இடுகைகள்

ஊடகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுவாரசியமான செய்தி வெறியால் அழிக்கப்பட்ட தனது குடும்பத்திற்காக அறவழியில் பழிவாங்கல்! - பினாக்கியோ - கொரிய தொடர் - இறுதிப்பகுதி

படம்
        பினாக்கியோ இறுதிப்பகுதி கொரியதொடர் எம்எக்ஸ் பிளேயர் டிவி சேனல் நேர்காணலில்... மொத்தம் இருபது எபிசோடுகள்தான் . முதல் பகுதியில் தீயணைப்பு வீரரான ஒருவர் கட்டிடம் ஒன்றில் தீயணைக்க செல்கிறார் . அங்கு தகவல் கொடுப்பவர் செய்யும் குளறுபடியால் தீயணைப்பு வீரர்கள் அனைவருமே கேஸ் வெடித்து இறக்கும்படி ஆகிறது . உண்மையில் இதற்கு பின்னணியில் தொழிலதிபர் ஒருவரும் அவருக்கு உதவியாக அரசியல்வாதியும் உள்ளனர் . ஆனால் இந்த உண்மை வெளியே வரக்கூடாது என தொழிலதிபர் பங்குகளை வைத்துள்ள எம்எஸ்சி என்ற ஊடகத்தின் செய்தியாளர் சாவோக்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது . முதலில் உண்மை , நேர்மை , கண்ணியம் , கட்டுப்பாடு என்பவர் இறுதியில் வாய்ப்புதான் வசதியைக் கொடுக்கும் என சலனப்பட்டு டீலுக்கு ஒகே சொல்லுகிறார் . செய்திகளில் வீரர்கள் இறப்புக்கு தீயணைப்பு வீரர்களின் தலைவர்தான் காரணம் என கட்டம் கட்டுகிறார் சாவோக்கி . இதனால் மக்களின் கோபம் முழுக்க தீயணைப்பு வீரரின் குடும்பம் மீது திரும்புகிறது . இப்படி மக்களின் வெறுப்பினால் தீயணைப்பு கேப்டனின் மகன்கள் கி ஜே மியூங் , ஹோமி யூங் ஆகியோரின் வ

தனது குடும்பத்தை அழித்த டிவி நிருபரை பழிவாங்கப் போராடும் சகோதரர்களின் கதை! பினாக்கியோ - கொரிய தொடர்

படம்
                  பினாக்கியோ கொரிய தொடர் 10 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்    Genre: Romance, Drama, Comedy, Family Written by: Park Hye-ryun Directed by: Jo Soo-won, Shin Seung-woo   Pinocchio is a 2014–2015 South Korean television series starring Lee Jong-suk, Park Shin-hye, Kim Young-kwang and Lee Yu-bi தீயணைப்பு வீரரின் குடும்பம் எப்படி ஊடகங்களின் தவறான செய்தியால் அழிகிறது . அதில் மிஞ்சிய அண்ணன் அதற்கு காரணமான ஆட்களை கொலை செய்ய திட்டமிட்டு வாழ்ந்து வருகிறான் . அவன் தற்கொலை செய்துகொண்டதாக கருத்ப்படும் தம்பி சொய் தொல்போ என்ற பெயரில் வயதான ஒருவரால் தத்து எடுக்க்ப்பட்டு வளர்க்கப்படுகிறான் . விதிவசத்தால் அவனை கடலிலிருந்து மீ்ட்டு வளர்க்கும் குடும்பம் வேறு யாருமில்லை . அவனது குடும்பத்தை அவதூறு செய்து அம்மா தற்கொலை செய்துகொள்ள காரணமான செய்தி ஆசிரியர் சாவ் கீ யின் கணவர் குடும்பம்தான் . மனைவி தன் பேச்சை கேட்காத காரணத்தால் அவளை விவகாரத்து செய்துவிட்டு தனது தந்தையுடன் வாழ்கிறார் சாவ் கீ கணவர் . சாவ் கீயின் மகளை இன்கா ஒரு பினாக்கியோ குறைபாடு கொண்ட சிறுமி . இந்

ஊடகங்களை அச்சுறுத்தும் அவதூறு வழக்கு எனும் ஆயுதம்! - அதிமுக தொடங்கிய ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடு

படம்
            அவதூறு வழக்கு எனும் ஆயுதம் ! இந்த கட்டுரையை எழுதும்போது வரையில் அறுபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை அரசும் , அரசுத்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களின் மீது தொடுத்துள்ளனர் . இந்த அணுகுமுறையை முதன்முதலில் கையில் எடுத்தது . அதிமுக அரசுதான் . இத்தகைய வழக்குகள் இன்றும் கூட செஷன் கோர்ட்டுகளில் இன்றும் வழக்கில் உள்ளன . இதனால் என்ன பயன் விளையும் என நினைக்கிறீர்கள் ? தனது செயல்பாடுகளை யாரும் விமர்சிக்க கூடாது என்ற பாசிச மனப்பான்மையின் கொக்கரிப்புதான் . 1992 ஆம் ஆண்டு தொடங்கிய நடைமுறை இன்று விரிவாகியுள்ளது . சென்னையில் வெளிவரும் ஆங்கில தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் மீதும் 120 வழக்குகளை ்அதிமுக அரசு தொடுத்தது . இப்படி வழக்கு தொடுத்து ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதோடு இதற்கான செலவுகளும் பெரும் சுமைதான் . அதிமுகவின் ஆட்சிக்குப்பிறகு வந்த திமுக அரசு , ஊடகங்களின் மீதான வழக்கை ஒரே ஆணையில் நீக்கியது . ஆனால் இந்த வழக்கத்தை அப்படியே கடைபிடித்து ஊடகங்களின் மீது 50 வழக்குகளை பதிவு செய்தது . இதனை ரத்து செய்தது அதிமுக அரசுதான் . திமுக , அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் தொ

இசை அலைகள் - நிறைவடைவது எங்கு?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி இசை அலைகள் நிறைவடைவது எங்கு? மூடிய ஒரு அறைக்குள் இசை அலைகள் பரவும் போது எதிரொலியை உருவாக்குகின்றன. அதே மூடப்படாத பரப்பில் காற்றின் வேகத்தைப் பொறுத்து அது பிறரின் காதுக்கு கேட்கலாம். மனிதர்களின் காதுகள் கேட்கும் அலைவரிசை வரையில் ஒலி கேட்கும். அவற்றின் அதிர்வெண் அதிகரிக்கும்போது நம்மால் அவற்றை உணர முடியாது. இவ்வகையில் நாம் பார்வை சார்ந்து இயங்குபவர்களே. காட்டில் வாழ்ந்தபோது, ஐம்புலன்களும் கூர்மையாக இருந்தால் மட்டுமே இயற்கை விலங்குகளைத் தாண்டி உயிர்வாழ முடியும். பின் நிலைமை மாறியது. 1,493 மி/செகண்ட் வேகத்தில் நீரில் இசை அலைகள் பரவும். காரணம், காற்றை விட நீரில் அழுத்தம் குறைவு. இசை அலைகளை உருவாக்க ஆற்றல் தேவை. இதன் முடிவு என்பது அது வெளியிடப்படும் ஊடகம் பொருத்தது.

ஃபாக்ஸ் டிவியின் ஸ்மித் மக்களை வசீகரித்தது எப்படி?

படம்
ட்ரம்பை எதிர்க்கும் செய்தியாளர் ! அமெரிக்காவின் மிசிசிபியைச் சேர்ந்த ஸ்மித் , ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் தூண் . ட்ரம்ப் காலையில் எழுந்ததும் கவனிக்கும் ஒரே சேனல் என ஃபாக்ஸ் நியூஸ் பெயர்பெற செபர்ட் ஸ்மித்தின் அசராத செய்தி சொல்லும் முறையும் முக்கிய காரணம் . தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்து தில்லாக நிகழ்ச்சி நடத்துபவருக்கும் டிவி சேனலுக்கும் பலமுறை முட்டிக்கொண்டாலும் , ஸ்மித்தின் ஆளுமைக்காகவே மீண்டும் ஒப்பந்தம் செய்துகொண்டது ஃபாக்ஸ் நிர்வாகம் . புளோரிடாவின் உள்ளூர் சேனலில் வேலை பார்த்த ஸ்மித் , 1996 ஆம் ஆண்டிலிருந்து ஃபாக்ஸ் நியூசில் வேலை பார்த்து வருகிறார் . இன்று இவரின் நிகழ்ச்சிக்கென உழைக்கும் 17 பேர் கொண்ட செய்தியாளர்குழுவின் வலிமையால் பிற நிகழ்ச்சிகளை விட ஸ்மித்தின் நிகழ்ச்சி தனியாக தெரிகிறது . பார்க்லாந்து துப்பாக்கிச்சூடு பற்றிய இவரின் செய்தி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதற்கு காரணம் ஒவ்வொரு அமெரிக்க பெற்றோர்களின் நெஞ்சிற்கு நெருக்கமான , கேட்டிராத , அஞ்சும் உண்மைகளை இவர் பேசியதுதான் .