இடுகைகள்

மயிலாப்பூர் டைம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலை செய்யுங்க மக்கா! - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
சப்பாத்தியா, அப்பளமா? மயிலாப்பூர் டைம்ஸ்! யாராவது வேலை செய்யறீங்களா? மயிலாப்பூரில் வாழ்ந்து விட்டு சோற்றை பற்றி எழுதாமல் எப்படி இருப்பது? நானும் லஸ்கார்னர் முருகன் கடை , தள்ளுவண்டி சரவணன் கடை, ரெக்ஸ் கடையருகே உள்ள சைவத்திருநீறு வைத்த காசாளர் கடை, அதற்கு எதிரில் உள்ள இளைஞர்கள் கடை, 30 ரூபாய் பிரியாணி கடை , தங்கம் ஹோட்டல் என சாப்பிட்டாயிற்று. ஆனால் கூட திருப்தி வரவில்லை. காரணம், வாங்குகிற காசுக்கான நேர்மை குறைந்து வருவதுதான். மயிலாப்பூரிலுள்ள பஜார் தெருவில் பல்வேறு கடைகள் இருந்தாலும் சில மாதங்களாக புதிய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. (அ)சைவம் என இரண்டுமே உண்டு. அப்போதுதானே காசு பார்க்க முடியும். ஆனால், அதற்கு உழைக்க வேண்டுமே! புதிய கடை. வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. அப்போது வேலை குறைவாக நடக்குமே என்று நினைத்தேன். அதேபோல ஆயிற்று. மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி இரவு உணவுக்கு வாங்க வந்தேன். முதலில் கல்லாவில் உட்கார்ந்திருப்பவருக்கு மரியாதை செய்யவேண்டுமே என்று அவரிடம் போனேன். கருப்பு நிறத்தில் பிள்ளையார் போல இருந்தார். லூசு என்றால் கூட அதனால்

மயிலாப்பூர் டைம்ஸ் - அப்லோடை விட டவுன்லோடு முக்கியம்!

படம்
பிரம்மானந்தம் நாயக் படத்தில் ஜிலேபியாக.... மயிலாப்பூர் டைம்ஸ் -- இனிப்பு பரிதாபங்கள்! ஆபீஸ் செல்வது பெரிய சிரமம் இல்லை. புதன்கிழமை தாண்டினால் போதும். விகடன் வியாழன் வரும். படித்து சமாளித்தால் வெள்ளி குங்குமம். அதில் ரத்தமகுடம் குஜாலாக படிக்கலாம் என்பதுதான் பெரும்பாலான நேர நினைப்பு. ஆனால் நடப்பது அப்படியே தலைகீழாக இருக்கும். வாசிப்பு வெறி, ஐலைக் காமிக்ஸ் வலைத்தளத்தில் கூட முடியும். ஆனால் ஸ்நாக்ஸ் வெறி இருக்கிறதே? சென்னகேசவா காப்பாற்று என்றாலும் நாக்கு அத்தனை தந்திரங்களையும் வீணாக்கிவிட்டது. வீக் எண்டில் முளைத்த வில்லங்கம், என்னுடைய வயிற்றை களேபர பூமியாக்கியது. நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மண்டையன் கடையை நெருங்கும்வரை. பஜார் தெருவிலுள்ள புகழ்பெற்ற கடைதான் அது. லட்டு, மிக்சர், பாதுஷா என மனசைக் கலைக்க அப்படியே நின்றேன். படியேறினால் கடை ஓனருக்கு என் முகம் தெரியும். ஏறினேன். லட்டு கால்கிலோ குடுங்க என்றேன். புன்சிரிப்புடன் பார்த்தவர், ஒருமணிநேரம் கழிச்சு வாங்கிக்கலாமே என்றார். என்னடாது, லட்டு கண்ணு முன்னால வெச்சுக்கிட்டு எதுக்கு ஒருமணிநேர

சுயநல உலகில் நட்புக்கு என்ன அவசியம்?

படம்
மயிலாப்பூர் டைம்ஸ் - நட்புக்கு என்ன அவசியம்? நீங்கள் கிராமத்தில் வசித்தாலும் சரி, நகரத்தில் வசித்தாலும் சரி உங்களுக்கென நட்புகள் உருவாகும். இதில் நீங்கள் மோசமாக நடந்துகொள்கிறவர் என்றால் உங்களுக்கு கிடைக்கும் நட்பும் அதுபோல அமைவது விதி. சரியாக நடந்துகொண்டால், இயல்பாகவே அந்த ரேஞ்சில், ஜென்டில் மேனாக லினன் ஷர்ட் போட்டு பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கினால் கூட கற்பகாம்பாள் கபாலியில் வெங்காய பக்கோடா வாங்கி கொடு என கேட்டுத் தின்னும் நட்புகளும் அமையலாம். எனக்கு இந்த வகையில் அமைந்த நட்புகள் எல்லாமே குறிப்பிட்ட லட்சியப்போக்கு கொண்டவர்கள்தான். அதேசமயம் அமைதியைப் பார்த்து என்ன சொன்னாலும் கேட்பான், வம்பு தும்பு இல்லாத ஆத்மா என கடைவிரித்து நட்பு பாராட்டிய ஆட்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம். அனைத்திலும் தொட்டும் தொடாத பிராணியாகவே இருந்து வந்திருக்கிறேன். காரணம், நான் எந்த நட்பையும் தேடிப்போய் அமைத்துக்கொள்வதில்லை. தானாகவே அமைந்தால் சரி. இல்லையென்றால் ரயில் பயண நட்பு போல அமைந்தாலும் சரி, காலகட்டத்திற்குள் கட்டுப்பட்டதுதானே அப்படியே இறங்கிப் போய்விடுவேன். பத்திரிகை வேலையில் இருக்கும்போது