இடுகைகள்

இசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சாப் இசைக்கலைஞர்களுக்கு உலக மேடையை திறந்து வைத்துள்ள நட்சத்திரம் - தில்ஜித் தோசன்ஜி

படம்
  பஞ்சாபி பாடகர், நடிகர் தில்ஜித் தோசன்ஜி பஞ்சாபி இசை, திரைப்படங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நட்சத்திரம் -தில்ஜித் தோசன்ஜி காலிஸ்தான் பிரச்னை, பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பரபரப்பான விவகாரங்களை தாண்டி, தில்ஜித் நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோச்செல்லாவேலி இசை மற்றும் கலை விழாவில் தில்ஜித், சீக்கியர்களின் மரபான உடைகளை அணிந்து பாடி, நடனம் ஆடினார். இந்த விழா, அவரை உலகளவிலான மேடையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தனது அமெரிக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இசைவிழாவில் முதல் இந்தியராக பங்கேற்றவர் தில்ஜித் தோசன்ஜிதான்.   இவர், தனது ஏழு வயதில் இருந்து பஞ்சாபி பாடல்களை பாடி ஆடிவருகிறார். இவருக்கான ஊக்கத்தை அக்காவுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பஞ்சாபி பாடல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய பாடல்களை தில்ஜித் மனப்பாடம் செய்து பாடச்செய்திருக்கிறார். அப்படித்தான் தில்ஜித் ப

காது கேட்காத மாற்றுத்திறனாளியை காதலிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை! - சைலன்ட் - ஜப்பான்

படம்
  சைலன்ட் டிவி தொடர் ஜப்பான் - ஜே டிராமா  ராகுட்டன் விக்கி ஆப்   பள்ளிப்பருவ காதல்கதை. பள்ளிப்பருவத்தில் உற்சாகமாக தொடங்கும் காதல்,   பின்னாளில் காதலனின் உடல்நலப் பிரச்னையால் பிரிந்து மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தொடங்குகிறது. அவர்களின் காதல் மீண்டும் தொடங்கியதா, ஒன்று சேர்ந்ததா என்பதே கதை. ஒரு எபிசோட் ஒரு மணிநேரம் என மொத்தம் பதினொரு எபிசோடுகள் உள்ளன. காசு கட்டினால் விளம்பரத்தொல்லையின்றி பார்க்கலாம். இல்லையென்றால் விளம்பரத்தைப் பார்க்கவும் ஏராளமான டேட்டா செலவாகும். சௌக்கு என்ற சகுரா, பள்ளியில் படிக்கிறார். இவரை மினாட்டோ என்ற மாணவர் ஆவோவா என்ற தனது தோழிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்கு சகுராவைப் பார்த்த உடனே காதல் தோன்றிவிடுகிறது. சகுராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.   எப்போதும் பாப் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்கு ஸ்பிட்ஸ் எனும் இசைக்குழுவின் பாடல்கள் இஷ்டம். அதுவரை அப்படி பாடல்கள் கேட்காத ஆவோவா மெல்ல இசையின் வசமாகிறாள். சௌக்குவிடம் இரவல் வாங்கும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தனது படிப்பைத் தொடர்கிறாள். வகுப்பறையில் வெளியில் என சகுராவும் ஆவோவாவும

இரண்டு கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் - செகன் கருணதிலகா, ஜேனிஸ் பாரியட்

படம்
  கவிஞர் ஜேனிஸ் பாரியட் எழுத்தாளர் செகன் கருணதிலகா கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் செகன் கருணதிலகா புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் படிப்பது… நான் ஒரே நேரத்தில் நிறைய நூல்களைப் படிப்பேன். செவ்வியல் இலக்கியம், கட்டுரைகள், என்னுடைய துறை சாராத நூல்கள், இப்போது அசோக் ஃபெர்ரியின் தி அன் மேரேஜபிள் மேன், ஆர்மிஸ்டிட் மௌபினின் மோர் டேல்ஸ் ஆப் தி சிட்டி ஆகியவற்றை படித்து வருகிறேன். எலிசபெத் கில்பெர்டின் கமிட்டட் – எ ஸ்கெப்டிக் மேக்ஸ் வித்   மேரேஜ், அன்னா ரோஸ்லிங் ரோன்லண்ட்டின் ஃபேக்ட்புல்னெஸ், ஹன்ஸ் ரோஸ்லிங்க், ஆலா ரோஸ்லிங்க், இரா லெவினின் ரோஸ்மேரி பேரி ஆகியோரது நூல்களை படித்து முடித்தேன். எழுதும்போது..   மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு எழுதுவேன். என்னைச் சுற்றிலும் கத்தரிப்பூ, மெஜந்தா நிற விளக்குகள் எரியும்.   செவ்வியலான இசையைக் கேட்பேன். எழுதி முடித்தவுடன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பேன். ஒரு கிளாஸ் என்பதைத்   தாண்டினால் எழுத்து வேலைகளை செய்ய முடியாது. எப்போதும் பிடித்த நூல்கள் குழந்தையாக இருக்கும்போது தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா. அகதா கிறிஸ்டியின்   அண்ட் தென் தேர் வேர் நன் நூல்.

மஞ்சள் நிற தங்கமா, தங்க குணம் கொண்ட மனம் முக்கியமா? கோல்ட் - அல்போன்ஸ் புத்திரன்

படம்
    கோல்ட் மலையாளம் கதை, திரைக்கதை, அனிமேஷன், படத்தொகுப்பு, கிராபிக்ஸ், சண்டைப் பயிற்சி, இயக்கம் – அல்போன்ஸ் புத்திரன் இசை – ராஜேஷ் முருகேசன் தமிழ் டப் படத்தை மலையாள மொழியில் பார்ப்பதே நல்லது. ஆங்கில சப் டைட்டில் போட்டுக்கொள்ளலாம். மஞ்சள் நிற தங்கத்திற்கு மதிப்பு அதிகமா, தங்கத்தைப்   போன்ற மனசுடைய மனிதனுக்கு மதிப்பு அதிகமா என நிறுத்துப் பார்க்கிற படம். அல்போன்ஸ் புத்திரன் படத்தில் என்ன இருக்கும்? நான் லீனியர் படத்தொகுப்பு, அதிரடிக்கும் இசை, வித்தியாசமான சண்டைகள் என அத்தனையுமே இருக்கிறது. ஆனால் முக்கியமான விஷயம், படத்தில் எதுவுமே மனதைக் கவரும்படி இல்லை. படம் பார்த்தால் அதில் வரும் பாத்திரங்கள், நகைச்சுவை என ஏதேனும் பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள் அல்லவா? ஆனால் கோல்ட் படத்தில் உள்ள எதையும் அப்படி சொல்லமுடியாது. அனைத்துமே அரைகுறையாக இருப்பது போலவே இருக்கிறது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது. எனவே, ஏதோ ஒரு இடத்தில் அடைக்கப்பட்டது போல இருக்கிறது. உருப்படியான விஷயங்களைப் பார்ப்போம். பிரிதிவிராஜ்தான் தயாரிப்பு, நடிப்பு எல்லாமே. நடிப்பை சிறப்பாக செய்

கார் விபத்தில் இறந்த அம்மாவை காப்பாற்ற கடந்தகாலத்திற்கு செல்லும் மகனின் கதை! ஒக்கே ஒக்க ஜீவிதம்

படம்
  ஒகே ஒக்க ஜீவிதம் தெலுங்கு சர்வானந்த், ரீது வர்மா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி இயக்கம் - ஶ்ரீகார்த்திக்   நிகழ்காலத்தை நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு காரணமான இறந்தகாலத்தை நான்கு நாட்களில் மாற்ற முடிந்தால்…. அதுதான் ஒக்கே ஒக்க ஜீவிதம் படத்தின் கதை. படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் டைம் மெஷின் வருகிறது. பார்க்க சரவணபவன் ஹோட்டல் டிபன் கேரியல் போல உள்ளது. நாம் இங்கு பார்க்க வேண்டியது அதை வைத்து காலத்தில் பயணித்து சென்று என்ன செய்கிறார்கள் என்றுதான். நிலவை சுட்டிக்காட்டும்போது எனது விரலைப் பார்க்காதே நிலவைப் பார் என ஓஷோ சொல்லுவார் அல்லவா? 2019ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டிற்கு கால எந்திரத்தில் பயணிக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அங்கு சென்று இறந்த காலத்தை மாற்ற முயல்கிறார்கள். இதற்கு நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளே காரணம். அவை என்னவென்று பார்க்கலாம். ஆதிக்கு இசைமேல் பைத்தியம். பாடல் பாடலாக வீட்டின் ஸ்டூடியோவில் பாடி கேசட்டாக அடுக்கி வைத்திருக்கலாம். அதெல்லாமே அவரது அம்மா காலத்திலிருந்து பாதுகாத்து வரும் சொத்து. அவரது அம்மாதான் இன்ட்ரோவெர்டான ஆதிக்கு ஒரு

உண்மையான திறமை இருந்தால்தான் தொழில்நுட்பம் உதவும்! அர்மான் மாலிக்

படம்
  அர்மான் மாலிக் பாடகர் நீங்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறீர்கள். கலைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் உதவுகிறது என நினைக்கிறீர்களா? சமூக வலைத்தளங்களை நான் ரசிகர்களை சந்திக்கும் இடமாக பார்க்கிறேன். என்னுடைய வேலை பற்றி கூறுவதோடு தினசரி என் வாழ்க்கை பற்றியும் இதில் பதிவிட்டு வருகிறேன். இதில் இயங்கி ஒரே இரவில் பெரும் புகழ்பெற்றவர்கள் இங்கு நிறையப் பேர் உருவாகி வருகிறார்கள். அதேசமயம் இப்படி புகழ்பெறுபவர்களை விட திறமையான ஏராளமானோர் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளும் கலையை வளர்த்துக்கொண்டால் அவர்களின் தொழில்வாழ்க்கையும் உயரத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.  தொண்ணூறுகளில் சினிமா அல்லாத இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. இன்று இந்தி உலகில் தனி இசைக்கு என்ன இடம் இருக்கிறது. இப்போதுள்ள நிலை இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறதா? நான் இதை ஏற்க மறுக்கிறேன். தனி இசை ஆல்பமாக வரும் பாடல்கள் சினிமா பாடல்களை சிறப்பாக உள்ளன. வந்துகொண்டு இருக்கின்றன. இந்தி திரையுலகம் சினிமா இசையை முக்கியமாக கருதுவது உண்மை. இதனை நெடுங்காலமாக அங்குள்ள நிறுவனங்கள்

இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

படம்
  இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்! இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன்.  இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது.  நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது.  1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட்

பிரெஞ்சுக்கலைஞர் கேட்ட கடனும், மஞ்சள் நிற அறையும்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று தாங்கள் அறிமுகப்படுத்திய ஆப்த தோழர் ஆலிவர் போன் செய்து பேசினார். செஞ்சி கோட்டையில் எடுத்த புகைப்படத்திற்கு சொன்னபடி 200 ரூபாயும் கூடுதலாக அவருக்காக நூறு சேர்த்து 300 அனுப்பினேன். அவர் சொன்னபடி புகைப்படத்தை அனுப்பியே வைக்கவில்லை. மேலும் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. பிக்சல் குறைந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு சரி.  பிறகு ஒரு நாள் இரவில் போன் செய்தார். அவரது பயோடேட்டாவை ஆங்கிலத்தில் எழுதி தரச் சொன்னார். அதற்கு நிறைய இலக்கண அறிவோடு சமகால வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும். எனவே, என்னால் ஆகாது என்று சொல்லிவிட்டேன். பிறகும் விடாமல் பேசியவர் திருவண்ணாமலைக்கு அடுத்து எப்போது வருவாய் என இழுத்து இழுத்தி பேசியவர். 500 ரூபாய் பணம் கேட்டார். நான் உடனே இல்லை என்று சொல்லிவிட்டேன்.  முன்னர் நீங்கள் சொன்னபடி, திருவண்ணாமலை வந்துவிட்டு உடனே சென்னைக்கு திரும்புவதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். தினசரி மதுவைக் குடிப்பது, நமது ஊரைப் பொறுத்தவரை குடிநோயை உருவாக்கும் என நம்புகிறேன். ஆலிவர் அண்ணா அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

நண்பன், காதலி தூரம் தள்ளிப்போக இசைவாழ்க்கையை தக்க வைக்க போராடும் கலைஞனின் கதை! டிக் டிக் பூம்

படம்
  டிக் டிக் பூம் ஆண்ட்ரூ கார்பீல்ட் படம் அமெரிக்க இசைக்கலைஞரான ஜொனாதன் லார்சன், வாழ்க்கையைப் பேசுகிறது.  ஜொனாதன் லார்சனாக ஆண்ட்ரூ கார்பீல்ட் நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சி தொடங்கி படம் முடியும் வரை அவரின் அர்ப்பணிப்பு உணர்வு அசத்தலாக இருக்கிறது.,  ஜொனாதனுக்கு சில நாட்களில் 30 வயது தொடங்கவிருக்கிறது. அதுநாள் வரை அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என அவருக்கே கேள்வி எழுகிறது. எனவே, அவர் இத்தனை நாட்களும் பிராட்வே நாடகங்களுக்கு இசையமைப்பும் வாய்ப்பை பெற முயன்று வந்தார். ஆனால் ஏதோ ஒரு விஷயம் இசையில் வேலை செய்யவில்லை. எனவே, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் காதலியும் நடனம் சார்ந்த வேலைக்காக வேறு இடத்திற்கு போக நினைக்கிறாள். சிறுவயது நண்பன் நடிக்கும் வாய்ப்பு தேடி முயன்று தோற்று வேலை தேடி வேறு இடம் நோக்கி போகிறான்.  எனவே, தன் வாழ்க்கை சார்ந்து வேகமாக யோசிக்கும் நிலைக்கு ஜொனாதன் தள்ளப்படுகிறான். வாழ்க்கையை நடத்த இசை மட்டுமே போதாது அல்லவா? இதனால் துரித உணவகம் ஒன்றில் வெய்ட்டராக வேலை பார்க்கிறான்.  ஜொனாதனின் சிறப்பே, அவன் எழுதும் பாடல்கள் அனைத்துமே தினசரி வாழ்

ஊக்கமளிக்கும் இசைக்கலைஞர்கள்- ஜூபின் நாட்டியால், சந்தோஷ் நாராயணன், மெஹ்தாப் அலி நியாசி

படம்
  பாடகர் ஜூபின் நாட்டியால் அசல் குரல்! ஜூபின் நாட்டியால் பாடகர், சுயாதீன இசைக்கலைஞர் தொடக்கத்தில் இவரது குரலைக் கேட்ட ஏஆர்ஆர், உனது குரல் தனித்துவமாக இருக்கிறது என்று சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். டேராடூனிலிருந்து ஜூபின் மும்பைக்கு வர அதுவே காரணம். பிறகுதான், அவரை எக்ஸ் ஃபேக்டர் எனும் நிகழ்ச்சி தேர்வில் சோனு நிகாம் தகுதியில்லை என நீக்கினார். பிறகுதான், சில வேலைகள் செய்து கிடைத்த பணத்தை வைத்து வாரணாசி முதல் சென்னை வரை அலைந்து திரிந்தார். இதற்கிடையில் டெமோ பாடகராக 250 பாடல்களை பாடினார். இவரது முதல் பாடல் ஏக் முலாகத்.  நான் என்னுடைய வரம்புகளை தெரிந்துகொண்டபோது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அரசியல் என்னை கீழே தள்ளியபோது சிரித்துக்கொண்டே நான் அங்கிருந்து விலகிவிடுவேன் என்கிறார். காபில் ஹூன், தி ஹம்மா, தும் ஹி ஆனா என நிறைய பாடல்களை பாடியுள்ளார். கடந்த ஆண்டு இவர் பாடிய இரு பாடல்கள் பலராலும் விரும்பி கேட்கப்பட்டது. லுட் காயே, ராடான் லம்பியான் என்ற இருபாடல்களை நீங்களும் கேட்டிருக்கலாம்.   பாடலுக்கு ஒரு முகத்தை கொடுப்பது என்பது இசையில் கடினமானது என்றார் ஜூபின். திரையிசையோடு சுயாதீன இசைப

2021இல் சிறந்த கேட்கெட்ஸ்! - மானிட்டர், சவுண்ட்பார், ஹெட்போன்கள், இயர்போன்கள்

படம்
              சிறந்த டிஜிட்டல் சாதனங்கள் 2021 எல்ஜி அல்ட்ராகியர் 34 ஜிஎன் 850 கொஞ்சம் வளைந்த உடலோடு உள்ள உள்ள மானிட்டர் மேம்பட்ட அனைத்து அனுபவங்கள் மற்றும் வசதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது . ஒரு நிமிடம் ரெஸ்பான்ன்ஸ் டைம் , 160 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் தன்மை கொண்டதாக உள்ளது . இதனால் விளையாட்டுகளை இந்த மானிட்டரில் இணைத்து விளையாடலாம் . பெரிய திரை உங்களுக்கு விளையாட்டு அனுபவத்தை அற்புதமாக்குகிறது . சிறந்த போன் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா சிறந்த போன் என்பதற்கான போட்டி எப்போதும் கடுமையானதுதான் . சாம்சங் நிறுவனம் உருவாக்கியதில் சிறந்த போன் இதுதான் என உறுதியாக கூறலாம் . 120 ஹெர்ட்ஸ் டபிள்யூக்யூஹெச்டி , ஹெச்டிஆர் 10 பிளஸ் திரை ஆகியவை அபாரமாக உள்ளன . பின்புறத்தில் 108 எம்பி சென்சார் , 40 எம்பி முன்புற கேமராக்கள் சிறப்பாக உள்ளன . பிற டிஜிட்டல் சாதனங்களுடன் போனை எளிதாக இணைத்துக்கொள்ள முடிகிறது . காசுக்கான மதிப்பு சீன போன்கள் இன்று தங்களது தரத்தில் முன்னேறி வருகின்றன . ஒன் பிளஸ் போன் , இதற்கான முக்கியமான சான்று . விலைக்கு தகுந்த ஏராளமான அம்சங்களை