகன்களுக்கும் முதிர்ச்சி மட்டும்தான் மிச்சமாக இருக்கிறதா? ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு குழுக்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வுப் பூர்வமாக நிரூபணம் செய்யத் தவறிவிட்டனர். இதில் இரண்டு வகையானவர்களைப் பார்க்கலாம். ஒன்று, தங்களின் இயல்புகளை கட்டுப்படுத்த முடியாத ஆட்கள், இவர்களுக்கு அறம் சார்ந்த நிலைப்பாடு மனிதில் உருவாகாது. குற்றங்களை செய்பவர்களுக்கு இடையில் அதில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கடுத்து வந்த பிற உளவியலாளர்களது கருத்துக்களைக் கேட்போம். தாக்குதல், கொலை, பாலியல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றில் ஒருவருக்கு பொருளாதார ரீதியான பயன்கள் கிடைப்பதில்லை. ஆனால் இவர்கள் பெற்றுள்ள மனமுதிர்ச்சியோடு ஒப்பிடும்போது, பணம் பொருட்களை கொள்ளையடிப்பவர்களின் மனநிலை அறிவுத்திறன் முதிர்ச்சி குறைவாகவே உள்ளது. தனிநபர்களைப் பொறுத்து காரணங்களை அறியும் திறனும், குற்றங்களின் தீவிரமும் மாறுபடுகிறது. பொதுவாக அறநிலை சார்ந்த மன முதிர்ச்சியை பொதுமைப்படுத்தி கூற முடியாது. இத