இடுகைகள்

செயற்கை நுண்ணறிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிறைய சவால்கள் உண்டு!

படம்
      மேக்ஸ் டெக்மார்க், அறிவியலாளர்       மேக்ஸ் டெக்மார்க் -Max Tegmark   விண்வெளி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவர் நீங்கள் . திடீரென எதற்கு செயற்கை நுண்ணறிவு துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினீர்கள் ? எனக்கு பெரிய கேள்விகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் . கற்பனைக்கு எட்டாத பெரிய கேள்விகள் , பெரிய , சரியான கேள்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம் . விண்வெளி உருவாகியது , அதூபற்றி தத்துவங்கள் , அனைத்து விஷயங்களும் எப்படி தொடங்கியிருக்கும் ?, அடுத்து என்ன நடக்கப்போகிறது , இந்த விவகாரங்களுக்கு இடையில் நமது பங்கு என்ன ? என்று இப்படி கேள்விகள் சென்றுகொண்டே இருக்கும் . நான் வானியலில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் . ஆனால் அதில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது . மிகவும் அரியதும் கூடத்தான் . எனவே , நான் விடை காண முடியாத சிக்கல்களைக் கொண்ட துறையை தேடினேன் . அப்போதுதான் நரம்பியல்துறை சார்ந்த தகவல்கள் , அதில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிய வந்தது . இன்று நாம் நுண்ணோக்கிகள் வழியாக நம் முன்னோர்கள் பார்க்க முடியாத அற

மூளையின் கட்டளைக்கு ரோபோக்கள் பணிந்தால்...

படம்
  மூளையின் கட்டளைக்கு பணியும் ரோபோ! ஸ்விட்சர்லாந்து நாட்டின் தொழில்நுட்ப மையம் (EPFL), செயல்பட்டு வருகிறது. இதிலுள்ள  இரண்டு குழுக்கள்  மூளையின் கட்டளைக்கு ஏற்ப, ரோபோக்கள் செயல்படும் ஆய்வை செய்துவருகிறார்கள். இந்த ஆய்வில் கிடைக்கும் முடிவுகள், கை, கால் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு (Tetraplegic) உதவும்.  மனிதர்களின் மூளையில் உருவாகும் மின்தூண்டல்களுக்கு ஏற்ப ரோபோக்களை செயல்பட வைக்க முயன்று வருகிறார்கள். இவ்வகையில், மாற்றுத்திறனாளிகள், எளிதாக பிற மனிதர்கள் போல தினசரி வேலைகளை தாங்களே செய்யலாம்.   பேசுவது, உடல் பாகங்களை அசைப்பது என எளிதான விஷயங்களைக் கூட செய்யமுடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களை ரோபா ஆய்வில் பங்கேற்க வைத்து, சிறு வேலைகளை கொடுத்து சோதித்து வருகிறார்கள்.  ”விபத்தின் காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். இதனால் உடலின் பெரும்பாலான பாகங்கள் செயலிழந்துபோய்விட்டன. இதனால் ஒரு சிறிய பொருளை பிடிப்பது போன்ற மோட்டார் இயக்கங்கள் கூட கடினமானதாக உள்ளது. இவர்களின் வேலைகளை இனி ரோபோ புரிந்துகொண்டு சாமர்த்தியாக செய்யும்” என்றார்  ஆய்வாளர் ஆடா பில்லார்ட். ரோபோக்கள் மாற்றுத

ரோபோட்டுகளால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது! - டாக்டர் கேட் டார்லிங்

படம்
              டாக்டர் கேட் டார்லிங் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்     நாம் ரோபோக்களைப் பற்றி யோசிப்பதில் தவறு ஏதேனும் உள்ளதா ? நாம் எப்போது் மனிதர்கள் , செயற்கை நுண்ணறிவை ஒரே தட்டில் வைத்து சோதித்து வருகிறோம் . இந்த ஒப்பீடு , நமது கற்பனையை கட்டுப்படுத்துகிறது . இதில் விலங்குகள் எப்படி தொடர்புடையவையாக உள்ளன ? நாம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகள் நமக்கு பயன்பாடு உள்ளவை . இவற்றையும் ரோபோக்களையும் தொடர்புடையதாக கூற முடியாது . ஆனால் மனிதர்கள் ரோபோக்களுக்குமான தொடர்பில் விலங்குகள் முக்கியமானவை . இவற்றின் உடல் அசைவுகள் ஆராய்ச்சிக்கு முக்கியமானவை . பெரும்பாலான நிறுவனங்கள் மனிதர்கள் இல்லாமல் செயல்படக்கூடிய இயந்திரங்களைதயதாரித்து வருகிறார்கள் உதாரணத்திற்கு தானியங்கி கார் , ட்ரோன் டெலிவரி என . இதில் விலங்குகளின் தன்மைகளில் உருவாக்கப்படும் ரோபோக்கள் , ஆராய்ச்சி மனிதர்களுக்கு உதவுமா ? மனிதர்களின் வேலைக்கு பாதிப்பு உள்ளது உண்மைதான் . ஆனால் அது ரோபோட்டுகளால் உருவாக்கப்படவில்லை . அதை தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் அரசியல் , பொருளாதார விஷயங்களால் ஏற்படுவது இந்த

உணர்ச்சிகள் வழியாக ஒருவரை எளிதாக புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு! - பரபரக்கும் ஏஐ ஆராய்ச்சி உலகம்

படம்
  உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு ! செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி , மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி வருகிறது . செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்று வருகிறது . பல்வேறு இணையத்தளங்களில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதும் ஏ . ஐ நுட்பம்தான் . புகைப்படங்களை பயிற்சி செய்து விலங்குகளை எளிதில் அடையாளம் காண கற்பதோடு மனிதர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவுத்துறை பயணிக்கிறது . எப்படியிருக்கிறீர்கள் , சாப்பிட்டீர்களா ? என்ற வார்த்தைகளை இன்று பலரும் வீடியோ அழைப்புகளிலும் , குறுஞ்செய்திகளிலும்தான் கேட்டு வருகிறார்கள் . இந்த அழைப்புகள் நேருக்கு நேர் பேசுவது போல இருக்காது . இதில் ஒருவரின் உணர்வைப் புரிந்துகொண்டு பேசினால் எப்படியிருக்கும் ? எல் கலியோபி என்ற பெண்மணி , அஃபெக்டிவா என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . வண்டி ஓட்டும்போது , மின்னஞ்சல் அனுப்பும்போது ஒருவரின் உணர்வுகளை எளிதாக அடையாளம் காணமுடியும் என இந்நிறுவனம் கூறுக

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா?

படம்
    cc     மிஸ்டர் ரோனி செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா? 1950ஆம் ஆண்டு கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலம்தொட்டே செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்கள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றை கணினியின் மூளை என்று முதலில் அழைத்தனர். செஸ் விளையாடுவத, மொழிகளை மொழிபெயர்ப்பு செய்வது ஆகியவற்றை முதலில் ஏ.ஐ செயதுவந்தது. மனித மூளையின் செயல்திறனுக்கு ஏற்ற வகையில் செயல்படும் என்று ஏ.ஐ முதலில் கருதப்பட்டது. கணினியின் செயல்திறனும், இணையமும் வேகமாக கூடியபோது, ஏ.ஐ அல்காரித ஆராய்ச்சியும் வேகம் பிடித்தது.கடந்த பத்தாண்டுகளில் நாம் தீர்க்க நினைத்த பல்வேறு பிரச்னைகளை ஏ.ஐ தீர்த்துவைத்துள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் திட்டங்கள், வணிகம் ஆகியவற்றின் அடிப்படையாக ஏ.ஐ உள்ளது. செயற்கை நுண்ணறிவில் என்னென்ன வகைகள் உண்டு? இன்று ஆழக்கற்றல் என்ற வகையில் சிறப்பானது என்று கூறும்படியான ஏ.ஐ கணினிகள் உருவாகி வருகின்றன. இவை மனிதர்களைப் போன்றவை. எப்படி வீட்டிலுள்ள குழந்தை தன் பெற்றோரைப் பார்த்து தாய்மொழியைப் பேசக் கற்கிறதோ அதைப்போல, ஆழக்கற்றல் ஏ.ஐ கணினி, பல்வேறு பேச்சுகளை அடையாளம் கண்டுபிடித்து சேகரித்த

ஏஐ உருவாக்கும் ஆபாச படங்கள்!

படம்
செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஆபாச படங்கள்! இணையத்தில் பிரபல நடிகைகளின் முகங்களைப் பொருத்தி ஆபாச படங்கள் முதலில் வெளியானபோது யாரும் அதனைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவை அனைத்தும் வக்கிர கும்பல்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களைப் பயன்படுத்தி செய்தவை என்றால் அது செய்திதானே? அதைத்தான் குளோபல் டைம்ஸ் மற்றும் தி பெய்ஜிங் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் செய்திகளாக்கி வெளியிட்டுள்ளன. படங்கள் மட்டுமல்ல வீடியோக்களையும் போலியாக தயாரித்து வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக பராக் ஒபாமா மற்றும் மார்க் ஸூக்கர்பெர்க் தான் சொல்லாத விஷயங்களையும் செயற்கை நுண்ணறிவு மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். மேலும் ஸ்கார்லெட் ஜோகன்சன் மற்றும கல் கடோட் ஆகியோரின் புகைப்படங்களும் ஆபாச அழகிகளின் உடல்களைப் பெற்று உலகமெங்கும் ஆபாசப்பட ரசிகர்களை சந்தோஷப்பட வைத்து அல்லது அதிர்ச்சியடைய வைத்து வருகின்றனர். சமூக வலைத்தளமான வெய்போவில் டிவி நடிகை தொடர்பான வீடியோதான் பலருக்கும் போலி வீடியோக்கள் பற்றிய செய்தியை தீவிரமாக்கியது. அலிபாபாவின் வலைத்தளத்திலும் கூட பல்வேறு போலி செலிபிரிட்டிகளின் படங்கள், வீடியோக்கள் இடம்பெற்றுள

குழந்தைகளின் அழுகுரலை மொழிபெயர்க்கும் ஏ.ஐ.!

படம்
குழந்தையின் அழுகையை மொழிபெயர்க்கலாமா? குழந்தையின் பெரும்பாலான நேர ஹாபி, அம்மாவை தன் அருகில் வரவைத்து பாதுகாப்பாக இருப்பதே. பசி, அழுகை, வலி என அனைத்துக்கும் அழுகைதான் ஒரே மொழி. தற்போது ஏ.ஐ. இதிலும் நுழைந்துள்ளது. குழந்தை இயல்பாக பசிக்கு அழுவதற்கும், வலி, ஆபத்து, அம்மாவின் அண்மை வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை செயற்கை நுண்ணறிவு மூலம் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். வடக்கு இலினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதில் தயங்காமல் இறங்கியிருக்கின்றனர். இப்பல்கலைக்கழக குழு இதற்காக தனி அல்காரிதம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கம்ப்ரஸ்டு சென்சிங் என்று அழைக்கப்படும் இம்முறையில் குழந்தையின் அழுகையை மொழிபெயர்த்து தருகின்றனர். இது குழந்தையின் பெற்றோர் மற்றும் டாக்டர்களுக்கும் உதவும் என நம்புகின்றனர். எப்படி செயல்படுகிறது? அல்காரிதம் குழந்தையின் அழுகை ஒலியை அலைவடிவமாக ஆராய்ந்து, அதன் லயம், தாளம், சுருதியை அளவிடுகிறது. முதலிலேயே தகவல் தளத்தில் நாம் குழந்தைகளின் அழுகையை பதிவு செய்து வைத்திருப்போம் அல்லவா? அதனோடு இதனை ஒப்பிட்டு நீ என்ற ஒலி என்றால் பசி, இயா என ஒலி வந்த

குரல் மூலம் முகம் வரையும் ஏஐ!

படம்
உண்மைதான். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் வேகமும் இன்று அதிகமாகிவிட்டது. தற்போது ஒருவரின் குரலைக் கேட்டு யூகமாக அவரின் முகத்தை ஏஐ வரையத் தொடங்கியுள்ளது. நம் கண்களைப் பொத்தியபடி ஒருவர் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்கிறார் எனில், டக்கென் மூளை தன் நினைவடுக்கில் தேடி ஹாய் குமார் என சொல்கிறோமே அதேதான். ஆனால் அதனை செயற்கை நுண்ணறிவு பழகிவிட்டது என்பதே ஆச்சரியம்தானே. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஆடியோ கிளிப்புகளை வைத்து பயிற்சி கொடுத்து இதனை சாதித்திருக்கிறார்கள். ஸ்பீச் டு ஃபேஸ் எனும் வசதி தோராயமானதுதான். குரலை வைத்து ஆணா பெண்ணா என கணித்து தோராய அளவில் உருவத்தை வரைகிறது. செயற்கை நுண்ணறிவின் வசதியில் இது முக்கியமானது கூட. arxiv எனும் அறிவியல் இதழில் இந்த ஆராய்ச்சி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. எந்தளவு உண்மையான முகத்தோடு மேட்ச் ஆகிறது என நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நன்றி: லிவ் சயின்ஸ்

இனி உங்கள் ஏசி பேசும்! - எல்ஜியின் புதிய சிப் காரணம்

படம்
எல்ஜி, ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் மூளை போன்ற சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதனை நியூட்ரல் சிப் என்று அழைக்கின்றனர். எல்ஜி நியூட்ரல் எஞ்சின் எனப்படும் இந்த சிப், குரல், டேட்டா ஆகியவற்றை பரிசீலனை செய்யும் திறன் பெற்றது. இந்த சேவை மேக கணினியத்தில் இணைக்காத போதும் செய்யமுடியும். மே 17 அன்று சியோலில் எல்ஜி, நியூட்ரல் எஞ்சின் என்பது மூளையின் நியூரான்களைப் போன்ற செயல்பாடுகளைக் கொண்டது என அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக எல்ஜி தன் ஏஐ பொருட்களை திங்க் என்ற பிராண்டில் சந்தைப்படுத்தி வருகிறது. இணைய இணைப்பின்றி செயல்படும் வசதி, அதற்கான பாதுகாப்பு ஆகியவற்றை எல்ஜி மனதில் கொண்டு இதனைத் தயாரித்திருக்கலாம் என்கிறாலர் அட்னன் பரூக்கி.  புதிய எல்ஜி ஏஐ சிப், எதிர்காலத்தில் அனைத்து எல்ஜி பொருட்களையும் கட்டுப்படுத்தும் விதமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இருக்கலாம். கருவி, இணையத்தில இணைக்கப்படாமலிருந்தாலும் செயல்படுவது இதன் ஸ்பெஷல்.  இதன் அர்த்தம் இனி உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஏசி, வாஷிங்மெஷின், டிவி, ஸ்மார்ட் உதவியாளர் என அனைத்து பொருட்களுக்கும் கண், காது கிடைக்கப்போகிறது என்ப

உலகை ஆட்டிப் படைக்கும் செயற்கை நுண்ணறிவு!

படம்
1.  மழை பெய்வது, மரங்களின் அறிவியல், அவை தமக்குள் பேசிக்கொள்கின்றனவா என்பது போன்ற கேள்விகள் நமக்குள் இருந்தாலும் நாம் யாரிடமும் கேட்டிருக்க மாட்டோம். இவை பற்றி பேசுகிறார் ஆசிரியர்.  2. நீங்கள் பார்க்கும் செய்தி, படிக்கும் நாளிதழ், வாங்கும் கடலை மிட்டாய் என அனைத்திலும் ஏதோவொரு செய்தி தாக்கம், தூண்டுதல் உண்டு. இதனை நன்றாக யோசித்தால் உணர்வீர்கள். மைக்ரோசாஃப்டின் tay சாட்பாட் போன்ற கண்டுபிடிப்பு எப்படி இனவெறி கொண்டதாக மெல்ல மாறியது முதற்கொண்டு செயற்கை அறிவு குறித்த தாக்கத்தை அருமையாக எழுதியுள்ளார் கார்த்திக்.  -கோமாளிமேடை டீம்

செயற்கை நுண்ணறிவு கேள்விகள்! - பதில் சொல்லுங்க பார்ப்போம்

படம்
Pexels.com ரோபோ குறித்து மூன்று விதிகளை உருவாக்கி புகழ்பெற்றவர் இவர். இன்றுவரை இவரின் விதிகளை அடிப்படையாக வைத்து ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவரின் லையர் என்ற சிறுகதையில்(மே 1941) இந்த விதிகள் எழுதப்பட்டன. யார் இந்த ஆளுமை? 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் மனிதர்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்தக்கூடாது என்று 200 க்கும் மேற்பட்ட டெக் கம்பெனிகள் போராடினர். இந்த போராட்ட அமைப்பின் பெயர் என்ன? ஐபிஎம் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. இதன் சிறப்பு, நாம் கேட்கும் கேள்விக்கு உடனே டி.ஆர் போல பதில் சொல்லி அசத்தும். மனிதர்களுக்கு சமையல் சொல்லித் தருவதில் கூட திறன் காட்டி அசத்தியது. இந்த கம்ப்யூட்டரின் பெயர் தெரியுமா? சோனி தயாரித்த ரோபோ என்பதுதான் க்ளூ. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் இதன் ஸ்பெஷாலிட்டி. தன் எஜமானருக்கு ஏற்படும் பதினான்கு நோய்களைக் கண்டறிந்து உதவும் தன்மை கொண்டது இந்த ரோபோ. இப்போது நீங்கள் பெயரைக் கண்டுபிடித்திருப்பீர்களே? ரஷ்ய பணக்காரர் 2045 இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தை உருவாக்கினார். மனிதர்களின் மூளையை ரோபோக்கள் கட்டுப்படுத்