உண்மையான திறமை இருந்தால்தான் தொழில்நுட்பம் உதவும்! அர்மான் மாலிக்

 

















அர்மான் மாலிக்
பாடகர்







நீங்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறீர்கள். கலைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் உதவுகிறது என நினைக்கிறீர்களா?


சமூக வலைத்தளங்களை நான் ரசிகர்களை சந்திக்கும் இடமாக பார்க்கிறேன். என்னுடைய வேலை பற்றி கூறுவதோடு தினசரி என் வாழ்க்கை பற்றியும் இதில் பதிவிட்டு வருகிறேன். இதில் இயங்கி ஒரே இரவில் பெரும் புகழ்பெற்றவர்கள் இங்கு நிறையப் பேர் உருவாகி வருகிறார்கள். அதேசமயம் இப்படி புகழ்பெறுபவர்களை விட திறமையான ஏராளமானோர் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளும் கலையை வளர்த்துக்கொண்டால் அவர்களின் தொழில்வாழ்க்கையும் உயரத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. 

தொண்ணூறுகளில் சினிமா அல்லாத இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. இன்று இந்தி உலகில் தனி இசைக்கு என்ன இடம் இருக்கிறது. இப்போதுள்ள நிலை இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறதா?


நான் இதை ஏற்க மறுக்கிறேன். தனி இசை ஆல்பமாக வரும் பாடல்கள் சினிமா பாடல்களை சிறப்பாக உள்ளன. வந்துகொண்டு இருக்கின்றன. இந்தி திரையுலகம் சினிமா இசையை முக்கியமாக கருதுவது உண்மை. இதனை நெடுங்காலமாக அங்குள்ள நிறுவனங்கள் செய்து வருகின்றன. இன்று இசை என்பது முழுக்க சினிமா சார்ந்து மட்டுமே இல்லை. அந்த நிலை இப்போது உருவாகியுள்ளது. 

இன்று ஆட்டோ ட்யூன், சவுண்ட் எஞ்சினியர் கூட பாடல்களை நன்றாக உருவாக்க முடியுமே? இதில் உண்மையான திறமை இருந்தால்தான் துறையில் நீங்கள் சாதிக்க முடியும் என்று கூறினீர்கள்? எப்படி?

ஆட்டோ ட்யூனை பலபேர் தவறாக புரிந்துகொள்கிறீர்கள். இது ஒரு பிளக் இன் வசதி. இதை சரியாக பயன்படுத்தினால் ஒருவரின் குரலை நன்றாக மேம்படுத்த முடியும். ஆங்கிலப் பாடகர்களில் டி பெய்ன் ஆட்டோ ட்யூன் வசதியைப் பயன்படுத்தித்தான் பாடல்களை வெளியிடுகிறார். இதை அவர் தன் அடையாளமாகவே மாற்றிக்கொண்டார். ஆட்டோ ட்யூன் என்பது உங்களிடமிருந்து வரும் விஷயத்தை மேம்படுத்தும். எந்த தொழில்நுட்பமும் இப்படித்தான். தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பதுதான் பிரச்னை. கலைத்துறை சார்ந்து கலைஞர்கள் இயங்கவில்லை. கலைஞர்கள் சார்ந்துதான் துறை இயங்கி வருகிறது. உண்மையான திறமை இருந்தால்தான் அதை தொழில்நுட்பம் கொண்டு மேம்படுத்த முடியும். நான் கூறியதன் அர்த்தம் இதுதான். பாடல்களை உருவாக்குவதில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தவறில்லை. அதுதான் நடைமுறை வழக்கம். 

TOI 

Shreyanka mazumdar





கருத்துகள்