இடுகைகள்

பலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கந்தர்வனை பல ஜென்மங்களாக துரத்தி பலிகொள்ளத் துடிக்கும் யட்சிணி! - குபேரவனக்காவல் - காலச்சக்கரம் நரசிம்மா

படம்
                குபேர வனக்காவல் காலச்சக்கரம் நரசிம்மா அமுதன் என்ற சிறுவனை அவனது தாய்மாமா குடும்பத்தினர் கிண்டல்செய்வது முதல் நாவல் தொடங்குகிறது . தந்தையும் , தாயும் காணாமல் போன சூழலில் அவன் தன் தாய்மாமா குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான் . ஆனால் அவனது அத்தை , அவரது அம்மா என அனைவரும் அவனது நிறம் , அவனது காணாமல் போன அம்மாவின் நடத்தை ஆகியவற்றை மனதை வருத்தும்படி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . அதனை நம்பாடுவான் என்ற சிவ பக்தர் மட்டும் கோபத்தோடு பார்க்கிறார் . அமுதன் யார் , அவனது அப்பா , அம்மா யார் என்ற ரகசியங்களை நம்பாடுவான் என்ற கிழவர் அவனுக்கு சொல்லுகிறார் . அதிர்ச்சியளிக்கும் அந்த சம்பவங்களின் முன்னொட்டாக புருஷாமிருகம் என்ற கதை நாவல் தொடங்கும் முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது . அதை படித்து விட்டு நாவலுக்குள் வந்தால் எல்லாம் சுலபமாக புரியும் . அமானுஷ்யம் கலந்த திகில் கதைதான் . புருஷோத்தமன் என்ற குழந்தை ஶ்ரீவாத்சாங்கம் என்ற வைணவரின் வீட்டு பெண்ணுக்கு மகனாக பிறக்கிறது . அந்த குழந்தையின் எதிர்காலம் என்னவென்று சகடவாக்கி ஒருவர் நாடிச்சக்கரங்களை தொட்டு சொல்கிறார் . அது ப

பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! 2020இல் என்ன நிலையை உலகம் சந்தித்து கடந்து வந்தது?

படம்
                 உலகப் பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி கண்காணிப்பகம் கூறியுள்ளது . வல்லரசு நாடுகளின்

புயல்களின் வரலாறு! - அமெரிக்காவை பாதித்த புயல்களை அறிவோமா?

படம்
            புயல்களின் வரலாறு! ஒக்கிசோபீ 1928ஆம் ஆண்டு 6-21 செப்டம்பர் பலி- 4 ஆயிரம் புளோரிடாவில் இந்த புயல் ஏற்படுத்திய நிலச்சரிவு பாதிப்பு அதிகம். இதனால் பால்ம் பீச் அருகே குடியிருப்புகளில் வாழ்ந்த மனிதர்கள் இறந்துபோனார்கள். கரீபியன் பகுதியில் இதன் காரணமாக 1500 பேர் பலியான செய்தியை முன்னமே கிடைத்தும் மக்களின் இறப்பைத் தடுக்க முடியவில்லை. விவசாயம் செய்யப்பட்டு வந்த ஏரி ஒக்கிசோபீதான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. 225 கி.மீ வேகத்தில் அடித்த புயல் காற்று அனைத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது. பல தொழிலாளர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர். லேபர் டே புயல் 1935ஆம் ஆண்டு 29 ஆக. 10 செப்டம்பர் பலி 485 இந்த புயலை சரியாக அதிகாரிகள் கணிக்கவில்லை. எனவே 485பேர் பலியாகும்படி சூழல் உருவாகிவிட்டது. புளோரிடாவை 2ஆம் தேதி புயல் தாக்கியது. சீர்குலைந்த சாலைகளை சரிசெய்ய முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீர ர்கள் அனுப்பினர். இவர்களில் 250பேர் வேலை செய்த இடத்திலேயே பலியானார்கள். காரணம் ஒருங்கிணைப்பாளர் புயலின் பலத்தை முன்னமே அறிந்திருக்கவில்லை.  கடற்பகுதியில் மனிதர்கள் உருவாக்கிய எந்த கட்டுமானமும் உடையாமல்,

குஜராத்தில் மர்மமாக பலியாகி வரும் சிங்கங்கள்!

படம்
  cc   மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம் ! கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் . அவர் கூறாமல் விட்ட விஷயம் , நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான் . நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள் , கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி . ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது . பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி , கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது . இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன . இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது . இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன .. ” இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்

கொரோனா வைரஸ் - கேள்வி பதில்கள்!

படம்
படம்: jPharmaceutical Technology மிஸ்டர் ரோனி ஃப்ளூவுக்கான தடுப்பூசியை கொரோனாவுக்குப் பயன்படுத்தலாமா? குறிப்பிட்ட வைரசுக்கான ஊசி, அந்த வைரசை மட்டுமே தடுக்கும். கொரோனாவுக்கான மருந்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே நீங்கள் ஃப்ளூவுக்கான மருந்தை பயன்படுத்தினால் கொரோனா கட்டுப்படாது. அதற்கு தனி மருந்துகள் சிகிச்சை தேவை. யாரை எல்லாம் தாக்கும்? இப்போதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தோராய வயது 65. இதுதான் வயது என்றில்லை. நமக்கு இப்போது கிடைத்த தகவல்படி இந்த வயது என புரிந்துகொள்ளலாம். ஃப்ளூ காய்ச்சலைப் பொறுத்தவரை இரண்டு வயதிலிருந்து பாதிப்பு தொடங்குகிறது. இதை என்ன சொல்லுவீர்கள்? கர்ப்பிணி பெண்களையும் ஃப்ளூ பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை பல்வேறு நுண்ணுயிரிகளும் பாதிக்கும். எந்த விலங்குகளிலிருந்து வைரஸ் பரவுகிறது? பாம்பு என நண்பர் கொரோனா வைரஸைக்குறிப்பிட்டு அதிரடியாக சொன்னார். ஆனால் உண்மையில் வௌவால்கள், பன்றிகள், கொசு, ஈக்கள் ஆகியவற்றிலிருந்தே அதிகளவு வைரஸ் தொடர்பான நோய்கள் மனிதர்களுக்கு பரவுகின்றன. வைரஸ்களுக்கு உயிருண்டா? செல்களை சுயமாக பெரு

ரத்தவங்கிகளுக்கு இல்லாத ஒருங்கிணைப்பு - பறிபோகும் உயிர்கள்

படம்
pixabay பொதுவாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகம். டைகர் பிஸ்கெட் பாக்கெட்டிற்காக அல்ல, உண்மையாக நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதம் தமிழர்களுக்கு உண்டு. இதனால் ரத்ததான முகாம் நடக்கும்போது மக்கள் பங்கேற்று ரத்ததானம்  செய்கிறார்கள். ஆனால் இந்த ரத்தம் முறைப்படி மக்களுக்கு வழங்கப்படுகிறா? அனைத்து மருத்துவமனைகளில் ரத்தவங்கி இருக்கின்றன. செயல்படுகின்றன. ஆனால் தேவையானவர்களுக்கு அது பயன்படுவதில்லை. குறிப்பிட்ட ரத்த வகை தேவை எனும்போது நீங்கள் ரத்தம் கொடுத்துவிட்டு அந்த ரத்த வகையை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் தேடும் ரத்த வகை இருக்காது. எனவே பிற மருத்துவமனைகளை நோயாளிகளின் உறவினர்கள் தேடி ஓடுவது நடைபெறுகிறது. இதற்கு காரணம், மருத்துவமனைகளில் சரியான ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு இல்லாததே காரணம். ரத்தத்தை மாடர்ன் பிரெட் போல ஆறுமாதத்திற்கு அப்படியே வைத்திருந்து பயன்படுத்த முடியாத நடைமுறைப் பிரச்னை வேறு இருக்கிறது. 2016-17 ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் யூனிட் ரத்தத்திற்கு தேவை இருக்கிறது. இதனை பற்றாக்குறை என்றும் சொல்லலாம். இத

புதிய இந்தியா பிறந்துவிட்டதா?

படம்
pixabay புதிய இந்தியா பிறந்துவிட்டதா? உலக நாடுகள் முழுக்க அரசியல் நிலையின்மை காரணமாக  போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மக்களின் எண்ணங்களை போராட்டங்களாக வெடிக்கச் செய்ய சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதவி வருகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் அடிப்படைவாத, தேசியவாத கட்சிகள் வென்றுவருகின்றன. இந்த போராட்ட அலையில் இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அமலான குடியுரிமை திருத்தச்சட்டம், நாடெங்கும் கடும் போராட்டங்களை கிளப்பியுள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளிலுள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் அரசின் மூலம் குடியுரிமையை எளிதாகப் பெற முடியும் என்கிறது இச்சட்டம். ஏறத்தாழ முஸ்லீம்களை இரண்டாம் தர மக்களாக மாற்றும் இச்சட்டம் அமலாகிவிட்டது என உள்துறை அமைச்சககம் கூறிது.  இல்லை என பிரதமரும் பேச, விவகாரம் மேலும் குழப்பமாகிவிட்டது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டத்தின் முடிவில் லட்சக்கணக்கான இந்துகள் குடியுரிமை இல்லாத நிலைமையில் இருப்பது தெரியவர, இந்திய அரசின் திட்டம் தோல்வியுற்றது. திரும்பவும் இத்திட்டத்தை மாநிலம் முழுவத

கொரோனா வைரஸ் பாதிப்பு - தெரிஞ்சுக்கோ டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. மருந்து நிறுவன பங்குதாரரான பில்கேட்ஸ் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் இதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். சீனாவில் நூற்றுக்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் சீனாவிலிருந்து வந்த அறுபதிற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். கொரோனா வைரஸில் ஏழு வகைகள் உண்டு. அத்தனையும் மனிதர்களை தாக்கி கொல்லும். வுகான், ஹியூபெய் ஆகிய நகரங்களில் உள்ள மக்கள் தொகை 35 மில்லியன் ஆகும். வைரஸ் பிரச்னையால் இவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசிற்கு முன்பே சார்ஸ் பாதிப்பால் 774 பேர் பலியாகி உள்ளனர். 2012ஆம் ஆண்டு மெர்ஸ் பாதிப்பில் 858 பேர் வைகுந்தம் சேர்ந்தார்கள். 2019-2020 ஃப்ளூ காய்ச்சல் சீசனில் 8,500 முதல் 20 ஆயிரம் பேர் வரை இக்காய்ச்சலுக்கு பலியானார்கள். உலகம் முழுக்க நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகளை ஏற்படுத்தி மக்களை தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். பாதிப்பின் அளவு 33 சதவீதம். சார்ஸ் உடன் கொரோனா வைரஸ் ஒத்துப்போகும் அளவு 70%. மெர்ஸ் உடன் ஒத்துப்

உயிரியல் போரில் நண்பரை பறிகொடுக்கும் அயர்ன்மேன்!

படம்
அயர்ன்மேன் தி ரைஸ் ஆப் தி டெக்னோவோர்ஸ் அனிமேஷன் இயக்கம் - ஹிரோஷி ஹமசாகி கதை -பிராண்டன் ஆமன் டோனி ஸ்டார்க் உருவாக்கும் ஆய்வகத்தை உயிரியல் முறையில் எதிரி தரைமட்டமாக்குகிறான். கூடுதலாக அவரின் போலீஸ் தோழனும் இத்தாக்குதலில் அடிபட்டு படுகாயமுற்று கோமாவில் கிடக்கிறார். இதற்கு டோனி எப்படி பழிவாங்குகிறார். இவரை கண்காணிக்கும் ஒற்றை கண் மேனேஜரின் இடைஞ்சல்களை சமாளித்து உலகை காக்கிறார் என்பதுதான் கதை. ஏராளமான கட்டிடங்களை அனிமேஷன்களில் உடைத்தெறிகிறார் டோனி. தொடரின் ஆரம்பத்தில் அவரும் போலீஸ் நண்பரும் போட்டி போட்டுக்கொண்டு வானில் பறக்கிறார்கள். செல்லமான யார் பெரியவன் என்கிற போட்டிதான். ஆனால் அங்கு வந்து தாக்கும் டெக்னோவோர்ஸ், ஏவ வைத்திருந்த ராக்கெட்டையும் தன் இஷ்டம் போல ஏவுகிறான். டோனி உட்பட ஒட்டுமொத்த அவெஞ்சர்களையும் செயலிழக்க வைக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பதே கதை. முதல் இரண்டு காட்சிகளிலேயே டோனியின் நண்பர் ஜான் ரோடிஸ், உயிரியல் தாக்குதலில் இறந்துபோகிறார். அதற்கு பழிதீர்க்க டோனி திரும்புகிறார். ஆனால் சட்டம் தடுக்கிறது. அப்புறம் என்ன அதை மீறுவதோடு, பனிஷரின் உதவியை

தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்?

படம்
தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்? இந்தியாவில் ஐந்தில் இரண்டு பேர் அதாவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை என இந்தியாஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திர தனுஷ் 2.0 என்ற பெயரில் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனாலும் இத்திட்டத்தில் தேக்கம் நிலவுகிறது. டிசம்பர் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய மிஷன் இந்திர தனுஷ் திட்டம், 2020 ஆம் ஆண்டு 90 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை லட்சியமாக கொண்டது. தற்போது இந்தியா முழுக்க 271 மாவட்டங்களில் 70 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசித் திட்டங்களில் படுமோசமான ரிப்போர்ட் கார்ட்டை வைத்திருப்பது எப்போதும் போல உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள்தான். தடுப்பூசி போடுவது எதிர்க்கவென தனி பிரசாரம் மக்களிடையே பரப்ப ப்பட்டு வருகிறது. இதைத்தாண்டி போலியோ, காசநோய் போன்றவற்றை தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான தடுப்பூசியின்றி இறந்து வந்தனர். இந்த எண்ணிக்கை

உறக்கம் உயிரைப் பறிக்கிறதா? - இங்கிலாந்தில் அடிக்கிறது அலாரம்!

படம்
giphy.com  ஐரோப்பிய நாடுகளில் விரைவில் ஓட்டுநர்களின் உறக்கப் பிரச்னையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் விபத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இவை 2022 இல் அமலுக்கு வரும்.  காரில் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி, கருப்புப்பெட்டி ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. என்ன காரணம், அதிகரித்து வரும் விபத்துகள்தான். 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பாவில் 25 ஆயிரத்து 300 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் விபத்துகளால் படுகாயமுற்றுள்ளனர். இந்நாடுகளில் சாலை விபத்துகளில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையை  2030க்குள் 7 ஆயிரமாக குறைக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஓட்டுநருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகளை( ADAS) உருவாக்குவதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கியது. இதில் 15 புதிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவிருக்கின்றன. “நீங்கள் இந்த வசதிகளை காரில் முதன்முறையாக பாதுகாப்பு சீட்பெல்ட் அறிமுகமானது போலத்தான் பார்க்கவேண்டும்” என்கிறார் ஐரோப்பிய யூனியன

மடியும் தொழிலாளர்களை பண்டிகூட் காப்பாற்றுமா?

படம்
மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மற்றும் பாதாளச்சாக்கடைகளை தூர்வாரும் தொழிலாளர்கள் பலரும் இன்றுவரையும் இறந்து வருகின்றனர். அரசு அவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டைக் கூட நிறுத்தி வைத்து அவர்களை மானத்தை சோதித்து வருகிறது. தமிழ்நாட்டில் கழிவகற்றும் தொழிலாளர்கள் இறந்துள்ள எண்ணிக்கை 203(1995 முதல்) கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை 144. அதிகாரப்பூர்வமாக அரசு கூறும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 334 கழிவகற்றும் இயந்திரங்களைக் கொண்டுள்ள கார்ப்பரேஷன்கள் - தூத்துக்குடி (1), கும்பகோணம் (1) இந்த வரிசையில் கோவை இரண்டு இயந்திரங்களை வாங்கவிருக்கிறது. கேரளத்தைச் சேர்ந்த ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் பண்டிகூட் எனும் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. ஐந்து பணியாளர்களின் பணிகளை ஒரே இயந்திரம் ஐந்து நிமிடங்களில் செய்துவிடும். ஒரே வாரத்தில் 400 பாதாளச்சாக்கடைகளை சுத்தம் செய்யும் திறன்பெற்ற இயந்திரம் இது. இப்போது இயந்திரங்களை இயக்க பயிற்சியளித்து வருகிறோம் என்கிறார் கும்பகோணம் துணை ஆட்சியரான பிரதீப் குமார். பண்டிகூட் இயந்திரத்தின் வ

பிரிவினையைத் தூண்டும் தாக்குதல்கள்

படம்
globalvoices.org காஷ்மீரில் நாற்பது ராணுவ வீர ர்கள் வெடிகுண்டு தாக்குதலில் இறந்தனர். நிச்சயம் இது வருத்தப்படவேண்டிய  நிகழ்ச்சிதான். அதற்காக காஷ்மீர் இளைஞர்கள் முழுவதும் இந்த சம்பவத்துக்கு காரணம் என அடித்து விரட்டினால் மக்கள் எங்கே போவார்கள்? பாஜக தனது கரசேவகர்களை சரியாகப் பயன்படுத்தி இந்த சம்பவத்தின் மூலமே ஆட்சியைப் பிடிக்க தயாராகி வருகிறது. எப்போதுமே தேர்தலுக்கு முன் ஓரிடத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவது ஆரஞ்சுக் கட்சியின் வழக்கம். தற்போது டேராடூன், பஞ்சாப், ஜம்மு ஆகிய இடங்களில் மாணவர்கள் அரசின் இரும்பு பிடியில் மாட்டியுள்ளனர். இதுதான் வாய்ப்பு ஆர்எஸ்எஸ் குண்டர்கள் படை முஸ்லீம்களை தாக்க தொடங்கியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த ஜாவித் அகமது கான் என்பவரை வந்தே மாதரம் சொல்லச்சொல்லி மூக்கில் குத்தி தாக்குதலை நடத்தியுள்ளது வலதுசாரி குண்டர்கள் படை. இதேபோல நாடெங்கும் காஷ்மீரிகள் உள்ள இடத்தில் அவர்களை குறிவைத்து தாக்கத்தொடங்கியுள்ளது இந்து குண்டர்கள் படை. ஏறத்தாழ இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றிதான். முஸ்லீம்களைக் கொண்ட பாகிஸ்தானாக அவர்கள் இருக்கையில், நாம் இந