இடுகைகள்

துப்பாக்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகனின் இறப்பில் தொடங்கும் பழிக்குப்பழி வன்மம்!

படம்
              ரேத் ஆப் தி மேன் கய் ரிட்சி பிரெஞ்சில் வந்த படனத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள் . படத்தின் கதை எளிமையானதுதான் . அமெரிக்காவில் உள்ள கேங்ஸ்டர் ஒருவரின் மகனை முன்னாள் கொள்ளையர்களின் குழு கொன்றுவிடுகிறது . இதற்கு கேங்ஸ்டர் தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை . படத்தின் கதையை நகர்த்தி செல்வதில் ஒளிப்பதிவும் இசையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன . மென்மையாக தொடங்கும் கிடார் கம்பிகளின் மீட்டலே படத்தின் ரத்த வேட்கையான சண்டைக்காட்சிகள் மற்றும் பழிவாங்கும் உணர்ச்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கிறது . ஜேசன் ஸ்டாதம் இருக்கிறார் படத்தில் . அப்புறம் வேறென்ன வேண்டும் என இயக்குநர் நினைத்திருக்கிறார் . அதுதான் படத்திற்கு பலவீனமாகிறது . அனைத்து சண்டைக்காட்சிகளுமே மிகவும் ஜென்டில்மேன்தனமாக உள்ளது . துப்பாக்கியில் சுட்டு வரவு செலவு தீர்ப்பதாக இருப்பதால் , சில சமயங்களில் ஆக்சன் காட்சிகளில் ஈர்ப்பு குறைகிறது . நேருக்கு நேரான மோதல்களே இல்லாமல் இருப்பது ஜேசன் படங்களை பார்ப்பவர்களுகு இழப்பாக தோன்றும் . போர்ட

குற்றவாளிகளை அடித்து துவைக்கும் கிறுக்குப்பிடித்த போலீஸ்காரனின் கதை - கிராக் - ரவிதேஜா

படம்
            கிராக் Director: Gopichand Malineni Produced by: B. Madhu Writer(s): Gopichand Malineni, Sai Madhav Burra (dialogues) சாலையில் ஐம்பது ரூபாய் நோட்டு , மாங்காய் அதன் மேல் ஆணி ஒன்று என அனைத்தும் ஒன்றாக கிடக்கிறது . இவை மூன்றும் யாரைக் குறிக்கிறது என்பதுதான் படத்தின் கதை . மூன்று பேரும் மூன்று குற்றவாளிகள் , அவர்களின் வாய் வழியே எப்படி ஒரு போலீஸ் அதிகாரி அவர்களை கைது செய்தார் . என்பதுதான் கதையாக விரிகிறது .    ரொம்ப நாட்களுக்குப் பிறகு பார்முக்கு திரும்பியுள்ளார் மாஸ் மகாராஜா ரவிதேஜா . இதில் காதல் கிடையாது . கல்யாணம் ஆவதற்கான பாடல் ஒன்றூ . அதற்கு பிறகு வரும் பிரியாணி , கொரமீசம் பாடல் என காதலும் , அன்பும் பெருகியோடும்படி நடித்திருக்கிறார் . இவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் சுருதிஹாசன் . படம் முழுக்க குற்றவாளிகளை சற்றே கிராக்குத்தனமான போலீஸ்காரர் எப்படி அடித்து பிடித்து பிளக்கிறார் என்பதுதான் கதை . எனவே காதல் காட்சிகள் சற்றே ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கானவைதான் . அதிலும் பெண் பாத்திரங்களை சும்மா உலவ விடாமல் அவர்களுக்கான பங்களிப்பை செய்திருக்கிறார

காட்டு விலங்குகளை பாதுகாக்க முயலும் கரடியும் மானும்! - ஓபன் சீசன் -1

படம்
                ஓபன் சீசன்2006 முதல் பாகம் Directed by Roger Allers Jill Culton Produced by Michelle Murdocca Screenplay by Steve Bencich Ron J. Friedman Nat Mauldin Story by Jill Culton Anthony Stacchi Based on An original story by Steve Moore John B. Carls பூக் என்ற கரடிதான் படத்தின் ஹீரோ . வேட்டைக்காரன் ஒருவன் மானை வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயல , அதில் மயக்கமுற்று கரடியால் உயிர்பிழைக்கும் மான் , கரடியின் ஒரே ஆத்ம நண்பனாகிறது . கரடிதான் தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இன்சார்ஜ் என்கிறது . மான் அத்தியாயம் பின்னால்தான் வருகிறது . அதற்கு முன்னால் கரடியை ரேஞ்சர் பெண்மணி பராமரித்து வருகிறார் . அவரைப் பொறுத்தவரை அதன் வளர்ப்பு பிராணி போல நடத்துகிறார் . அதை வைத்து வித்தைகாட்டி அவர் சம்பாதிக்கிறார் . ஆனால் கரடிக்கு காட்டில் எப்படி உணவு பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது . அப்போது கொம்பு உடைந்த மானின் நட்பு கிடைக்க , காட்டுக்குள் கிடைக்கும் சுதந்திரம் கரடிக்கு தேவைப்படுகிறது . மேலும் சாப்பிட நிறைய தீனியை மானும் கரடியும் சென்று வேட்டையாட சூப்பர் மார்க்கெட் சுமார் மார்க்கெ

துரோகியை பொலி போட்டு எதிரிகளோடு மல்லுக்கட்டும் ஜெகஜாலன்! - சிஸ்கோ 1.0

படம்
        cc       சிஸ்கோ 1.0 தமிழில் பிரசன்னா ஶ்ரீதர் தமிழ் காமிக் டைம்ஸ் வெளியீடு சிஸ்கோ, உளவு அமைப்பில் வேலை செய்கிற ஏஜெண்ட். அவருக்கு வரும் அசைன்மெண்ட் ஒருவரைக் கொல்லவேண்டும் என்பது. சரியாகத்தான் அதனை செய்கிறார். ஆனால் இடையில் அங்கு வேலைபார்க்கும் ஆள் ஒருவர் கொலையை வீடியோ எடுத்துவிட, அவரை பிடிக்க சிஸ்கோ முயல்கிறார். இதற்கிடையே இ்வருகுக்ம வீராட் எனும் மற்றொரு ஏஜெண்டுக்கும் முட்டிக்கொள்கிறது. இவர்களை சண்டை போடாதீர்கள் என பிரித்து விடவே தலைவர் டூப்ரிக்கு நேரம் சரியாக இருக்கிறது. வீடியோ எடுத்தவனை சிஸ்கோ பிடித்தானா, வீராட்டின் கொட்டத்தை அடக்கினானா என்பதுதான் காமிக்ஸின் கதை. ஏஜெண்டைப் பொறுத்தவரை நல்லது கெட்டது எல்லாம் கிடையாது. தலைவர் சொல்லும் வேலையை செய்யவேண்டும் எனவே, இவர் நல்லவரா கெட்டவராக என சந்தேகத்துடன் படிக்காதீர்கள். கதை ரசிக்காது. ஏ கிரேட் காமிக்ஸ் என்பதால் வசனங்களை அதற்கேற்ப சிறப்பாக எழுதியுள்ளார் பிரசன்னா. கெட்டவார்த்தை வரும் இடங்கள், உடலுறவு காட்சிகளுக்கான வசனங்கள் என அதனதை அப்போக்கிலேயே எழுதியிருப்பது ரசிக்குமாறு உள்ளது. சில இடங்களில் டயலாக் பாக்சையும் மீறி வசனங்கள் வெளியே சென

கிராம முன்னேற்றத்திற்கு உதவிய துப்பாக்கி!

படம்
        ie         கிராம முன்னேற்றத்திற்கு உதவிய துப்பாக்கி! மத்திய பிரத்தேச மாநிலத்தைச் சேர்ந்த ரேவா மாவட்டத்தில் ஆதிவாசி குடும்பங்கள் பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. முதலில் துப்பாக்கியின் எடையால் கஷ்டப்பட்டவர்கள் இன்று, துப்பாக்கியை தங்கள் கிராமத்தை சூறையாட வரும் தடுவா எனும் சமூக விரோதிகளுக்கு எதிராக சிறப்பாக கையாள கற்றுக்கொண்டுவிட்டனர். ஆதிவாசி ஆண்கள் அனைவரும் இடம்பெயர் தொழிலாளர்களாக எங்கு வேலைவாய்ப்புகள் இருக்கிறதோ அங்கு சென்றுவிடுவார்கள். வேலை முடிந்தபிறகு, அவர்க்ள் கொண்டு வரும் பணம்தான் வீட்டுச்செலவுகளுக்கு செலவிடப்படும். இந்த நேரத்தில் ஆதிவாசிகளில் கிராமத்திற்கு வரும் த டுவா எனும் சமூக விரோதிகள் பெண்களை வல்லுறவு செய்து வீட்டிலுள்ள பசு, காளை, எருமை என அனைத்தும் கொள்ளையடித்து சென்று வந்தனர். இதில் ஒருவரை காவல்துறையே சுட்டுக்கொன்றது. அவர்தான் சிவராஜ் பாட்டீல். அவர் இறந்தாலும் இந்த கிராமத்தினருக்கு பிரச்னை தீரவில்லை. எனவே துப்பாக்கிகளை சுட பயிற்சி எடுத்து இப்போது கிராமத்தை பாதுகாப்பாக சுற்றி வலம் வந்து கொ

துப்பாக்கி மட்டுமே முழங்கும் ஆக்சன் படம்! - பேட்டில் ட்ரோன்

படம்
  பேட்டில் ட்ரோன் - ஆங்கிலம் 2018 இயக்கம் - மிட்ச் குட் ஒளிப்பதிவு இசை சிஐஏவில் கேப்டனாக இருந்த விலகியவர் ரெக்கர். இவர் காசு கொடுத்தால் சில நாடு கடந்த பிரச்னைகளை முடித்துக்கொடுக்கும் விஷயங்களைச் செய்கிறார். இவருக்கென துப்பாக்கி, மல்யுத்தம் என அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற கொலைகாரக் கூட்டம் உள்ளது. இவர்கள் ரஷ்யாவில் ஒருவரைக் கொன்று பணக்காரர் ஒருவரை அமெரிக்க அரசுக்காக மீட்டு கொடுக்கின்றனர். ஆனால் சிஐஏவில் உள்ள சிலர் இவர்களின் மிதமிஞ்சிய ஆற்றலைக் கண்டு பயப்படுகின்றனர். எனவே இவர்களை வலையில் சிக்க வைக்கின்றனர். அதுதான் ட்ரோன்களோடு சண்டையிடுவது., உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகில் உள்ள தொழிற்சாலையில் ஆயுதங்களை மீட்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இவர்களை ட்ரோன்கள் கொல்ல முயற்சிக்கின்றன. இவற்றை ரெக்கர் குழு எப்படி அழித்தனர், உயிரோடு மீண்டனர் என்பதைக் சொல்லுகிறது படம். ஆக்சன் படம் என்றால் துப்பாக்கிகள் எண்ணற்ற முறை வெடித்தால் போதும் என்ற நம்பிக்கையில் எடுத்த படம். எனவே புத்திசாலித்தனமான விஷயங்களை இயக்குநர் யோசிக்கவே இல்லை. எப்படி ட்ரோன்களை வீழ்த்துகிறார்கள் என்பதும் க

மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் கஷ்டம்! - ஈஷா சிங்

படம்
ஈஷா சிங் , துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆங்கிலத்தில் - சித்தார்த் சக்சேனா ஈஷா சிங் , பதிமூன்று வயதிலேயே தேசிய அளவிலான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரவில் பதக்கம் வென்றிருக்கிறார் . அவரது வெற்றி , போட்டி தயாரிப்பு , அவர் தவறவிட்ட விஷயங்கள் என பேசினோம் . துப்பாக்கி சுடும் வீரராக இல்லாமல் ஈஷா சிங்காக தினசரி நாள் எப்படி தொடங்கும் ? நான் சிறுவயதிலிருந்து துப்பாக்கிக்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன் . இதனால் பள்ளிகளில் விளையாட்டு விழா , ஆண்டுவிழா , சுற்றுலா போன்ற விஷயங்களில் பங்கேற்க முடியாது . துப்பாக்கி சுடுதலில் வென்றது சந்தோஷம்தான் . ஆனால் என் பள்ளி தோழிகள் பள்ளிவிழாவில் தாம் பங்கு பெற்ற புகைப்படங்களை எனக்கு அனுப்பும்போது கஷ்டமாக இருக்கும் . ஏனெனில் நான் அந்த நேரத்தில் போட்டிகளில் பங்கேற்று இருப்பேன் . அல்லது பயிற்சிகளில் இருப்பேன் . போட்டிகளுக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு செல்லும்போது அனைவரின் கண்களும் என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் . இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை தருகிறது . ஆனால் என்ன , நான் என் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டேன் . அதை நோக்கிச் செல்கிறே

மனிதவேட்டையாடிய பேக்கரிக்காரர்! - ராபர்ட் ஹான்சன்

படம்
அசுரகுலம் ராபர்ட் ஹான்சன் சுபாவின் மனித வேட்டை நாவலை படித்திருக்கிறீர்களா? அதில் ஒருவரை திட்டமிட்டு கொலைக்குற்றம் சுமத்தி வெளியில் நடமாடுவதை தடை செய்து காட்டில் விட்டு வேட்டையாடத் துரத்துவார்கள். கொலை செய்யத் துடிப்பவர்கள், ராணுவத்தில் வேலை செய்து மனம் மரத்துப்போன மூன்று ரிடையர்ட் பெருசுகள். 1924ஆம் ஆண்டு ரிச்சர்ட் கானல் என்ற எழுத்தாளர் மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் என்ற சிறுகதையை எழுதினார். அதில் சிறுவிலங்குகளை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டும் வேட்டைக்காரர் ஒருவரைப் பற்றி பேசியிருப்பார். அதே கான்செப்டை அப்படியே பின்னர் நாவல், சினிமா, டிவி தொடர் என இன்ஸ்பையராகி உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் அறியாத உண்மை, ராபர்ட் ஹான்சன் தன் பண்ணையில் மனிதர்களை அப்படித்தான் வேட்டையாடிக்கொண்டிருந்தார் என்பது. 1957 இல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றியவர் ராபர்ட். பின்னர் அப்பணி முடிந்து நாடு திரும்பியவர் ஐயோவாவில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்தார். எழும்போது திருமணம் செய்திருந்தார். அப்போது பார்த்து ஏதோ ஒரு காரணத்தில் அங்குள்ள பள்ளியின் பஸ் காரேஜை எரித்துவிட்டார். இதனால் டரியலா

வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருகிறது! - பல்கேரிய ஆய்வாளர் அறிக்கை!

படம்
ஆய்வாளர் ரஸ்லன் ட்ரான் பல்கேரியாவில் வலதுசாரி தீவிரவாதக்குழு தோன்றி செயல்பட்டு வருகிறது. இதுபற்றிய ஆய்வை குளோபல் வாய்ஸ் கட்டுரையாளர் ரஸ்லன் ட்ரான் மற்றும் கிரில் ஆரமோவ் ஆகியோர் இணைந்து செய்து அதனை வெளியிட்டனர். அதுபற்றி அவர்களிடம் பேசினோம். நீங்கள் ஆய்வு செய்த இயக்கம் எப்படிப்பட்டது? பல்கேரிய துருக்கி எல்லையில் செயல்படும் குழு இது. பல்கேரிய தேசிய இயக்கம் (BNO) பற்றியது எங்களது ஆய்வு. 2016 ஆம்ஆண்டு இதுபற்றி குளோபல் வாய்ஸ் வலைத்தளத்தில் கட்டுரை எழுதினேன். அந்த ஆண்டுதான் இக்குழு, அகதிகளை வேட்டையாடுபவர்களாக மாறியது. இவர்களுக்கு ஐரோப்பாவிலுள்ள அனைத்து வலதுசாரி இயக்கங்களுடனும் நல்ல தகவல் தொடர்பு உண்டு. மேலும் இளம் உறுப்பினர்களை ஈர்ப்பதிலும் இவர்கள் நல்ல வேகம் காட்டுகிறார்கள். டென்மார்க், ரோமானியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கேம்புகளை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ரஷ்ய ராணுவம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இவர்களின் செயல்பாடு எத்தகையது? நாங்கள் அகதிகள் அழிப்பு, இஸ்லாம் மயப்படுத்தல் போன்ற விஷயங்களை இதில் மையப்படுத்தவில்லை. இன்று பல்கேரியாவில் 600 அகதிகள் மட்டுமே உள

நாட்டின் கௌரவத்தை காப்பாற்றும் நாயகன்! - கொரிய சினிமா

படம்
கான்ஃபிடன்ஷியல் அசைன்மென்ட் 2017 கொரியா இயக்கம் கிம் சுங் ஹூன் எழுதியவர் யூன் ஹூன் ஹோ ஒளிப்பதிவு லீ சங் ஜே இசை வாங் சங் ஜூன் கதை, சேசிங், பைட்டிங் என அனைத்தும் செய்வதற்கான கதை. யெஸ் இதுவும் ஒரு கௌதம் வாசுதேவ் மேனன் ரக பிழியும் சென்டிமெண்டுகள் கொண்ட படம்தான். வடகொரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர், சியோல் ரியுங்(ஹியூன் பின்) கம்யூனிஸ்ட் ஊழல் வாத தேசத்திலும் நேர்மையாக வேலை பார்க்கிறார். ஆனால் என்ன செய்வது, அவரின் மேலதிகாரி ஊழல் பெருச்சாளி. வடகொரியா அரசு, சத்தமின்றி செய்யும் டாலர் நோட்டுகளை கள்ள நோட்டுக்களாக்கும் வேலைக்கான பிளேட்டுகளை ஆட்டையப் போட்டு காசாக்கி செட்டிலாகப் பார்க்கிறார். அதற்கு குறுக்கே வரும் வரும் ரியுங்கின் மனைவி உட்பட போட்டுத்தள்ளுகிறார்.  ரியுங்கையும் படுகாயப்படுத்துகிறார். இதனால், ஆறாத கோபத்திற்குள்ளாகும் ரியுங்கை விஷயமே புரியாமல் வடகொரிய ராணுவம் கட்டிப்போட்டு குளுக்கோஸ் கொடுக்காமல் அடிக்கிறது. அவரால் காப்பாற்ற முடியாத டாலர் பிளேட்டை திரும்பக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் டாஸ்க். இதற்கு தென் கொரியா போகிறார். விஷயத்தை மோப்பம் பிடித்த தெ

சூதாடி டைகரின் சோம்பலான காமிக்ஸ்! - என் பெயர் டைகர்!

படம்
என் பெயர் டைகர் லயன் காமிக்ஸ் ஜீன் கிராட் ரூ.250 1881 ஆம் ஆண்டு நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட டைகர் காமிக்ஸ். இதில் டைகர் பெரும்பாலும் எந்த சண்டைகளிலும் ஈடுபடவில்லை. மொத்த விஷயங்களையும் செய்வது, அபாச்சே ஜெரோனிமா, பிடாரி மா க்ளண்டன், ஸ்ட்ராபீல்டு ஆகிய துணை கதாபாத்திரங்கள்தான். அதிலும் டைகரின் கதை எழுதவரும் கேம்ப்பெல் கூட இருவரைக் கொல்கிறார் என்றால் பாருங்களேன். காமிக்ஸ் படிக்கும்போது, டி.ஆர் படம்போல ஜூனியர் கேரக்டர் எல்லாம் பன்ச் பேசுதே என எண்ணுவீர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என நினைத்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். இதில் பின் யார்தான் நாயகர் என்கிறீர்களா? ஏர்ப் சகோதர ர்கள்தான். டூம்ப்ஸ்டோன் நகர மார்ஷல்களுக்கும், க்ளண்டன் மற்றும் மெக்லெரி குழுக்களுக்கும் நடக்கும் உள்முக, மறைமுக பழிவாங்கல்தான் கதை. இதில் டைகர் தன் காதலியும் பாடகியுமான டோரிக்காக சீட்டுக்கட்டை கடாசிவிட்டு உள்ளே வருகிறார். வில்லன்களை காயம்பட்டாலும் போட்டுத்தள்ளி இறுதியில் சீட்டு விளையாடுகிறார். முக்கியமான பகுதி, கேம்ப்பெல்லுக்கு சொல்லும் தனது வாழ்வு குறித்த பகுதிகள்தான். செவ்வ