இடுகைகள்

தமிழ்நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தி தீர்த்து வைத்த ஆற்றுநீர் பஞ்சாயத்து! - காந்தி 150!

படம்
காந்தி @ 150 காந்தி இன்று வாழ்ந்தால் இந்தியாவில் நடைபெறும் பூசல்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என கண்ணை மூடி யோசித்தால் என்ன தோன்றுகிறது? அப்படியே பலரும் தூங்கிச் சாய்வார்கள். ஆனால் இந்த கான்செஃப்டில் நாங்கள் யோசித்து ஓர் கட்டுரை எழுதினோம். இது ஓகே ஆனால் அடுத்து அணு உலையோ என்று கூட பயம் வந்தது. பயப்படாதடா சூனா பானா என்று முதுகை நாமே தட்டிக்கொடுத்து சமாளித்து எழுதிய ராவான கட்டுரை. இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களில் முக்கியமானவை, நதிகள். இவை குறிப்பிட்ட மாநிலங்களில் உருவாகி, அவை செல்லும் பாதையிலுள்ள பல்வேறு மாநிலங்களை வளப்படுத்துகிறது.  உதாரணத்திற்கு காவிரி நதி. கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி எனுமிடத்தில் காவிரி நதி உற்பத்தியாகிறது. இந்த நதி தோன்றிய இடத்திலிருந்து பாய்ந்து சென்று கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு நகரங்களை வளப்படுத்துகிறது. பின்னர், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை வளப்படுத்தி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல்லாண்டுகளாக காவிரியின் நீர்வளத்தை பங்கிடுவதில் கர்நாடகம் - தமிழகத்திற்கிடையே கருத்துவேறுபாட

கற்றல் குறைபாட்டில் தவிக்கும் குழந்தைகள்!

படம்
எஸ்எல்டி எனும் கற்றல் குறைபாட்டில் பத்தில் ஏழு குழந்தைகள் தவிப்பதாக கேர் இன்ஸ்டிடியூட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. ஒப்பீட்டுரீதியில் ஐந்தில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் ஓசூரிலுள்ள மூன்று பள்ளிகளில் 1000 மாணவர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு உள்ளது. ஆசிரியர் கற்றுத்தருவதை மெதுவாக புரிந்துகொள்வதோடு அவற்றை எழுதும்போது பி என்பதை டி என்று புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள் என்கிறார் கேர் இன்ஸ்டிடியூட் நிறுவன இயக்குநர் பிஎஸ் விருதாகிரிநாதன். இம்முறையில் 25 சதவீத மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எந்த குறைபாடும் இல்லை என்று கூறப்பட்ட பிரிவில் வருகின்றனர். 40 சதவீத மாணவர்கள் கற்றல் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காதபோது இவர்கள் பள்ளிக்குச் செல்வதை விரைவில் கைவிடும் ஆபத்து உள்ளது. இக்கற்றல் குறைபாட்டைக் கண்டறிய நிம்ஹான்ஸ் எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். கேர் இன்ஸ்டிடியூட் ஹெல்ப் சைல்டு எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். கற்றல் குறைபாட்டிற்

உறுப்பு தானம் குறைகிறது! - தமிழ்நாடு விழிப்புணர்வுடன் இருக்கிறதா?

படம்
தமிழகத்தில் குறையும் உறுப்பு தானம்! தமிழ்நாடு அரசு, உறுப்புதான செயற்பாட்டுக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தன்  உறுப்பு தானத்தில் 12 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை டிரான்ஸ்டன் அமைப்பு வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் ஆண்டுக்கு 30 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றன. 1,282 பேர் மூலமாக 7, 468 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதனை சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆனால் அமைச்சரின் பேச்சில் மருத்துவர்கள், உறுப்பு தான ஆர்வலர்கள் திருப்தி அடையவில்லை. காரணம், தொடர்ந்து உறுப்பு தான சதவீதம் குறைந்து வருவதுதான். 2017 முதல் 2018 காலகட்டத்தில் 160 தானம் தருபவர்களின் எண்ணிக்கை 140 ஆக சுருங்கிவிட்டது. இதுகுறித்து மோகன் பவுண்டேஷன் சார்பாக பேசிய மருத்துவர் சுனில் ஷெரஃப், ஜூன் 16 வரையில் 66 உறுப்பு தான அறுவை சிகிச்சைகள்தான் நடைபெற்றுள்ளன என்று கூறுகிறார். இதற்கு முக்கியக்காரணம், சாலை விபத்துகளால் மூளைச்சாவு அடையும் மரணங்களை அரசு மருத்துவமனைகள் சரியான முறையில் பதிவு செய்வதில்லை. இந்த காரணத்தினால்தான் முறையாக உற

விபத்திற்கு வெப்பம்தான் காரணம்!

படம்
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று ஜாலியாக பலரும் டீ குடித்தபடி பேசியது நிஜமாகி இருக்கிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 57 ஆயிரத்து 927 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346 .இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1077. கூறியது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆராய்ச்சித்துறை. பனிக்காலமான டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 2,163 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 390 பேர் இறந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துத்துறை என்ன சொல்கிறது? கோடைக்காலத்தில் மக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்கிறார்கள். அதனால் வண்டிகள் சாலைகளில் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன என்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டப்படி குறுக்குவழிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளை நடக்கவிடாமல் அதில் பைக்குகளை ஓட்டுவது, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவையும் விபத்துகளுக்கு காரணம். மேலும் பலரும் ஹெல்மெட்டுகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அலுத்துக்கொள்கிற