இடுகைகள்

கருத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பருவநிலை மாற்றம் பற்றிய இளைஞர்களின் எதிர்வினைகள்!

படம்
  சூழல் பற்றிய கருத்து மேகேக் ஆனந்த், 16 வசந்த் வேலி பள்ளி, டெல்லி நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும். அதிக நுகர்வு சூழலை நிச்சயமாக பாதிக்கும். தங்களது வாழ்க்கை முறையை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்குவது நல்லது. நாளை என்று சொல்லாதீர்கள். இன்றே தொடங்குங்கள் ஸெனப் ஹபீப், 20 பி.டெக் மாணவி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது , குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றை செய்தால்தான் நாம் வாழும் பூமியை, தாய்மடியை காப்பாற்ற முடியும். இது எதிர்காலத்தில் நமது குழந்தைகளைக் காப்பாற்ற உதவும். எனவே சூழலைக் காப்பாற்ற இப்போதே செயல்படலாம்.  தனிஷ்கா பேடி, 17 ஹெரிடேஜ் எக்ஸ்பரிமென்டல் பள்ளி குருகிராம் அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் பிரச்னை. இவர்களுக்கு தேவையான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூரில் கிடைக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், தேவையில்லாமல் உணவு வீணாகுவது நடைபெறாது. இதுதான் இன்னும் நீண்டநாள் உலகை நடத்திச்செல்ல உதவும். ஆரண்யக் கோஷ் மஜ

ட்விட்டரை பணிய வைக்க படாதபாடு படும் மத்திய அரசு!

படம்
                 சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் குடியரசுத் தலைவர் முகமது புகாரி, தனது கருத்தை வெளியிட மறுத்து நீக்கிய ட்விட்டருக்கு தடை விதித்தார். அரசின் தணிக்கை முறைக்கு ஆதரவான கூ செயலிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு புதிய தகவல்பாதுகாப்புக்கொள்கையை உருவாக்கி அதற்கு ஏற்பட சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. ட்விட்டர் மட்டும் முரண்டு பண்ண அதனை பின்விளைவுகளை எ ண்ணிப் பாருங்கள் என மத்திய அரசு மிரட்டி வருகிறது. பாஜக வைச் சேர்ந்த சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சி கோவிட்டைப் பயன்படுத்தி டூல்கிட் பிரசாரங்களை, திட்டங்களை வகுக்கிறது என குற்றம் சாட்டினார். ட்விட்டரையும் கூட போகிற போக்கில் செய்திகளை மாற்றி வெளியிடுகிற ஊடகம் என்று திட்டினார். இதற்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சகமும் முட்டுக்கொடுத்தது. குருகிராமில் இருந்த ட்விட்டர் நிறுவனமும் மிரட்டப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரியாக ட்விட்டர் நியமிக்கவேண்டும் என்பதுதான் அரசின் சட்டம் சொல்லும் நியதி. மே 27இல் , அரசின் சட்டங்களைப் படித்த ட்விட்டர், அரசு, ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக செயல

மேல் முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என சொல்லும் மத்திய அரசின் புதிய சீர்திருத்தம்! - ட்ரிப்பியூனல் அமைப்பு கலைக்கப்படுகிறது

படம்
                காணாமல் போகும் ட்ரிப்யூனல் மத்திய அரசு , தற்போது புதிய சீர்திருத்தமாக திரைப்படங்களை மேல் முறையீட்டிற்கு அனுப்பும் ட்ரிப்பியூனலை கலைத்துள்ளது . இதனால் சர்ச்சைக்குரிய மையப்பொருளைக் கொண்ட படங்கள் உயர்நீதிமன்றத்தில் தங்கள் படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற வேண்டியிருக்கும் . 1983 ஆம் ஆண்டு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952 படி ட்ரிப்பியூனல் அமைக்கப்பட்டது . இதில் தலைவர் உட்பட ஐந்து பேர் இருப்பார்கள் . இவர்களை உறுப்பினர்களாக கருதலாம் . கூடுதலாக ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலரும் இருப்பார் . மத்திய தணிக்கை வாரியத்தின் கருத்திற்கு எதிராக திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் ட்ரிப்பியூனில் தங்கள் படங்களின் திருத்தங்களுக்கு எதிராக முறையிட்டு நீதி பெறலாம் . மத்திய தணிக்கை வாரியத்தில் தலைவர் தவிர்த்து 23 உறுப்பினர்கள் இருப்பார்கள் . இவர்கள் படங்களைப் பார்த்து திருத்தங்களை கூறி அதற்கான பல்வேறு சான்றிதழ்களை வழங்குவார்கள் . யு , யு / ஏ , ஏ என பல்வேறு வித சான்றிதழ்களை வழங்குவார்கள் . ஏ சான்றிதழ் பெற்ற படங்களை டிவியில் ஒளிபரப்புவது கடினம் . பொதுமக்களின் பார்வையிடலுக்கு வரு

நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை நடிப்பில் பிரதிபலிக்கிறேன்! - ரிச்சா சதா

படம்
        ரிச்சா சதா தனது அரசியல் நிலைப்பாடுகளை கூட வெளிப்படையாக கூறும் தைரியம் பெற்ற இந்தி நடிகை . நாடகங்கள் , சினிமா , ஓடிடி தளம் என இயங்கி வருகிறார் . மேடம் சீஃப் மினிஸ்டர் படம் வெளியாகியுள்ளது . இதுபோன்ற படத்தின் கதாபாத்திரங்கள் உங்களை புரட்சிகரமான நடிகராக காட்டுகிறதேழ மாசான் படத்திலும் , கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் , பக்ரி ஆகிய படங்களிலும் நான் நடித்த கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கின்றன . நான் நடிக்கும் பாத்திரங்கள் என்னோடு உரையாடும்படி பார்த்துக்கொள்கிறேன் . இந்த படத்தில் நடித்துள்ள தாரா என்ற பாத்திரமும் அப்படித்தான் . முதல்வராவது இவளின் ஆசை .    இவர் எந்த அரசியல்வாதியை மையமாக கொண்டுள்ளவர் என்று கூட சர்ச்சை எழுகிறதே ? நிஜ சம்பவங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்தில் நுணுக்கமாக இருக்கும் . இயக்குநர் எட்டு ஆண் , பெண் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் . நான் மக்கள் ஒருவரின் பாத்திரத்தை இன்னொருவருடன் ஒப்பிட்டு புரிந்துகொள்வதை ஏற்கிறேன் . ஆனால் இக்கதாபாத்திரம் குறிப்பிட்ட ஒருவரை நோக்கியது அல்ல . சமூ

சமூக வலைத்தளங்களின் சக்தியும், வருமானமும்! டேட்டா கார்னர்

படம்
                சமூக வலைத்தளம் டேட்டா கார்னர். இன்று சமூக வலைத்தளம்தான் புதிய புதுமையான செய்தி ஊடகமாக உள்ளது. இதில் வெறுப்பு அரசியல் முதற்கொண்டு  நடைமுறையிலான புதிய செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் மனநிலை பற்றி அறிய சமூக வலைத்தளங்களை பார்த்தாலே போதும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அதற்கேற்ப பல்வேறு நாடுகளில் நடைபெறும் முக்கியமாற பிரச்னைகளை சமூக வலைத்தளங்களில் அலசி பிழியப்படுகின்றன. இதைப்பற்றிய டேட்டாவை இப்போது பார்க்கலாம். உலகம் முழுவதும் செயலூக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்களின் எண்ணிக்கை 3.96 பில்லியன்.  உலக மக்கள்தொகையில் இது 46 சதவீதம். இந்தியாவில் 28 சதவீத மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 376. 1 மில்லியன். இந்தியர்கள் வாரத்திற்கு 17 மணிநேரங்களை சமூக வலைத்தளத்தில் செலவழிக்கிறார்கள். இது அமெரிக்கா, சீனா நாடுகளை விட அதிகம். 2019ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களின் எண்ணிக்கை 28%. இதன் மதிப்பு ரூ.13,683 கோடி. ஃபேஸ்புக்கின் 98 சதவீத வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் கிடைக்கிறது. டிவிட்டரின் வர

கருத்து சொல்லுங்க பாஸ்! - வற்புறுத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

படம்
பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல் நிலைப்பாடு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வணிகம் தடையில்லாமல் நடைபெற என்ன அவசியமோ அந்த காரியங்களை ஆங்கிலேயர் செய்தனர். அதில் சில நல்ல விஷயங்களும் நடந்தன. உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிப்பு போன்ற மூடநம்பிக்கை சார்ந்த பிற்போக்குதனங்களும் குறைந்தன. அதேநேரம் இந்த செயற்பாடுகள் கூட படித்த இந்தியர்களின் செல்வாக்கு, உழைப்பு காரணமாகவே சட்டமாக்கப்பட்டன. அதேசமயம் அன்று நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள் பற்றி எந்த வர்த்தக நிறுவனங்களும் கவலைப்படவும் இல்லை. அதுபற்றி கருத்துகளைச் சொல்லவும் இல்லை. சமூக வலைத்தளங்கள் வந்தபிறகு காட்சிகள் அனைத்தும் மாறின. வலைத்தளத்தில் பல்வேறு விளம்பரங்கள் இடம்பெறத்தொடங்கின. இதனை விளம்பரத்துபவர்களுக்கு இன்ஃபுளுயன்சர் என்று பெயர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு பணமும் வழங்குகின்றன. இன்று தேசியமயம், வலதுசாரி பாபுலிச கோஷங்கள் உச்சம் பெற்றுவருகின்றன. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் அந்தந்த நாட்டு அரசுகளின் நிலைப்பாடு, அல்லது அனைவரும் ஏற்கும்படியான நிலைப்பாடுகளை தங்களின் நிறுவன மதிப்பு கெடாமல் எடுத்து வருகின்றன. முன